ஏன் கலைஞர் பொங்கலை தமிழ் புத்தாண்டாய் அறிவித்தார்?

ஏப்ரல் 1 அன்று நீங்கள் யாரையாவது ஏமாற்றி இருக்கீங்களா ? மை தெளிச்சு விளையாடி இருக்கீங்களா ? – ஆம் என்று சொன்னால் – நீங்கள் உங்கள் முகத்தில் கரி பூசி இருக்கின்றீர்கள் என்று பொருள்.

தமிழன் எப்படி தமிழன் முகத்திலேயே கரி பூசலாம் ( நிறைய நடக்குது என்பது வேறு – ஆனால் இங்கே நோ அரசியல் !) என்று நீங்கள் யோசித்தது உண்டா ? அதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா ?

உலகம் உருள் கிற போது இப்படி சிலது நடப்பது உண்டு. முதலில் ஏப்ரல் 1 ஏன் கொண்டாடப்படுகிறது ?

முட்டாள்களுக்கு ஒரு நாள் வேண்டுமா என்ன ? எங்காவது சோம்பேறிகள் தினம் ? தூங்குமூஞ்சிகள் தினம் – கேள்விப்பட்டதுண்டா ? பின்ன என்ன முட்டாள்கள் தினம் வேண்டி கிடக்கு ?


நான் முட்டாள்கள் தினத்தை பற்றி ஆராய்ந்த போது ( எங்கே நம்ம தினமோ என்கிற ஆசையில் ) ஒரு உண்மை எனக்கு தெரிந்தது ஒரு கூட்டம் தான் செய்வது தான் சரி – மற்றவர்கள் செய்வது முட்டாள் தனம் என நிருப்பிக்கவே முட்டாள்கள் தினத்தை ஆரம்பித்து உள்ளது.

அவர்கள் அப்படி முட்டாள்கள் என்று நினைத்தவர்கள் கூட்டத்தில் தமிழனும் சிக்கிகொண்டான் . அது தமிழனுக்கு ஏற்பட்ட விபத்து.

சரி அப்படி என்னதான் அந்த கூட்டம் சரியாய் செய்ய தமிழன் முட்டலானான் ?

முதலில் ஏப்ரல் மாதத்தில் தான் பெரும்பாலனவர்கள் குறிப்பாக இன்றய நாள் காட்டி முறையை கடை பிடிக்கிறவர்கள் புத்தாண்டை கொண்டாடினர். அவர்கள் தங்கள் புத்தாண்டை ஒரு ஞான உதய நாளில் ஜனவரிக்கு மாற்றிக்கொண்டனர். ஆனால் எல்லோரும் இதை கடைப்பிடிக்க தயார் இல்லை. தமிழனுக்கு இது தெரியவே தெரியாது. என் நண்பர் ஒருவர் சொன்னார் – முதலில் தமிழன் தை மாதம் தான் புத்தாண்டு துவக்கமாய் கொண்டிருந்தான் -கால மாற்றம் தான் சித்திரை ஒன்றை புத்தாண்டை ஆக்கியது. அது எந்த அளவு உண்மை என்று எனக்கு தெரியாது.

ஆக – முட்டாள்கள் தினம் ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு துவக்கத்தை கொண்டாடுகிற மனிதர்களை கேலி செய்யும் நாள்.

இது கண்டு தமிழன் பெரிதாய் வருத்தப்படவில்லை. அவனுக்கு விசயமே தெரியாது என்பது வேறு கதை.

கலைஞர் பார்த்தார் தமிழனை முட்டாள்கள் தின கேலியில் இருந்து காப்பாற்றி உள்ளார். ( இது உண்மையான காரணம் இல்லை – நம்ம சிந்தனை தான்).

இனி நீங்கள் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுங்கள். காரணம் – நாம் முட்டாள்கள் இல்லையே இப்போது.

இனிய முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் மன்னிக்கவும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Advertisements

4 comments on “ஏன் கலைஞர் பொங்கலை தமிழ் புத்தாண்டாய் அறிவித்தார்?

  1. vedaprakash சொல்கிறார்:

    நண்பரே இன்று நடப்பதுதான் இது.

    ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்தது அல்ல!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s