பகுதி 6 : செவ்விதழ் என்ன ஆனாள் ?

சாவித்திரியும் செவிதழும் : ஏங்குகிற மனமும் தாங்குகிற கரமும்

தேவியும் செவ்வியும்: ஏங்கிய சேயும் தாங்கிய தாயும்!


ஒவ்வொரு நிமிடமும் யுகமாய் கரைந்தது ரூபனுக்கு. வெற்றியிடம் பேசலாம். இல்லை நாளை வரை பொறுப்போம் என தன்னை சமாதானம் செய்து கொண்டான்.

அன்னம் தண்ணி எதுவும் இறங்கவில்லை. சாவு பக்கத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கையில், எப்படி சாப்பாடு உள்ளே இறங்கும் ?

சாவித்திரியை மனம் முடிக்க எடுத்து முடிவு மிகப்பெரிய தப்பு என்றது ரூபனின் மனம். ரூபன் பாவத்தின் தேசத்தில் சாபம் வாங்கி வந்து உட்கார்ந்து இருக்கிறான்.

சாவித்திரி ரூபனை பார்த்து ஒரு புன்னகை பூத்தாள் தொலைபேசியை கீழே வைக்கையில். அது ஏதோ பூகம்பம் வெடித்த மாதிரி இருந்தது.
தண்ணிரில் மின்சாரம் நடனம் ஆடுவது மாதிரி இருந்தது. பயத்தில் பாதி செத்து போய்விட்டான் ரூபன்.

வெளியில் வந்து தன் செல் போனில் இருந்து எண்களை அழுத்தினான்.

“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்” – ஒவ்வொரு முறையும் இந்த பெண்தான் பேசினாள். வெற்றிமாறன் ஒரு முறை கூட பேசவில்லை.
.
நிலா உச்சிக்கு வந்தது. ஒரு பேய் விட்டுக்குள் போய் கூட குடி புகலாம் சாவித்திரி இருக்கிற இடத்தில்?

மௌனமாய் இரவு கழிந்தது. இளமயில் கல் என்கிற மாதிரி இரவினில் தூங்கு என்று ரூபனின் அப்பா
சொல்லுவார் – ஆனால் இன்று ?
*******************
பொழுது புலர்ந்தது! விடுவிக்க வந்த ரட்சகனாய் கதிரவன் வந்தான். விட்டுக்கு முன்னால் இருந்த புல்வேளியில் வைரங்கள் மிணின. ரூபனின் முகத்திளுந்தான். தப்பினோம் பிழைத்தோம் என்று ரூபன் வேலைத்தளம் விரைந்தான். முதல் ஆளாய்
வந்து அமர்ந்தான். திரும்பத் திரும்ப வெற்றியின் எண்களுக்கு முயற்சித்தான். வெற்றி கிட்டவில்லை.

ஜன்னல் வழியே பார்த்தான். கீழே வழக்கமாய் கார்கள் நிற்கிற இடத்தில் எதுவும் நிற்கவில்லை. கண்களை மூடினான் – கண்களுக்கு முன்னால் காட்சி விரிந்தது. நிற்கிற கார் எல்லாம் கருப்பு நிற அமரர் ஊர்திகள். பின்னணியில் சங்கு சத்தம்.

திடுக்கிட்டவன் கண்களை திறந்தான். நன்றாகவே விடிந்து இருந்தது.

வெற்றியின் எண்களுக்கு முயற்சித்தான். இந்த முறை வெற்றி கிட்டியது.

“நண்பா ரூபன் பேசுறேன்” – ரூபன் பதட்டத்துடன் ஆரம்பித்தான்.
“சொல்லு நண்பா” – வெற்றி மறு முனையில்.
“சாவிதான் தேவிய தற்கொலைக்கு தூண்டினதா போலீஸ் சொல்லுது”
“என்ன நண்பா சொல்ற?” – வெற்றி பதட்டத்துடன் கேட்டான்
“ஹ்ம்ம்”
“அப்ப செவ்விதழ் ?” வெற்றி பதிறினான்
“என்ன வெற்றி சொல்ற ?”
“இப்பதான் செவ்விதழ விட்டுட்டு வர்றேன்”
“என்ன வெற்றி சொல்ற. நானும் தேவியும் பாத்து பாத்து தத்தெடுத்த செவ்வியவா ?”
” ஆமா” – வெற்றி சொல்லியவாறே ரூபனின் வீட்டிற்கு வண்டியை திருப்பினான். வேகத்தை கூட்டினான்.

செவ்விதழ் என்ன ஆனாள்?
-தொடரும்

Advertisements

One comment on “பகுதி 6 : செவ்விதழ் என்ன ஆனாள் ?

  1. cheena (சீனா) சொல்கிறார்:

    அன்பின் கர்த்திக்

    கதை சூடு பிடிக்கிறது – எதிர்பாரா திருப்பங்கள்

    பொறுத்திருந்து பார்ப்போம்

    நன்று நன்று நல்வாழ்த்துக்ள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s