நன்றி நண்பர்களே! : காந்தியின் காதலா ? புத்தரின் முடியா ?

கணினிப்படுதப்பட்ட என்னுடைய முதல் கதைக்கு பின்னுட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
சீனா சார் அவர்களின் கருத்து பலதருனங்களில் எனது எழுதும் விதத்தை பாதித்தது. அவரது வலைபூ ஜனநாயக முறைப்படி இயங்குகிறது. வாரம் ஒருவர் – நல்ல நடைமுறை, பாராட்டுக்கள் சார். நிச்சயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும் சீனா சார்!
TVR அவர்கள் மென்மையாய் பலசமயங்களில் ஊக்கமும் தந்தார் தவறுகளை சுட்டியும் காட்டினார். நன்றி நண்பரே!
பின்னோக்கி அவர்கள் மிக சிறந்த உரைநடையில் புலனாய்வு தொடர் எழுதி வருகிறார். அவரின் பாராட்டு எனக்கு ஊக்கம் அளித்தது.
கரிசல்காரன் சொன்ன மாதிரி ஏதோ விளம்பர இடைவெளி என்கிற மாதிரி சின்ன சின்ன அத்யாயங்கள் தான் எழுதினேன்.
நண்பர் வெங்கடேஷ் ஆரம்பத்தில் இருந்து படித்து அவ்வப்போது கருத்து சொன்னார். மோகனன் சொன்ன கருத்துக்களை ஏற்கிறேன்.
கார்த்திக் B தொடர்ந்து என் எழுத்துக்களை எதிர்பார்பதை சொன்னார். நன்றி நண்பரே. செந்தழல் ரவி அவர்களின் வருகைக்கும் நன்றி. உங்கள் கருத்து உக்கம் அளித்தது. ஆதி பிரதாபன் அவர்கள் வேலை நிலை காரனமாய் தொர்ந்து படிக்க முடியாமை பற்றி எழுதினர். நண்பரே நீங்கள் சொன்னது போல் நாம் மின் அஞ்சலில் நட்பை தொடர்வோம். பேசுவோம். இதயம் பெதுகிறது அவர்களின் கருத்தும் மிக சரி – முதலிலேயே தொடர் ஆரம்பித்திருக்க வேண்டாம் தான்.

நண்பர் வசந்த் (ப்ரியமுடன் வசந்த் அல்ல ) மினஞ்சல் அனுப்பி அடுத்த பகுதி எதிர்பார்ப்பதை சொன்னார். நன்றி நண்பா!. சே குமார் அவர்கள் தந்த பாராட்டுக்கு நன்றி. தோழன் உமாசங்கர் அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி. நண்பர் இளங்கோவன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

தோழர் கணேஷ், தோழர் சேது அவர்களுக்கு நன்றி. தோழர் சேது ஏதோ கதை முடிந்ததும் சொல்வதாய் சொன்னார். (அது என்ன நண்பரே ?) நண்பர் நாகேந்திர பாரதி,நண்பர் கண்ணன் அவர்களுக்கும் என் நன்றி.

யாருடைய பெயர் விடுப்பட்டிருந்தாலும் மன்னிக்கவும். எல்லோருக்கும் நன்றி.

நான் அடுத்து எழுத நினைப்பது காந்தியின் காதலை ( இவர் கஸ்துரிபா இல்லை ) பற்றியோ புத்தனின் முடியை பற்றியோ. நீங்கள் இது தொடர்பாக என்ன நினைகிறீர்கள் ?

பத்து நாள் விடுமுறை.மீண்டும் திரும்பும் போது புதிய சிந்தனைகளோடு சிந்திப்போம்!

மீண்டும் ஒரு முறை நன்றி!

Advertisements

சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 13 : நிறைவு பகுதி!

*************************************************************************
குறிப்பு: என் வலைப் பூவில் சில பிரச்சனைகள் இருந்தன. அவை தீர்க்கப்பட்டு விட்டன.
*************************************************************************

ஹோட்டல் தேவதட்ச்சனா – செல்வந்தர்களின் சொர்க்க லோகம். பணம் செய்த மனிதர்களின் பண்பு செத்த இடம். இளம் வயதின் தாகம் தணிக்கும் இடம். ஒழுக்கம் என்ன விலை என்று கேட்கும் இடம்.

இங்கு சில நிமிடங்கள் நடந்த தவறான புரிதலின் விழைவாக ஒரு ஒழுக்க தேவதை உயிர் நீத்தாள். பாண்டியனின் தவறான புரிதலால் கண்ணகி தன் கணவனை இழந்தாள். மாதவியும் ஒரு தவறான புரிதலால் காதலனை இழந்தாள். ஒரு தவறான புரிதலால் சீதை தீக்குளித்தாள். நம்பிக்கை எப்படி வாழ்வின் உயர்வோ அது மாதிரி தவறான புரிதல் மனிதகுலத்தின் வீழ்ச்சி.

குரல் வந்த திசையை நோக்கி பார்த்த சாவித்திரி அதிர்ச்சியில் நின்றாள். கணக்கு சிவானந்தம் நின்று கொண்டு இருந்தார்.
“நான் சொல்வதெல்லாம் உண்மை சாவித்திரி” – சிவானந்தம் ஆரம்பித்தார்.

“வேனாம் அய்யா” – வெற்றி கெஞ்சினான்.
“வெற்றி உணமையை சொல்லி ஆக வேண்டும்” – சிவானந்தம் மறுமொழி சொன்னார்.
“ஆமாம் … உண்மை வேண்டும்” – சாவி கட்டளை இடும் தொனியில் பேசினாள்.

“அது ஒரு மோசமான நாள். எலிசபெத் மரண நேரத்தில் ஆற்றலை சந்திக்க நினைத்தாள். கருணை இல்லத்தில் தான் அவளது கடைசி நிமிடங்கள் கழிந்தது. தேவி எலிசபெத்தின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைத்தாள். ஆற்றல் அப்போது எங்கே இருந்க்கிறான் என்பது அவளுக்கு தெரியாது. பிராங்க்ளின் தாமசுக்கு போன் செய்தாள். பிராங்க்ளின் ஆற்றலின் நெருங்கிய நண்பன். ஆற்றல் ஹோட்டல் தேவதட்ச்நாவில் உள்ளான் என்றும் பார்க்க முடியாது என்றும் சொன்னான். எலிசபெத்தின் நிலையே சொன்னபோது அவன் கருணை இல்லத்திற்கு வந்தானே தவிர ஆற்றல் வரவில்லை. தேவி அவனை கட்டாயபடுத்தி எலிசபெத்தையும் அவனது ஆம்னி வேனில் ஏற்றி தேவதட்ச்ச்சனா போனா. எலிசபெத் மரணபடுக்கையில் இருக்க தேவதட்ச்ச்சனவுக்குள் தேவியும் பிரான்க்லினும் போனாங்க. ஆனால் தேவதட்ச்ச்சனவில் ஆற்றல் இல்லை. வேறு எவள் வீட்டுக்கு போனானோ ?. ஹோட்டலுக்குள் இருந்து வெளியே வந்த தேவியை பார்த்தார், பக்கத்தில் இருந்த விதை நெல் விற்கும் நிலையத்திற்கு வந்த உங்க அப்பா சென்பகராமன். அதிர்ச்சியும் கோபமும் அவரை தேவியை நோக்கி சரமாரியான கேள்விகளை வீசவைத்தது. தான் வளர்த்த ஒழுக்கமான மகளா இங்க ? என்று மனம் வருந்தினார். தேவிக்கு நேரமில்லை உங்க அப்பாவை சமாதான படுத்தவோ விளக்கம் சொல்லவோ. வேகமாய் மருத்துவமனை போக வேண்டும் அவள் – எலிசபெத்தை காப்பாத்த. தேவியை பார்த்த தகவலை உங்க அம்மாவிடம் அய்யா சொல்ல. நீ நினைக்குற மாதிரி வயசான காலத்தில் வரும் நெஞ்சு வழியில் உங்க அம்மா போகவில்லை சாவி, இந்த செய்தி கேட்டு இறந்தார் உங்க அம்மா”

சாவித்திரி மௌனமாய் கேட்டாள்.

“தன்னால் தன் அம்மா இறந்ததும். தனக்கு ஒழுக்கம் சொன்ன தந்தை தன்னை தவறாக நினைத்தும்தான் தேவியை நிலை குலைய வைத்தது. தேவியின் விளக்கத்தை உன் அப்பா ஏற்கவில்லை. தன்னை நிருப்பிக்க தற்கொலை செய்து கொண்டாள். ஒழுக்கத்தை நிருப்பிக்க தீக்குளி என்பது இந்தியா பெண்களுக்கு சொல்லி கொடுக்கும் தர்மம். இது எதுவும் தெரியாமல் நீ கொடைக்கானலில் உன் சித்தப்பன் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தாய். ரூபன் ஆற்றலை இந்த தற்கொலைக்கு காரனமாய் நினைத்தது எனுக்கு இப்பதான் தெரியும் ” – சிவானந்தம் முடித்தார்.

டுமில் … டுமில் … சாவித்திரி தன் கை துப்பாக்கி முனையை பார்த்தாள். அது மௌனமாகவே இருந்தது. புகை விடவில்லை. அமைதி காத்தது. ஆனால் ஒரு மரணம் விழுந்தது.

“ஆற்றல் …. ” – பிராங்க்ளின் ஓடி வந்து தாங்கிக்கொண்டான்.
“ஏன்டா இந்த உண்மைய சொல்லல ?”
“நீ இப்படி செஞ்சுக்குவியே என்றதான் நண்பா”
“என்ன இருந்தாலும் நானும் தேவி தற்கொலைக்கு காரனமடா”
“இல்ல நண்பா”
“என்னால தானே அவ ஹோட்டலுக்கு வந்தா …?”
“அது விதி”
“இல்லடா”
ஆற்றல் கண்மூடினான். பாண்டியன் கண்ணகிக்கு தான் செய்த தவறு எண்ணி உயிர் விட்ட மாதிரி.
ஆற்றல் தற்கொலை செய்து கொண்டான்.

சாவித்திரி துப்பாக்கியை கீழே போட்டாள்.

“நீங்க எப்படி இங்க கணக்கு ?” – சாவி கேட்டாள்
“நீ எப்ப ரூபன் நல்லவநில்லைன்னு உங்க அப்பாகிட்ட பேசினாயோ அப்ப இருந்தே உன் பாதுகாப்புக்காக நான் உன்னை நிழல் மாதிரி தொடர்கிறேன்” – கணக்கு சொன்னார்.
“அப்பாகிட்ட பேசணும்” – சாவி சொன்னாள்

எண்கள் அலுதப்பட்டன.
“அப்பா சாவி பேசுறேன்”
“சாவி நான் நிலா பேசுறேன். அப்பா நம்மள விட்டு போயட்டாருடி … ” – நிலா அழுதாள்.

ரூபனையும் வெற்றியையும் பார்த்தாள். தன்னை ஆற்றலிடம் இருந்து காப்பாற்ற நினைத்த நல்ல உள்ளங்கள். தன் தந்தையின் தவறான புரிதலே தன் அக்காவின் மரணத்திற்கு காரணம் என்ற போது சாவி வருந்தினாள். உண்மை சுட்டது.

ஆற்றல் பிரான்க்ளினின் மடியில் பிணமாய் கிடந்தான். ரத்தம் அவன் நெஞ்சில் இருந்து வடிந்தது.

எல்லோரையும் எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொள்வோம்!

சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 12 : அடுத்த பகுதியில் நிறைவுபெறும்!

காடும் காடு சார்ந்த இடமும் ஆன அந்த இடத்திற்கு ரூபன் வெற்றியோடு வந்தான். ஆதாரங்கள் தந்து சாவித்திரியை காப்பாற்ற வந்தான்.
மாலை மயங்கிய அந்த வேளையில், அரவங்கள் கூட நடமாடும் இடம் போல் இருந்தது அந்த காடு. ஆனால் உள்ளே போனால் – எல்லா வசதிகளும் உள்ள அரச மாளிகை.
“வரவேற்கிறேன் ரூபன். வெற்றி உன்னையும்தான்” – ஆற்றல் வரவேற்றான்.
“ரூபனுக்கு உன்னால எந்த தீங்கும் வராதே ?” – வெற்றி கேட்டான்.
“வெற்றி நீ ரொம்ப பயப்படுற. உனக்கும் உதவிக்கு ஓடிவர ஆள் இருக்கு. உன் குப்பத்துல உன்ன காப்பாத்த ஒரு கூட்டமே இருக்கு. நீ ஏன் பயப்படுற ?”
“நான் பயப்படுவது ரூபன பத்தி ஆற்றல் ”
“பயப்படாதே வெற்றி ”
“நம்பலாமா ஆற்றல் ?”
“நம்பினார் கெடுவதில்லை வெற்றி”
“ம்ம்ம்”
“எங்க அப்பாவுக்கு நல்ல பேரு இருக்கு. எங்க நீயும் ரூபனும் எதாவது செய்றதுல எங்க அப்பா பேரு கெட்டுவிடுமொன்னு பயந்தேன்”
“உங்க அப்பா பேர காப்பாத்திக்கோ ஆற்றல் ”
“ம்ம்ம். இதுக்கு இடைல ஒரு கேள்வி. யாரு செவ்வி ?”
“உன் பொன்னுதாண்டா” – ரூபன் உறுமினான்.
“என்ன சொல்ற ரூபன்” – ஆற்றல் ரூபனை பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“ஆமா! உன்ன கடைசியா சாவித்திரி பாக்கவந்ததே, எலிசபெத் சாவ சொல்ல தான். நீ எலிசபெத்த மறந்திருக்கலாம். ஆனா எலிசபெத் தன சாவுக்கு முன்னால உன்ன பாக்க நெனச்சா ” – ரூபன் பேசினான்.
“நிஜமா ?” – ஆற்றல் கண்ணீரோடு கேட்டான்.
“நீ அந்த நேரத்துல எவ மடியிலையோ தண்ணி அடிச்சுட்டு ஹோட்டல் தேவடட்சனால கெடந்த”
“அது நான் சோகத்துல இருந்த தருணம். எங்க அப்பாவோட பேர பத்தி கவலைப்படாத நேரம். தேவி கெடைக்காத பிறகு நான் எலிசபெத்த நெனச்சு வருந்தினேன். தேடினேன். ஆனா அவள் கிடைக்கல”
“எலிசபெத் செவ்விய கொடுத்துட்டு இறந்துட்டா” – ரூபன் முடித்தான்.
ஆதாரங்கள் கொடுக்கப்பட்டன. ரூபனும் வெற்றியும் சாவித்திரியை விடுவித்து அழைத்தனர். சாவித்திரி பட்டென காவல் உடையில் இருந்தவன் இடையில் இருந்து துப்பாக்கியை எடுத்தாள்.
ரூபன், வெற்றி, ஆற்றல் – முவருக்கும் முன்னால் துப்பாக்கியை நீட்டினாள்.
“அது நெச துப்பாக்கி” – ஆற்றல் அலறினான்.

“எனக்கு பதில் தெரியனும். யார் எங்க அக்கா தற்கொலைக்கு காரணம் ?” – சாவி கர்ஜித்தாள்.

சாவியின் விரல் ட்றிக்கரின் மீது இருந்தது. சாவி அழுத்தினாள். நிசப்பதமும் வியர்வையும் ரூபனை ஆட்சி செய்தது.

“சாவி வெடிச்சுடும்” – வெற்றி அலறினான்.
“வெடிக்கட்டும். ஆனால் எனக்கு உண்மை வேணும்” – சாவி உறுமினாள்.
“சாவி … ” – இது வெற்றி
“சொல்லு உண்மைய வெற்றி” – சாவி வியர்வையோடு பத்ரகாளி மாதிரி நின்றாள்.
“எங்க மூணு பேரில் யாரும் இல்ல” – ஆற்றல் சொன்னான்
“அப்ப யாரு ?” – சாவி கத்தினாள்
“எங்களுக்கு தெரியாது. ஆற்றல் டார்ச்சர் தாங்கமதான் தேவி இறந்துடானு நான் நெனச்சேன்”
“ரூபன், நீ சொல்றது உண்மையா இருக்கலாம்” – சாவி துப்பாக்கியை ஆற்றலை நோக்கி நீட்டினாள்.
“சாவி, ரூபன் என்னோட கடிதங்கள பாத்துட்டு தேவிய சந்தேக பட்டிருக்கன் அதான் தேவி இறந்துட்டா” – ஆற்றல் திசை திருப்பினான்.
“நீ சொல்றது உண்மையா இருக்கலாம்” – சாவி துப்பாக்கியை ரூபனை நோக்கி நீட்டினாள்.
“சாவி ஆற்றலை நம்பாத” – வெற்றி கத்தினான்.
“ஏன் ?” – சாவி கேட்டாள்
“அது … ” – வெற்றி தடுமாறினான்
“நீதான் காரணமா ?” – சாவி துப்பாக்கியை வெற்றியை நோக்கி நீட்டினாள்.

அவளது விரல் அழுத்தத்தை அதிகப்படுத்தியது. துப்பாக்கி பசியோடு இருந்தது. உயிரை குடிக்க தயாராய் இருந்தது. தோட்டா துப்பி உயிரை விழுங்க பசியோடு துப்பாக்கி இருந்தது. ஆனால் இன்னும் இலக்குதான் தெரியவில்லை. சாவித்திரிக்கும் சரி துப்பாக்கிக்கும் சரி – இன்னும் இலக்குதான் தெரியவில்லை.
“ஏன் வேற யாராவதா இருக்க கூடாது சாவித்திரி ?” – ஒரு குரல் வந்தது. குரல் வந்த திசை நோக்கி சாவி திரும்பினாள். அதிர்ச்சியோடு பார்த்தாள்.
-தொடரும்

சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 11 : நான் தான் அவன்!

நான் தான் காதலன்!

நான் தான் காதலன்!


அந்த காவல் துறை வண்டி அந்த பண்ணை வீட்டுக்குள் நுழைந்தது. அந்த வீட்டின் வளாக சுவற்றில் ஒரு பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது. அதில் திரு. அறிவரசன் Chairman, Thendral Group of Companies என்று எழுதி இருந்தது. திரு அறிவரசன் மிகப்பெரிய செல்வாக்கு படைத்த செல்வந்தர்.

அடர்ந்த காடுகளுக்குள் உள்ள வீடு அது. ஆள் அரவம் இல்லாத இடம். வண்டி நின்றது. சாவித்திரியின் கண்கட்டு அவிழ்க்கப்பட்டது.
சாவித்திரி உள்ளே அழைத்து செல்லப்பட்டாள்.

“வரவேற்கிறேன் சாவித்திரி” – ஆற்றல் அரசனின் குரல் வந்தது. உள்ளே இருந்து ஆற்றல் அரசன் வந்தான்.
“எங்கே செவ்விதழ் ?” – சாவித்திரி கோபத்துடன் கேட்டாள். சாவித்திரி அந்த காவல் உடை மனிதர்களின் கட்டுக்குள் இருந்து திமிறினாள்.
“சாவித்திரி, சில விசயங்கள பொறுமையா கேள்”
“பொறுமை ?”
“பொறுத்தார் பூமி ஆழ்வார். சாவித்திரி, நான் கல்லூரியில் முதுகலை படிக்கும் பொது தேவியும் என்னோடு படித்தாள். அவளை நான் காதலித்தேன். முதலில் தேவியும் காதலித்தாள். பின்பு தேவிக்கு என்னோட முதல் காதலி எலிசபெத்த பத்தி தெரியவந்துச்சு. விலக ஆரம்பிச்சுட்டா”
“அட பாவி நீதான் தேவி தற்கொலைக்கு காரணமா ?”
“நிச்சயமா இல்ல. தேவிய என்கிட்டே இருந்து பிரிச்ச ரூபன நான் கூட கொல்ல நெனைக்கல. பிறகு எப்படி தேவிய ?”
“அப்ப யாரு ?”
“அது எனக்கு தெரியாது சாவித்திரி. தேவியோட காதல் கிடைக்காத நான் மேற்படிப்பு படிக்க வெளிநாடு போனேன். அப்பத்தான் நாங்க எடுத்துக்கிட்ட பழைய படங்கள அனுப்பி அவக்கிட்ட மீண்டும் காதல் கேட்டேன். அவளுக்கு திருமணம் ஆன விஷயம் எனக்கு அப்ப தெரியாது.ரூபன் இது ஏதோ நான் தேவிய மிரட்டுற விசயம்னு நெனச்சுகிட்டன். தேவி எந்த பதிலும் அனுப்பாத சமயத்துல நான், அவள போன்ல புடிச்சு பேசினேன். ரூபன் இது எல்லாத்தையும் ஆதாரமா செகரிச்சான். அந்த அதாரங்கள பெற நான் எவளவோ முயற்சி செஞ்சும் கெடைக்கல. இதுல ரூபன் ரெண்டு தடவ தாக்காப்பட்டான். காரணம் அவன் என்ன எப்படியும் தண்டிக்க நெனைக்கிறான். வெற்றிதான் ரூபன காபத்திக்கிட்டு வர்றான். இப்ப கூட அவன்தான் செவ்விதழ காப்பாத்தி இருக்கான்”

ஆற்றல் அரசனின் கைப்பேசி கிணுகிணுத்தது!

“வணக்கம். ஆற்றல் அரசன் பேசுகிறேன்” – ஆற்றல் ஆரம்பித்தான்.
“நான் ரூபன்”
“வணக்கம் ரூபன்”
“சாவித்திரி உன்கிட்டதான் இருக்காளா?”
“அமாம் ரூபன்”
“அவள விட்டுடு”
“ஆதாரங்கள் ?”
“தர்றேன். ஆனா உன்னால எனக்கு எந்த ஒரு பாதிப்பும் வராதுன்னு எப்படி நம்புறது”
“உன்னால எனக்கு எந்த ஒரு பாதிப்பும் வராதுன்னா – என்னால உனக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது”
“வருகிறேன்”
“வா ரூபன் வா”
ஆற்றல் முகவரியை கொடுத்து விட்டு கைப்பேசியை மௌனப்படுதினான். சாவியை பார்த்தான்.

“சாவித்திரி, உன்னை பணயம் வச்சா போதும் போலயே. செவ்வியா உயிருள்ள ஆதாரம் அது இதுன்னு சொல்லி கடத்தி இருக்க வேண்டாம் போலயே” – ஆற்றல் சொல்லிவிட்டு சாவியை பார்த்து புன்னகைத்தான்.

சாவித்திரி கோபமாக இருந்தாள். இவனை விடுவதா ?.

“சாவித்திரி ஆனா ஒன்னு. தேவி என்னால சாகல” – ஆற்றல் அழுத்தம் திருத்தமாய் சொன்னான். இது உண்மையா ? தேவியின் தற்கொலைக்கு காரணம் யார் ?

– தொடரும்

சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 10: தேவியின் காதலன் ?

தேவியின் காதலன் ?: தேவி காதலித்தாளா ?

தேவியின் காதலன் ?: தேவி காதலித்தாளா ?


சாவித்திரிக்கு அந்த பதில் பயத்தையும் ஆச்சர்யத்தையும் தந்தது.அந்த பதிலை அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. ஆனால் அந்த பதில் வந்து விழுந்தது. அவள் பயப்பட்டாள்.

“ஆற்றல் அரசன்” – சொல்லி முடித்தாள் நிலா.
ஒரு நிமிடம் பேச்சு மூச்சில்லாமல் நின்றாள் சாவித்திரி. திருட தெரியாதவன் திருடி தலையாரி கையில் கொடுத்த மாதிரி ஆகி விட்டது.

ஆற்றலுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தாள்.
“வணக்கம் ஆற்றல் அரசன்” – மறு முனையில் ஆற்றல் பேச ஆரம்பித்தான்.
“டேய் ! குழந்தைய கொடுத்துடு” – சாவி சீறினாள்.

வாசல் பக்கம் சைரன் சப்தம் கேட்டது. காவல் என்று அந்த வண்டியில் எழுதி இருந்தது. வண்டி வாசல் முன் நின்றது. சாவித்திரிக்கு புரியவில்லை. தொலைபேசியை மௌன படுத்தினாள். ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீஸ்காரர்கள் உள்ளே வந்தனர்.

“நான் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் தாமஸ்”

சாவித்திரிக்கு வியர்வை கொட்டியது. பிள்ளையை திருடி கொடுத்தவள் ஆயிற்றே.
“உட்காருங்க”
“நான் தேவி தற்கொல விஷயமா விசாரிக்க வந்திருக்கேன்” – இது பிராங்க்ளின் தாமஸ்
“சார் அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்ல. என் குழந்த இப்ப ஒருத்தன் கடத்தி வச்சிருக்கான்”
“யாரு ?”
“ஆற்றல் அரசன். செந்தமிழ் நூற்பாலை MD”
“அட ! அவன் வந்துட்டானா. வாங்க கைது பண்ண போகலாம்”
“சீக்கிரம்”
“நிச்சயம்”
காவல் வண்டி விரைந்தது! சிங்கம் போல் சீறி புலி போல் பாயந்தது.
*****************************
வெற்றியும் ரூபனும் ஆபிசில் இருந்தனர். வெற்றி நிசப்த்ததை கலைதான்.

“ரூபன், நான் சொன்ன மாதிரி எதுவும் நடக்காது. நீரஜ் போய் இருக்கான். பிள்ளையோடு வருவான்”
“ஆமா! ஆனா சாவித்திரி …”
“அவள அடக்க ஒரே வழி அவள கடத்தி நம்ம கட்டுபாட்டுக்குள் வைக்குறதுதான் ”
“என்னடா சொல்ற?”
“அதான் ஒரே வழி”

வெற்றி முடித்துகொண்டான். நீரஜ் செவ்விதழோடு வந்தான். ரூபன் நிம்மதி அடைந்தான். வெற்றியும் ரூபனும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாவித்திரியின் செயல்பாடுகளை முடக்க கடத்துவதுதான் ஒரே வழி. சாவி கட்டுக்குள் அடங்கமறுக்கும் ஒருத்தி. அவள் யார் நல்லவன், யார் கேட்டவன் என்று தெரியாத ஒருத்தி. அவளால் குழம்பம்தான். அவளை காப்பாற்ற பார்த்தால், அவள் ரூபனையும் செவ்வியையும் காவு கேட்கிறாள். மனைவியை கடத்த வேண்டிய நிர்பந்தம் ரூபனுக்கு. மனைவியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பது இதுதானா ?

கடத்தல் திட்டம் உடனடியாக நடைமுறை படுத்தப்பட்டது. ஒரு தொலைபெச்சி அழைப்பு வந்தது.
“வெற்றி சார், சாவித்திரி அம்மாவ இப்ப கடத்த முடியாது”
“ஏன்?”
“அவுங்கள போலீஸ் புடிச்சு போயிடுச்சாம்”
“என்ன போலீஸ் புடிச்சு … ”

வெற்றியும் ரூபனும் குழம்பினர். உண்மையில் தேவியின் தற்கொலைக்கு சாவிதான் காரணமோ ?

காவல் என பெயர் போட்ட வண்டி ஆற்றல் வீடு நோக்கி போகவில்லை.
“எங்க போறீங்க?” சாவி அலறினாள்.
அது வேறு இடம் நோக்கி போனது. அவள் கண்கள் கட்டப்பட்டது. யார் இவர்கள். காவல் துறை இல்லையா ?. சாவி புரியாமல் விழித்தாள்.

சாவியின் கைப்பேசிக்கு அழைப்பு வந்ததது.
“நான் தான் தேவியின் காதலன் பேசுகிறேன்”

தேவியின் காதலன் ? தேவி காதலித்தாளா ?

சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 9 : நிலாவின் ஞாபகங்கள்

நிலாவும் நினைவுகளும்: மறைத்து வைத்த உண்மைகள்

நிலாவும் நினைவுகளும்: மறைத்து வைத்த உண்மைகள்


அந்த கவரில் யாரின் பெயரும் இல்லை. அது யாரிடம் இருந்து வந்தது ? எப்படி வந்தது ? ஏன் வந்தது ? எதற்காக வந்தது ?. வெற்றி ரூபனை பார்த்தான். ரூபன் தலை நிமிர்ந்தான் – வெற்றி வந்த கழிப்பில் இல்லை; குழப்பத்தின் தவிப்பில். ரூபனின் கண்களை பார்த்தான் வெற்றி. எதையோ இழக்க போகிறவனின் பார்வை அது! பறிகொடுத்த பார்வை இல்லை என்றாலும். அதற்கு அருகில். கண்களின் ஓரத்தில் கண்ணீர்.

“நண்பா …?” – வெற்றி ஆரம்பித்தான்
“செவ்வி ….” – ரூபன் கலங்கினான்.
“செவ்வி … ?” – வெற்றி கேட்டான்.
“அவனிடம் …”
“எப்படிடா ?”
“சாவி தந்திருப்பாளோ?” – ரூபன் கேட்டான்
“அவளாதான் இருக்கும்” -வெற்றி தீர்மானமாய் சொன்னான்.

வெற்றி ரூபனின் மேசையில் இருந்த மணியை அழுத்தினான். கடை நிலை உழியர் வந்தார். காக்கி மற்றும் காக்கியில் இருந்தார்.

“சார் ” – வணக்கம் வைத்தார்
“அண்ணே இந்த கவர் ?” – வெற்றி கேட்டான்
“ரூபன் அய்யாவுக்குனு சொல்லி ஒருத்தர் கொடுத்துட்டு போனார்”
“எப்படி இருந்தார் ?”
“ஒரு ஆறடி ஒசரம். நல்ல செவப்பு – அப்புறம் …”
“சரி நீங்க போகலாம்”
அந்த உழியர் சென்றார்.
“சந்தகமே இல்லை அவனேதான். இப்ப திரும்பி வந்துட்டானா ?” – வெற்றி யோசித்தான்.

சாவித்திரி இப்படி ஒரு முட்டாள் தனம் செயதுவிட்டாளே…. – ரூபனும் வெற்றியும் கவலைப்பட்டனர்.

மாலை மயங்கியது. ரூபன் வீடு திரும்பவில்லை. சாவித்திரி ஒன்றும் காத்திருக்க வில்லை. நிலவு உச்சிக்கு வந்தது. அழகான நிலவு; நட்ச்சதிரங்களின் ஆதரவு பெற்ற நிலா; நினைவுகுளை கிளரும் நிலவு! சாவித்திரியும் நிலாவும் விழயாடிய நினைவுகள். ஒன்றாக தண்ணீர் எடுக்க சென்ற நினைவுகள்.

நிலாவின் நினைவுகள் சாவித்திரியை சூழ்ந்தன. நிலா சாவித்திரிக்கு மட்டும் இல்லை – தேவிக்கும் நல்ல தோழி. நிலாவின் முன்னிலையில்தான் ரூபனின் இரண்டு திருமனங்களும் முதலில் பேசப்பட்டன. நிலாவிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். சொன்னால் வெளியே வராது. ரகசியம் காப்பது பெண்மை லட்சணம் ?

கைப்பேசி – சின்னவன் ஆனால் ஆழும் ஆண்டவன். இரண்டு அடி கூட இல்லை. உலகம் ஆள்கிறான். கை அழுவு மனசு என்பார்களே அது கைப்பேசியை தானோ ?. அலை பாயும் மனதை அலையில் பாய விடும் தேவன் இவன். உலகம் உள்ளம் கையில்; கனவுகள் காற்றில். சந்திக்க முடியாதவர்கள் நிந்திக்காமல் இருக்க முந்திக்கு கொண்டு வருபவன்.

வட்டவடிவமான எண்கள். எண்கள் அழுத்தப்பட்டன.

“நிலா, நான் சாவி” – சாவித்திரி ஆரம்பித்தாள்
“சொல்லும்மா இப்பதான் நெனைப்பு வந்ததா ? ” – மறு முனையில் நிலா
“நிலா, ரூபனின் முதல் காதலி … ? ”
“உங்க அக்கா”
“இல்ல எலிசபெத் பத்தி தெரியுமா ?”
“யார் அவளைபத்தி சொன்னது ”
“அதவிடு, அவ யாரு ?”
“அவ ஒரு பாவப்பட்ட பொண்ணு. செத்து போயிட்டா”
“செவ்வி ?”
“அவ பொண்ணு”
“அப்ப ரூபனின் முதல் காதலி ?”
“என்ன சின்ன புள்ளதனம் ? நீ இவ்வளவு சந்தேகப்படுறதால சொல்லறேன். உங்க அக்காவுக்கு பெத்துக்குற பாக்கியம் இருந்துச்சு. ஆனா ரூபனுக்கு இல்ல. நம்மகிட்ட எல்லாம் தேவி வேறமாதிரி சொல்லி வச்சிருந்தா. அதுனால ரூபனுக்கு முதல் காதலே இருந்திருந்தாலும் புள்ள இருக்க வாய்ப்பே இல்ல …”
“எலிசபெத் ?”
“அவ வேற ஒருத்தனின் காதலி”
“யார் ?”

சாவித்திரி அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் நிலா அந்த பதில்தான் சொன்னாள். உண்மை சில நேரங்களில் சுடும்.

செவ்வியின் அப்பா ?

– தொடரும்

சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 8: செவ்விதழ் எங்கே ?

செவ்விதழ் எங்கே ?: பதில் இங்கே?"

செவ்விதழ் எங்கே ?: பதில் இங்கே?


தூய மரியாள் கருணை இல்லம். இங்கே இருந்துதான் செவ்வி தத்தெடுக்கப்பட்டாள். பிள்ளை இல்லை என்பவர்கள் கோயில் சுற்றும் போது – உண்மையை புரிந்து கொண்டு செவ்விதழை இங்கே இருந்து தத்தெடுத்தனர் ரூபனும் தேவியும். தேவி தெய்வம் போல. கவரிமான் வழி
வந்தவள்.

தேவி – அழகான தேகம்; அமிழ்தான வார்த்தைகள்; புன்னகைக்கும் பூ; கண்ணசைக்கும் கவிதை; வண்ணம் கொண்டு தீட்ட முடியாத வனப்பு; ஒழுக்கத்தை மூச்சென மதிக்கும் உயர்வான பெண். கடுஞ்சொல் பேசத்தெரியாத நல்லவள். அவர்கள் தத்தேடுக்கையில் செவ்விதழ் கைக்குழந்தை. செவ்விதழ் கைவிடப்பட்டவள் என்பதால் தேவி தத்தெடுவில்லை – ஒப்படைக்கலாம் என்பதாலும்.

வெற்றி அமைதி தவழும் அந்த இல்லத்திற்குள் சென்றான். அமைதியே வடிவாய் அன்னை ரோஸ் அங்கே இருந்தார்.
“வாங்க வெற்றி” – வரவேற்றார் அன்னை
“செவ்விதழ் ?” – வெற்றி ஆரம்பித்தான்
“நல்லா இருக்காளா ?” -அன்னை கேட்டார்
“இங்க சாவித்திரி கொண்டு வந்துவிடல ?”
“சாவித்திரி வந்தாங்க ஆனா செவ்விய விட வரல ?”

பதிலுக்கு காத்திராமல் வெற்றி கிளம்பினான். சாவித்திரியை கைபேசியில் அழைத்தான்.

“சாவித்திரி, செவ்வி எங்க ?”
“நீயே கண்டு பிடி வெற்றி”

வானத்தை அண்ணாந்து பார்த்தான் வெற்றி. புரியாமல் நின்றான். எங்கே செவ்வி ?.

வெற்றி தன் கைபேசியில் எண்களை மீண்டும் அழுத்தினான். இந்த முறை ரூபனுக்கு.

“நண்பா செவ்வி …” வெற்றி பதட்டப்பட்டான்
“வெற்றி அவ எங்க இருக்கானு பாதி பதில் எனக்கு கெடச்சுடுச்சு” – ரூபன் சொன்னான்.
“எங்க?”
“உடனே ஆபிஸ் வா”
“இதோ நண்பா”

வெற்றி விரைந்தான். ரூபன் தலையில் கைவைத்தபடி தலை கவிழ்ந்து இருந்தான். வெற்றி ரூபனின் அறைக்குள் நுழைந்தான். குனிந்தவாறே ரூபன் ஒரு கவரை கொடுத்தான்.

வெற்றி வாங்கினான். பிரித்தான். ஒரு சின்ன காகிதம். ஒரே ஒரு வரி எழுதி இருந்தது.

அந்த வரி ….
“செவ்விதழ் என்னிடம் உள்ளாள்”

யாரிடம் செவ்விதழ் … ?

-தொடரும்