ஈழத்தில் முதல் வெளிநாட்டு வங்கி!

ஜனநாயகம் தழைத்து ஓங்குகிறது என்றால் – நாட்டில் வெளிநாட்டவர்கள் வணிகம் செய்ய அனுமதி என்றும் பொருள்.
உலகம் இன்று எல்லோருக்கும் திறக்கப்பட்டு உள்ளது. யாரும் உலகத்தின் எந்த பகுதிக்கும் போகலாம் வர்த்தகம் செய்யலாம்.

உழைப்பாளிகள் பயணிப்பதும் வேலைபார்பதும் அவ்வளவு எளிதா என்று கேட்டால் – கொஞ்சம் என்று சொல்லலாம். முதலாளிகள் என்றால் – நிறைய என்று சொல்வேன்.

சென்னையில் தலைமை செயலக கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பலர் வடகிழக்கு மாநில மக்கள். சிறுசேரி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் பல வேறு மாநிலத்தவர்கள் இப்படி கடை நிலை பனி புரிவதை ஒரு நண்பர் சொன்னார்.

பல பாதுகாவலர்கள் இப்படி தான். இது எல்லாம் இப்போது சர்வசாதாரணம். தமிழன் துபாய் அமெரிக்க கனடா என பயணிக்க. அஸ்ஸாமியர்கள், மனிபூரிகள் சென்னை மும்பாய் என பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதில் ஒரு கொடுமையை நான் சொல்லவேண்டும் – நான் வேலை தேடி கொண்டிருந்த தருணம் அது – ஒரு முறை அண்ணா பல்கலையில் ஒரு தேர்வு என் முக்கியமான காகிதங்களை விட்டு விட்டு வந்துவிட்டேன். பின் தான் உணர்ந்தேன் இதை.

இரவு நேரம் – உள்ளே போனேன். கட்டடங்கள் பூட்டபட்டுகொண்டிருந்தன. விஷயத்தை சொன்னேன் – ஒரு பதுகவலர்க்கும் புரிவில்லை. ஒரு தமிழர் இருந்தார். அங்கே போய் பார் அவன்தான் சாவிகள் வைதிரயுப்பவன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

நான் அவர்காட்டிய அறைக்கு போனால் ஒரு நேபாளி – நான் தமிழில் சொல்ல அவர் விழித்தார். பின் – நான் ஆங்கிலத்தில் சொல்ல – நோ ஓபன் ஒன்லி மோர்னிங் என்று சங்கு ஊதினார்.
நண்பரே என்று கெஞ்சியும் பயனில்லை.

பின்னர் சொன்னேன் தேரா நம்பரி கம்ம்ரே மெயின் மேரா file ஹாய். மேரா செர்டிபிகாட்ஸ்” – அவர் நிலைமையை புரிந்து கொண்டார். சாவியை எடுத்துவந்தார் என் கல்வி சான்றிதல்கள் கிடைக்க அவர் உதவினார். நன்றி நண்பரே. அவுருக்கு புரிந்த மொழியில் பேசி நான் விபரிதம் புரிய வைத்தேன். அவர் உதவியதோடு இல்லாமல் “சான்றிதல்களை பாதுகாப்பாய் வைக்க சொன்னார். இது உன் வாழ்வு” என்று என் மீது அக்கறை கொண்டு சொன்ன அந்த நேபாளி முகம் எனக்கு சிநேகமாய் தெரிந்தது.

வெளில் வந்ததும் நான் சொன்னது “அண்ணா பெயரில் உள்ள பல்கலையில் தமிழில் பேசி ஒன்றும் செய்யமுடியவில்லை” – இதே போல் ஒரு நிலை சன் டிவி அலுவலகத்திலும் நடந்தது.

இது உலகமயமாக்கலின் ஜனநாயத்தின் வெளிப்பாடு.

யாழிலும் இப்போது ஒரு வெளி நாட்டு முதலாளி வந்துள்ளார். HSBC என்று நினைக்கிறேன் – அவர்கள்தான் தமிழ் ஈழ மண்ணில் கால் வைக்கும் முதல் வெளிநாட்டு வங்கி.

1 comments on “ஈழத்தில் முதல் வெளிநாட்டு வங்கி!

  1. Surendran சொல்கிறார்:

    மாற்றம் ஒன்றே மாறாதது. கடந்து பத்து ஆண்டுகளை அசைபோட்டால் நீங்கள் சொன்ன அத்துணைமாற்றங்களும் அதில் அடங்கிவிடும். நன்றி நண்பரே.

Surendran -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி