அப்பாவும் நானும் (அ நா) 9 : அடிமையான இந்தியா!

முதலில் தினமணி நல்லது செய்தாலும் – எனக்கு என்னமோ கொஞ்சம் பயமாகவே இருந்தது. அப்பாவை சந்தோசமாக வைப்பது என்பது இன்னொரு இந்தியாவை பராமரிப்பது போல். அவ்வளவு எளிதல்ல.

தினமும் தினமணி எங்கள் வீட்டில் பொய் சொன்னது. நாங்கள் அப்பாவை வெளியில் விடாமல் பார்த்துக்கொண்டோம். ஆனால் அப்பா கொஞ்சம் கொஞ்சமாய் தனிமை கொல்வதை சொல்லாமல் சொன்னார்.

விட்டத்தை பார்த்துக்கொண்டு இருப்பது. தாடையில் கை வைத்தபடி இருப்பது. எதையோ இழந்தது போல் இருப்பது.இவைதான் அப்பாவின் அதிகபட்ச செயல்பாடுகளாய் இருந்தன.

நான் பொதுவுடைமை கூட்டங்களுக்கு போவதை குறைத்துக்கொண்டிருந்தேன்.

பிரிட்டிஷ் இந்தியாவின் அந்திம நாட்கள்: நேரு, பேட்டன் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவை ஒத்துகொண்டவர்கள்

பிரிட்டிஷ் இந்தியாவின் அந்திம நாட்கள்: நேரு, பேட்டன் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவை ஒத்துகொண்டவர்கள்


அப்பாவோடு நான் என் நேரத்தை செலவளித்தாலும் – அப்பாவுக்கு தனிமை வலித்தது. எதிரபாரதவிதமாக அன்று ராவுத்தர் மீரான் வந்திருந்தார். அவரும் அப்பாவும் நல்ல நண்பர்கள். அவருக்கும் இந்தியா வெட்டப்பட்டதில் உடன்பாடு இல்லை. சில சாத்துகுடிகளோடு வந்தார்.

தலையில் இசுலாமியர்கள் குல்லா. நல்ல தாடி. ஒரு தேங்காய் பூ துண்டு; தடினமான கண்ணாடி; கட்டம் போட்ட லுங்கி.

அப்பாவின் அறைக்குள் நுழைந்தார். நானும் இருந்தேன். ஆப்பாவின் முகம் தாமரையாய் மலர்ந்தது.

“வாங்க ராவுத்தர் அய்யா ” – அப்பா மகிழ்ச்சி ஏந்தி வரவேற்றார்.

ராவுத்தர் என்றல் தமிழை தாய் மொழியாக கொண்ட இசுலாமிய சகோதரர்கள் – அவர்களும் நாமும் ஒன்று – மதம்தான் வேறு . பாய் என்றால் உருது பேசுபவர்கள். இது அப்பா ஒரு முறை என்னிடம் சொன்னது.

“நல்லா இருக்கீங்களா ? ” – ராவுத்தர் நலம் விசாரித்தார்.
“எனக்கு என்ன குறை ? இப்ப கொஞ்ச நாளா இவனும் அந்த கொடி புடிக்கிற கூட்டம் பக்கம் அவளவா போறதில. மகளை பத்தி சொல்லவே வேண்டாம். தங்கம் அவள். என்ன உடம்பு சரியில்லைன்னு வெளில போறதில்லை. அவளவுதான். நீங்க வந்தந்து ரொம்ப சந்தோசம் ராவுத்தர் அய்யா”
“சந்தோசம்”
“நீங்க எப்படி இருக்கீங்க ?”
“நான் நல்ல இருக்கேன். ஆனா சுததந்திரதுலதான் சூனியம் வச்சிடாங்கலே ?”
“சூனியமா ?”
“பேப்பர் படிக்கலையா ? இந்தியா இப்ப ….”
“அடப்போங்க ராவுத்தர் அய்யா. நேத்துதான் காந்தி ஜின்னாஹ் கிட்ட பேசி மனச மாத்திடாரே …”
அப்பாவின் உலகத்தில்தான் இன்னும் இந்தியா அடிமை இந்தியா தானே. காந்தி இன்னும் உயிரோடுதானே இருக்கிறார்.
“காந்தியா … ?”
“ஆமா”
“அவருதான் ….”

எனக்கு பயம் பற்றிக்கொண்டது. அப்பா என் கையாய் விட்டு போவது போல் உணர்ந்தேன். அடடா இவர் நல்ல தருணத்தில் வந்திருக்காரே. முதலில் அப்பாவின் நண்பர்கள் எல்லோரிடமும் அப்பாவின் நிலையையும் என் நாடகத்தையும் ( நகைச்சுவை நாடகம் ? ) விளக்கவேண்டும். இல்லாவிட்டால் சனி சப்பணம் போட்டு அமர்ந்து கொல்லும் ( இது சொற் பிழையில்லை – கொல்லும் ).

நான் ராவுத்தர் அய்யாவின் வாயை பார்த்தேன். அது வாழ வைக்கும் வாயா ? வீழ்த்தவந்த வாளா ?

மார்க்ஸ் மகாதேவா …. உனக்கு இரண்டாம் பரீட்சை. வென்றுவிடுவாயா ? மனம் கேட்டது.

-தொடரும்

Advertisements

5 comments on “அப்பாவும் நானும் (அ நா) 9 : அடிமையான இந்தியா!

  1. […] மேலும் 0 கருத்து | ஜனவரி 24th, 2010 at 5:47 pm under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s