சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 8: செவ்விதழ் எங்கே ?

செவ்விதழ் எங்கே ?: பதில் இங்கே?"

செவ்விதழ் எங்கே ?: பதில் இங்கே?


தூய மரியாள் கருணை இல்லம். இங்கே இருந்துதான் செவ்வி தத்தெடுக்கப்பட்டாள். பிள்ளை இல்லை என்பவர்கள் கோயில் சுற்றும் போது – உண்மையை புரிந்து கொண்டு செவ்விதழை இங்கே இருந்து தத்தெடுத்தனர் ரூபனும் தேவியும். தேவி தெய்வம் போல. கவரிமான் வழி
வந்தவள்.

தேவி – அழகான தேகம்; அமிழ்தான வார்த்தைகள்; புன்னகைக்கும் பூ; கண்ணசைக்கும் கவிதை; வண்ணம் கொண்டு தீட்ட முடியாத வனப்பு; ஒழுக்கத்தை மூச்சென மதிக்கும் உயர்வான பெண். கடுஞ்சொல் பேசத்தெரியாத நல்லவள். அவர்கள் தத்தேடுக்கையில் செவ்விதழ் கைக்குழந்தை. செவ்விதழ் கைவிடப்பட்டவள் என்பதால் தேவி தத்தெடுவில்லை – ஒப்படைக்கலாம் என்பதாலும்.

வெற்றி அமைதி தவழும் அந்த இல்லத்திற்குள் சென்றான். அமைதியே வடிவாய் அன்னை ரோஸ் அங்கே இருந்தார்.
“வாங்க வெற்றி” – வரவேற்றார் அன்னை
“செவ்விதழ் ?” – வெற்றி ஆரம்பித்தான்
“நல்லா இருக்காளா ?” -அன்னை கேட்டார்
“இங்க சாவித்திரி கொண்டு வந்துவிடல ?”
“சாவித்திரி வந்தாங்க ஆனா செவ்விய விட வரல ?”

பதிலுக்கு காத்திராமல் வெற்றி கிளம்பினான். சாவித்திரியை கைபேசியில் அழைத்தான்.

“சாவித்திரி, செவ்வி எங்க ?”
“நீயே கண்டு பிடி வெற்றி”

வானத்தை அண்ணாந்து பார்த்தான் வெற்றி. புரியாமல் நின்றான். எங்கே செவ்வி ?.

வெற்றி தன் கைபேசியில் எண்களை மீண்டும் அழுத்தினான். இந்த முறை ரூபனுக்கு.

“நண்பா செவ்வி …” வெற்றி பதட்டப்பட்டான்
“வெற்றி அவ எங்க இருக்கானு பாதி பதில் எனக்கு கெடச்சுடுச்சு” – ரூபன் சொன்னான்.
“எங்க?”
“உடனே ஆபிஸ் வா”
“இதோ நண்பா”

வெற்றி விரைந்தான். ரூபன் தலையில் கைவைத்தபடி தலை கவிழ்ந்து இருந்தான். வெற்றி ரூபனின் அறைக்குள் நுழைந்தான். குனிந்தவாறே ரூபன் ஒரு கவரை கொடுத்தான்.

வெற்றி வாங்கினான். பிரித்தான். ஒரு சின்ன காகிதம். ஒரே ஒரு வரி எழுதி இருந்தது.

அந்த வரி ….
“செவ்விதழ் என்னிடம் உள்ளாள்”

யாரிடம் செவ்விதழ் … ?

-தொடரும்

8 comments on “சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 8: செவ்விதழ் எங்கே ?

  1. cheena (சீனா) சொல்கிறார்:

    அன்பின் கார்த்திக்

    திகில் ஒவ்வொரு பகுதியிலும்

    பொறுப்போம் – கடைசி வரை

    நல்வாழ்த்துகள்

  2. karisalkaran சொல்கிறார்:

    ந‌ண்பா ந‌ல்லாருக்கு
    ஆனால் ரொம்ப‌ சின்ன‌ அத்தியாங்க‌ளா இருக்கு (ஒரு வேளை என‌க்கு ம‌ட்டுமோ)

    • biopen சொல்கிறார்:

      நீங்கள் சொல்வது உண்மைதான். நான் இயல்பிலேயே கொஞ்சம் சோம்பேறி. அதிலும் இப்போது நேரம் வேறு கிடைப்பதில்லை. நன்றி உங்கள் வருகைக்கு.

  3. Mohan சொல்கிறார்:

    கதை நல்லா இருக்குங்க. ஆனால், கதை மாந்தர்களின் பேரெல்லாம்,சரித்திர நாவல்களில் வரும் பேர்கள் போல் இருப்பதுதான் கொஞ்சம் உறுத்துகிறது.

  4. biopen சொல்கிறார்:

    நண்பரே, நல்ல தமிழ் பெயர்களை யோசித்ததில் வந்த வினை இது. ஆனாலும் நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். கொஞ்சம் எதார்த்தப்படுத்தி இருக்கலாமோ ? நன்றி உங்கள் வருகைக்கு.

  5. t.V.Radhakrishnan சொல்கிறார்:

    திகில் ஒவ்வொரு பகுதியிலும்

t.V.Radhakrishnan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி