அப்பாவும் நானும்: பகுதி 5 – சமாதானத்தின் மரணம்!

மவுண்ட் பேட்டன், நேரு லியாகத் அலி: பிரிட்டிஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான்.

மவுண்ட் பேட்டன், நேரு லியாகத் அலி: பிரிட்டிஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். ஆனால் இந்த தை பிறந்தும் இன்னும் வழி பிறக்கவில்லை.வலிதான் தொடர்ந்தது.

1947 சுதந்திரம் மற்றும் மதக்கலவரங்களோடு நாட் காட்டியில் இருந்து ஓடி மறைந்தது. மதக்கலவரம் இன்னும் தொடர்கிறது. விடுதலையின் விலை பிரிவினையா ?.

காந்தி ஒரு இசுலாமியரின் வீட்டில் இருந்து கொண்டு வங்காளத்தில் அமைதி வேள்வி நடத்தினார். ஒன்றும் வெற்றி பெறவில்லை.

அக்காவின் கோபம் என்னை ஒன்றும் செய்துவிடவில்லை. மருத்துவமனையில் பார்த்த அந்த மாந்தளிர் என் இதயத்துக்குள் சாரலாய் வந்தாள். அந்த தேவதையின் பெயரோ – லலிதா. அவள் கேட்டதோ இதயத்தை தா என்று. தந்துவிடேன்.

அப்பாவுக்கு பிடிக்காதவரின் மகள். ராவ் பகதூர் நீலமேகத்தின் மகள் அவள். ராவ் பகதூர் என்பது ஆங்கில அரசின் விருது. பிரிட்டிஷ் சர்க்கார் தன் மனம் கவர்ந்த இந்தியர்களுக்கு கொடுக்கும் விருது. ராவ் பகதூர் நீலமேகம் வெள்ளைய அடிவருடி.

ஆனால் லலிதா அப்படியில்லை. தன தந்தையின் வெள்ளைய அடி வருடிதனம் பிடிக்காமல் மாமா வீட்டில் வாழ்கிறாள். கடித பரிமாற்றம் எங்களுக்குள் நடந்தது. அவளை பார்க்க வேண்டியே அப்பாவை அடிக்கடி போய் மருத்துவமனையில் பார்த்தேன்.

அப்பாவுக்கு நான் ராவ் பகதூரின் மகளை பார்ப்பது தெரிந்தால், “கழிசடை கழிசடை! என் ஜென்ம விரோதி என் பிள்ளையாய் பிறந்து பிராணன் வாங்குது” என்பார்.

தினமும் காலை தினமணியுடன் ஆரம்பானது. அப்படித்தான் அன்றும் ஆரம்பம் ஆனது.

1948 ஜனவரி 30 – காந்திய சுட்டுடாங்களாம். ரேடியோ முன் ஒரு கூட்டமே உட்கார்ந்து கேட்டது. விடுதலையின் விலை தேசப்பிதாவின் கொலை. சமாதனம் இறந்தது.

சமாதானத்தின் மரணம்: காந்தி இறுதி ஊர்வலம்

சமாதானத்தின் மரணம்: காந்தி இறுதி ஊர்வலம்

தையில் பிறந்த வலி ரணமானது. ஆனால் ஒரு வழி பிறந்தது – மதக்கலவரம் நின்றது. காந்திக்கு உண்மையான அஞ்சலி செலுத்தியது இந்தியா கலவரத்தை நிறுத்தியதன் மூலம். அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். நான் லலிதாவின் அன்பில் மயங்கிக் கொண்டிருந்தேன். அத்தானுடன் நூல் கடையில் நேரம் கிடைக்கிற போது உதவியாய் இருந்தேன்.

அன்று ஒரு நாள் – மருத்துவமனை.

நான் லலிதாவை பார்க்க போயிருந்தேன். அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அழகான அந்த வேண்டி கை விரல்களை தடவியபடி.

“எத்தன தடவை உங்களுக்கு சொல்லுறது வேலை நேரத்துல தொல்ல செய்யதீங்கன்னு”

என் கையுக்குள் இருந்த அவளது கையை வெடுக்கென எடுத்துக்கொண்டாள். அவளது கை ட்ரிப்ஸ் பாட்டில் மாட்டி இருந்த கம்பியில் பட் என்று மோதியது.

நான் பதறிப்போய் அவளது கையை பிடித்து தடவி கொடுத்தேன். வளதண்டு கைகள் வதந்கலாமா ?
“விடுங்க!” என்றாள்

அப்போத்துதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது – வானத்தில் பட் என்று மின்னல் வெட்டுவது போல். காதல் நேரத்தில் நடந்த அந்த நிகழ்வு அவமானமா ? மகிழ்ச்சியா ? என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் அந்த அதிசயம் அதிர்ச்சியும் கொண்டுவந்தது. அந்த அதிசயம் ..

-தொடரும்

Advertisements

3 comments on “அப்பாவும் நானும்: பகுதி 5 – சமாதானத்தின் மரணம்!

  1. […] மேலும் 0 கருத்து | ஜனவரி 13th, 2010 at 4:59 pm under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s