பகுதி 2 : கொலையும் செய்வாள் பத்தினி!

யார் என்பது தெரிந்தால் சாவி கொன்னுடுவா கொன்னு

யார் என்பது தெரிந்தால் சாவி கொன்னுடுவா கொன்னு

மழைக்கு பின்னால் நீர் முத்துக்கள் பூத்த இலை போல் முகம் எல்லாம் வியர்வை முத்துக்கள் ரூபனுக்கு.
“உண்மை வேண்டும்” – சாவித்திரி கர்ஜித்தாள்.

திருவிழாவில் காணமல் போன குழந்தை மாதிரி விழித்தான் ரூபன்.
“என்ன உண்மை ?” – ரூபன் நடுக்கதுனும் பயத்துடனும் கேட்டான்.
“எங்க அக்காவ ஏன் கொன்ன ?” – சாவித்திரி அகல திறந்த கண்களுடன் கேட்டாள்.
“தேவி தற்கொல செஞ்சுகிட்டா ” – ரூபன் அழுத்துகிற கத்தியை பார்த்தவாறே பேசினான்.
“எங்க என் கண்ணா பாத்து சொல்லு” – கட்டளை பிறப்பித்தாள் சாவி.

ரூபன் ரசிக்கிற நிலமைலா அவளின் கண்கள் இருக்கு ? யாருப்பா சொன்னா உண்மை, கண்ணை பார்த்து பேசினால்தான் உண்மை என்று.
ரூபன் தன் கண்களால் அவளை பார்த்தான்.புள்ள பயந்துதான் போயிருந்தது.

“சரி இன்னைக்கு உன்ன விட்டுடுறேன். ஆனா நீ சீக்கிரம் உண்மைய சொல்லுவ, சொல்ல வைப்பேன். சொல்லலைனாலும் உன்ன சீக்கிரம் கொண்ருவேன்”.

சாவி ரூபனின் கழுத்தில் இருந்து கத்தியை எடுத்தாள். சாவி ஒரு வெடிக்க இருக்கும் டைம் பாம்.

எல்லாவற்றையும் மௌனமாக நிலவு பார்த்து கொண்டிருந்தது. இது ஒரு வித்தியாசமான முதல் இரவு. விடியல் கொஞ்சம் தாமதமாகவே வந்தது.

ஏதோ சிங்கத்தின் வாய்க்குள் தலையை விட்டுவிட்டு எடுத்ததை போல் உணர்ந்தான் ரூபன்.

அவன் விழித்த போது, பக்கத்தில் சாவித்திரி வாயில் விரலை விட்டால் கடிக்க தெரியாத பச்சை புள்ளையாய் படுத்திருந்தாள்.

கழுத்தை தேய்த்த படியே யோசித்தான். “நான் ஏன் தேவியை கொள்ள போகிறேன் ?. அனால் இவள் இருக்கிற கோபத்தை பார்த்தால் தேவியின் தற்கொலைக்கு காரனமன்வர்களை கொள்ளாமல் விடமாட்டாள் போல.”

ரூபனின் முதல் மனைவி தேவி. சாவியின் அக்காள்தான் தேவி. தேவி ஒரு வருடம் முன் தற்கொலை செய்து கொண்டாள் . ஏன் என்பது தெரிந்தால் – யார் என்பது தெரிந்தால் சாவி கொன்னுடுவா கொன்னு.

ரூபன் அவர்களை காப்பாற்ற நினைக்க வில்லை. ஆனால் சாவியை.

யார் அவர்கள்? தேவி ஏன் தற்கொலை செய்துகொண்டாள்?

Advertisements

18 comments on “பகுதி 2 : கொலையும் செய்வாள் பத்தினி!

 1. venkatesh சொல்கிறார்:

  the story goes good. but i feel there is some difference, while you narrate the first and second episode. I am not sure about this. But the story is fine. You are awesome man.

 2. Jawahar சொல்கிறார்:

  ப்ளாக்கிங் உலகத்துக்கு நல்வரவு… வாழ்த்துக்கள். நன்றாக எழுதுகிறீர்கள். ஆரம்பத்தில் தொடர்கள் எழுதுவதை விட, குறுங்கதைகள்,கட்டுரைகள் எழுதுங்கள். வாசகர்களுக்கு கொஞ்சம் அறிமுகமான ஆளானதும் தொடர்கள் எழுதலாம்.

  http://kgjawarlal.wordpress.com

 3. Go.Kannan சொல்கிறார்:

  //தேவி ஏன் தற்கொலை செய்துகொண்டாள்?

  இமயவரம்பா,

  சொல்லிடு சொல்லிடு…..இல்லைன்னா உடுக்கையடிப்பேன்…..!

 4. Nagendra Bharathi சொல்கிறார்:

  good thriller with suspense drama. looking forward to next episode.

 5. cheena (சீனா) சொல்கிறார்:

  அன்பின் கார்த்திக்

  தொடர் கதைஎனில் தலைப்பு ஒன்று தான் இருக்க வேண்டும். பகுதி எண் இடலாம். இல்லை எனில் தனித்தனியாகத் தேர்ந்தெடுத்து படித்து ஒன்றும் புரியாமல் குழம்ப நேரிடும்.

  ஒரே தலைப்பில் எழுதுக – ஒரே பெயரில் லேபிள் கொடுப்பது நலன்.இரண்டாம் பகுதி இடுகையாக இடும் பொழுது முதல் பகுதிக்குச் சுட்டி கொடுக்கவும்.

  சிறு சிறு செயல்களை கவனத்தில் கொள்க

  நல்வாழ்த்துகள்

 6. cheena (சீனா) சொல்கிறார்:

  அன்பின் கார்த்திக்

  மழையில் இலையில் முத்துகள் ( முத்துக்களா அல்லவே ) – கர்ஜனை – விழிப்பு – கண்ணைப் பார்த்துச் சொல் – கண்ணை ரசிக்கும் மனநிலையா அது – பயந்தது – எந்நேரமும் வெடிக்கத் தயார் – நிலவின் பார்வையில் நீடித்த இரவு -முதல் மனைவி தற்கொலை – அவளது தங்கையையே மணம் செய்தல் – பழி வாங்கத் துடித்தல்

  கதை ந்ல்ல திகிலுடன் எதிர்பார்ப்புடன் செல்கிறது – நன்று நன்று

  யார் அவர்கள் – தேவி ஏன் தற்கொலை செய்து கொண்டாள் – தேவியைக் கொன்றவர்களைக் காப்பாற்ற நினைக்க் வில்லை – ஆனால் சாவியை – இவ்வரிகள் இங்கு தேவையற்றதென நினைக்கிறேன். வாசகர்களின் ஊகத்திற்கு விட வேண்டும். நாம் வாசகர்களை அழைத்துச் செல்லக் கூடாது – அவர்களாக தொடர வேண்டும் – அதுதான் கதையின் – திகில் கதையின் இலக்கணம் இலட்சணம்

  நல்வாழ்த்துகள் கார்த்திக்

 7. sethu சொல்கிறார்:

  கதை முடியட்டும்.கமல்10/ரமணி 60 இறு்திப் பகுதியில் தங்களுக்கும் ஓர் செய்தி உள்ளது. நண்பரே! -சேது

 8. மோகனன் சொல்கிறார்:

  வார்த்தைகளை நன்கு பிரயோகம் செய்யுங்கள் தோழா… கோர்வை வேண்டும்…

  நான்கைந்து முறை நீங்களே திரும்பத் திரும்ப படித்துப் பாருங்கள்..நான் சொன்னது புரியும்..

  வாழ்த்துக்கள்…

  என்றென்றுன் அன்புடன்

  உங்களன்பன்

  மோகனன்

 9. செந்தழல் ரவி சொல்கிறார்:

  நல்லா எழுதற…சூப்பரா இருக்கு……

 10. pinnokki சொல்கிறார்:

  எழுத்துப் பிழைகளை களைய NHM writer உபயோகியுங்கள்.

 11. தோழன் உமாசங்கர் சொல்கிறார்:

  அன்புத் தோழா கார்த்திக்,

  கடல் கடந்தாலும் தமிழன் தமிழையும்,மரபையும் மறப்பதில்லை என்பதற்கு ஒரு சான்று உமது நாவல்.
  நல்ல தலைப்பு, நல்ல தொடக்கம்!
  ஆச்சரியம் தான் உமது தமிழ் தாகம் குறையாமல் இருகிறதே!
  தொடரட்டும்…….
  நாவல்மட்டும் அல்ல கவிதை,சித்திரம் மற்றும் கட்டுரை என்று
  தொடரட்டும்…….உமது தமிழ்

  வாழ்த்துக்கள் தோழா !

  என்றும் அன்புடன்!
  தோழன் உமாசங்கர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s