சிறுகதை: தாத்தாவும் மோட்டார் வண்டியும்

ராமசாமி தாத்தா – ரூபனின் வீட்டில் இருந்து ஒரு ரெண்டு தெரு தள்ளி குடி இருக்கிறார். அப்பாவின் அப்பா அவர்.

எப்போதாவது ரூபனின் வீட்டுக்கு வருவதும் கதை பேசுவதுவுமாய் இருப்பார்.

அன்றும் அப்படிதான் வந்தார் தாத்தா. நீண்ட நேரம் பேசிவிட்டு கிளம்பினார்.

“வர்றேன்” – தாத்தா கிளம்ப தயார் ஆனார்.
“சரிங்க” – அம்மாவும் அப்பாவும் சொல்லினர். வாசல் வரை வந்து வழி அனுப்பினர்.

அவர் கிளம்பினார். கிளம்புவதற்கு முன் வீட்டு முன் நின்ற அப்பாவின் மோட்டார் பைக்கை பார்த்தார். ஒரு நிமிடம் அதன் மீது அவரது கண்கள் இருந்தது.

தாத்தா கிளம்பியவுடன் அம்மா வெளியில் கிளம்பினாள்.

“என்னங்க … நான் சந்தைக்கு கிளம்புறேன்” – அம்மா சொன்னார்கள்.
“இரு … நான் கொண்டு வந்து வண்டியில் விடுறேன்” – அப்பா சொன்னார்.
“ஏம்பா … அம்மாவை வண்டில விடுறீங்க … ?” — ரூபன் கேட்டான்
“அம்மாவுக்கு கால் வலிக்கும் இல்ல ?” – அப்பா சொன்னார்
“அப்பா தாத்தாவுக்கு ?” – ரூபன் கேட்கவும், அப்பா மௌனமானார்.

அம்மாவும் அப்பாவுக்கும் சந்தைக்கு போயினர்.

பள்ளிக்கூடம் முடிஞ்சு வருகிற போது ரூபன் தாத்தா வீட்டுக்கு போனான். தாதா ஏதோ விளங்காத அரட்டை தொடர் பார்த்த்கொண்டிருந்தார்.

“தாத்தா …” – ரூபன் கூவியபடியே உள்ளே ஓடினான்.
“வாடா செல்லம் …” – தாதா வரவேற்றார்
“தாதா உனக்கு கால் வலிக்காதா ?” – ரூபன் கேட்டான்
“ஏன்டா ?”
“அப்பா உன்ன வண்டில விடலையே …”
“ஆமா … எனக்கு கால் வலிக்காது. நெறைய நடப்பேன் நான் சின்னவசுலையே … அதான் திடமா இருக்கேன்”
“அப்படியா .. ?”
“ஆமா … நீயும் நெறய நட… நெறைய வளைஞ்சு நிமிந்து வேல செய்”
“சரி” – சொல்லி விட்டு ரூபன் வீட்டுக்கு ஓடினான்.

இப்போது அவன் அம்மா அப்பாவையும் நிறைய நடக்க விடுகிறான். அவனும் நடக்கிறான்.

“பேசாம இதுக்கு அன்னைக்கு அவர வண்டில கொண்டு போய் விட்டிருக்கலாம்” – அம்மா சலித்துகொண்டால் அப்பா சொல்கிறார் “எல்லாம் நல்லதுக்குதான்”

அம்மா நடப்பதில் அவருக்கு சந்தோசமோ ?

Advertisements

4 comments on “சிறுகதை: தாத்தாவும் மோட்டார் வண்டியும்

 1. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 18th, 2010 at 10:26 am under  Blog திரட்டி […]

 2. Thevagi Letchumana Dass சொல்கிறார்:

  kadipa appaku santhosama irrukathu anal ruban santhosam paduvar.

 3. Thevagi Letchumana Dass சொல்கிறார்:

  nice story

  • biopen சொல்கிறார்:

   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி – ரூபன் மகிழ்ச்சி அடையும் போதுதான் இந்த சிறுகதைகள் முடியும். அப்பாவின் மகிழ்ச்சி கொசுருதான் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s