அப்பாவும் நானும் 7 : தினமணி பொய் சொல்லுமா ?

தினமணி பொய் சொல்லுமா ?

தினமணி பொய் சொல்லுமா ?

பாரதம் என்பது வட மொழி மனிதர்களின் இந்தியா. ஹிந்துஸ்தான் என்பது பெர்சியர்கள் கண்ட இந்தியா. இந்தியா என்பது வெள்ளயன் உருவாக்கிய இந்தியா. ஆனால் இது எதுவும் என் அப்பாவுக்கு தேவை இல்லை. நான் உருவாக்க இருக்கிற இந்தியா தான் அவருக்கு தேவை.

அக்கா, அத்தான், டாக்டர் மாமா அப்புறம் தேவதை லலிதா எல்லோருக்கும் நான் அந்த திட்டத்தை ஒரு அறையில் வைத்து சொன்னேன்.

“எல்லோரும் கேட்டுக்குங்க. அப்பாவுக்கு ரெண்டு முறை மாரடைப்பு வந்திருக்கு. அது ரெண்டும் தேச சம்பந்த பட்டது. இப்ப அப்பா நமக்கு கெடைச்சதே பெரிய பாக்கியம். அவர் மனசு ரொம்ப பாதிச்சுருக்கு. அவர்கிட்ட காந்திய சுட்டுட்டாங்க! இந்தியாவ வெட்டிடாங்கன்னு எல்லாம் சொல்லக்கூடாது. சொன்னா அவர இழந்துருவோம். தயவு செய்து எல்லோரும் எனக்கு உதவி செய்யவும்”

நான் கெஞ்சினேன்.

“அது எப்படி சாத்தியப்படும் ? பேசாம அவர் இங்கே இருக்கட்டும்” – டாக்டர் மாமா சொன்னார்.
“ஆமா மகாதேவா. நாம இன்னொரு இந்தியாவ உருவாக்க முடியாது. நாம வாய மூடிடிலாம். ஆனா ஊரு …?” – அக்கா கேட்டாள்.
“முயற்ச்சிப்போம்” – என்றேன்.

மௌனம் ஆட்சி செய்தது. நிசப்பதம் நிலவியது. முடிகிற காரியமா இது? எல்லோரும் குழம்பினர். பயந்தனர்.

அப்பாவின் அறை. அப்பா தூங்கிகொண்டிருந்தார். நான் பயந்து போனேன். ஒரு வேலை திரும்பவும் கோமா ?

“அப்பா…” – அவர் காதருகே போய் மெதுவாய் சொன்னேன். என் மனம் பதறியது.
“என்னடா ?” – அப்பா எழுந்தார்.
“ஒன்னும் இல்லை அப்பா”

நாங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அப்பாவுக்காக ஒரு இந்தியாவை எங்கள் இதயங்களில் ஏந்திய படி.

“என்ன எல்லோரும் ஒரு மாதிரி இருக்கீங்க ?” – அப்பா கேட்டார்.
“ஒன்னும் இல்லையே” – அக்கா சமாளித்தாள்.
“ஆமா ஒன்னும் இல்லையே” – எல்லோரும் சமாளித்தோம்.

அப்பா தன் மேலிருந்த போர்வையை விலக்கிவிட்டு கொஞ்சம் நிமிர்ந்தார். கட்டில் பாகாவாட்டு கம்பிகளில் முதுகை சாய்த்தார். அவருக்கு நிமிர்ந்து உட்கார்ந்த திருப்தி.

“யாராவது தினமணி வாங்கி வர்றீங்களா ?” – அப்பா கேட்டார்.
“அது எதுக்குடா இப்ப ?” – டாக்டர் மாமா கேட்டார்.
“உனக்கென்னடா வந்துச்சு ? வேணும்னா வேணும்” – அப்பா சிறுபிள்ளை மாதிரி பிடிவாதம் பிடித்தார்.

நாங்கள் துனுக்குற்றோம். நாங்கள் பொய் பேசலாம். தினமணி ? ஒன்றுமே புரியவில்லை. எல்லோரும் என் முகத்தை பார்த்தனர். முதல் சோதனை எனக்கு.

என்ன செய்வது ? எனக்கும் புரியவில்லை. அட! கடவுளே !

“தினமணி?” – அப்பா மீண்டும் கேட்டார்.

Advertisements

2 comments on “அப்பாவும் நானும் 7 : தினமணி பொய் சொல்லுமா ?

  1. S C O R P சொல்கிறார்:

    இமயவரம்பன் – நீங்க எழுதும் தொடர், ‘Goodbye Lenin’ படம்தாங்கறது அதுல ரெண்டு லைன் படிச்சவுடனே தெரிஞ்சிருச்சு . . 🙂 . . கொஞ்சமாவது மாத்தி எழுதுங்க பாஸு . . 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s