பகுதி 3 : என்ன செய்யலாம் ?

என்ன செய்யலாம் ?

பகுதி 3 : என்ன செய்யலாம் ?


ஜன்னலின் வழியே பார்த்தால், பறவைகள் பயமின்றி இரை தேட பறந்து கொண்டிருந்தன! யாருக்கும் சாவித்திரி மாதிரி ஒரு மனைவி இல்லை. வானம் விரிந்து கிடக்கிறது, வருகிற பறவைகளின் சுதந்திரத்தை உறுதி செய்துபடியே! பூமியில்தான் பிரச்சணைகள் எல்லாம்!திருமணங்கள்; சாவித்திரிகள் மற்றும் முதலிரவுகள்.

தேனீரை சுவைத்தபடியே ஜன்னலின் வழியே தன் பார்வையை தொடர்ந்தான் ரூபன். வேலைத்தளம் – ஆனால் வேலை பார்க்க முடியவில்லை அவனால்.

யாரோ அவன் அறைக்குள் வந்தார்கள். திரும்பிப் பார்த்தான் ரூபன். ஆறடி உயரத்தில் நிமிர்ந்த நெஞ்சுடன். வீரம் பேசும் உடலடுன் வெற்றி மாறன் நின்று கொண்டிருந்தான்.

“வா வெற்றி” – ரூபன் அழைத்தான்
“என்ன நண்பா இன்னைக்கும் வேலைக்கு வந்துட்ட ?” – வெற்றி ஆச்சர்யத்துடன் கேட்டான்
“அது … நெறைய வேல இருக்கு வெற்றி” – சமாளித்தான்
“உன் கடமை உணர்ச்சி என்ன புல்லரிக்க வைக்குது நண்பா” – கிண்டல் அடித்தான் வெற்றி.

வெற்றி, ரூபனின் அருகே வந்தான். வெற்றி, ரூபனின் கண்களை உற்று பார்த்தான். பயம் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருந்தது. கருப்பு விழிக்குள் மறைத்து வைக்க முடியாத பயம் அது.

“என்ன நண்பா ஒரு மாதிரி இருக்க ?” – வெற்றி விசாரித்தான்.
“சாவித்திரி, தேவியின் தற்கொலை பத்தி கேட்டாள்” – ரூபன் சொன்னான்.
“அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு கேட்க்க ரூபன்”
“ஆனா அவளுக்கு இருக்கிற கோபத்த பாத்தா பயமா இருக்கு வெற்றி”
“என்ன பயம்?”
“சாவித்திரி, தேவியின் தற்கொலைக்கு காரணமானவங்கள கொல்லாம விடமாட்டா போல… வெற்றி”

தன் கையை தாடையில் வைத்தவாறே யோசித்தான் வெற்றி. அவனும் நின்ற படியே வானத்தை ஜன்னல் வழியே பார்த்தான். வானம் யோசனை எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தது.

“என்ன செய்யணும் நண்பா இப்ப ?” – வெற்றி கேட்டான்
“வெற்றி, அவ இந்த விசயத்த மறக்கணும்”
“சரி! ஒரு வழி சொல்றேன் கேளு நண்பா”

புகை பிடித்து வெளிறிப்போய் இருந்த வெற்றியின் உதடுகளை ரூபனின் விழிகள் ஆர்வத்துடன் பார்த்தன.வலி போக்க வழி சொல்ல வரும் வழி அல்லவா அது!

“அது வந்து நண்பா … ” – வெற்றி மாறன் ஆரம்பித்தான்.

-தொடரும்

Advertisements

3 comments on “பகுதி 3 : என்ன செய்யலாம் ?

  1. cheena (சீனா) சொல்கிறார்:

    அன்பின் கார்த்திக

    கூறிய ஆலோசனைகளைச் செயல்படுத்தியதற்கு நன்றி

    முந்தைய இரண்டு இடுகைகளையும் ஒப்பு நோக்கும் போது இதன் நீளம் குறைவுதான். சரியான இடத்தில் தொடரும் என்ற சொல்லுடன் வாசகர்களின் ஆர்வத்தினைத் தூண்டும் இடுகை.

    வலி போக்க வழி சொல்ல வரும் வழி – அருமையான சொல்லாடல்

    நல்வாழ்த்துகள் கார்த்தி

  2. cheena (சீனா) சொல்கிறார்:

    அன்பின் கார்த்தி

    தமிழ்மணம் தமிழிஷ் போன்ற திரட்டிகளில் இணையுங்களேன். இடுகைகள் இடும் போது திரட்டிகள் அறிவிப்பு வெளியிடும். வாசகர் வட்டம் கூடும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

  3. pinnokki சொல்கிறார்:

    நல்ல மொழி வளம். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s