புலிகள் வீழ்ந்த நிலையில் மகிந்தவின் தெரிவு !

இந்தியாவில் இருக்கிற போது சீனத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. இப்போதும்தான் சீனம் ஒரு புதிர். வாழ்க சீனம்.
அது போலவே ஈழத்தில் நடப்பதும் முழுமையாக தெரியாது ( இப்பவும் முழுமை என்று சொல்ல முடியாது ஆனால் அதிகமாகவே தெரியும் )

பிரபாகரன் இல்லை என்ற நிலையில் ( இன்னும் ராஜபக்சே அப்படி உறுதியாக நம்புகிறாரா என்று தெரியவில்லை ) நடந்த தேர்தல்.

பொன்சேக தோற்றார் என்பது என்னை பொறுத்த வரை ஒரு பெரிய விடயம் அல்ல. இந்த தேர்தலில் தமிழர்கள் பெரும்பாலும் யாருக்கு எதிராக வாகளிதனரோ அவர் பொறுப்பு ஏற்று உள்ளார்.
இது தமிழர்களின் வாழ்வை எந்த அளவு பாதிக்கும். ஆனால் ராஜபக்சே அவ்வளவு எளிதாக தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என்று நம்புவோம்.

பொறுப்பு ஏற்ற உடன் அவர் அளித்த நேர்காணல் ஒன்றை தான் எனக்கு சொல்கிறது. தான் இந்தியா சார்ந்தவனாகவே இருப்பேன் என்று அவர் சொன்னதே.

எனக்கு இப்போதெலாம் ஒரு சந்தேகம் – இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறிவிட்டதோ என்று. அவர் தான் இந்தியாவின் போர் நடத்துவதாக சொன்னார். இன்று இந்த அறிக்கை.

இலங்கை இந்தியாவின் அங்கமாக இருந்தால் – ஒரு மாநிலம் கிட்டும். அதற்கு தமிழ் ஈழம் என்று பெயர் சூடிக்கொள்லாம். அவர்களுக்கு அது ஒரு தெலுங்கனா.

இந்தியாவில் கொஞ்சம் மக்களாட்சியின் நன்மைகள் உள்ளன. ஆனால் இது போராளிகளின் சிந்தனையோ நோக்கமோ அல்ல. சொல்லப்போனால் அவர்களின் நோக்கத்திற்கு எதிர் ஆனது.

Advertisements

5 comments on “புலிகள் வீழ்ந்த நிலையில் மகிந்தவின் தெரிவு !

 1. […] மேலும் 0 கருத்து | ஜனவரி 29th, 2010 at 4:56 pm under  Blog திரட்டி […]

 2. Yoga சொல்கிறார்:

  ஏதாவது புரியும்படியாக எழுதுங்களேன்?பிளீஸ்

 3. Thevesh சொல்கிறார்:

  ஈழத்தமிழன் என்றும் இந்தியாவின் ஒருமாநிலமா
  க விரும்பியது இல்லை. அது தற்கொலைக்குச்சம
  னானது.சிங்களவர்களுடன் மோதி முழுஇனமும்
  அழிந்தாலும் அழிவானே அல்லாமல் இந்தியாவின்
  அடிமையாக மாறவிரும்பமாட்டான். ஏனெனில்
  அவன் தன்மானம் நிறைந்த தமிழன்.

  • biopen சொல்கிறார்:

   உங்கள் கருத்தும் என் கருத்தும் பெரிய வேறுபாடு கொண்டவை அல்ல. நானும் ஈழம் இந்தியாவின் மாநிலம் ஆவது போராளிகளின் நோக்கம் இல்லை என்றே சொல்லி உள்ளேன். இது அவர்களின் நோக்கத்திற்கு எதிரானது என்றும் சொல்லி உள்ளேன். நான் சொல்லியது எல்லாம் ராஜபக்சேவின் இந்திய ஆதருவு பேச்சை.

 4. Thevesh சொல்கிறார்:

  போராளிகள் மட்டும் அல்ல சாதாரண ஈழத்தமிழரும் தங்கள் தனித்தன்மையை இழக்கத்
  தயாராக இல்லை.இந்தியமாநிலமானால் அவர்கள்
  நிலை சமுத்திரத்தில் கரைத்தபுளிபோலாகிவிடும்.
  தமிழ்மொழிபேசினாலும் அவர்களின் உணர்வுகள்
  இந்தியத்தமிழரின் உணர்வுகளிலிருந்து வேறு பட
  டவை.தன்மானம், சுயமரியாதை, சுதந்திரம் மிக
  முக்கியமானவை என்று கருதுபவர்கள். ஏழையாக
  இருந்தாலும் பணத்துக்கு விலைபோகதவர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s