அப்பாவும் நானும் 11 : காந்தியை ஏன் சுட்டார்கள் ?

நாடு ரெண்டாப்போச்சு ! காந்தியும் போய்ட்டார் ! ஏன் நாம் படிக்கிற தினமணி பொய் சொல்லுது! எல்லாவற்றிற்கும் காரணம் இவன் தான் என்று அப்பாவுக்கு தெரிந்து விட்டதா என்று தெரியவில்லை.

அன்றைக்கு நான் நூல் கடையில் இருந்து நேராக ராயபேட்டை மருத்துவமனைக்கு மீண்டும் ஓடி வந்தேன். அப்பா மீண்டும் தீவிர சிகிட்சையில்.

பயம் என் இதயங்களில் குடி இருந்தது. நெஞ்சம் நிமிடத்திற்கு ஆயிரம் முறை துடித்தது. அப்பா இனி கைகளில் இல்லை.

“நான் அப்பவே சொன்னேன் அவன் இங்கயே இருக்கட்டும் என்று” – நீலகண்ட மாமா கோபத்துடன் சொன்னார்.

லலிதாதான் அப்பாவின் செவிலி.

“எதுவும் சொல்ல முடியாது இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்திற்கு” என்று அவளும் சொன்னாள்.

என் கூடவே அக்கா ஆப்புறம் அத்தான்.

“தம்பி அப்பா இவளு நாள் இருந்ததுக்கு காரணம் நீ. அவர் உன் நல்ல மனசுக்கு பிளசுடுவார்” – அக்கா உதடசைத்து தந்தாள்.

என் நிகத்தை கடித்தேன். உலகம் என் முன்னால் எதிரியாய் நின்றது. ஆம் – நிஜமான உலகம் அப்பாவிற்கு எமன்.

நான் கண்களை மூடினேன். இரண்டன இந்தியா. இறந்தபோன தேச தந்தை. பிரிவினையில் சண்டை செய்த மக்கள். கலவரம். ரணகளம். அமைதியை காவு கொடுத்து விட்டு விடுதலை என்று சந்தொசித்தோம். ராணுவத்தை வைத்து சொந்த மக்களை அடக்கினோம். உலகின் பெரிய ஜனநாயகம் என்று பெயர் எடுக்க ஆசை பட்டு நம் நாட்டின் முடியுடை வேந்தர்களை மிரட்டினோம். இது தான் நம் தேவை என்று நினைத்து ஒரு அரசு உருவாக உள்ளது.

“அப்பா கண் விழித்து பார்த்தாராம். ஆனால் பேச தெம்பில்லை. தயவு செய்து தொந்ததருவு செய்ய வேண்டாம்” – லலிதா சொல்லி விட்டு போனாள்.

கொஞ்சம் நேரம் கழித்து அப்பா மீண்டும் மாயம் ஆனார். மரணத்திற்கு ஒரு ஒத்திகையோ ?

லலிதா சிகிச்சை பிரிவை விட்டு வெளியே வந்தாள்.
“அப்பா ஒரு கேள்வி கேட்டார்” என்றாள்
“என்ன அது ?”
“காந்தியை ஏன் சுட்டார்கள் ?”

அப்பா காதில் காந்தி பிறந்ததினத்தின் நிகழ்ச்சிகள் காதில் விழுந்து இருக்கும். இது விடுதலை இந்தியாவின் முதல் காந்தி ஜெயந்தி மட்டும் அல்ல. காந்தி இல்லாத இந்த்யாவின் முதல் காந்தி ஜெயந்தி.

“ஆனால் அப்பா எழுந்து விடுவார்” – என்றாள் அவள்.

கதை தயாரிக்க வேண்டும் காந்தியை ஏன் சுட்டார்கள் என்று. என் நிலை மோசம்தான். அப்பாவுக்காக எதுவும் செய்யலாம். காந்தி மாதவன் காந்தி பிறந்த தினத்தில் இறந்து விடக்கூடாது.

Advertisements

2 comments on “அப்பாவும் நானும் 11 : காந்தியை ஏன் சுட்டார்கள் ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s