ரஜினி காந்த் அவதார் !

அவதார் படம் ஒரு போடு போடுது! உலகமே வியக்கிற இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.
என்னுடைய நண்பர் ஒருவரிடம் சொன்னதும் அவர் சொன்னது கொஞ்சம் காமெடி கொஞ்சம் நிஜம் என்கிற மாதிரி ஒன்று சொன்னார்.

“நான் பாக்கப்போற முதல் அனிமேஷன் படம் சுல்தான் தான் நம்ம தலைவர் கலக்குவாருல?” என்றார்.

நான் அவரது ரசனையை குறை சொல்ல விரும்ப வில்லை. நாம் உலக தரம் உலகியல் நிறம். ஆஸ்கார் கொண்டான் ஹாலிவுட் கண்டான் கிராபிக்ஸ் வென்றான் என்று யோசிப்பதில் எனக்கு உடனப்பாடில்லை. நமக்கு நாம படம் எடுப்போம். அப்புறம் எந்த இங்கிலீஷ் காரனாவது தமிழ் இனிசியல் போடறானா ? நம்ம ஆளு பாதி பேரு அப்படி தான்.

நான், தி வெரி Bad திங்க்ஸ் – பஞ்சந்தந்திரம் பார்த்த பிறகு தான் பார்த்தேன். Mrs Doubt Fire – அப்படியே அவ்வை ஷண்முகி வந்த பின்தான் கேள்வியே பட்டேன். எனவே நம்ம ஊரு தலைவர்கள் வாயிலாகவே உலகத்தை பார்ப்பது தவறே இல்லை.

அதை காபி அடிதான் ! இதை டிகாசன் அடிதான் என்கிறோம் … கம்ப ராமாயணமே அப்படிதானே. அதை இந்த சினிமாவுடன் ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை என்பது வேறு விஷயம்.

நம்ம originality வேணும்னா எந்த உலக படம்மும் பார்க்காத ஒருவர் படம் எடுக்கவேண்டும். என்னை கவர்ந்த தமிழ் படம் – பசங்க. நம்ம ஊரு படம். உண்மையில் சொல்லனும்னா அந்த விரசிலை – பலமுறை நான் பார்த்திருக்கேன். தசாவதாரம் ஒட்டல. ஒரு வேலை ஆஸ்கார் துரத்தலோ. இந்த உலக அழகி போட்டி, ஆஸ்கார் விருது இதில் எல்லாம் கொஞ்சமும் எனக்கு சம்மதம் இல்லை.

நான் என்னமோ ராமராஜனின் கரகாட்டக்காரன் தான் தமிழ் திரைபடத்தின் நல்ல தரமோ என்று யோசிக்கேறேன். அது மக்களுக்கு மிக நெருங்கிய படம்.

உங்கள் கருத்து என்னோவோ ?

Advertisements

One comment on “ரஜினி காந்த் அவதார் !

  1. […] மேலும் 0 கருத்து | ஜனவரி 24th, 2010 at 5:47 pm under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s