காந்தியின் காதலி!

காந்தியின் காதல்

காந்தியின் காதல்: சரளா தேவி

காதல் எப்போது வரும்? வைரமுத்துவின் வார்த்தையில் சொல்வதென்றால் அது தும்மல் மாதிரி. ஆசை வெட்கம் அறியாது. காதல் வயது அறியாதது. எனக்கு தெரிந்த ஒரு வெள்ளைக்கார பெண்மணி உள்ளார் அவர் 18 வயதில் 32 வயது மனிதரை மணந்து கொண்டு இன்று 24 வருட திருமண வாழ்வை கடந்து உள்ளார்.

நம் தேசத்தில் இப்படி நடந்தால் அது பெரிய விசயமாக தெரியலாம். ஹிந்தியில் சில்சிலா என்று ஒரு படம் உள்ளது. முடிந்தால் அதை பாருங்கள். அது நம்ம தினத்தந்தியில் வருகிற செய்தி தான்.

இவ்வளவு நடக்கிற உலகில் காந்தியின் காதல் எனக்கு ஒரு வித்யாசமான ஒன்றாக தெரியவில்லை. காந்தி தன்னை மகாத்மா என்று நினைக்கவில்லை. காந்தி உண்மையை சோதித்து பார்த்ததாகத்தான் தன வரலாற்றை எழுதினார். உண்மைக்கு வந்த சோதனை. காந்தி மிக உண்மையான மனிதர். நான் காந்தியை அதிகம் போற்றுகிறவன்.

காந்தியை பற்றி நினைக்கிற சமயத்தில் எனக்கு நினைவுக்கு வந்தவர் நான் போற்றும் இன்னொரு மனிதர். அவரும் தந்தை தான். அவர் பெரியார்.

பெரியார் மணியம்மை அவர்களை மணந்து கொண்டது பலரது எதிர்ப்பை சம்பாதித்தது. காந்தி ஒரு வேலை அவரது காதலியை திருமணம் செய்து இருந்தால், அவரை மகாத்மா என்று சொல்வதை நிறுத்தி இருக்கலாம். காந்தி தேசம் என்று இந்தியாவை சொல்லாமல் இருந்திருப்போம்.

சரி காந்தி யாரை காதலித்தார். ரபிந்திரநாத் தாகூர் அவர்களின் உறவு பெண்மணி சரளா தேவி சௌத்திரி என்பவரை. அவரது அருகாமை தனக்கு பிடித்திருந்ததாக காந்தி சொல்லி உள்ளார் என்று காந்தியின், ராஜாஜியின் பேரன் சொல்லி இருக்கார். திரு ராஜ்மோகன் இதை பற்றி தான் பலமுறை சொல்லி உள்ளதை சுட்டி காட்டி உள்ளார்.

காந்தி காதலில் விழுந்த பொது அவரது வயது 50 . சரளா தேவியின் வயது 47 . பெரியாரின் மனியம்மயருடன் திருமணமும் வயது போன தருணத்தில் நடந்த ஒன்றே. அநேகமாக ராஜாஜி, காந்தியின் மகன், காந்தியின் செயலர் மகாதேவ் தேசாய் போன்றோர் இந்த காதலை கை விட சொல்லி உள்ளனர். யோசியுங்கள் – பெரியாருக்கும் ராஜாஜி இதே அறிவுரை தான் சொல்லி உள்ளார். ராஜிஜியின் நல்ல நண்பர்கள் இப்படி ஒரு சூழலில் சிக்குவது எனக்கு தெரிய இது இரண்டாம் முறை. ராஜாஜி தன வாழ்வில் இப்படி ஒரு காதலில் மாட்டினாரா என்று எனக்கு தெரியாது. தெரிந்தால் நண்பர்களே பின்னூட்டமிடுங்கள்.

காந்தியின் காதலை புனிதமானது என்று ராஜ்மோகன் சொல்லி உள்ளார். எங்கயோ படித்தது சரளா தேவியின் மகனுக்கு இந்திராவை காந்தி கேட்டபோது நேரு மறுத்து விட்டாராம். உண்மையா ?

சரளா தேவியின் மகன் தீபக் காந்தியின் குடும்பத்தில் மனம் முடித்துகொண்டதாகவும் ஒரு தகவல். இதுவும் உண்மையா என்று தெரியாது.

காந்தி இப்படி ஒன்று நடந்திருந்தால் ஏன் சத்ய சோதனையில் எழுதவில்லை ?. மறந்து விட்டாரா ? இல்லை இது உண்மை இல்லையா ?

Advertisements

One comment on “காந்தியின் காதலி!

  1. cheena (சீனா) சொல்கிறார்:

    அன்பின் கார்த்தி

    உண்மையா தெரியவில்லை – இருந்திருக்கலாம்

    நல்வாழ்த்துகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s