பகுதி 5 : மரணத்தின் அருகில் ஒரு வாழ்க்கை

தொலைபேசி: இங்கே அடித்தால் - அங்கே  அழுகிறது.

தொலைபேசி: இங்கே அடித்தால் - அங்கே அழுகிறது.

எதிரிக்கு எதிரி நண்பன் – ரூபனின் எதிரி சாவித்திரிக்கு நண்பன். அதுவும் தேவியின் மரணத்திற்கு ஆதாரம் தருகிறேன் என்பவன் மிக நல்ல நண்பன்.

வீடு வந்த சாவித்திரி தொலைபேசியை தேடினாள். தன் எண்ணங்களை சொல்ல எண்களை அழுத்தினாள். எவ்வளவு அழகான எண்கள். இங்கே அடித்தால் – அங்கே அழுகிறது.

“வணக்கம் சென்பகராமன்”
“அப்பா சாவித்திரி பேசுறேன்”
“சொல்லும்மா”
“நீங்க நெனைக்குற மாதிரி ரூபன் நல்லவரில்லா”
“என்னம்மா சொல்ற ?”
“கொஞ்ச நாள் பொறுங்க. நிருப்பிக்குறேன்”
“நீ பாத்து இருந்துக்கம்மா”
“அப்பா நான் துப்பாக்கி சுடுரதுல தங்க பதக்கம் வாங்கினவ”

உரையாடல் முடிந்தது.
****************************
இன்னும் ஒரு நாள் விடிந்தது. சாவித்திரி எழுந்து தொழுது முடித்து இருந்தாள். ரூபன் நாற்காலியில் அமர்ந்து தினமணி படித்துக்கொண்டிருந்தான்.

நெற்றியில் குங்குமம் இட்டு, அதற்கு கீழே திருநீறு பூசி, தெய்வ சொருபமாய் இருந்தாள். பார்த்தாலே கை எடுத்து கும்பிடலாம். சாவி என்கிற பாவி என்கிற மாதிரி இல்லாமல் மகாலட்சுமி தேவி என்கிறமாதிரி இருந்தாள். ருபனால் நம்பவே முடியவில்லை. தீப தட்டுடன் வந்தாள்.

“இன்னும் குளிக்கலயாங்க ?” – சாவித்திரி கேட்டாள்.
மிதமான பச்சையில் சேலை; இதமான பேச்சில் அழகான தமிழ். சாவித்திரி நீயா இது ?

“இல்ல சாவித்திரி ஹீட்டர் போடணும்”
“ஆமா! கட்டாயம் போடணும்”
“ஆன கரண்ட்டு இல்ல. இன்னைக்கு மின்வெட்டாம் மதியம் வரை. பேசாம குழிக்காம போக வேண்டியதுதான்”

சாவித்திரி பற்களை கடித்தாள் நர நரவென்று. முகம்
பயங்கரமாய் கோபம் கொண்டது.

“என்ன ஆச்சு சாவித்திரி ?” – ரூபன் பயத்துடன் விசாரித்தான்.
“உன் சாவுக்கு உனக்கு ஒரு சாம்பிள் காட்டாலாம் என்று இருந்தேன். அதுக்கு இன்னைக்கு வழி இல்லாம போயிடுச்சே ?” – சாவித்திரி பற்களை கடித்தாள்.

ரூபனின் முகமெல்லாம் பயம். வியர்வை முகத்தை போர்த்தியது.

தொலைபேசி போதுண்டா உங்க சண்டை என்கிற மாதிரி அலறியது. சாவித்திரி தீப தட்டை வைத்து விட்டு போய் தொலைபேசியை எடுத்தாள்.

“ஹலோ! நாங்க T2 ஸ்டேசன்ல இருந்து பேசுறோம்” – மறு முனை, ஒரு காக்கி குரல்.
“சொல்லுங்க” – இது சாவித்திரி
“தேவி தற்கொல விஷயமா பேசணும்”.

சாவித்திரி ஸ்பீக்கர் போனில் போட்டாள்.
“தாராளமா பேசுங்க” – இது சாவித்திரி
“அது வந்து – இப்ப தான் துப்பு கெடச்சுது. தேவிய தற்கொல செய்ய தூண்டினது சாவித்திரியாம். அவுங்க தங்கையாம். இன்ஸ்பெக்டர் மதியம் விட்டுக்கு வருவாரும்மா உங்க முதலாளி கிட்ட சொல்லிடும்மா”
பதிலுக்கு காத்திராமல் மறு முனை முடித்துக்கொண்டது.

ரூபன் உறைந்து போனான். எது உண்மை ? இது வரை தேவி மரணத்திக்கு காரனமாய் நினைத்ததா ? இதுவா ?

-தொடரும்

Advertisements

6 comments on “பகுதி 5 : மரணத்தின் அருகில் ஒரு வாழ்க்கை

 1. venkatesh சொல்கிறார்:

  Let me add my first comment for this episode – super nanba, kalakitinga..

 2. Saravanan Ramalingam சொல்கிறார்:

  Nice move…

  First episodela niraya karpanaigal irundhuchi aana adhu ippa kammiya irukara maadhiri oru feel.

  naangalaam kuttram kandupipadharke pirandhavargal 🙂

  Just for fun. Nalla ezhudhareenga…

  My Hearty wishes to you…

 3. அதி பிரதாபன் சொல்கிறார்:

  மன்னிக்கனும் கார்த்திக். வேலை அதிகமாக இருப்பதால் பதிவுகள் அதிகம் படிக்க முடியவில்லை.

  மின்னஞ்சல் செய்யவும். பேசலாம்.

 4. cheena சொல்கிறார்:

  as of now i do not have tamil font – let me comment later

 5. cheena (சீனா) சொல்கிறார்:

  அன்பின் கார்த்திக்

  இது வெற்றியின் வேலையாக இருக்கும்

  மற்றபடி கதை தொய்வடைகிறதே – விறுவிறுப்பு இல்லையெ

  சீக்கிரமே முடியப் போகிறதா

  நல்வாழ்த்துகள்

  • biopen சொல்கிறார்:

   அன்பின் சீனா – வருகைக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள். கதை தொய்வு அடைந்ததை சொன்னதற்கு நன்றி. உங்கள் கருத்தை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s