அ நா 8 : காந்தி உயிர் தெழுந்தார் !

அப்பாவின் ஆசை கொஞ்சம் கடினம்தான். ஆனால் அப்பாவை இழக்க முடியாது. அதுவும் என்னால் முடியாது.

என் மௌன முகத்தை எல்லோரும் பார்த்தனர்.

“முதலில் வீட்டுக்கு போகலாம்” – நான் சொன்னேன்.
“தினமணி ?” – இது அப்பா
“நான் போய் வாங்கி வருகிறேன் அப்பா” – நான் சமாளித்தேன்.
“ஏண்டா நீலகண்டா … இங்க தினமணி ?”
“இல்லடா … இங்க எந்த அரசாங்க விரோத பத்திரிக்கையும் கிடையாது” – டாக்டர் சொன்னார்.

நல்ல சமாளிப்பு. ஆம் ராயபேட்டை மருத்துவமனையில் ஏன் தினமணி வாங்க வேண்டும். டாக்டர் தன் டிரைவரிடம் எங்களை வீட்டில் விடுமாறு சொன்னார். நான் செல்லவில்லை. தினமணி ?

ராயபேட்டை மருத்துவமனயில் இருந்து திருவல்லிக்கேணி ஒன்று பெரிய தூரமில்லை. எங்கள் பெரிய தெருவை நானே பல சமயங்களில் நடந்தே அடைந்து இருக்கிறேன்.
அப்பா வீட்டில் வந்து தான் அமர்ந்தார். சின்னபிள்ளைதனம் அவரை விட்டு போகவில்லை. மெத்தையில் அமர்ந்தவண்ணம்.

“எங்கமா மகாதேவன் ?” — கேட்டார்.

அவர் கேட்கவும் நான் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. கொடுத்தேன். புன்சிரிப்போடு ஒரு மலர் கொத்தை வாங்குவது போல் வாங்கினார். அவர் வேலை பார்த்த இடத்தின் குழந்தை அது. அதன் மீது பாசம் மட்டும் இல்லை – உரிமையும் அவருக்கு உண்டு.

தினமணி – ஆசாரியர் ஏ என் சிவராமன். என்று ரெண்டு கொடியோடு தினமணி புன்னகைத்தது. வாழ்க தினமணி. இந்திய விடுதலையின் தமிழ் நாட்டின் போர்வாள்களில் – மிகவும் புகழ் பெற்றவை – இந்தியா, சுதேசமித்திரன், தினமணி. அதில் அப்பாவும் அங்கம் என்பது எங்கள் பெருமை.

கண்ணாடியை மாட்டி கொண்டார். ஒரு புன்சிரிப்பு பூத்து விட்டு விட்டு சொன்னார்.

“ஜின்னாஹ் நேரு படேல் எல்லோரும் நல்லவுங்க. காந்தி சாதிச்சுடாருள்ள ? சபாஷ் !” — அவர் முகம் நிலவு போல் பிரகாசிக்க. நான், அக்கா அத்தான் எல்லோரும் புன்னகைத்தோம்.

எப்படி என்று அக்கா கண்ணசைவில் கேட்டால். எனக்குதானே தெரியும்.நான் தினமணி அழுவலகதுக்கு ஓடியது .
என்ன சொல்வது. இந்த கதையை சொன்னேன். அவர்கள் ஒப்புகொண்டார்கள் அப்பாவுக்காக. எனக்காக ஒரு தினமணி உதயமானது.

காந்தி – ஜின்னாஹ் சந்திப்பு: ஒருங்கிணைந்த இந்தியா! – பேட்டன் ஜின்னாஹ் நேரு பட்டேல் வரவேற்பு! – என்ற தலைப்பு செய்தியுடன்.

இந்தியாவில் நடக்காது போன ஒன்று என் தந்தைக்காக நடக்கிறது. அச்சிட்ட தாளை தருகையில் அந்த தோழர் சொன்னார். “இது நடந்திருந்தா எவ்வளவு நல்ல இர்ருக்கும் ?” இதயத்தில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள்.

‘வாழ்க காந்தி மாதவன்!’ – நலவர்கள் சாகக்கூடாது!

– தொடரும்

Advertisements

2 comments on “அ நா 8 : காந்தி உயிர் தெழுந்தார் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s