நன்றி நண்பர்களே! : காந்தியின் காதலா ? புத்தரின் முடியா ?

கணினிப்படுதப்பட்ட என்னுடைய முதல் கதைக்கு பின்னுட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
சீனா சார் அவர்களின் கருத்து பலதருனங்களில் எனது எழுதும் விதத்தை பாதித்தது. அவரது வலைபூ ஜனநாயக முறைப்படி இயங்குகிறது. வாரம் ஒருவர் – நல்ல நடைமுறை, பாராட்டுக்கள் சார். நிச்சயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும் சீனா சார்!
TVR அவர்கள் மென்மையாய் பலசமயங்களில் ஊக்கமும் தந்தார் தவறுகளை சுட்டியும் காட்டினார். நன்றி நண்பரே!
பின்னோக்கி அவர்கள் மிக சிறந்த உரைநடையில் புலனாய்வு தொடர் எழுதி வருகிறார். அவரின் பாராட்டு எனக்கு ஊக்கம் அளித்தது.
கரிசல்காரன் சொன்ன மாதிரி ஏதோ விளம்பர இடைவெளி என்கிற மாதிரி சின்ன சின்ன அத்யாயங்கள் தான் எழுதினேன்.
நண்பர் வெங்கடேஷ் ஆரம்பத்தில் இருந்து படித்து அவ்வப்போது கருத்து சொன்னார். மோகனன் சொன்ன கருத்துக்களை ஏற்கிறேன்.
கார்த்திக் B தொடர்ந்து என் எழுத்துக்களை எதிர்பார்பதை சொன்னார். நன்றி நண்பரே. செந்தழல் ரவி அவர்களின் வருகைக்கும் நன்றி. உங்கள் கருத்து உக்கம் அளித்தது. ஆதி பிரதாபன் அவர்கள் வேலை நிலை காரனமாய் தொர்ந்து படிக்க முடியாமை பற்றி எழுதினர். நண்பரே நீங்கள் சொன்னது போல் நாம் மின் அஞ்சலில் நட்பை தொடர்வோம். பேசுவோம். இதயம் பெதுகிறது அவர்களின் கருத்தும் மிக சரி – முதலிலேயே தொடர் ஆரம்பித்திருக்க வேண்டாம் தான்.

நண்பர் வசந்த் (ப்ரியமுடன் வசந்த் அல்ல ) மினஞ்சல் அனுப்பி அடுத்த பகுதி எதிர்பார்ப்பதை சொன்னார். நன்றி நண்பா!. சே குமார் அவர்கள் தந்த பாராட்டுக்கு நன்றி. தோழன் உமாசங்கர் அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி. நண்பர் இளங்கோவன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

தோழர் கணேஷ், தோழர் சேது அவர்களுக்கு நன்றி. தோழர் சேது ஏதோ கதை முடிந்ததும் சொல்வதாய் சொன்னார். (அது என்ன நண்பரே ?) நண்பர் நாகேந்திர பாரதி,நண்பர் கண்ணன் அவர்களுக்கும் என் நன்றி.

யாருடைய பெயர் விடுப்பட்டிருந்தாலும் மன்னிக்கவும். எல்லோருக்கும் நன்றி.

நான் அடுத்து எழுத நினைப்பது காந்தியின் காதலை ( இவர் கஸ்துரிபா இல்லை ) பற்றியோ புத்தனின் முடியை பற்றியோ. நீங்கள் இது தொடர்பாக என்ன நினைகிறீர்கள் ?

பத்து நாள் விடுமுறை.மீண்டும் திரும்பும் போது புதிய சிந்தனைகளோடு சிந்திப்போம்!

மீண்டும் ஒரு முறை நன்றி!

Advertisements

3 comments on “நன்றி நண்பர்களே! : காந்தியின் காதலா ? புத்தரின் முடியா ?

 1. பின்னோக்கி சொல்கிறார்:

  எடுத்த உடனே இவ்வள்வு பெரிய கதை எழுத துணிச்சல் வேண்டும். அது உங்களிடமிருக்கிறது. உங்கள் கதையில் வந்த சின்ன சின்ன வர்ணனைகள் அருமை. அது மேலும் அழகு கூட்டியது.

  ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

 2. cheena (சீனா) சொல்கிறார்:

  அன்பின் கார்த்திக்

  நான் பல பகுதிகள் படித்தேன் – சற்றே பணிச்சுமை காரணமாக சில பகுதிகல் படிக்க வில்லை. படித்து விடுகிறேன்.

  நல்வாழ்த்துகள் கார்த்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s