அப்பவும் நானும் பகுதி 2 : சென்னையில் ஒரு போராட்டம்!

போரட்ட களம்: பாரிஸ் கார்னர்

போரட்ட களம்: பாரிஸ் கார்னர்

நாங்கள் தயார் ஆனோம். ஆங்கில அரசிற்கு எதிரான போராட்டம் அல்ல அது. உருவாக இருக்கிற இந்திய நாட்டுக்கானது.
மாலை மயங்க தொடங்கியது. நிலவு முகம் பார்க்க மேகங்களுக்கு இடையில் இருந்து எட்டிப்பார்த்தது. நிலவு நினைத்த மாதிரி பூமி கிட்டதட்ட கண்ணாடி போல் தான் இருந்தது. யாரும் அவ்வளவாய் வரவில்லை. துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க ஆரம்பித்தோம். அக்கா பார்த்த அதே துண்டு பிரசுரங்கள். சிவப்பு மையில் ஒரு சிந்தனை.

“இந்தியா இனியும் இந்தியா மட்டுமா?: சென்னை ராஜதானி வாழும் ஜனங்களே, காங்கிரஸின் சீமான்களும் முஸ்லிம் லீகின் சீமான்களும் நம் தலை எழுத்தை நிர்ணயக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு உள்ளனர். அவர்களின் விருப்பம் விடுதலை. ஆனால் ஒன்று பட்ட இந்தியாவிற்கா ? நாம் பிரியக்கூடாது . போராடுங்கள்! நாம் ஒன்றாய் நின்று பெற இருக்கும் ஸ்வதந்திரம் நம்மை வேறாய் பிரிக்க விட லாகாது. சிந்தியுங்கள்!”

இது போக கொஞ்சம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீகின் தலைமைகளை பற்றி கோபம் கொப்பளிக்க சில வார்த்தைகள்.

ஏட்டுக்கள் கொஞ்சம் குவிந்திருந்தனர். அவர்கள் அரை கால் சட்டையும் தலை தொப்பியும் இன்னும் பிரிட்டிஷ் இந்தியாவின் விசுவாசத்தின் அடையாளமாய் இருந்தது.

ஆறு மணிக்கு ஆரம்பிக்க எண்ணி இருந்தோம். அதுதான் அரசாங்க அலுவலர்கள் வீடு திரும்பும் நேரம். நான் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்திருந்தேன்.

பக்கத்துக்கு டி கடையில் “மகான் காந்தி மகான்” – பாடல் ஒலித்தபடி இருந்தது.

மஞ்சள் வானம் விரிய தொடங்கியது. மஞ்சள் முகம் பெண்ணுக்கு மட்டும் அல்ல விண்ணுக்கும் அழகே. காதலிக்கிறவனுக்கு காதலி நிலா. காதலிக்காதவனுக்கு நிலா காதலி.

லத்தியை காக்கி அரை கால் சட்டைகள் இறுக பிடிக்க ஆரம்பித்தன. என் கை கடிகாரத்தை பார்த்தேன். ஆறாக இன்னும் ஆறு நிமிடம் இருந்தது.

நிமிடங்கள் கொஞ்சம் நிதானமாகவே நடந்தன. வாழ்கை எல்லாருக்கும் ஒரு ஒரு வட்டத்தில் அமைந்து விடுகிறது. நான் எந்த வாசகத்தை நம்புகிறேனோ இல்லையே – இதை நம்புகிறேன். நான் அந்த வட்டதைதான் பார்த்த படி உள்ளேன். அது கடிகாரம். உங்கள் வட்டம் என்ன (நேரம்) சொல்கிறது ?

“கிடைக்க போவது விடுதலையா ? ஆட்சி மாற்றமா ?” – நாங்கள் முழங்க தொடங்கினோம். நங்கள் வெறும் பத்து பேர்தான். பாரிஸ் கார்னரில் அது ஒரு பெரிய கூட்டமில்லை. ஆனால் ஒரு கவன ஈர்ப்பு.

ஓடி வந்த போலீஸ் காரர்கள் எங்களை தாக்கினர். நாங்கள் திரும்பி தாக்கவில்லை. என் தலையில் பலத்த அடி சரிய தொடங்கினேன். ஒரு காக்கி அரை கால் சட்டையின் கால் அடியில் விழுந்தேன். என் சிவப்பு ரத்தம் அந்த மனிதரின் கருப்பு பூட்சில் தெரித்தது.

நான் விழுகிற தருணத்தில்தான் பார்த்தேன் அந்த காட்சியை. என் கண் முன்னாலேயே ஒருவர் விழுந்து கிடக்கிறார் பேச்சு மூச்சு இல்லாமல். காந்தி மாதவன், நடை மேடையில் விழுந்து கிடக்கிறார். நான் அந்த போலிசின் காலடியை கட்டி பிடித்தேன். அவர் என் தலையில் பலமாக ஒரு அடி லத்தியால் அடித்தார்.

“ஐயோ எங்க அப்பாவை காப்பாற்றுங்க ?” – கத்தினேன். கதறிய படி விழுந்தேன்.

போலீஸ் வேனில் அள்ளிப்போட்டர்கள் என்னை. வேன் கிளம்பியது. வேனுக்குள் இருந்து பார்த்தேன் – அந்த கட்டம் போட்ட கம்பி வெளி சன்னல் மூலமாய். அவர் இன்னும் நடை மேடையிலே கிடக்கிறார்.

காந்தி மாதவன் என் தந்தை. எப்படி இந்த வழி வந்தார் என்று எனக்கு தெரியாது. அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மார் அடைப்பு வந்து உள்ளது. அவர் பெயர் மாதவன் தான். காந்தியின் மீது கொண்ட அபிமானம் அவரை காந்தி மாதவன் என்று மற்றவர்களை அழைக்க வைத்தது.

இருள் சூழ தொடங்கியது. அப்பா என்ன ஆனார் ?

-தொடரும்

Advertisements

4 comments on “அப்பவும் நானும் பகுதி 2 : சென்னையில் ஒரு போராட்டம்!

  1. […] மேலும் 0 கருத்து | ஜனவரி 11th, 2010 at 4:29 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s