இலங்கை பாகிஸ்தான் பிரச்சனைகள் : இந்தியா என்ன செய்ய வேண்டும் ?

இலங்கையில் முன்னாள் ராணுவ தளபதி கைது. தலிபான் அமைப்பு பாகிஸ்தானில் கராச்சி வரை கால் ஊன்றியது தெளிவு.

இதெல்லாம் இந்தியாவிற்கு வெறும் செய்திகள் அல்ல – பிரச்சனைகள். இவற்றை இந்தியா எப்படி அணுக உள்ளது என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.
ஏற்கனவே பாகிஸ்தான் ஒரு அணுஆயத நாடு. சீனம் நமக்கு நண்பன் இல்லை. இலங்கை நிலவரம் எப்போது சாதகம் எப்போது பாதகம் என்று கொள்கை வகுபாலர்களுக்கு தெரிவதில்லை.

பாகிஸ்தானில் ஒரு தலிபான் தளபதி கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி நல்ல செய்தி போல் தெரிந்தாலும் – அதில் உள்ள பயங்கரம் எப்போது தெரியும் என்று தெரியவில்லை.

பாகிஸ்தானின் கராச்சி வரை ஆயுத குழுக்கள் அடித்தளம் அமைத்திருப்பது அமெரிக்காவின் கவலையோ பிரிட்டனின் கவலயோ அல்ல – இந்தியாவின் பிரச்சனை. அவர்களை ஒழிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் முழு மூச்சுடன் செயல்பட்டாலும் – இந்தியா இதில் என்ன செய்ய உள்ளது ?. பக்கத்து வீட்டில் தீ எறிவது – பக்கத்து வீட்டு பிரச்சனை என்று விட முடியுமா ? இதில் நாம் எதுவுமே செய்ய முடியாவிட்டாலும் நமக்கான தற்காப்பு எந்த நிலையில் உள்ளது.

சீன படை அவ்வப்போது சிற்றுலா வந்து செல்கிறது இந்தியாவிற்குள். நாமும் மௌனம் காக்கிறோம்.

இலங்கை மீனவர்கள் பலரை சுட்ட பட்டியல் நீள்கிறது.

இவ்வாறெல்லாம் இருக்கும் போது நாம் எப்படி வட்டார வல்லரசாவது ? – முதலில் நல்லரசாகலாம்.

Advertisements

6 comments on “இலங்கை பாகிஸ்தான் பிரச்சனைகள் : இந்தியா என்ன செய்ய வேண்டும் ?

 1. raja natarajan சொல்கிறார்:

  காலையில் வானொலி(?) செய்தியில் தலிபான் தல ஒண்ணு கைது என்ற செய்தி கேட்டதும் அமெரிக்க,பாகிஸ்தான் இந்திய வலைப் பின்னல் பல யோசனைகளை தோற்றுவித்தது.

  அமெரிக்கா இஸ்ரேலையும் சவுதி அரேபியாவையும் எப்படி இணைத்து ஈரானைக் கட்டம் கட்டுவது என்ற திட்டம் ஒரு பக்கம்.

  பாகிஸ்தான் வளர்ப்பு பிள்ளை தலிபானையும் தண்டிக்க வேண்டும்.பாகிஸ்தான் நட்பும் பாராட்ட வேண்டும்.அதே சமயத்தில் சீனாவுக்கும் செக் வைக்க வேண்டும்.இந்தியாவையும் துணைக்கு இழுக்க வேண்டும்.

  சுருக்கமாக சொன்னால் அமெரிக்காவின் பார்வை 21ம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு,ஆசிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது.

  இந்தியா என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பம்பாய் பயங்கரத்தின் வடுக்கள் மெல்ல மறையத் தொடங்கியுள்ளது.எனவே 25ம் தேதி பாகிஸ்தானுடன் பேசலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது இந்தியா.சிதம்பரம்,பிரணாப் பருப்புகள் ஒன்றும் வேகவில்லை பாகிஸ்தானிடம்.இனியும் வேகாது.பாகிஸ்தானின் உள்நிலவரங்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்த வரை பாகிஸ்தான் Trump.

  இருக்கும் பாகிஸ்தான் தலிபான் தலைவலி போதாதென்று இலங்கையிலும் காங்கிரஸ் ஒரு புதிய களத்தை துவங்கி வைத்துள்ளது.60 ஆண்டுகளுக்கும் மேலான இந்திய அரசியலில் காங்கிரஸின் பங்கு பெரிது.ஜனநாயக வளர்ச்சியோடு இந்தியாவின் குறைபாடுகளுக்கும் காங்கிரஸின் பங்கு மிகப் பெரியது.

  • biopen சொல்கிறார்:

   உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். வெளி உறவு கொள்கையில் நாம் நிறையவே பின் தங்கி உள்ளோம் என்றே நான் நினைக்கிறன்.
   பலன் கிடைக்கவிட்டால் நமது தற்போதைய வெளியுறவு கொள்கை திசையை மாற்ற வேண்டும்.

 2. veerapandian சொல்கிறார்:

  பேசாம இந்தியாவை, சீனாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ தாரை வார்த்து கொடுத்துவிடலாம்.அப்புறம் இந்தியாவில் பூந்து விளையாடும் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் பயங்கரவாதப் போக்கு,பார்ப்பனீயம்,திராவிடீயம்,க்ரீமி லேயர் ஓ பி சி அயோகயத்தன்ம்,இஸ்லாமிய தீவிரவாதம்,,தமிழ் தேசியம்,ஈழத் தமிழர்கள் பிரச்சனை, மற்றும் எல்லாத்தையும்விட் கீழ்த்தரமான மாவோயிச நக்சல் தீவிரவாதம் போன்ற பிரச்சனைகள் அவங்க தலைவலி ஆகிவிடும்.காங்கிரஸ் கிட்டத் தட்ட இதைத் தான் செய்து வருகிறது.இந்த கொளகையை முழு முனைப்போடு செய்தால் பயன் கிடைக்கும்.ஃ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s