சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 13 : நிறைவு பகுதி!

*************************************************************************
குறிப்பு: என் வலைப் பூவில் சில பிரச்சனைகள் இருந்தன. அவை தீர்க்கப்பட்டு விட்டன.
*************************************************************************

ஹோட்டல் தேவதட்ச்சனா – செல்வந்தர்களின் சொர்க்க லோகம். பணம் செய்த மனிதர்களின் பண்பு செத்த இடம். இளம் வயதின் தாகம் தணிக்கும் இடம். ஒழுக்கம் என்ன விலை என்று கேட்கும் இடம்.

இங்கு சில நிமிடங்கள் நடந்த தவறான புரிதலின் விழைவாக ஒரு ஒழுக்க தேவதை உயிர் நீத்தாள். பாண்டியனின் தவறான புரிதலால் கண்ணகி தன் கணவனை இழந்தாள். மாதவியும் ஒரு தவறான புரிதலால் காதலனை இழந்தாள். ஒரு தவறான புரிதலால் சீதை தீக்குளித்தாள். நம்பிக்கை எப்படி வாழ்வின் உயர்வோ அது மாதிரி தவறான புரிதல் மனிதகுலத்தின் வீழ்ச்சி.

குரல் வந்த திசையை நோக்கி பார்த்த சாவித்திரி அதிர்ச்சியில் நின்றாள். கணக்கு சிவானந்தம் நின்று கொண்டு இருந்தார்.
“நான் சொல்வதெல்லாம் உண்மை சாவித்திரி” – சிவானந்தம் ஆரம்பித்தார்.

“வேனாம் அய்யா” – வெற்றி கெஞ்சினான்.
“வெற்றி உணமையை சொல்லி ஆக வேண்டும்” – சிவானந்தம் மறுமொழி சொன்னார்.
“ஆமாம் … உண்மை வேண்டும்” – சாவி கட்டளை இடும் தொனியில் பேசினாள்.

“அது ஒரு மோசமான நாள். எலிசபெத் மரண நேரத்தில் ஆற்றலை சந்திக்க நினைத்தாள். கருணை இல்லத்தில் தான் அவளது கடைசி நிமிடங்கள் கழிந்தது. தேவி எலிசபெத்தின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைத்தாள். ஆற்றல் அப்போது எங்கே இருந்க்கிறான் என்பது அவளுக்கு தெரியாது. பிராங்க்ளின் தாமசுக்கு போன் செய்தாள். பிராங்க்ளின் ஆற்றலின் நெருங்கிய நண்பன். ஆற்றல் ஹோட்டல் தேவதட்ச்நாவில் உள்ளான் என்றும் பார்க்க முடியாது என்றும் சொன்னான். எலிசபெத்தின் நிலையே சொன்னபோது அவன் கருணை இல்லத்திற்கு வந்தானே தவிர ஆற்றல் வரவில்லை. தேவி அவனை கட்டாயபடுத்தி எலிசபெத்தையும் அவனது ஆம்னி வேனில் ஏற்றி தேவதட்ச்ச்சனா போனா. எலிசபெத் மரணபடுக்கையில் இருக்க தேவதட்ச்ச்சனவுக்குள் தேவியும் பிரான்க்லினும் போனாங்க. ஆனால் தேவதட்ச்ச்சனவில் ஆற்றல் இல்லை. வேறு எவள் வீட்டுக்கு போனானோ ?. ஹோட்டலுக்குள் இருந்து வெளியே வந்த தேவியை பார்த்தார், பக்கத்தில் இருந்த விதை நெல் விற்கும் நிலையத்திற்கு வந்த உங்க அப்பா சென்பகராமன். அதிர்ச்சியும் கோபமும் அவரை தேவியை நோக்கி சரமாரியான கேள்விகளை வீசவைத்தது. தான் வளர்த்த ஒழுக்கமான மகளா இங்க ? என்று மனம் வருந்தினார். தேவிக்கு நேரமில்லை உங்க அப்பாவை சமாதான படுத்தவோ விளக்கம் சொல்லவோ. வேகமாய் மருத்துவமனை போக வேண்டும் அவள் – எலிசபெத்தை காப்பாத்த. தேவியை பார்த்த தகவலை உங்க அம்மாவிடம் அய்யா சொல்ல. நீ நினைக்குற மாதிரி வயசான காலத்தில் வரும் நெஞ்சு வழியில் உங்க அம்மா போகவில்லை சாவி, இந்த செய்தி கேட்டு இறந்தார் உங்க அம்மா”

சாவித்திரி மௌனமாய் கேட்டாள்.

“தன்னால் தன் அம்மா இறந்ததும். தனக்கு ஒழுக்கம் சொன்ன தந்தை தன்னை தவறாக நினைத்தும்தான் தேவியை நிலை குலைய வைத்தது. தேவியின் விளக்கத்தை உன் அப்பா ஏற்கவில்லை. தன்னை நிருப்பிக்க தற்கொலை செய்து கொண்டாள். ஒழுக்கத்தை நிருப்பிக்க தீக்குளி என்பது இந்தியா பெண்களுக்கு சொல்லி கொடுக்கும் தர்மம். இது எதுவும் தெரியாமல் நீ கொடைக்கானலில் உன் சித்தப்பன் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தாய். ரூபன் ஆற்றலை இந்த தற்கொலைக்கு காரனமாய் நினைத்தது எனுக்கு இப்பதான் தெரியும் ” – சிவானந்தம் முடித்தார்.

டுமில் … டுமில் … சாவித்திரி தன் கை துப்பாக்கி முனையை பார்த்தாள். அது மௌனமாகவே இருந்தது. புகை விடவில்லை. அமைதி காத்தது. ஆனால் ஒரு மரணம் விழுந்தது.

“ஆற்றல் …. ” – பிராங்க்ளின் ஓடி வந்து தாங்கிக்கொண்டான்.
“ஏன்டா இந்த உண்மைய சொல்லல ?”
“நீ இப்படி செஞ்சுக்குவியே என்றதான் நண்பா”
“என்ன இருந்தாலும் நானும் தேவி தற்கொலைக்கு காரனமடா”
“இல்ல நண்பா”
“என்னால தானே அவ ஹோட்டலுக்கு வந்தா …?”
“அது விதி”
“இல்லடா”
ஆற்றல் கண்மூடினான். பாண்டியன் கண்ணகிக்கு தான் செய்த தவறு எண்ணி உயிர் விட்ட மாதிரி.
ஆற்றல் தற்கொலை செய்து கொண்டான்.

சாவித்திரி துப்பாக்கியை கீழே போட்டாள்.

“நீங்க எப்படி இங்க கணக்கு ?” – சாவி கேட்டாள்
“நீ எப்ப ரூபன் நல்லவநில்லைன்னு உங்க அப்பாகிட்ட பேசினாயோ அப்ப இருந்தே உன் பாதுகாப்புக்காக நான் உன்னை நிழல் மாதிரி தொடர்கிறேன்” – கணக்கு சொன்னார்.
“அப்பாகிட்ட பேசணும்” – சாவி சொன்னாள்

எண்கள் அலுதப்பட்டன.
“அப்பா சாவி பேசுறேன்”
“சாவி நான் நிலா பேசுறேன். அப்பா நம்மள விட்டு போயட்டாருடி … ” – நிலா அழுதாள்.

ரூபனையும் வெற்றியையும் பார்த்தாள். தன்னை ஆற்றலிடம் இருந்து காப்பாற்ற நினைத்த நல்ல உள்ளங்கள். தன் தந்தையின் தவறான புரிதலே தன் அக்காவின் மரணத்திற்கு காரணம் என்ற போது சாவி வருந்தினாள். உண்மை சுட்டது.

ஆற்றல் பிரான்க்ளினின் மடியில் பிணமாய் கிடந்தான். ரத்தம் அவன் நெஞ்சில் இருந்து வடிந்தது.

எல்லோரையும் எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொள்வோம்!

Advertisements

2 comments on “சாவித்திரி இளம் சூழ்ச்சிக்காரி பகுதி 13 : நிறைவு பகுதி!

 1. t.V.Radhakrishnan சொல்கிறார்:

  சில பெயர்களை நினைவில் கொள்ள சற்று சிரமம் எற்பட்டது உண்மை.ஆனால்..அருமையான ஒரு தொடரைக் கொடுத்துள்ளீர்கள்

 2. cheena (சீனா) சொல்கிறார்:

  அன்பின் கார்த்திக்

  கதைக் கரு நல்ல கரு – ஆனால் கொண்டு சென்ற விதம் இன்னும் மெருகேற வேண்டும். அனைத்துப் பகுதிகளையும் படித்தேன் – ஆனால் மறுமொழி இடவில்லை.

  பலப்பல கதா பாத்திரங்கள் – தேவையா – நினைவில் வைத்துக் கொள்ள வாசகன் தயங்குவான்

  கதை சற்றே வேகமாகச் சென்றது

  எளிதில் மறந்து விடும் – ஒரு தொடர் படிக்கும் போது முந்தைய தொடர் மறந்து விடும் அபாயம் இருக்கிறது

  தூய தமிழ்ப் பெயர்கள் திகில் கதைகளின் சுவாரசியத்தினைக் குறைக்கும்

  மனதில் பட்டதை எழுதுகிறேன் – கவனத்தில் வைக்கவும்.

  நல்வாழ்த்துகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s