அமெரிக்காவில் பிச்சைகாரர்கள்

பணம் கொழிக்கும் சொர்க்கம் – வாய்ப்புகளின் சுரங்கம் – உலகின் பணக்கார வல்லரசு – இப்படி நிறையவே பெருமை படுத்தும் அமெரிக்காவின் வேறு முகம் இன்று என் கன்னத்தில் அரைக்கிற மாதிரி சில உண்மைகளை என் முன்னாள் வைத்தது.

நான் இன்று இரண்டு பிச்சை காரர்களை மிக அருகில் பார்த்தேன் – கோட் அணிதிருந்தாலும் அவர்கள் மிக வெளிப்படையாகவே பிச்சை கேட்டனர்.

அவர்கள் பேசிய வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழ் நாட்டின் பிச்சை காரர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. வார்த்தைகள் கூட ஏதோ மொழி பெயர்ப்பு மாதிரித்தான் இருந்தது. யார் அடிச்ச காபி (நாம் இதில் முந்தியா அவர்கள் முந்தியா ?)

முதல் பிச்சை காரர் – ஒரு பெண்மணி நான் அமர்ந்திருந்த வணிக வளாக மேஜை மீது ஒரு காகிதமும் சில ஸ்டிக்கர்கள் ( மிக்கி மௌஸ் போன்றவை ) அடங்கிய ஒரு பிளாஸ்டிக் பையையும் வைத்து விட்டுபோய் இருந்தார்.

அந்த காகிதத்தில் இருந்த வரிகளை பார்த்தவுடன் நான் மதுரை பேருந்து நிலையத்தில் இருக்கிறேனா இல்லை அமெரிக்காவில் இருக்கிறேனா என்று குழம்பிவிட்டேன்.

“நண்பரே – இதை உங்களிடம் சேர்பித்துள்ள பெண்ணுக்கு வாய் பேச இயலாது! காதும் கேட்காது! அவுருக்கு உதவுங்கள் அவர் தந்துள்ள இந்த ஸ்டிக்கர் அடங்கியபையின் விலை 2 டொலர்கள். இதை நீங்கள் வாங்குவதன் மூலம் வீடு அற்ற அந்த பெண்ணிற்கு நீங்கள் உதுவுகிறீர்கள். உங்கள் உதவி அவளுக்கு தேவை. நன்றி”

அந்த பெண்ணுக்கு பிச்சை போடுவதா வேண்டாமா என்று முடிவு செய்வதற்குள் மீண்டும் அவள் வந்தாள். நடுத்தர வயது பெண்மணி – கோட் அணிந்திருந்தாள். எதுவும் பேசவில்லை. என்னை ஒரு முறை உற்று பார்த்து விட்டு என் மேஜையில் அவள் வைத்து விட்டு சென்ற காகிதத்தையும் பையையும் எடுத்து சென்றாள்.

அடுத்ததாய் நான் பார்த்த மனிதர் – அவர் கார்விடும் இடத்தில் நின்றார்.

“ஹலோ ! உங்களிடம் ஒரு டாலர் இல்லை ஐம்பது சென்ஸ் இருக்குமா. நான் சாப்பிட முயற்ச்சிக்கிறேன் பசிக்கிறது. உங்கள் உதவி போற்றப்படும்”

நான் என் புர்சை எடுத்து பார்த்த போது அதில் எதுவும் இல்லை.

“ஐம்பது சென்ஸ் கூட உங்களிடம் இல்லையா ?” – என்றார். நான் வருத்தத்துடன் ஆம் என்று தலை அசைத்துவிட்டு கிளம்பி வந்தேன்.

என்னிடம் எல்லாம் கார்டுகலாய்தான் இருந்தது – அந்த பெண்ணுக்கும் என்னால் உதவி இருக்க முடியாது. இங்கே இப்படி ஒரு பிரச்சனை உள்ளது. உதவ நினைத்தாலும் சில தருணங்களில் வழி இல்லை.

இந்த இரண்டும் ஒரு பதினைந்து மணி துளிகளுக்குள் நடந்தவைகள்.

அமெரிக்கர்கள் மிக நல்லவர்கள் – நான் பார்த்த அளவில் மிக நேர்மையான சமூகம் அமெரிக்க சமூகம். நான் முதன் முதலில் வந்து இறங்கிய தருணத்தில் நான் யார் என்றே தெரியாத போது ஒரு அமெரிக்க இந்தியர் எனக்கு டாக்ஸி பிடித்து கொடத்தவுடன் தங்களிடம் பணம் உள்ளதா என்று கேட்க ஐம்பது டொலர்கள் பணமாகவும் மீதி travellers cheque வடிவத்தில் உள்ளது என்றேன். உங்களுக்கு இன்னும் ஒரு பத்து டாலர் தேவை படும் என்று சொல்லி அவர் அதை தந்தார். இவர்கள் ( டாக்ஸி ஓட்டுனர்கள் – இங்கே கேப் ஓட்டுனர்கள் என்று அழைக்கிறார்கள் ) பணமாக மட்டுமேபெறுவர் என்றார்.

சரி அவர் இந்தியர் எனவே உதவினார் என்றால் – நியூ யார்க் மாகணத்தில் எனக்கு கிடைத்த இன்னொரு நிகழ்வு நினைவில் உள்ளது. நான் ஒரு பொம்மையை குறைந்த விலை என்று நினைத்து எடுத்து வந்துவிட்டேன் – பணம் செலுத்தும் இடத்தில் அதன் உண்மை விலை தெரிந்த பின் வேண்டாம் என்றேன்.

“நீங்கள் யாருக்கோ இதை பரிசளிக்க வாங்குவதாக நினைக்கிறேன் – நீங்கள் நினைத்த விலைக்கே தருகிறேன். இதன் விலை தவறுதலாக இது இருந்த இடத்தில் இருந்ததிற்கு வருந்துகிறேன். ” – என்று சொன்ன அந்த ஆப்பரிக்க அமெரிக்க பெண்மணி அதை விலைக்கு தந்தார்.

நான் வந்த நாள் முதல் பார்க்கிறேன் – இங்கே உள்ளவர்கள் உதவும் குணம் கொண்டவர்களாவும் மிக நல்ல மனிதர்களாகுவுமே உள்ளனர்.

இவர்கள் பிச்சை எடுப்பது வருத்தம் தருகிறது. அவர்கள் சொல்ல்வதையே சொல்கிறேன் – God bless அமெரிக்க!

Advertisements

6 comments on “அமெரிக்காவில் பிச்சைகாரர்கள்

 1. […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 22nd, 2010 at 11:58 pm under  Blog திரட்டி […]

 2. குலவுசனப்பிரியன் சொல்கிறார்:

  வேலை நிமித்தமாக டெட்ராய்ட் (Detroit, MI) நகருக்கு வாராந்திரம் போய் வந்தபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. அங்கே ஒருநாள் மாலை கிரேக்கத் தெருவில் ஒருகடையில் ஈரோ (Gyro – ஆட்டுக்கறி உணவு) சாப்பிட்டு மீதியை பொட்டலம் கட்டி அறைக்கு எடுத்துப் போய்க் கொண்டிருந்தேன். அதுபோல் சுவையான கறி இதுவரை வேறெங்கும் சாப்பிட்டதில்லை. தெருவில் எதிர்பட்ட ஒருவர், ”அது என்ன மீந்துபோனதா?” என்று கேட்டு வாங்கிக்கொண்டார். ஒரு கணம் என் சாப்பாடு கொள்ளை போனது போல உணர்ந்தாலும், அந்த நகரத்தில் ஒருகாலத்தில் எல்லோருக்கும் படி அளந்த உந்துவாகனத் தொழிற்சாலைகள் பலவும் இப்போது சென்னைக்குப் போய்விட்டதை நினைத்து அவர்களின் நிலையை எண்ணி வருந்தினேன். இன்று டெட்ராய்ட் வெரிச்சோடிய நகரம் (ghost town) என்றே சொல்லப்படுகிறது.

  என்றுதான் அவர்கள் நிதி நிலைமை சரியாகுமோ தெரியவில்லை. வருத்தமாய் உள்ளது.

 3. LVISS சொல்கிறார்:

  YOU DID NOT MENTION THE PLACE. HAVE YOU BEEN TO NEW YORK.? .

 4. Allian சொல்கிறார்:

  I hope you have been living in US for shorter period. You will see their real face in coming days especially in this bad economy. Since I have been here 6+ years I give one advice ‘always have some money with you’ it may (will) save your life.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s