இராவணன் தமிழனா ? சிங்கக்கொடி தமிழ் கொடியா ?

முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே இராவணன் தமிழன் என்று தான் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டான்.

இராவணன் பற்றி முழுமையாக எனக்கு தெரியுமா என்பதில் எனக்கே ஒரு குழப்பம் உண்டு. காரணம் இராவணன் கற்பனையா வரலாற்று மாந்தனா ?
ஆரம்பத்தில் இருந்தே ராமாயணம் கற்பனை என்று நினைத்தவன் நான். அதிலும் ஆரிய மாயையா ? திராவிட மாயையா என பி ராமமூர்த்தி தன் புத்தகத்தில் பேச ஆரம்பித்ததால். அது ஒரு அளவு உண்மையோ என்கிற குழப்பம்.
இராவணன் என்கிற சிவ பக்தனை ராமன் என்கிற வைணவ குல அரசன் வென்றான் என்பதே ராமாயணம் என்று என் பேராசிரியர் சொன்னபோது, ஒரு வேலை இது வரலாறோ என்று நினைத்தேன்.

சரி இராவணன் வரலாற்று மனிதன் என்றால் அவன் யார் ? தமிழனா ? ஆம் என்றே எல்லா தமிழனும் சொல்கிறான். இல்லை அவன் சிங்களவன் என்று புதிதாக சிலர் பேச ஆரம்பித்து கொஞ்சம் காலம் ஆகி விட்டது. அப்படி பேசுபவர்கள் சிங்களவர்களே நான் அறிந்த வரை.

அப்படி என்றால் சிங்களர்கள் சிவ வழிபாடு செய்தவர்களா ? இல்லை ராவணன் புத்த மதத்தை சேர்ந்தவன் என்கிறார்கள் அவர்கள்.

என்னை பொறுத்தவரை. ராவணன் என்பது அவ்வை பாட்டி, இந்திரன் என்பது போல் – ஒரு குறியீடோ ஒரு பதவியோ ஒரு அதிகம் புழங்கிய பெயரோ. இந்திரன் என்பது பிரதமர் என்கிற மாதிரி ஒரு பதவி குறியீடு. அவ்வை ஒரு தோற்ற குறியீடு. ராவணனும் அது மாதிரி இருக்கலாம். வரலாறு ரொம்ப குழப்பும் இது மாதிரி குறியீடுகளில்.

சரி சிங்களர்கள் ராவணனை ஏன் சிங்களவன் என்று சொல்ல வேண்டும். தமிழன் குடி ஏறியவன் என்று சொல்ல. நல்ல கதையா இருக்கு!

சரி அடுத்த சிந்தனைக்கு வருவோம். ராவணன் தமிழன் சிங்கக்கொடி தமிழ் கோடி என்று ஒரு கதை வேறு. உண்மையா இது. அவர்கள் சொல்லும் கதை – அது ராவணனின் தம்பி கும்பகர்ணனின் கோடி என்பது.

சிங்கள புது வருடமும் தமிழ் புது வருடமும் ஒன்று. ஒரு வேலை சிங்களம் பழைய தமிழ் மொழயில் இருந்து மலையாளம் தோன்றியது போல் தோன்றிய ஒன்றா ?

Advertisements

5 comments on “இராவணன் தமிழனா ? சிங்கக்கொடி தமிழ் கொடியா ?

 1. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //சரி அடுத்த சிந்தனைக்கு வருவோம். ராவணன் தமிழன் சிங்கக்கொடி தமிழ் கோடி என்று ஒரு கதை வேறு. //

  இராவணனுக்கு ‘வீணை’ கொடி. வீணைக் கொடியுடைய வேந்தணே என்ற பாடல் சம்பூர்ண இராமயணம் படத்தில் இடம் பெற்றது.

 2. thumbi சொல்கிறார்:

  ராவணன் தமிழனா சிங்களவனா இது உங்கள் முதல் ஐயம்.
  ராமாயாணம் வரலாற்று பதிகை என கொண்டாலும், ராமாயாணம் மகாபாரதத்திற்கு முந்தையது; மகாபாரதம் ஐயாயிரம் ஆண்டுகள் முற்பட்டது என படித்திருக்கிறேன். (5561 B C, Wikipedia). ராமாயாணம் 7600 b க என Wikipedia சொல்கிறது.
  அப்போது சிங்களம் நிச்சயமாக இல்லை. சிங்களவர்கள் கிறிஸ்துவுக்கு முன் ஆயிரம் ஆண்டுகளில் சென்றவர்களே. அதாவது first millennium B.C. அவர்கள் அதாவது சிங்களவர்கள் ஒடீசாவிளிருந்து தோணியில் சென்று குடியேறியவர்கள்; காலப் போக்கில் சிங்களம், வட மொழி மற்றும் பாலி மொழிகளைத் தழுவி உருவானது.
  தமிழ் பற்றி இராமாயண நூலிலே குறிப்பு உள்ளதா என்று தெரியவில்லை; கம்பனில் நிச்சயம் இருக்க வேண்டும்.
  ஒன்று நிச்சயம் ஐயா: அப்போது இருந்த வாழ்வு முறைகள், இனப் பிரிவுகள், மொழிகள் இவை குறித்து சரியாகத் தெரிந்து கொள்ளாமல், இன்றைய நிலையில் இன்றைய கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்; இது முற்றிலும் தவறு.

  • biopen சொல்கிறார்:

   உங்கள் கருத்து முற்றிலும் சரியே. மஹா பாரதத்தில் சின்ஹலம் பற்றிய குறிப்பு உள்ளதாக விக்கி சொன்னாலும் ராமாயணம் பற்றிய குறிப்பு இல்லை.

 3. […] மேலும் 0 கருத்து | ஜனவரி 21st, 2010 at 5:51 pm under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s