அப்பாவும் நானும் 13 : மீளா தூக்கம்

அப்பாவின் நிலை மோசமா இல்லை பரவா இல்லையா தெரியாமல் குழம்பினேன். நீலகண்ட மாமா என்னை எரிக்கிற மாத்திரி பார்த்து விட்டு போனார்.
ஜன்னல் வழியே வானம் பார்த்த போது – அது மரண மௌனம் காத்தது. என்ன சொல்வது ? மரணம் என்பது ஒரு வலி.
என் கை கடிகாரத்தை பார்த்தேன் நிமிடங்கள் நடந்தன. மெதுவாக கடந்தன. வெறுமை என்னை தொற்றிக்கொண்டது. காந்தி மாதவன் மரணம் என்னால்தனோ ?
கண் விழி ஓரத்தில் கண்ணீர். உலகம் இருண்டு கிடக்கிறது.

“உள்ளே வரலாம்” – சைகை காட்டினாள் லலிதா.

அப்பா படுத்திருந்தார். மரணப்படுக்கையாய் தெரியவில்லை. சிரித்தபடி இருந்தார். விழிகளில் மரணம் இல்லை. புன்சிரிப்பு பூத்து இருந்தது. இப்போதுதான் மலர்ந்த செந்தாமரை மாதிரி இருந்தார்.
ஒரு வேலை மடிகிற விளக்கு படியது அனால் பிரகாசிக்கும் என்பது போலவோ ?

“வாட உள்ள” – வாஞ்சையோடு வரவேற்றார்.
“அப்பா”
“காந்தி ?’
“அவரு சகலப்பா … நேதாஜி மாதிரி …. ”
“விடு”
“இந்தியா ஒற்றுமையோடு இருக்கு”
“சந்தோசமா இருக்கு”
“நம்மலோடதான் கல்கத்தா முஸ்லிம்களும் லாகூர் முஸ்லிம்களும் இருக்காங்க”
“அப்படியா … சந்தோசம்”
அப்பா சிரித்தபடி கேட்டார்.

அக்கா, அத்தான், லலிதா எல்லோரும் மெளனமாக இருந்தனர். அது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. எளவு வீட்டில் இருக்கிற மௌனம். அனால் ஏன் அப்படி இருக்க வேண்டும். கடைசி நிமடதையும் அனுபவிக்க வேண்டும்.
கடைசி நிமடத்தில் தான் மகிழ்ச்சியை அதிகமாய் தர வேண்டும். இது ஏனோ மனிதர்களுக்கு தெரியவில்லை.

“மாமா, நூல் கடையில் கொஞ்சம் வேல …” — அத்தான் ஆரம்பித்தார்.
“போயிட்டுவாங்க மாப்பிள்ளை” — அப்பா அனுப்பிவிட்டு – என்னை பார்த்தார். பாசப்பார்வை.
“அப்பா … ஹோர்லிக்ஸ் ” — அக்கா பேசினாள்.
“இவன் கூட இருந்தா தெம்பா இருக்கு” — அப்பா சொன்னார்.

ஒரு வழியாக அப்பா எழுந்து அமர்ந்தார். ஒரு வாரம் ஓடியது. அப்பா ஒரு நாள் விண்ணில் நட்சத்திரமாய் எங்கள் நெஞ்சில் நினைவுகளாய் நிலத்தில் மலராய் சுவாசிக்கும் காற்றாய் எங்களுள் கலந்தார்.

அவர் ஆசை படி அவுருடைய மரணத்திற்கு முந்திய நாள் பாதிய ஓதிய சீனியை திர்வல்லிக்கேணி பெரிய மசூதியில் இருந்து ராவுத்தர் அய்யா கொண்டுவந்தார்.

இனிப்பாக முடிந்தது அவரது வாழ்வு! பிறகுதான் எனக்கு தெரியும் அப்பாவுக்கு எல்லா உண்மையும் தெரியும் என்றும் எனக்காக புன்னகை பூவாய் இருந்தார் என்பதும்.

நாடுகள் பிரிவது தேவையா என்பதே விட – பல நாடுகளின் பிரிவினையில் உள்ள வலி மிகவும் வேதனையானது. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த தருணத்தில் வாழ்ந்த மனிதர்களை – குறிப்பாக வட மற்றும் கிழக்கில் வாழ்ந்தவர்களை கேளுங்கள் சொல்வார்கள்.
நன்றிகளுடுன் மார்க்ஸ் மகாதேவன்.

-முற்றும்

அப்பாவும் நானும் பகுதி 12

அப்பாவும் நானும் பகுதி 11


அப்பாவும் நானும் பகுதி 10

அப்பாவும் நானும் பகுதி 9


அப்பாவும் நானும் பகுதி 8

அப்பாவும் நானும் பகுதி 7

அப்பாவும் நானும் பகுதி 6

அப்பாவும் நானும் பகுதி 5

அப்பாவும் நானும் பகுதி 4

அப்பாவும் நானும் பகுதி 3

அப்பாவும் நானும் பகுதி 2

அப்பாவும் நானும் பகுதி 1

Advertisements

One comment on “அப்பாவும் நானும் 13 : மீளா தூக்கம்

  1. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 10th, 2010 at 6:45 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s