அப்பாவும் நானும் 6 : கண் விழித்து பார்த்த நேரம்!

அந்த அதிசயம் நடந்தே விட்டது.

“எடுடா கைய்ய … ” அதட்டலாய் ஒரு குரல். மிகவும் பழகிய குரல். பார்த்தால், அப்பா என்னை பார்த்துகொண்டிருக்கிறார்.
“அப்பா….” – நான் மகிழ்ச்சியில் என் விழியையும் வாயையும் அகல திறந்தேன்.
“யாருடா பொண்ணு ?”
“அது வந்து …. ”

நான் ஆரம்பிக்கவும் அன்னம் போன்ற தேவதை – என் லலிதா வேகமாக வார்டை விட்டு வெளியே ஓடினாள். வெட்கமாய் இருக்கும்.

எனக்கே ஒரு மாதிரி உள்ளது. அவளுக்கு இல்லாமல் இருக்குமா ?

“என்னடா வந்து போயின்னுட்டு ? ஒரு பொண்ணு கைய்ய …பட்ட பகல்ல… நல்ல குடும்பத்தில பொறந்தவனாடா நீ ?” – அப்பா உறுமினார்.
“என்ன மாதாவா எல்லாத்துக்கும் கோபமா ?” – டாக்டர் நீலகண்ட மாமா உள்ளே நுழைந்தார்.கூடவே லலிதா. அவள் டாக்டரை அழைக்க போயிருக்க வேண்டும்.

“ஆமா! நான் இங்க எப்ப வந்தேன் ?” – அப்பா அப்போதுதான் மருத்துவமனையில் உள்ளதை உணர்ந்தார்.
“நீ போன ஆணி மாசமே வந்துட்ட”
“ஒ”
“பொன்னும் அவனும் விரும்புராங்கட”
“நீதான் இதுக்கு காரணமா ?”
“அட! இது என்ன சோதனைட சர்வேஸ்வரா ? நீ வாடா” – என்னை நீலகண்ட மாமா அழைத்தார்.
“அவன எதுக்கு கூப்பிடுற?”
“மாதவா, தனியா கூட்டிட்டு போய் கண்டிகத்தான். வளந்தட்டாநில்லையா ? ”
என்னை வார்டை விட்டு அழைத்து வந்தார் நீலகண்டம்.

“பாத்துக்கம்மா ” என்று லலிதாவிடம் சொல்லிவிட்டுவந்தார்.

அவரது அறைக்கு அழைத்து சென்றார். உட்கார்ந்தார். எனக்கு இருக்கையை காண்பித்தார். எங்கள் இருவருக்கும் இடையில் அவரது மேசை.
கொஞ்சம் யோசித்தார். மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை சுற்றிவிட்டார்.

“மகாதேவா …” – டாக்டர் ஆரம்பித்தார்.
“மார்க்ஸ் மகாதேவன் …”
“ம் சரி மார்க்ஸ் மகாதேவா, உங்க அப்பன பத்திரமா பாத்துக்கணும். எந்த சோகம் தரும் விசயமும் சொல்லப்படாது. சரியா”
“சரி”
“உங்க அப்பன் காந்தி நேசன். அவன் கிட்ட இந்தியா பிரிஞ்சுடுச்சு! காந்தி செத்து போய்ட்டார் – அப்படி இப்படின்னு தத்து பித்துன்னு உளற கூடாது”
“அப்புறம்”
“இந்தியாவுக்கு விடுதலை கிடைக்க போகுதுன்னு சொல்லு.அவர் இங்கயே இருக்கட்டும். அதான் வசதி திடீர்னு எதாவது ஆச்சுன்னு. அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு” – டாக்டர் முடித்துக்கொண்டார்.
“சரி” – நான் அமோத்திதேன்.

அப்பாவை எப்படியும் பாதுகாக்கணும். என்னால்தான் அவருக்கு இந்த நிலை. அன்று என்னை போலீசார் அடிப்பதை பார்த்திருக்க வேண்டும். அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. பாவம் மயங்கிவர் – இப்போதுதான் தெளிகிறார். என் உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும்.

திரும்பவும் அப்பாவின் அறைக்கு போனோம். அக்காவும் அத்தானும் இருந்தனர். டாக்டர் மாமா ஆள் அனுப்பி செய்தி சொல்லி இருக்க வேண்டும்.

“என்னம்மா அழுதுக்கிட்டு. உசிரோடதனே இருக்கேன்.” – அப்பா அக்காவை தேற்றி கொண்டிருந்தார்.
“டேய்! நீலகண்டம் வீட்டுக்கு போகலாமா ?”- அப்பா கேட்டார்.
“என்ன அவசரம் மாதவா ? கொஞ்ச நாள் இருந்துவிட்டு போறது ?” – டாக்டர் சொன்னார்.
“அட! நீ வேற. எனக்கு என் வீடுதான் சொர்க்கம்” – அப்பா மறுத்தார்.
“அதில்லை. இப்பதான் சரியாய் ஆகிருக்கு. இங்க இருந்தா என்ன ?” – டாக்டர் கொஞ்சமாய் கெஞ்சினார்.
“இல்லடா வேணா ஒரு நர்ஸ அனுப்பிவை” – அப்பா மீண்டும் மறுத்தார்.
“அது இல்லடா …” என்று டாக்டர் இழுத்தார்.

அக்காவும் அத்தானும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
“டாக்டர் – அப்பா வீட்டுக்கு வரட்டும்” – நான் சொன்னேன். டாக்டர் என்னை முறைத்து பார்த்தார்.
“அதெல்லாம் சரி இந்தியாவுக்கு விடுதலை கெடசுடுச்சா ?” – அப்பா கேட்டார்.
“இன்னும் இல்லை. ஆனா எப்படியும் ரெண்டு மூணு மாசத்துல ” – என்றேன் நான்.

அக்கா, அத்தான், லலிதா எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். நான் அவர்களுக்கு ஒரு மாதிரி தெரிந்தேன். அப்பா எனக்கு வேண்டும்!

எப்படித்தான் இந்த பொய்யை காப்பாற்ற போறேனோ ?

பிரிவினை துயர் : மறைக்க வேண்டிய ஒன்று. மறக்க வேண்டிய ஒன்று

பிரிவினை துயர் : மறைக்க வேண்டிய ஒன்று. மறக்க வேண்டிய ஒன்று

Advertisements

3 comments on “அப்பாவும் நானும் 6 : கண் விழித்து பார்த்த நேரம்!

  1. […] மேலும் 0 கருத்து | ஜனவரி 14th, 2010 at 7:29 pm under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s