சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 12 : அடுத்த பகுதியில் நிறைவுபெறும்!

காடும் காடு சார்ந்த இடமும் ஆன அந்த இடத்திற்கு ரூபன் வெற்றியோடு வந்தான். ஆதாரங்கள் தந்து சாவித்திரியை காப்பாற்ற வந்தான்.
மாலை மயங்கிய அந்த வேளையில், அரவங்கள் கூட நடமாடும் இடம் போல் இருந்தது அந்த காடு. ஆனால் உள்ளே போனால் – எல்லா வசதிகளும் உள்ள அரச மாளிகை.
“வரவேற்கிறேன் ரூபன். வெற்றி உன்னையும்தான்” – ஆற்றல் வரவேற்றான்.
“ரூபனுக்கு உன்னால எந்த தீங்கும் வராதே ?” – வெற்றி கேட்டான்.
“வெற்றி நீ ரொம்ப பயப்படுற. உனக்கும் உதவிக்கு ஓடிவர ஆள் இருக்கு. உன் குப்பத்துல உன்ன காப்பாத்த ஒரு கூட்டமே இருக்கு. நீ ஏன் பயப்படுற ?”
“நான் பயப்படுவது ரூபன பத்தி ஆற்றல் ”
“பயப்படாதே வெற்றி ”
“நம்பலாமா ஆற்றல் ?”
“நம்பினார் கெடுவதில்லை வெற்றி”
“ம்ம்ம்”
“எங்க அப்பாவுக்கு நல்ல பேரு இருக்கு. எங்க நீயும் ரூபனும் எதாவது செய்றதுல எங்க அப்பா பேரு கெட்டுவிடுமொன்னு பயந்தேன்”
“உங்க அப்பா பேர காப்பாத்திக்கோ ஆற்றல் ”
“ம்ம்ம். இதுக்கு இடைல ஒரு கேள்வி. யாரு செவ்வி ?”
“உன் பொன்னுதாண்டா” – ரூபன் உறுமினான்.
“என்ன சொல்ற ரூபன்” – ஆற்றல் ரூபனை பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“ஆமா! உன்ன கடைசியா சாவித்திரி பாக்கவந்ததே, எலிசபெத் சாவ சொல்ல தான். நீ எலிசபெத்த மறந்திருக்கலாம். ஆனா எலிசபெத் தன சாவுக்கு முன்னால உன்ன பாக்க நெனச்சா ” – ரூபன் பேசினான்.
“நிஜமா ?” – ஆற்றல் கண்ணீரோடு கேட்டான்.
“நீ அந்த நேரத்துல எவ மடியிலையோ தண்ணி அடிச்சுட்டு ஹோட்டல் தேவடட்சனால கெடந்த”
“அது நான் சோகத்துல இருந்த தருணம். எங்க அப்பாவோட பேர பத்தி கவலைப்படாத நேரம். தேவி கெடைக்காத பிறகு நான் எலிசபெத்த நெனச்சு வருந்தினேன். தேடினேன். ஆனா அவள் கிடைக்கல”
“எலிசபெத் செவ்விய கொடுத்துட்டு இறந்துட்டா” – ரூபன் முடித்தான்.
ஆதாரங்கள் கொடுக்கப்பட்டன. ரூபனும் வெற்றியும் சாவித்திரியை விடுவித்து அழைத்தனர். சாவித்திரி பட்டென காவல் உடையில் இருந்தவன் இடையில் இருந்து துப்பாக்கியை எடுத்தாள்.
ரூபன், வெற்றி, ஆற்றல் – முவருக்கும் முன்னால் துப்பாக்கியை நீட்டினாள்.
“அது நெச துப்பாக்கி” – ஆற்றல் அலறினான்.

“எனக்கு பதில் தெரியனும். யார் எங்க அக்கா தற்கொலைக்கு காரணம் ?” – சாவி கர்ஜித்தாள்.

சாவியின் விரல் ட்றிக்கரின் மீது இருந்தது. சாவி அழுத்தினாள். நிசப்பதமும் வியர்வையும் ரூபனை ஆட்சி செய்தது.

“சாவி வெடிச்சுடும்” – வெற்றி அலறினான்.
“வெடிக்கட்டும். ஆனால் எனக்கு உண்மை வேணும்” – சாவி உறுமினாள்.
“சாவி … ” – இது வெற்றி
“சொல்லு உண்மைய வெற்றி” – சாவி வியர்வையோடு பத்ரகாளி மாதிரி நின்றாள்.
“எங்க மூணு பேரில் யாரும் இல்ல” – ஆற்றல் சொன்னான்
“அப்ப யாரு ?” – சாவி கத்தினாள்
“எங்களுக்கு தெரியாது. ஆற்றல் டார்ச்சர் தாங்கமதான் தேவி இறந்துடானு நான் நெனச்சேன்”
“ரூபன், நீ சொல்றது உண்மையா இருக்கலாம்” – சாவி துப்பாக்கியை ஆற்றலை நோக்கி நீட்டினாள்.
“சாவி, ரூபன் என்னோட கடிதங்கள பாத்துட்டு தேவிய சந்தேக பட்டிருக்கன் அதான் தேவி இறந்துட்டா” – ஆற்றல் திசை திருப்பினான்.
“நீ சொல்றது உண்மையா இருக்கலாம்” – சாவி துப்பாக்கியை ரூபனை நோக்கி நீட்டினாள்.
“சாவி ஆற்றலை நம்பாத” – வெற்றி கத்தினான்.
“ஏன் ?” – சாவி கேட்டாள்
“அது … ” – வெற்றி தடுமாறினான்
“நீதான் காரணமா ?” – சாவி துப்பாக்கியை வெற்றியை நோக்கி நீட்டினாள்.

அவளது விரல் அழுத்தத்தை அதிகப்படுத்தியது. துப்பாக்கி பசியோடு இருந்தது. உயிரை குடிக்க தயாராய் இருந்தது. தோட்டா துப்பி உயிரை விழுங்க பசியோடு துப்பாக்கி இருந்தது. ஆனால் இன்னும் இலக்குதான் தெரியவில்லை. சாவித்திரிக்கும் சரி துப்பாக்கிக்கும் சரி – இன்னும் இலக்குதான் தெரியவில்லை.
“ஏன் வேற யாராவதா இருக்க கூடாது சாவித்திரி ?” – ஒரு குரல் வந்தது. குரல் வந்த திசை நோக்கி சாவி திரும்பினாள். அதிர்ச்சியோடு பார்த்தாள்.
-தொடரும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s