புத்தரின் முடி!

புத்தரின் தோற்றம்: சில கேள்விகள்

புத்தரின் தோற்றம்: சில கேள்விகள்

புத்தரின் தோற்றத்தை உற்று பாருங்கள். அவர் தலையில் முடி இருக்கும். கொஞ்சம் யோசியுங்கள் – நீங்கள் ஏதாவது ஒரு புத்த முனியை முடியோடு பார்த்திருக்கிறீங்களா ? நான் பார்த்தது இல்லை. ஆடை விடயத்தில் புத்தரை பின்பற்றும் துறவிகள் ஏன் முடி விடயத்தில் ?

நான் பார்த்தவரை அந்த காலத்து இந்தகாலத்து முனிவர்கள் சிந்தனாவாதிகள் பெரும்பாலும் தாடியோடு இருப்பர். தாடி என்றால் தாடை முடி என்று பொருளாக இருக்கலாம். புத்தருக்கு தாடி இல்லை. ஏன் ? வளரவில்லையா ? இல்லை புத்தர் சவரம் செய்யும் பழக்கம் உள்ளவரா ? . இல்லை அந்த முடியின் மயிர் கால்கள் பரிக்கப்பட்டிருக்கலாம்.

புத்தர் ஒரு அறிவிற் சிறந்த மாமனிதர். தன்னை எப்போதும் விழித்துக்கொண்டு இருப்பவன் என்று கூறி கொண்டவர். புத்தர் ஒரு யோகி. பல இடங்களுக்கு நடந்தே சென்றவர். பெரும்பாலும் யோகிகள் உடல் மெலிந்து காணப்படுவர். அதிலும் புத்தர் உணவு கூட இல்லாமல் பல நாள் பசியோடு நடக்கும் மனிதர். அவர் எழும்பும் தோலுமாக இருந்திருக்கலாம். ஆனால் நாம் பார்க்கும் புத்தர் அப்படி இல்லையே.

நாம் பார்க்கும் புத்தரின் தோற்றம் ஒரு விளம்பரம் தோற்றம். இதன் பின்னணியில் கனிஷ்கர் போன்று ஒரு மனிதரோ இல்லை அழகான புத்தரின் தோற்றத்தை உருவாக்க நினைத்த ஒரு கலை கூட்டமோ இருந்திருக்கலாம். ஏன் ஒரு அழகிய புத்தர் தேவை பட்டார் ?

புத்தம் என்பது ஒரு இயக்கம். கனிஷ்கரின் காலத்திற்கு முன் புத்தம் என்று ஒரு மதம் இல்லை. கனிஷ்கர் ஏன் ஒரு மதம் உருவாக பாடுபடவேண்டும்? அவருக்கு ஒரு குலசாமி தேவை பாட்டிருக்க வேண்டும். அவருக்கு முன்னால் இருந்த அரசர்களுக்கு இந்து தெய்வங்கள் இருந்திருக்கலாம்.

நான் ஒரு கதை கேட்டதுண்டு. புத்தர் தான் மரணம் அடைவதற்கு முன் தன் உடலில் இருந்த முடி எல்லாவற்றயும் களைய சொன்னாராம். புத்தர் இறந்ததும் அவரது உடலை பாதுகாக்கவே அவரது சீடர்கள் நினைத்தனராம். ஆனால் அவர்களால் அது முடிய வில்லை. அது சரி அவர்கள் ஏன் எகிப்து மம்மிகளை போல் புத்தரின் உடலை பாதுகாக்க நினைத்தனர் ?. அவர் உயிர் பெற்று மீண்டு வருவார் என்றா ? புத்தரின் பல்லைத்தான் அவர்கள் காப்பற்றினராம். அவரது உடலை எரித்து விட்டனராம் ? இது உண்மையா ? அவரே களைய சொன்ன அந்த முடி எங்கே ? அது பாதுகாக்க படவில்லையா ?

நிறைய கேள்விகள் உண்டு. இதை மையமாக வைத்து நான் ஒரு ஆங்கில தொடர் எழுதவுள்ளேன். படியுங்கள். படித்து சொல்லுங்கள் உங்கள் கருத்தை. அதற்குமுன் நீங்கள் முதலில் இந்த இடுக்கையை பற்றிய உங்கள் கருத்தை சொல்லுங்கள் நண்பர்களே.

என் ஆங்கில வலைப்பூ முகவரி: http://khickwrites.wordpress.com/

Advertisements

2 comments on “புத்தரின் முடி!

  1. பின்னோக்கி சொல்கிறார்:

    அட ! நீங்கள் சொன்ன பிறகு தான் அந்த மாதிரி யோசிக்க முடிகிறது. நல்ல கதைக்கரு. இங்கிலீஷ் படிக்கிறது கஷ்டம் (எழுத்துக் கூட்டி, டிக்‌ஷனரி பக்கத்துல வெச்சுக்கிட்டு). தமிழ்ல அத எழுதுனா சொல்லுங்க.

    • biopen சொல்கிறார்:

      தமிழில் எழுதிவிட்டால் போச்சு. அப்பாவும் நானும் முடித்தவுடன் புத்தரின் முடியை எழுதுகிறேன். நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s