அப்பாவும் நானும் பகுதி 3 : அந்த நோய்!

வேனுக்குள் இருந்த தருணத்தில் அப்பாவின் முன்னாளைய இரண்டு மார் அடைப்புகள் ஞாபகத்திற்கு வந்தது. முதலாவது காந்தியை கொல்ல லஹோரில் சிலர் முயற்சித்து தோல்வி ஏற்பட்ட போது ஏற்பட்டது. இரண்டாவது – பாரதி இறந்த போது வந்தது. அப்பா மிக சிறந்த தேச பக்தர். அவருக்கு நாடுதான் முதலில்.

காவல் நிலையத்தில் வண்டி நின்றது. நாங்கள் இறக்கி விடப்பட்டோம். உள்ளே சென்றோம்.
பிரிட்டிஷ் அரசியின் படம் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்தது. பிரிட்டிஷ் கொடி பறந்து கொண்டிருந்தது. அணைகிற விளக்கு பிரகாசமாய் எரியும் என்பது போல கடைசி நாட்களில் கோடி வெகு ஜோராய் பறந்து கொண்டிருந்து.

“என்ன இவனுகதான் கலகக்கார களிசடைகளா ?” – இன்ஸ்பெக்டர் கேட்டார்.

நாங்கள் சட்டையை கழற்றிவிட்டு உட்காரும் படி கட்டாயபடுத்தபட்டோம். தேசத்திற்காக அவமானங்களை சுமக்கலாம்.

அவள் (பாரத தாயின்) மானம் காக்க அவமானப்படலாம். அதில் ஒரு சுகம் உண்டு. கடவுளுக்காக தீ மிதிக்கிற பொது சுடாது என்று பக்தர்கள் சொல்வது இது போலத்தான்.

நாங்கள் பத்து பெரும் வரிசை அமர்த்தப்பட்டோம். ஒரு ஆண்டை அடிமையை பார்க்கிற மாதிரி இன்ஸ்பெக்டர் எங்களை பார்த்தார். மேசையில் ஏறி அமர்ந்தார்.

“பிரிவினை இல்லைனா விடுதலை இல்லடா முண்டங்களா” – காரி துப்பினார் எங்கள் மீது.

பச்சோந்திகளை கேள்வி பட்டிருங்கீங்களா ? மிக புத்திசாலிகள். இடத்திற்கு ஏற்ற மாதிரி நிறம் மாறும். இந்த காக்கி சட்டைகளின் நிலையும் அது மாதிரித்தான். நான் இவர்களுக்குகாக வருந்துகிறேன். நேற்று வரை தேச துரோகி என்று இவர்கள் அடித்தவர்கள் நாளை இவர்களின் முதலாளிகள்; மந்திரிகள்; எஜமானர்கள். தேச தலைவர்கள்.

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.

நாங்கள் கூனி குறுகி அமர்ந்து இருந்தோம். தொலை பேசி மணி அடித்தது.

“வணக்கம் இன்ஸ்பெக்டர் தான் பேசுறேன். நீங்க யாரு ?”
“…”
“அய்யாவா ? இந்தா விட்டுடுறேன். இந்த மனிதாபிமானம் இல்லைனா எப்படி ?”

இன்ஸ்பெக்டர் தொலை பேசியை வைத்துவிட்டு, எங்கள் பக்கம் திரும்பினார்.

“யாருயா அது மார்க்ஸ் மகாதேவன் ?” – இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“நான்தான்” – நான் எழுந்து நின்றேன்.
“காந்தி மாதவன் பையனா நீ ?”
“ஆமா ”
“சீக்கிரம் ராயபேட்டை ஆஸ்பத்திரிக்கு போ. உங்க அப்பா உயுருக்கு போராடி கிட்டு இருக்காராம்”

நான் கிளம்பினேன். என்னால் தான் அப்பாவிற்கு இந்த நிலை. தேசமா அப்பாவா ? – குளம்பினால் தேசம்தான் முதலில் வந்து நிற்கிறது.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரி. உள்ளே ஓடினேன். டாக்டர் நீலகண்டன் இருந்தார். எங்கள் தூரத்து உறவு. கண்ணாடி போட்டிருந்தார்.

“டாக்டர்…” – நான் ஆரம்பித்தேன்.
“வாடா அப்பன் உயிரோட இருக்கனா இல்ல போயிட்டானான்னு பாக்க வந்தியா ?” – கோவத்தை கிளரும் வார்த்தைகள்.

அக்காவும் அத்தானும் ஏற்கனவே வந்திருந்தார்கள்.
“என்ன அக்கா ஆச்சு ?” – அக்கா பக்கம் திரும்பி விசாரித்தேன்.
“டேய் அப்பாவுக்கு … ” – அக்கா அழுதாள். அப்பா உள்ளே சிகிச்சை பிரிவில் இருந்தார். மூக்கில் ஏதோ மாட்டி இருந்தார்கள்.

நான் அப்பாவை வேதனையோடு பார்த்தேன். இந்தா முறையும் மாரடைப்பா? தெரியவில்லை . டாக்டரை பார்த்தேன்.
என்னை அவரது கண்கள் கண்ணாடிக்குள் இருந்து சுட்டன.

மௌனம் நிலவியது.
“உங்க அப்பன் இப்போ … ?” நிலகண்டன் ஆரம்பித்தார்.
“இப்போ …?” – கேட்டேன்.

அக்கா அழுதபடியே இருந்தாள். அத்தான் தேற்றிக்கொண்டு இருந்தார்.அக்கா அழுதால் எனக்கு வலிக்கும். அவள் என் அம்மா. என் தாய் ஒரு ஆறு வருடம் முன்பு தவறி விட்டார். அன்றில் இருந்து அவள் என் தாயும்.

நீலகண்டம் மீண்டும் ஆரம்பித்தார்.
“உங்க அப்பாவுக்கு நெஞ்சு வலிச்சுருக்கு. மயங்கிட்டான். நல்ல வேலை உயிர் பிளசுட்டான். ஆனா …. ”
அந்த வியாதியின் பெயரை சொன்னார் டாக்டர்.அதற்குமுன் நான் அதை கேட்டதில்லை. அந்த வியாதியால் நான் நிறைய கஷ்டப்பட போகிறேன் என்பது எனக்கு அப்போது தெரியாது. கொஞ்சம் நேரம் பிசகிவிட்டதாம் அதான் இந்த வியாதியாம்.அந்த வியத்தின் பெயர் ….
-தொடரும்

Advertisements

3 comments on “அப்பாவும் நானும் பகுதி 3 : அந்த நோய்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s