பகுதி 4 : சந்தித்த வேலை

ரூபன்: பயம் தொலையுது! பாவம் தொலையுது!

ரூபன்: பயம் தொலையுது! பாவம் தொலையுது!

வெற்றி மாறன் தொடர்ந்தான்.
“நண்பா சாவித்திரியை திசை திருப்பனும்”
“புரியல வெற்றி” – ரூபன் கேட்டான்.
“அதாவது சாவித்திரிக்கு ஒரு சிக்கல உண்டு பண்ணனும். முள்ள முள்ளால தான் எடுக்கணும்”
“என்ன சிக்கல் ?”
“அத நான் இப்ப சொல்ல மாட்டேன். எல்லாம் முடியட்டும்” – வெற்றி முடித்துக்கொண்டான்.

வெற்றியின் மீது ரூபனுக்கு முழு நம்பிக்கை உண்டு. வெற்றி அறையை விட்டு வெளியேறினான்.

அறையில் பிச்சிப்பூவின் வாசம். அப்போதுதான் புரிந்தது அறையில் ரூம் பிரெஷ்நேர் கொண்டு பிச்சிப்பூ வாசமிட்டுளனர் என்று. பயத்தில் இருந்த தருணத்தில் முழுசாக உடலுக்குள் உயிர் இருந்ததே தெரியவில்லை இதில் எங்கு அறையில் வாசம் இருப்பது தெரியும்?.

வெற்றி நடந்து போனதை பார்க்கும் போது ஏதோ தேவ தூதன் ஒருவன் வந்து போனது போல் இருந்தது.

இப்போது ரூபன் கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தான். துரியோதனனுக்கு கர்ணன் எப்படியோ அப்படி வெற்றி ரூபனுக்கு – “எடுக்கவோ ? கோர்க்கவோ ?” என்று கேட்கிற நட்பு.

இருக்கையில் அமர்ந்து நிமிர்ந்து பார்த்தான். உத்திரம் பயப்படாதே என்று சொல்லாமல் சொன்னது.

*****
தங்கக்கூண்டுக்குள் கிளி மாதிரி சாவித்திரி விட்டுக்குள் இருந்தாள். தனிமையை விட வறுமை கூட கொடியது கிடையாது. தந்தத்தால் செய்த அந்த உடல் கொஞ்சம் காலாற நடை போட விரும்பியது. வாழைத்தண்டு கால்களும் நாங்கள் தயார் என்றன. மனமும் ஆதரித்து வாகளித்தது.

தீர்மானம் நிறைவேறியது.

சாவித்திரி பக்கத்தில் இருந்த புதிய தலைமுறை காய்கறி கடைக்கு போனாள். அதாவது கரிவேர்பிலை வாங்கினால் கூட ரசிது தருகிற கடை. கணினியில் பில் போடுகிற கடை. கடன் அட்டையில் வர்த்தகம் செய்கிற கடை.

ஒரு தள்ளு கூடை வண்டியை எடுத்துக்கொண்டாள். அவசர உணவுகள் சில எடுத்து அதற்குள் போட்டாள். எதிரே ஒரு ஒருவம் வந்தது. அழகான தேகம். ஆளுமை விழிகள். ஆண்மையின் முகவரி சொல்லும் விரிந்த மார்பு. கண்ணாடிக்குள் கிடக்கும் கருப்பு விழிகள். சாவித்திரிக்கு கொஞ்சம் மூத்தவனாக இருக்கலாம்.

“நீங்க தேவிக்கு உறவா ?” – அவன் கேட்டான்.
“தேவி என் அக்கா” – சாவித்திரி சொன்னாள்.
“பாவம் தேவிய கொன்னுட்டாங்க”
“என்ன சொல்லறீங்க ?” – சாவித்திரி கேட்டாள்.
“உங்க அக்காவ தற்கொலை செஞ்சுக்க வச்சுட்டாங்க”
“யாரு?” – சாவித்திரி கேட்டாள்
“அவ கணவன்”
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா என்ன ஆதாரம் ?”
“உயிருள்ள ஒரு ஆதாரம் இருக்கே ?”
“என்ன சொல்லறீங்க ?”

தன் பேன்ட் பின் பையில் இருந்து பர்சை எடுத்தான் அவன். ஒரு அட்டையை எடுத்து நீட்டினான்.
“இந்தாங்க என் அறிமுக அட்டை. என்னோட முகவரி, தொலைபேசி எல்லாம் இருக்கு. நாம சிந்திப்போம். பேசுவோம்.”

அவளின் பதிலுக்கு காத்திராமல் போய் விட்டான்.

“ஆற்றல் அரசன் MBA, MD செந்தமிழ் நூர்பாலை. தொலைபேசி #######. கைபேசி #####” – அட்டை சொல்லியது.

உயுருள்ள ஆதாரம் ?

-தொடரும்

Advertisements

5 comments on “பகுதி 4 : சந்தித்த வேலை

 1. pinnokki சொல்கிறார்:

  அருமை..தொடருங்கள்.

 2. venki சொல்கிறார்:

  neenga romba yosipingalo? kadhai supera poguthu

 3. Karthick B சொல்கிறார்:

  Karthik – Ungalin thodar kathai sirappaga ullathu. Kurippaga ungalin Uvamaigal . adutha pathivukkaga kathirukkeraen !

 4. cheena (சீனா) சொல்கிறார்:

  அன்பின் கார்த்திக்

  கதை அருமையாகச் செல்கிறது – தொடர்க

  நல்வாழ்த்துக்ள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s