சன், விஜய் மற்றும் எல்லா டிவி தர்மம் ?

உலகத்தின் ஒவுவொரு அமைப்பும் தனக்கு என்று ஒரு ஒழுக்கத்தை வைத்திருக்க வேண்டும். அதை காப்பாற்ற வேண்டும் என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்து – ஒரு ஒழுக்கம் இல்லாத, கட்டுப்பாடு இல்லாத வர்த்தக பண்பு உருவாக ஆரம்பித்துவிட்டது.

தொலைகாட்சிகள் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் விதிகளே விதிகளே விமர்சனத்திற்கு ஆளாகும் போது, விதி விளக்குகள் அல்லது விதி இல்லாதவைகள் விமர்சனத்திற்கு அப்பால் இல்லை.

இந்தியாவில் சில கேள்விகள் கண்டிக்கபடுகின்றன அல்லது புரம்தள்ளப்படுகினறன. இறந்த மனிதர் ஒருவரை குறை சொல்வது தவறு என்று என் சின்ன வயதில் சொல்லப்பட்டது. இன்றும் அதன் முழு அர்த்தம் எனக்கு புரியவில்லை. கோட்சே குறை சொல்லப்படவேண்டியவர் சிலருக்கு. காந்தியே சிலரால் குறை சொல்லப்படுகிறார்.

மும்பை ஒரு நாள் சில ஆயுததாரிகளால் கையில் எடுக்கப்பட்டபோது ௦- ஊடக கண்கள் அதிலும் டிவி கண்கள் விழகவே இல்லை. அவை ஒரு வர்த்தக எண்ணம் கொண்டு விளங்கினவே தவிர நாட்டு நலன் கொண்டு அல்ல. உலகத்தின் ஒவுவொரு அமைப்பும் தனக்கு என்று ஒரு ஒழுக்கத்தை வைத்திருக்க வேண்டும். அதை காப்பாற்ற வேண்டும் என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்து – ஒரு ஒழுக்கம் இல்லாத, கட்டுப்பாடு இல்லாத வர்த்தக பண்பு உருவாக ஆரம்பித்துவிட்டது.

யாரையாவது அழ செய்து பெயர் வாங்க பல நிகழ்ச்சிகள் முன்னியில் நிற்கின்றன. நமது மனம் விரும்பும் நிகழ்ச்சியும் இருக்கலாம் அதில். நடன நிகழ்ச்சிகள் பல நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோம் என்கிற நிலை உள்ளது. ஒருவரின் மனையவி இநோருவரின் கணவனுடன் ஆடுவது நாம் ஏற்றுக்கொள்ளும் பண்பாடு ஆகிவிட்டது.

பேச்சரங்க நிகழ்ச்சிகள் மங்களம் பாடி முடிக்க யாரவது அழவேண்டும். நன்றாக அழுங்கள் என்று கோரிக்கை வேறு வைக்கும் தொகுப்பாளர்கள்.

தமிழ் ஏற்கனவே தொல்லியல் ஆய்வர்களுக்கு என்று நம் நிகழ்ச்சி தொக்குப்பளர்கள் நினைத்து வருவது நாம் அறிந்த ஒன்றே.

நன்னனின் வாழ்க்கை கல்வி இதே தமிழ் நாட்டில் தமிழர்கள் பார்க்க ஒலி பரப்பான ஒன்று. தமிழ் சான்றோர்கள் திரை நடிகர்கள் அதுவும் பாரி மகளிரின் தந்தையாக – பாரி பற்றி நாம் என் கவலை படவேண்டும் – என்று தமிழ் அறிஞர்கள் நினைப்பது வருத்தப்படவேண்டிய ஒன்றே! ஆனால் அதை நகைச்சுவை என்று புறம் தள்ளலாம். தில்லையாடி வள்ளியம்மை ஒரு குத்து பாட்டு வரி – அவ்வளவுதான் நம் கவிங்கருக்கு.

அதிலும் உணமையியல் ( ரியாலிட்டி ) நிகழ்ச்சிகள் நமக்கானவையா ? ராகி சவந்துக்கு மாப்பிள்ளை தேட NDTV செலவு செய்கிறது. குழந்தைகள் வளர்ப்பு வெளிநாட்டு தொலைகாட்சிகளில் மலினப்படுத்தி உணமையியல் நிகழ்ச்சி வந்தால் – இங்கயும் அதே!. இரவல் எதை எல்லாம் பெறுகிறோம். நம் பண்பாட்டிற்கு ஒத்து வரும் விடயமா இது ?.

குடும்ப உறவுகள் மதிக்கப்படாது உள்ளது நம் TV நிகழ்ச்சிகளில். சுரபி இங்கே வெற்றி பெற்று இருந்தாலும் – அது எடுக்க தெரிந்தவர்கள் சிலரே.

கண்டுபிடித்தோம் சுழியை என்பதெல்லாம் வரலாறு – கோப்பி அடித்தோம் என்பதே இன்றைய நிலை. நம்மில் பலரும் நம் எதிர்ப்பு பதிவு செயப்படவேண்டும் என்று நினைப்பதுவே இல்லை. நாம் நல்ல காற்றை நம் அடுத்த தலைமுறைக்கு வைக்கவில்லை – இப்போது நல்ல பண்பையும். தமிழ் கலப்படம் பெற்றது. தமிழனும்!

நம்மில் எத்தனை பேருக்கு கீழவெண்மணி தெரியும் என்பது வருத்தம் என்றால். அடுத்த தலைமுறைக்கும் அவர்களின் தாத்தானும் பாட்டியுமே தெரியமாட்டார்கள் – என்பது வருத்திற்கு உரிய உண்மை.

நம் மதிப்பீடுகளை மீளப்பெற செயல்படுவோம். அதற்க்கு தொலைக்காட்சிகளை கட்டயாபடுதுவேண்டியது கட்டயாம். நாளை இணையத்தை.

அவை ஒரு தடையோ – தண்டனையோ – அபராதமோ சந்திக்கவில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s