அப்பாவும் நானும் – பகுதி 4 : உலகம் உறங்க இந்தியா மயங்க!

மெரீனா கடற்கரை: நான் அதிகம் நடந்த இடம்

மெரீனா கடற்கரை: நான் அதிகம் நடந்த இடம்

“கோமா” – டாக்டர் சொன்னார்.

நீண்ட நேரம் மௌனம்.

தூக்கம் உங்களை விடாது. விடிய விடிய தூக்கம் விந்த பின்னும் தூக்கம். இராமாயணத்தில் வருகிற கும்பகர்ணனின் தூக்கம் போல். எப்போது விழிப்பு என்றே தெரியாது. விழிப்பு என்ன எப்போது முழிப்பு என்றே தெரியாது. ஒரு நாளில் எழலாம் ஒரு வருடத்திலும் எழாமல் போகலாம். அதுதான் கோமா!

இரவின் மடியில் படுத்து உறங்கினேன். நிமிடங்கள் கரைந்தன.

கடற் கரையில் நான் அடிக்கடி நடந்தேன். காலம் உருண்டது. நானும் எனது மூன்று தந்தையரும் ( அப்பா, காந்தி, பெரியார் ) எது நடக்க கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது. இந்தியா வகுக்கப்பட்டது. நேற்று வரை அண்ணனும் தம்பியுமாய் இருந்தவர்கள் இந்துவும் இசுலமியனுமாய் பிரிய ஆரம்பித்தார்கள். தென்னாட்டில் பிரச்சனை இல்லை. நாங்கள் சாயிபுகளுடன் இன்னும் தாயாய் பிள்ளையாய் பழகுகிறோம். பெருமை படுகிறோம் – நாங்கள் இந்தியர்கள் என்று.

1947 – ஆகஸ்ட் 15 – உலகம் தூங்கும் போது, இந்தியா மயங்கியது புது சுதந்திர தேசம் என்கிற கோசத்தில் ஆனால் அங்கதை வெட்டி எரிந்து விட்டு. மவுண்ட் பேட்டன் கொடி ஏற்றி அல்வா கொடுத்துவிட்டு போனார் – இனிப்பு கொடுத்து விட்டு போனார் என்று சொல்லவந்தேன். அவரை சொல்லி என்ன பயன்? அல்வா நமக்கு ரொம்ப பிடிச்சுறுக்கே.

அக்கா ஒரு கவர்மென்ட் மாப்பிள்ளையை மணந்திருக்கலாம். இப்போது அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இந்தியாவிற்கு சேவகம் செய்கிறார்கள்.

தினமணி தன்னை தேச நிர்மான பணியில் ஈடுபடுத்திகொண்டது. அய்யா எ . என் . சிவராமனுக்கு பல விசிறிகள். சொக்கலிங்கம் அய்யவிடமும் சிவராமன் அய்யவிடமும் அப்பாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு.

மாலை மயங்கியது. இங்கிலீஷ்காரன் ஆட்சி போனது இங்கிலீஷ் ஆட்சி வந்தது. நாட்கள் பறந்தன.

அன்று அப்பாவை பார்க்க மருத்துவமனை போனேன். அக்காவும் வந்தார். அழகான பெண் ஒருத்தி அப்பாவுக்கு ட்ரிப்ஸ் ஏற்றிகொண்டிருந்தாள். அவளை அதற்க்கு முன் நான் இங்கு பார்த்ததில்லை. டாக்டர் நீலகண்டன் மாமா அப்பா இருக்கிற அறைக்குள் வந்தார்.

அவளும் இருந்தாள். அன்னம் போல இருந்தாள். அந்த வெள்ளை உடையும், நெற்றியில் குங்கும பொட்டும் பார்க்க தங்க சிலை மாதிரி இருந்தாள். நெற்றியில் ஒரு முடி வந்து சுருண்டு விழ கோதி விட்டாள். குவிந்த செவ்விதழ். கருணை மொழி பேசும் விழிகள். அழகான ராட்சசி. யார் இவள ? என்னை ஆழ வந்த ஆட்சியா ? வீழ்த்தவந்த சூழ்ச்சியா ? யாரடி நீ ?

அவள் வெளியேறினாள். அப்போது தான் கவனித்தேன். அக்காவும், டாக்டர் மாமாவும் என்னையே பார்ப்பதை.

“என்னடா வழியிற ?” – டாக்டர் ஆரம்பித்தார்.
“அது …” – நான் வழிந்தேன்
“டேய் அவள நினைக்காத அவ யாரு தெரியுமா …” – அக்கா இடையில் மறித்தாள்.

ஏதோ செய்யக்கூடாத குற்றம் செய்த மாதிரி அக்காவின் பார்வை எரித்தது. அப்படி யார்தான் இவள்? எனக்கு புரியவில்லை.

அவள் யார் ?

தொடரும்

Advertisements

3 comments on “அப்பாவும் நானும் – பகுதி 4 : உலகம் உறங்க இந்தியா மயங்க!

  1. பின்னோக்கி சொல்கிறார்:

    1947 களில் இந்த பெண்களைப் பார்த்து வழிவதை எளிதாக எடுத்துக் கொள்வது மாதிரி இருக்கிறது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s