ஜெயராம் – தமிழச்சி: அடையாளங்கள் மீது ஒரு பிரச்சனை.

ராமர்கள் என்றாலே சிக்கல்தனோ தெரியவில்லை. ஒருவர் அயோத்தியில் …. இன்னொருவர் வீடு தீயில்.

(ஜெயராம் – இது என்ன அ தி மு க – பா ஜ க கூட்ணியில் உருவான பெயர் மாதிரி இருக்கு)

ஜெயராம் வீடு தாக்கப்பட்டு உள்ளது. அதற்கு அவர் வாய் தான் கரணம் என்று புரிந்துகொண்டாலும். பெண்கள் தனியாக இருக்கும் பொது காட்டப்பட்ட வீரம் இது என்ற குற்றசாட்டையும் மறுப்பதற்கு இல்லை.

தடித்த என்ற மலையாள வார்த்தை – குண்டு, பருமன் என்பதே. என்னோடு படித்த நண்பன் ஒருவன் மலையாளி அவன் என்னுடைய பேராசரியரை பற்றி பேசும்போது ‘ஆ தடிச்ச மேடம்’ என்று சொல்லி பிரச்னையில் சிக்கிகொண்டது எனக்கு நினைவில் உள்ளது. அதனால் தடித்த வரத்தை எனக்கு பெரிதாக தெரியவில்லை. அல்லது புதிதாக தெரியவில்லை.

ஆனால் எருமை — இது ரொம்ப ஓவர். இப்படி எப்படி சொல்லாம் ? வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்றுதான். பீகாரிகள் திருடர்கள் என்று ஒரு முறை அசார் சொல்லி சிக்கிகொண்டார். கிரேட் மராட்டா என்கிற தொடர் குஜராத்திய ராஜஸ்தானிய அரசர்களை கேவல் படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஜோதா அக்பர் சிக்கி கொண்டது தெரியும்.

நாம் மொழி அடையாளங்களைதான் முதலில் மதிக்கிறோம். எனவே அது பற்றி பேசும் போது கொஞ்சம் வலிக்கிறது. பேசுபவர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழன் என்றுதான் பலரும் நம்மை முதலில் சொல்கிறோம். வங்காளிகள் – கன்னடர்கள் – மராட்டியர்கள் – யாரும் இதில் விதிவிலக்கல்ல. அவர்களும் அப்படிதான். நாடு கடந்துவரும் போது இந்திய என்கிற அடையாளம் மக்களோடு சேரவும் நம்மை பாதுகாத்துகொள்ளவும் பிற தேவைகளுக்கும் தேவைப்பட்டு முதன்மை பெறுகிறது.

உடைந்து போன சோவியத்தில் இப்படி பிரச்சனைகள் இருந்திருக்கும். அவர்கள் வேறு வேறு விதமாக பேசுவார்கள் – அவர்களை பொறுத்தவரை ஒவுவுன்றும் ஒரு மொழி.

தமிழ் பெண்கள் பற்றி பேசி குஷ்பூ சிக்கிகொண்டார். இப்போது ஜெயராம். ஆனால் இதுவரை எந்த தமிழ் நடிகனும் நடிகையும் சிக்கவில்லை – ஏன் அவர்கள் திட்டுவதில்லை ? சத்யராஜ் கிட்டத்தட்ட சொரணை கேட்ட தமிழன் என்றுதான் பேசினார் ஈழ ஆதரவு நிகழ்ச்சியில். ஆனால் அப்படி அதே மேடையில் நயன்தாரா பேசி இருந்தால் ?

நாம் விடுதலை பெற்றதே … நம்மை நம்ம முதலாளிகள் ஆள்வதர்க்குதான் என்று விடுதலை ஆகி பொன்விழா கடந்தும் பேசுகிறார்கள். ஆனால் இப்போது ஒரு விடுதலை போராட்டம் முளைக்காது. ஆனால் அப்படி ஒன்றை ஒருவரால் செய்ய முடிந்தது என்றால் ஜெயப்ரகாஷ் நாராயணன் என்கிற ஒருவரால்தான். இது இரண்டாம் விடுதலை போராட்டம் என்றே அவர் சொல்லி இந்திரா அம்மையாரின் ஆட்சியை இறக்கினார்.

நாம் சொல்கிற தத்துவும் மிக எளிது. என் முகத்தில் நான் காரி உமிழலாம். அனால் நீ கூடாது. நான் இரண்டுமே தவறு என்கிறேன். நாம் எல்லோரும் நல்ல வார்த்தைகள் பேசுவோமே. கனி இருப்ப காய்கவர்ந்தற்று.

Advertisements

5 comments on “ஜெயராம் – தமிழச்சி: அடையாளங்கள் மீது ஒரு பிரச்சனை.

 1. Surendran சொல்கிறார்:

  //என் முகத்தில் நான் காரி உமிழலாம். அனால் நீ கூடாது. நான் இரண்டுமே தவறு என்கிறேன். நாம் எல்லோரும் நல்ல வார்த்தைகள் பேசுவோமே. கனி இருப்ப காய்கவர்ந்தற்று.//

  நன்றாக சொன்னீர்கள். எத்தனைப்பேர் இதை புரிந்து நடப்பார்கள் என தெரியவில்லை. நல்ல பதிவு.

 2. VISA சொல்கிறார்:

  //சத்யராஜ் கிட்டத்தட்ட சொரணை கேட்ட தமிழன் என்றுதான் பேசினார் ஈழ ஆதரவு நிகழ்ச்சியில். ஆனால் அப்படி அதே மேடையில் நயன்தாரா பேசி இருந்தால் ?
  //

  arumaiyaana point.

 3. அண்ணாம‌லையார் சொல்கிறார்:

  த‌டா, பொடா த‌ண்ட‌னை, ஜெயில் வாச‌ம் தெரிந்தால், கார்த்திக் மேதாவி ஆகியிருக்க‌ மாட்டார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s