நீயா ? நானா ? – தேவைதானா ?

தமிழன் பேச்சு ருசி கண்டவன் என்று யாரோ சொன்னது என் நினைவில் உள்ளது. முதலில் சில உண்மைகள். இது ஒரு சில வருடங்களுக்கு முன்னால் படித்த ஒன்று.

இந்தியா கடந்த பத்தாண்டுகளில் பெரிதாக எந்த கண்டுபிடிப்பும் நிகழ்த்தவில்லை. ஆனால் நம்மில் பலர் கண்டுபிடிப்புக்களை கொணர்ந்தாலும் உலகம் சொல்லும் காப்புரிமை பெரும் நிலையிலோ அதை தெரிந்து கொள்ளும் நிலையிலோ இல்லை. நமது பல பொருட்கள் வெளிநாடுகளின் காப்புரிமை பொருளாகி நம் சண்டையிட்டு பெற்றவை பல.

நாம் எதை பற்றி பேசுகிறோம். பேசுவது பொழுதை ஆக்கவா? போக்கவா ?.

நாம் உண்மையில் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் எவ்வளவு பேசலாம் ? நாம் அழலாம் – நம் கோபத்தை நம் பண்டிதுவதை காட்டலாமா என்று தான் பார்க்கிறோம்.

நம்முடைய பல பேச்சரங்க நிகழ்ச்சிகள் ஏதோ ஒரு நிலையில் பட்டிமன்றங்கள்தான். ஆனால் தீர்ப்பு சொல்ல மாட்டார்கள். நீங்கள் அழலாம் நாட்டியம் ஆடலாம். உங்கள் காதலை வெளியிடலாம். கடைசியில் உங்களுக்கு ஒரு திசை கிடைக்காது ஒரு புரிந்துணர்வு கிடைக்கும். அது ஒரு விதத்தில் நல்லதே. யார் நமக்கு முடிவு சொல்வது.

நாம் வேலை வாய்ப்பை பற்றியோ சமூகப்புரட்சி பற்றியோ பேசமாட்டோம். காரணம் அவை நமக்கு வரட்சியான்வை. நீயா நானா போன்றவை – Corporate பணபாட்டின் வெளிப்பாடு.

நம் தொலைக்கட்சிகளில் ஆடுகிறார்கள் சூப்பர் சிங்கர் என்று பாடுகிறார்கள். வயலும் வாழ்வும் பிடிக்காத விவசாய நாடு நாம். எத்தனை பேர் வீட்டு தோட்டம் வைத்து உள்ளோம். பலர் சொல்வது அதற்கு இடம் ஏது ? நேரம் ஏது ? -எனக்கு புரியவில்லை சோற்றுக்கு கடைசியில் என்ன பண்ண போகிறோம் ? எல்லா அப்பர்டுமேன்டிலும் மாடியில் காய்கறி தொட்டமாவது போடலாம். ஒரு தலத்தில் முடிந்தால் பயிரிடலாம்.

நாம் தமிழில் பேசலாமே ? இதில் கோபி நாத் பாராட்டப்படவேண்டியவர். பெரும்பாலும் தமிழ் பேசுகிறார்.

தமிழில் ‘ழ’ உச்சரிக்க தெரிந்தவர்கள் – தெரியாதவர்கள் – பிரச்னை என்ன ? என்று ஒரு நீயா நானா நிகழ்ச்சிக்கு தலைப்பு வைக்கலாம். நீங்கள் எந்த பக்கம் என்று எனக்கு தெரியாது.

தமிழ்நாட்டில் பல தமிழ் அறிஞர்கள் கூட ‘ழ’ உச்சரிக்க முடியாத கூட்டத்தில் இருக்கலாம். தவறில்லை. இதை எப்படி சரி செய்யலாம் என யோசிக்கலாம். விஜய் டிவிஇதற்கு திரு நெல்லை கண்ணனை விருந்தினராய் அழைக்கலாம்.

இதெல்லாம் நம் கவலை இல்லை – சாக்லேட் பையன்களும் – முரட்டு மனிதர்களும் பெண்களை கவர்வார்களா ? இல்லை உங்களுக்கு உங்கள் மனைவி என்ன வேலை செய்யவேண்டும் ? இவை நம் கலந்துரை ஆடல்கள். நாம் யார் நம் தீர்மானத்தை திணிக்க.

நினைப்பது பேசுவதற்கு அடிப்படை. பேசுவது செயல்படுவதற்கு அடிப்படை ஆகட்டுமே!

சிந்திப்போம்! கலந்துரையாட்வோம்! சேர்ந்து செயல்படுவோம்!

Advertisements

2 comments on “நீயா ? நானா ? – தேவைதானா ?

  1. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 7th, 2010 at 1:43 am under  Blog திரட்டி […]

  2. Surendran சொல்கிறார்:

    என்ன சொல்ல வருகிறீர்கள். தெளிவாக சொல்லவும். மேற்படி தொலைகாட்ச்சியில் வரும் அத்தனை நிகழ்ச்சிகளும் ஒத்திகை பார்த்து நிகழ்ச்சியின் இயக்குனர் விருப்படியே வெளிவருபவை. இதில் விளம்பரயுக்தி இருக்கிறதே தவிர சுயகருத்துக்களுக்கு இடமில்லை. நீயா நானா பார்த்து ஏமாறவேண்டாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s