சிறுகதை: சித்தியும் சித்தப்பாவும்

‘ரூபனிடம் உனக்கு பிடிச்சவங்க யார் ?’ என்று கேட்டால் நிச்சயமா லதாக்கவின் பெயரும் இருக்கும். லதா அவனை பொறுத்தவரை மிக நல்லவள். அம்மாவை விட அப்பாவை விட காரணம் அவள் இந்திய கிரிகெட் அணி மாதிரி – அடிக்கவே மாட்டாள்.

லதா மீண்டும் ஊருக்கு வந்திருக்கிறாள். அது என்ன மீண்டும் என்று கேட்கிறீர்களா ? அவள் கல்யாணத்திற்கு பின் இபொழுதுதான் வருகிறாள்.

லதாவை பார்பதற்காக பள்ளி முடித்து வந்ததுமே ஓட்டமும் நடையுமாய் லதாவின் வீடு நோக்கி போனான்.

“அட! கால் முகம் கூட கழுவாம ஓடிருச்சு பக்கி ” – என்று அம்மா சிணுங்கினாள்.

லதாவின் வீடு அமைதியாய் இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தான் ரூபன்.

“அக்கா ” – என்று தான் கூப்பிட்டான்.
லதாவின் அம்மா வந்தார்கள்.
“அக்காவிற்கு தலை வலி நாளை வா விளையாடுவா” என்றார்கள்.

கொஞ்சம் குழம்பியவனாகவே கிளம்பினான் ரூபன்.

வீட்டிற்கு வந்தால் அம்மாவும் அப்பாவும் சண்டை பிடிதுக்கொண்டிருந்தார்கள்.
“நீங்க இப்படியே செஞ்சா நான் லதா மாதிரி விவாகரத்து பண்ணிருவேன் ” – இது அம்மா சொன்ன வார்த்தை. பல வார்த்தைகளில் ஒன்று என்றாலும் ‘விவாகரத்து’ என்கிற வார்த்தை ரூபனுக்கு நெஞ்சில் பட்டது.

அடுத்த நாள். பள்ளி முடிந்து கடைசி பெஞ்சு கதிரோடு வருகிற வழியில் ஆரம்பித்தான் ரூபன்.

“டேய் கதிர் அது என்னடா விவாகரத்து ?”
“அதுவாடா ரூபா ! இப்ப உங்க அப்பா விவாகரத்து பண்ணிட்டா – உங்க வீட்ட விட்டு உங்க அம்மா போயிடும் அப்புறம் ஒரு சித்தி வரும் – கொடுமை படுத்தும்”
“அம்மா பண்ணினா ….? ”
“ஒரு சித்தப்பா வரும்”

வீட்டுக்குள் வந்தான் ரூபன். பையை நாற்காலியில் போட்டான். கால் முகம் கழுவினான்.
பொய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். தமிழ் புத்தகத்தை எடுத்து கையில் வைத்து கொண்டான்.

“அம்மா கோயிலுக்கு பொய் வரேண்டா ” — அம்மா சொல்லிவிட்டு கோயிலுக்கு கிளம்பினாள்.

அப்பா வந்தார்.
“என்னடா படிக்கிறியா ?” -என்று கேட்டார்.

அம்மா கோயில் முடித்து வந்தாள்
“இந்தாங்க திருநீறு” – அப்பாவுக்கு தந்தாள்.
“டேய் இங்க வாடா ” — ரூபனை நோக்கி அழைத்தாள்

ரூபன் வந்தான்.அம்மா நெற்றியில் திருநீறு இட்டாள்.
“அம்மா நீ என்ன விட்டு போக மாட்டியே ?” – ரூபன் கொஞ்சம் அழுதபடியே கேட்டான்.
“ஏன்டா அப்படி கேக்குற ?” -அம்மா கேட்டாள்
“நீயும் லதா அக்கா மாதிரி …” ரூபன் இழுத்தான்.
பனியனுடனும் கைலியுடனும் இருந்த அப்பா வந்தார்.

ரூபனை இழுத்து அனைத்து கொண்டார்.
“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது செல்லம்” – என்றார் அப்பா
“அம்மாண்டா ” – அம்மா சமாதானபடுத்தினாள்.
“புள்ள இருக்கேல அப்படி பேசாதுன்னு கேட்டதனே. நாம்தானே நம்ம புள்ளைக்கு எல்லாம். பாரு ஏங்கி போச்சு” – என்று அப்பா சொன்னார்.

ரூபன் அழுத விழிகளை தொடைத்து கொண்டான்.
அவனுக்குள் மகிழ்ச்சி – நோ சித்தி நோ சித்தப்பா. நன்றி கடவுளே.

Advertisements

6 comments on “சிறுகதை: சித்தியும் சித்தப்பாவும்

 1. Thevagi Letchumana Dass சொல்கிறார்:

  Very nice story and some people life its real story also.
  Dear all parents in this world one small request:- Please don’t fight in front ur kids.
  Please….

 2. Thevagi Letchumana Dass சொல்கிறார்:

  Very nice story and some people life its real story also.
  Dear all parents in this world please don’t fight in front ur kids.
  Please….

 3. uzhavan சொல்கிறார்:

  //அவள் இந்திய கிரிகெட் அணி மாதிரி – அடிக்கவே மாட்டாள்//
   
  கண்டனம்.. கண்டனம் 🙂
   
  மிக அருமையான கதை.

 4. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 17th, 2010 at 7:17 pm under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s