கூகிள் விரும்பாத தமிழ் பதிவர்கள் !?

கூகிள் விரும்பாத தமிழ் பதிவர்கள் !?

கூகிள் விரும்பாத தமிழ் பதிவர்கள் !?


சில நாட்களில் பல பதிவுகள் படித்த பின், சில உண்மைகள் தெரியவந்தது. ஒரு பதிவை தவிர எந்த பதிவுக்கும் நான் பின்னோட்டம் இட வில்லை எனபது வேறு கதை. நான் பெரிய சோம்பேறி.கூகிள் தமிழை விரும்புகிறதா ? என்ற கேள்வி என்னுள் எழுந்ததது. முதலில் ஒன்றை புரிந்துகொள்ளவும் கூகிள் மீது குற்ற பத்திரிகை வாசிக்கும் பதிவு அல்ல இது. ஆனால் சில ஆய்வுகளையும் சிந்தனைகளையும் தூண்டும் என்கிற நோக்கில் எழுத்தப்படும் பதிவும்.

நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் பதிவு எழுதிவருகிறார். அவரது பதிவை பிற மொழி நண்பர்களும் படித்து வருகின்றனர். குறிப்பாக வட இந்திய நண்பர்கள் படிப்பதற்கு ஏதுவாக அவர் அதில் கூகிள் மொழி பெயர்ப்பு வசதியை இணைத்து உள்ளார். எனது பதிவை நான் வட இந்திய நண்பர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதாத காரணத்தினால் இந்த மொழி பெயர்ப்பு வசதியை பற்றி அதிகம் ஆராயவில்லை. ஆனால் நான் அறிந்து கொண்ட உண்மை ஆங்கில பதிவுகளை கூட தமிழ் மொழியில் கூகிள் மொழி பெயர்க்க முடியாது என்பதே.

சில உண்மைகளை வட இந்திய ஊடகங்களே வைகின்றன. தமிழ் நாடுதான் இந்தியாவில் அதிக பதிவர்களை கொண்டு உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை ஒரு ஆங்கில காட்சி ஊடகம் ( CNN IBN / IBNLIVE.கம ) இந்திய பதிவுலகின் தலை நகரம் என்று சொன்னது எனது நினைவில் உள்ளது. பல பதிவுலக சந்திப்புகள் தமிழ் கூறும் நல்லுலகில் நடை பெறுகின்றன. சிங்கப்பூரின் வசந்தம் தொலை காட்சியில் ஒரு முறை பதிவிடுவது எப்படி என்று சொல்லப்பட்டது. மீண்டும் ஒரு முறை தமிழ் பதிவர்கள் பற்றி நான் முன்னர் கூறிய வட இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கூகிள், சொல்லப்போனால் தமிழில் இருந்து ஆங்கிலம் செய்யும் மொழி பெயர்ப்பு கருவியை செய்தால் மிக பயன் உண்டு.

அடுத்த உண்மை என்னை வேறு தளத்தில் யோசிக்க தூண்டியது. ஐக்கிய அமெரிக்க மாகாண தமிழர் ஒருவரின் கருத்து இது. அதாவுது கூகிள் தமிழ் பதிவில் ad sense வசதி தருவதில்லை என்பது. அதிக பதிவர்கள் உள்ள தமிழ் கூறும் நல்லுலகில் கூகிள் ஏன் ஒரு வர்த்தக லாபத்தை இழக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இதனால் பதிவருக்கே லாபம் இல்லை என்றாலும் – இது என்னை யோசிக்க வைத்த ஒன்றே.

WordPress வசதியை பயன்படுத்தும் காரணத்தால் நான் இவை பற்றி பெரிதும் யோசிக்காதவனாய் இருந்தேன் என்பதே உண்மை. பதிவுலகம் இது தொடர்பாக என்ன செய்து உள்ளது என்று எனக்கு தெரியாது.

அப்பாவும் நானும் தொடரின் அடுத்து பகுதி அடுத்த பதிவில்: எல்லோரும் அப்பாவும் நானும் தொடர் படித்து கருத்து கூறவும். நன்றி

குறிப்பு: இந்த பதிவு கூகிள் transliteration கொண்டு எழுதப்பட்டதே! வாழ்க கூகிள்!

Advertisements

One comment on “கூகிள் விரும்பாத தமிழ் பதிவர்கள் !?

  1. […] மேலும் 0 கருத்து | ஜனவரி 26th, 2010 at 5:51 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s