அப்பாவும் நானும்! – தொடர் கதையின் பகுதி 1

அந்த நாட்கள் என் நினைவில் உள்ளன. அப்பா தினமணியில் வேலை பார்த்து வந்தார். சரியான காங்கிரஸ் ஆள். தினமணி காங்கிரஸின் சங்கநாதம். அப்பாவுக்கு அதற்கு முன் இரண்டு முறை மாரடைப்பு வந்திருந்தது.

அரமபத்தில் இருந்தே எனக்கும் அப்பாவுக்கும் கருத்து மோதல்கள் மிக சாதரணமாய் இருந்தது. அப்பாவும் நானும் ஒரே விசயத்தை அடைய வேறு வேறு வழிகளை பின்பற்றுபவர்களாய் இருந்தோம். அதிலும் இந்திய விடுதலை எங்களுக்குள் ஒரு மிகப் பெரிய யுத்தமாய் இருந்தது.

1947 – இந்தியா என்கிற தேசத்தின் சுதந்திரத்தின் ஆரம்பம் என்று சொல்வதை விட இந்தியா என்கிற தேசம் உணப்படுத்தப்பட்ட நாள் என்றே நானும் என் அப்பவும் நினைத்தோம். ஆனால் அதற்கு நான் சிலரையும் அப்பா வேறு சிலரையும் காரணம் என்று நினைத்தோம்.

யாரும் விமர்சனத்திற்கு அப்பால் உள்ளவர்கள் என்று நான் நினைக்கவில்லை. கடவுள் கூட விமர்சனத்திற்கு அப்பால் உள்ளவர் இல்லை.

அன்று – 1946 – ஜூன் மாதம் 16 ஆம் நாள்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் எங்கள் வீடு இருந்தது. என்னுடைய அறை. வழக்கம் போல பொருட்கள் இறைந்து கிடந்தது. ஒரு நாற்காலி, ஒரு மேசை என்று எனக்கு ஒரு சமஸ்தானம் எனுடைய அறை. அதுவும் மாடியில் வேறு. அப்பா அந்த பக்கமே வர மாட்டார். நான் ஒரு கழிசடை அவரை பொறுத்தவரை.

அக்கா சகுந்தலா மட்டும் அப்பப்ப வருவாள். பெரும்பாலும் நான் மட்டுமே. அக்கா என்னை விட ஒரு வயது மூத்தவள். வட்ட முகமும் கனிந்த பார்வையுமாய் என்னை வளர்த்தவள். அக்கா வீட்டுக்காரர் இந்த திருவல்லிகேநியில்தான் ஒரு நூல் கடை வைத்து இருக்கிறார். அப்பா கவர்மென்ட் மாப்பிள்ளை யாருக்கும் அக்காவை தர மறுத்துவிட்டார். “வெள்ளைகாருனுக்கு சேவகம் செய்றவனக்கா எம்பொண்ண தர்றது ?” என்று சொல்லி மறுத்து விட்டார்.

அன்றும் அப்படிதான் அக்கா வந்தாள். இறைந்து கிடக்கிற காகிதங்களையும் புத்தகங்களையும் பார்த்தாள். லெனினும் மார்க்சும் பாரதியும் சிரித்தபடி அந்த புத்தகங்களில் இருந்தனர்.

மேசையில் இருந்த அந்த டின்னை கண்டதும். தூங்கிகொண்டிருந்த என்னை தட்டி எழுப்பினாள்.

“என்னடா இது ?”
“எதுக்கா ?”
“ரெட் அண்ட் வைட் – வெள்ள பீடி புடிக்கிரீயாடா ?”
“அக்கா அது … ”
“நல்ல குடும்பத்துல பொறந்த புள்ளயாட நீ … ? அப்பாக்கிட்ட சொல்லவா … ”
“ஏற்கனவே என் மேல அவருக்கு கோவம். இத வேற சொல்லப்போறியா நீ …”

சொல்லிக்கொண்டே இருக்கும் போது அவளுக்கு அந்த துண்டு பிரசுரம் கண்ணில் பட்டது. சிவப்பு மையில் தலைப்பு. படபடத்தது காற்றில். வெள்ளை பீடிக்கே இவ்வளவு கத்துகிற அவளுக்கு அது ஒரு பெரிய வெடிகுண்டு. அதுவும் அப்பாவுக்கு மிகப்பெரிய வெடி குண்டு.

அந்த துண்டு பிரசுரத்தை எடுத்தாள். படித்தாள்.

“என்னடா இது … ?” – அக்கா கேட்டாள்
“உண்மை” – நான் சொன்னேன்
“ஏன்டா உன் புத்தி இப்படி போகுது?”
“வெள்ளைக்காரனுக்கு எதிரா ஒன்னும் ஆயுதம் தூக்கலையே ?”
“ஆனா …. ”

அது உண்மையில் ஒரு அதிர்ச்சியின் ஆரம்பம்தான் . இன்னும் நிறையவர இருக்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது.

Advertisements

6 comments on “அப்பாவும் நானும்! – தொடர் கதையின் பகுதி 1

 1. cheena (சீனா) சொல்கிறார்:

  அன்பின் கார்த்திக்

  இரு பகுதிகளையும் படித்து விட்டேன் – வந்த வுடனே படிக்கிறேன் – கருத்து அனைத்துப் பகுதிக்ளும் வந்த வுடன் எழுதுகிறேன்.

  சரியா

  நல்வாழ்த்துகள் கார்த்திக்

 2. பின்னோக்கி சொல்கிறார்:

  //அது உண்மையில் ஒரு அதிர்ச்சியின் ஆரம்பம்தான் . இன்னும் நிறையவர இருக்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது.

  தன்னிலையில் தானே கதை எழுதப்பட்டிருக்கிறது ?. அப்படி இருக்கும் போது, “அது உண்மையில் ஒரு அதிர்ச்சியின் ஆரம்பம்தான்” என்பது யாருக்கு அதிர்ச்சி ? அக்காவுக்கா ? கொஞ்சம் புரியவில்லை.

  1946ஆம் ஆண்டைக் கதைக்களனாக தேர்ந்தெடுத்த தைரியத்துக்கு வாழ்த்துக்கள்.

  • biopen சொல்கிறார்:

   இந்த கதைக்கு 1946 தேவைப்படுகிறது. படிக்க படிக்க புரியும் உங்களுக்கு. வேறு எந்த காலத்தையும் கதைக்களனாக இந்த கதைக்கு தேர்ந்தெடுக்க முடியாது என்று. தொர்ந்து படியுங்கள். நீங்கள் சொன்ன கருத்தை மனதில் வைத்து வருகிற பகுதிகளை எழுதுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s