பகுதி 12 : குங் ப்ஹு தமிழன்

படை வீரர்கள் குவிந்தனர் பல்லவனின் புதல்வனை சுற்றி. சிலர் இந்த காரியத்துக்கு காரணமானவனை கையும் களவுமாய் பிடித்தனர்.
மொட்டை தலை. மௌன மொழி பேசும் இதழ்கள். சுற்றி கட்டிய காவி உடை. மண்டையில் முடிதான் இல்லையே ஒழிய – கையில் ஆயிரம் யானை பலம்.

பல்லவன் தன் பிடரியில் கையை வைத்து நாடி நிரம்பெல்லாம் அடங்கி கிடந்தான். சிம்ம வர்மனின் பேரனுக்கே எவனோ வர்மா வித்தை காட்டுகிறான். நேரம் – எல்லாம் நேரம்.

கொஞ்சம் கடினப்பட்டு எழுந்தான் பல்லவ இளவரசன். ஒரு புறம் காலும் ஒரு புறம் கையும் சொல்வது கேட்கவில்லை.

“நீ யார் ?” – பல்லவ இளவரசன் கேட்டான்.

இளம் துறவி எதுவும் சொல்லவில்லை.

“சொல்” – பல்லவ இளவரசன் கர்ஜித்தான்.
இளம் துறவி எதுவும் சொல்லவில்லை.

“இளவரசே! அனுமதித்தால் உங்கள் வலி தீர்க்கிறேன்” – இப்பொது இளம் துறவி வாய் திறந்தான்.

சொன்னபடி வந்தவன் – வலி தீர்த்தான். கழுத்தில் உள்ள வர்ம புள்ளிகளை நீவி விட்டான். அவனுக்கு நித்தி சொச்ச வர்ம புள்ளிகளும் அத்துபடி போல இருந்தது. ஒரு தாய் தன் மகவுக்கு செலுத்தும் கருணை அவன் கண்களில் இருந்தது.

“சொல்! எங்கே அவர் ?” – பல்லவ இளவரசன் கேட்டான்
“அவர் என்றால் ?” – இளம் துறவி பதில் கேள்வி கேட்டான்
“என் சிறிய தந்தை. பல்லவத்தின் அரச குடும்பத்தவர்”
“யாரை கேட்கிறீர்கள்? நீங்கள் ஓய்வெடுங்கள்”
“உன் ஆசிரியரைத்தான் கேட்கிறேன்””
“என் ஆசிரியரா ?” – இளம் துறவி கேட்டான்
“ஆம்! புத்தி தார பல்லவர் எங்கே ?”
“புத்தி தாரர் இல்லை”
“பொய்”
“பிரசன்னா தாராரும் இல்லை. புத்தி தாராரும் இல்லை”
“பொய்”
“எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்கிறீர்கள் ?” – சிகிச்சை அளித்தவாறே கேட்டான் அந்த இளம் துறவி.
“உள் மனம் சொல்கிறது”
“என்ன புத்தி தாரரை கொல் என்றா ?”
“புத்த துறவியே! உங்களின் கால்களில் விழுகிறேன். பல்லவரை காண்பியுங்கள்”
“ஒரு சத்தியம் வேண்டும்”

தன் வலது கையை நீட்டினான் இளம் துறவி. இளம் துறவியின் மடியில்தான் பல்லவ இளவரசன் கிடந்தான். படை வீரர்கள், புத்த துறவிகள் எல்லோரும் பார்த்தனர்.

அந்த இளம் துறவியின் கைகள் பஞ்சு மாதிரி இருந்தன.

“என்ன சத்தியம் ?” -இளவரசன் கேட்டான்.

எங்கேயோ இருந்து ஒரு போதி மர இல்லை பறந்து வந்தது. புத்த முனியின் கையில் அமர்ந்தது.

“நான் இந்த புத்த முனிவர்களை காக்க சத்தியம் கேட்க மாட்டேன் ”
“பின்”
“அவர்களுக்கு என் ஆசிரியர் தற்காப்பு கலை கற்று தந்து உள்ளார்”
“என்ன சத்தியம் வேண்டும் ?”
“தர்மர் கிளம்ப உள்ளார். அதற்கு முன் அவரை வந்து பாருங்கள்”
“தர்மரா ? அவர் யார்?”

கைகளில் சத்தியம் விழுவதாய் இல்லை. அரசியலில் வாக்கு தந்து வாழ்க்கை அறுக்க பல்லவனுக்கு தெரியாது.போதி இலை எழுந்து நின்றது. மீண்டும் பறக்க எத்தநிதது.

பல்லவன் இளம் முனியின் கையில் சத்தியம் வைத்தான். தூறியது.மின்னல் வெட்டியது. வீரர்கள் அமைதியாய் எல்லாம் பார்த்த்தனர்.

பல்லவ இளவரசன் எழுந்து நின்றான் -இளம் துறவியின் துணையோடு.

“தர்மர் யார் ? அவரை நான் ஏன் பார்க்க வேண்டும் ?” – பல்லவ இளவரசன் கேட்டான்.

விழியோடு விழி நோக்கினான் இளம் துறவி.

புத்தம் சரணம்.

தொடரும்

Advertisements

பகுதி 11 குங் ப்ஹு தமிழன்

பல்லவ மண் எங்கெல்லாம் ஆண்டதோ அங்கெல்லாம் போதி தர்மமும் இருந்தது.
சிம்ஹவர்ம பல்லவன் கடைசி காலத்தில் போதி தர்மம் தழுவினான். சிம்ஹவர்ம பல்லவனின் மகன் தன் தற்போதைய பல்லவன்.

காலை கருக்கலில் காஞ்சி மாநகரம் சோம்பல் முறித்து கொண்டிருந்தது. பல்லவனின் ஆணை தளபதிக்கு வந்திருந்தது. பல்லவ மன்னனின் மகன் இளவரசன் ஒரு படை அணியை வழி நடத்திவந்தான். அந்த படயநிக்குதான் அந்த கட்டளை போனது.

குதிரைகளுக்கு காலை ஆகாரம் போடப்பட்டது. நல்லசிவனும் தன் குதிரைக்கு புல்லும் கொள்ளும் வைத்தான். குதிரை கனைத்தது. ‘பிரசன்ன தாரர் எங்கே ?’ என்று கேட்பது போல் இருந்தது.

“பிரசன்னா தாரர் கடவுளிடம் ஐக்கியம் ஆகிவிட்டாராம்” – நல்ல சிவன் சொல்லிக்கொண்டே கொள்ளை வைத்தான்.

காலை கருக்கலில் காஞ்சியின் படை வீரர்கள் கூடினர். அவர்கள் உள்ள நாட்டு பாதுகாவலர்கள்.
குதிரைகளின் கால் நடை சத்தம் காஞ்சி முழுதும் கேட்டது. வீரர்கள் யாருக்கும் அவசர அழைப்பின் காரணம் தெரியாது.

“அடே! குப்பா என்ன வேலையாம் ? நம்மை எல்லாம் இங்கே கூட சொல்லி உள்ளார்கள்” – குதிரையில் இருந்த ஒருவன் மற்று ஒருவனிடம் கேட்க.
“யாருக்கு தெரியும்! அவசர அழைப்பு! அரச கட்டளை! என்று திருக்குறள் மாதிரிதானே செய்தி வந்தது”
“உனக்கும் அப்படிதான் வந்ததா ?”
“அட! அமமாங்குறேன்”
“என்னவாக இருக்கும்? -சோழ தூதன் ஒருவன் வந்துவிட்டு போனதாக செய்தி” –

ஒரு அரச குதிரை உள்ளே தன் கால்களை மெதுவாக வைத்து நடை பயின்று வந்தது.கூட்டம் அமைதியானது. அதில் இருந்த வீரன் கையில் வேலும், இடையில் வாழும் கொண்டிருந்தான். தன் வலதுகையில் சிங்கம் பொறித்த முத்திரை மோதிரம். முறிக்கிய மீசை. கூறிய விழிகள். சிம்ஹா வர்ம பல்லவன் பேரன் வீர மல்ல பல்லவன் மகன் என்பது சொள்ளவேண்டியதாய் இல்லை.

பல்லவ இளவரசன் – படை அணியின் தலைவன் பேச ஆரம்பித்தான்.
“வீரர்களே! நம்மை கடமை அழைக்கிறது. காஞ்சியின் அரசர் சோழருக்கு வாக்கு அளித்து உள்ளார். போதி தர்மத்தை சார்ந்த்தவர்களை தற்போதைக்கு காஞ்சியை விட்டு மட்டும் அல்ல பல்லவ நிலத்தை விட்டே வெளி ஏற்ற”
வீரர்கள் பேச ஆரம்பித்தனர் தங்களுக்குள்.
“இது என்ன கதைய இருக்கு. சிம்ஹவர்மரே போதி தரமத்தை சேர்ந்தார். அவர் கடைசி மகன் புத்தி தார பல்லவனும் சேர்ந்துவிட்டார்.இந்த தருணத்தில் ….”
கூட்டம் சலசலத்தது.

“வீரர்களே! அமைதி! இது காலத்தின் கட்டளை! புறப்படுங்கள்! ” – பல்லவ இளவரசன் ஆணை இட்டான்.

குதிரைகள் வீறு கொண்டு கிளம்பின. புத்த குடில்கள் உள்ள பகுத்திக்குள் நுழைந்தன. புத்த குடில்கள் காஞ்சியின் கடைசி வீதியும் தாண்டி எல்லையில் இருந்தன.

வீரர்கள் குடிலுக்குள் சென்று செய்தி சொல்லினர். துறவிகள் கண்ணில் நீர் வார்த்தனர். வருத்தம் கொண்டனர். துறவிகள் மறுத்தனர்.

ஒரு குடிலுக்குள் –
“வீரனே! என்ன செய்தி இது? சிம்ஹவர்ம பல்லவர் எங்களை சேவை செய்ய அனுமதி வழங்கிய பத்திரம் எம்மிடம் உள்ளது” – துறவி ஒருவர் சொன்னார்.
“துறவி அவர்களே வெளியில் வாருங்கள். இளவரசர் நிலவரம் சொல்லவார்” – வீரன் சொன்னான்.
“சரி வருகிறேன்”
வெளியில் வந்து பார்த்தால், இளவரசனை சுற்றிலும் துறவிகள்.
“புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் சோழ படையுடன் மோத தற்போது ஆயத்தமாய் இல்லை” – இளவரசன் கத்தினான்.
“நாங்கள் வெளியேறமுடியாது” – துறவிகள் சொல்லினர்.
“என்ன வெளிஎரமுடியாதா ?” – இளவரசன் கேட்டான்.
“ஆமாம்” – துறவிகள் தீர்மானமாய் சொல்லினர்.
“எங்கள் பலத்தை பயன் படுத்த வைக்காதீர்கள்”
“நாங்கள் செல்ல முடியாது இளவரசரே. முடிந்ததை செய்யுங்கள்” – மீண்டும் துறவிகள் தீர்மானமாய் சொல்லினர்.
“வீரர்களே! கடவுளிடம் மன்னிப்பை கூறிவிட்டு இந்த துறவிமார்களை அப்புற படுத்துங்கள். இறைவா எனையும் மன்னியும் ” -இளவரசன் வானம் நோக்கி இறைஞ்சினான்.

வீரர்கள் தங்கள் பலம் கொண்டு அப்புரபடுத்தினர். அப்போத்துதான் அந்த ஆச்சரியம் நடந்தது. இளவரசன் குதிரையில் இருந்து சரிந்தான். குதிரை திமிறியது. வீரர்கள் இளவரசரை நோக்கி ஓடினர்.

“இளவரசே ….” – வீரர்கள் கத்தினர்.

பல்லவர் புதல்வன் சரிந்தான்!

தொடரும்

பகுதி 10 : குங் ப்ஹு தமிழன்


பல்லவ நாட்டின் தலைமகன் தூது வந்த வீரனை அழைத்தான். கடுவுளின் நகரம் காஞ்சி. புத்தம் மட்டும் அல்ல – புனிதம் எல்லாம் ஆளும் நிலம் காஞ்சி.

தமிழ் நாடு தன்னை புனித்ததிர்க்கு அர்பணித்த அந்த மண்ணில்தான் அந்த முடிவை காஞ்சித்தலைவன் – பல்லவ மன்னன் எடுக்க வேண்டி இருந்தது.

சந்தனம் பூண்ட மார்பு. வீரம் செறிந்த மீசை. கைகளில் காப்பு. கால் மேல் கால் போட்டு பாலவன் மீசையை தடவிய படி அரச மாளிகையின் தோட்டத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான். நெற்றியில் திருநீறு இல்லை. பக்கத்தில் அழகான ஒரு மேசை. வானம் பார்த்தான். இன்றைக்கு மழை வரலாம். மேகத்தின் கருமை இருளாக வந்தது வந்து போய் கொண்டு உள்ளது.

நல்லசிவன் – தூது வந்த சோழ வீரன் வந்திருந்தான்.
“கதிரும் நிலமும் உள்ளவரை பல்லவர் சோழர் நட்பு வாழ்க” – சோழ வீரன் சொன்னான்
“வாழட்டும்”
“செய்தி ?”
“புத்த மாந்த்தர்கள் இந்த மண்ணை விட்டு செல்ல நாங்கள் ஆயத்தம் செய்வோம்”
“புத்தி தார பல்லவர் ?” – தலையை சொரிந்தான் சோழ வீரன் நல்ல சிவன்
“அவரும் இந்த மண்ணை விட்டு கிளம்புவார் – உயிருடன் இருந்தால். நான் அவரை பார்த்து பல வருடங்கள் உருண்டு விட்டன” – பல்லவன் தீர்மானமாய் சொன்னான்.
“இதை ஓலையாய்”
“இந்த அரச முத்திரை இட்ட ஓலை” – பல்லவன் தந்தான்.

குதிரையில் ஏறினான் வீரன். குதிரை தன் கால்களை தூக்கி பல்லவ மண்ணின் அரண் மனை நோக்கி கனைத்தது. அது ஏதோ நரி ஊளை இடுவது மாதிரி இருந்தது, தூரத்தில் பொத்த கொடி பறப்பது தெரித்தது.

குதிரை தன் பயணத்தை ஆரம்பித்தது. அதன் கால்கள் பிரசன்ன தாரரின் குடில் நோக்கி நகர்ந்தது. பிரசன்ன தரரின் குடில் முன் நின்றது.

“புத்தம் சரணம்” – உள்ளே ஏதோ பேராதனை.

அருகனின் இசை ரசிக்கும் வகையில் இருந்தது. அதே புல்லாங்குழல் இசை.

குதிரையை விட்டு இறங்கினான் நல்ல சிவன். அருகன் ஓடி வந்தான்.
“உள்ளே என்ன வழிபாடா ?” – வீரன் கேட்கவும், அவன் புள்ளங்குளில் இசைத்து ஆம் என்றான்.
“பிரசன்ன தாரர் உள்ளாரா ?” – வீரன் கேட்டான்.
“பிரசன்ன தாரர் ?” -அருகன் தன் புல்லாங்குழலை வாயில் இருந்து எடுத்து விட்டு கேட்டான்.
“ஆம்! அவர் இல்லையா ?”- வீரன் கேட்டான்.
“அவர் இங்கு சில காலமாகவே இல்லை”
“என்ன சொல்கிறாய் ?”
“ஆம்! அவர் மஹா பரி நிர்வாணம் அடைந்து விட்டார்?”
“என்னது காலம் எய்தி விட்டாரா ?”
“சில காலம் முன்பு ”
“அட! நான் போகிற போது பார்த்தேனே?”
“அது எப்படி சாத்தியம்?”
“அருக! நீ கூட இருந்தாயே ?”
“நான் உங்களை இப்போத்துதான் பார்க்கிறேன்”
“என்ன சொல்கிறாய்?”
“உண்மை”
நல்ல சிவன் குழம்பிப்போனான். என்னதான் பல்லவ மண்ணில் நடக்கிறது ?. நம்மக்குதான் மூளை பிசகி விட்டதா ?

வானத்தை பார்த்தான்.
“முருகா” – என்றான் நல்ல சிவன்

குதிரை தலை கவிழ்ந்தது. நல்லசிவன் ஏறி அமர அது கிளம்பியது. சோழ நாடு நோக்கி நடை போட்டது. காஞ்சி மன்னே வருகிறேன்.
என்னதான் பல்லவ மண்ணில் நடக்கிறது ?

தொடரும்

பகுதி 9 குங் ப்ஹு தமிழன்

குதிரை நதி கரையில் நின்றது. வீரன் மன்னன் பல்லவன் முன் நின்றான்.
இப்போது மன்னனின் அவையில் அரச குரு.

பல்லவன் யோசனையில் மூழ்கினான்.
“தந்தை போதி தர்மத்தில் இணைந்தார். நாங்கள் சைவம் தவிர்கவில்லை. என் தம்பியும் இணைந்தான். நாங்கள் சைவம் அறுக்கவில்லை. மன்னருக்கு தெரியாது. சோழர் எம் தோழர் இல்லையா ?” -பல்லவன்கேட்டான்
“செய்தி கொண்டு வருதலே எம் பனி” – வீரன் சொன்னான்
“அறிவோம்” – பல்லவன் ஒத்துகொண்டான்

வானம் இருண்டது. பகல் என்ற போதும் இரவின் நிழல் வீழ்ந்தது.

அரச குரு பல்லவனின் முகம் பார்த்தார். அரசர் இப்போது எதிர் கொள்ளபோவது தோழனைய இல்லை உடனபிரப்பயா ?

“வீரன் உணவருந்தி விட்டு ஓய்வெடு. நாங்கள் எங்கள் தரப்பு செய்தியை தருகிறோம்”
சிங்க இலச்சினை கொடி அவனது சிம்மாசனத்தில் யோசனையுடன் பறந்தது. பல்லவ நாடே உனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை.

ஒற்றன் மூலமாக பல்லவ அரச குருவின் பயணம் பற்றி பல்லவன் அறிந்தே இருந்தான். இறந்த போன பல்லவ மன்னன். தற்போதைய பல்லவ மன்னனின் தந்தை அமிதாப புத்த என்று பலர் அழைக்க ஆரம்பித்து உள்ளனர்.

பிரசன்ன தாரர் அல்லது பிரயாகை நாட்டார் வந்ததுதான் புத்த மத்ததை கொண்டு வந்த நிகழ்வு. பிரசன்ன thaararin வருகை பல்லவ மண்ணில் புத்த மதத்தின் வருகை ஆனது.

அவை கலைந்தது. அந்த நாள் மன்னனுக்கு நினைவில் வந்தது.

பல்லவன் வாலிபனாய் இருந்த தருணம். அவன் பெயர் வீரனல்லான். அப்போது அவர்கள் மூவர். புத்தி தாரன் அவனது கடைசி தம்பி. மூன்றாமவன். புத்தி தாரன் – அழகுநிறைந்தவன். அகண்ட மார்பினன். விரிந்த தோள்கள் கொண்டவன். இளமை அவனை வனப்புடன் வைத்திருந்தது.

பிரசன்னா தாராரும் புத்தி தார பல்லவனும் ஒன்றாய் இரவு உணவு எடுத்துக்கொண்டனர்.

“அசைவம்தான் இளவரசரின் ஆசையோ ?” – பிரயாகை நாட்டார் கேட்டார்.
“ஆமாம்” -புத்தி தார பல்லவன் சொன்னான்
“ஏன்?”
“நான் வீரம் மிகுந்தவனாய் இருக்க விரும்புகிறேன். அரசரின் எதிரிகளை பற்றி அறிவேன்”
“உன் தந்தை இவை எல்லாம் விட்டு புத்தம் தழுவி அமித்தப்ப புத்தர் ஆகி விட்டார்”
“ஆனால் – நாங்கள் அவர் மரணம் அடைந்ததாகவே உணர்கிறோம். நாங்கள் அவர் சிதை எரிவதை பார்த்தோம்”
“சரி. அசைவம் தான் தேவை”
“அசைவமும். இன்று நீங்கள் விரும்பாவிட்டால் சைவம் ஆதரிப்போம்”
“சரி அந்த பாக்கை எடுங்கள்”
புத்திதார பல்லவன் எடுத்தான் பாக்கை.
“இந்தாருங்கள். பாகு வெட்டி தருகிறேன். வீரனே …. ” – புத்திதார பல்லவன் கட்டளை இட ஆரம்பித்தான்.
கடக்முடக்க. முனிவர் தன் உள்ளங்கையிலே பாக்கை ஒடைத்து இருந்தார்.

காயும் கனியும் உண்டு வாழ்ந்த மனிதரா இவர்? புத்த முனிவர்கள் பலசாலிகள்! புத்திதார பல்லவன் வியந்தான்.
வீரனல்லான் என்கிற வீரமல்ல பல்லவன் மீண்டும் நிகழ் காலத்துக்கு வந்தான்.

தூது வந்த வீரன் உணவருந்தி முடித்திருந்தான். பல்லவன் என்ன முடிவேடுதானோ.அதை வாங்கி செல்ல அவன் ஆயதம் ஆனான். அழைப்புக்கு காத்திருந்தான்.

பல்லவ மண்ணே உனக்கு ஏன் இந்த சோதனை ?

தொடரும்

பகுதி 8 : குங் ப்ஹு தமிழன்

பல்லவர்களின் எதிரிகள் யார் ? மீசையை தடவியபடி சோழன் யோசித்தார். தமிழ் கூறும் நல்லுலகம் மண் பிடிக்கும் வெறிக்குள் சிக்கி தவிக்கும் காலம் அது.

பதவி வெறி – மண் வெறி எல்லாம் கடந்தும் அரச நெறி வாழ்வது தமிழர் செய்த பேரு.

பல்லவ அரச குருவின் கருப்பு விழிகளை பொறுப்புடன் நோக்கினார் சோழ மன்னன். இதழ்களை திறந்த பல்லவ அரச குரு பேச தயார் ஆனார்.

“அவர்கள் போதி தர்மத்தவர்கள்” – அரச குரு சொன்னார்.
“என்ன சொல்ல்கிறீர்கள் ?” – அரசர் கேட்டார்.
“அம்பையில் அவோலோகதீச்வரன் – அமிதாப புத்தர் – இப்படி நிறையவே தமிழ் கூறும் சைவ உலகத்துக்குள் நுழைகிறது”
“அதற்கும் பல்லவ மண்ணுக்கும் ?” – அரசர் கேட்டார்.
“என்ன தொடர்பு என்றுதானே கேட்கிறீர்கள் ?”
“ஆம்”
“பல்லவனின் கடைசி மகன் போதி தர்மத்தில் இணைந்து விட்டான்”
“அறிந்தோம்”
“ஒரு நாள் இல்லையேல் ஒரு நாள் பல்லவ அரச மதம் – போதி மதம் ஆக போகிறது” –
அரச குரு சொல்லி முடித்தார்.

“ஓ – இது மாத சம்பள பிரச்சனையோ” – வீரன் உள்ளுக்குள் சொன்னான்.

அரசர் தன உள்ளங்கையை மூடினார். தன முகத்தை அதில் தாங்கினார். யோசனை அவரின் முலைக்குள் சம்மனமிட்டது.பல்லவர்கள் பிரச்னைக்கு வரவில்லை. நாமும் செல்லவில்லை. வந்திருப்பது வேண்டுகோளோ – செய்தியோ. என்ன செய்வது ?

கண்களை மூடி யோசித்தார்.
“சொல்லுங்கள் குருவே என்ன செய்யலாம் ?” – அரசர் குருவை பார்த்து கேட்டார்.
“நீங்கள் கொஞ்சம் உத்தியோக பூர்வமாய் சொல்லுங்கள்” – அரச குரு சொன்னார்.

மீண்டும் யோசித்தார் சோழர். சோழரே என்று அழைபதைவிட தோழரே என்று அழையுங்கள் என்று ஒரு முறை யாருக்கோ சொன்ன ஞாபகம். ஆனால் அரசிலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிர்யும் இல்லை.

“குருவே … கொஞ்சம் சிந்திக்க தருணம் தாருங்கள்” – அரசர் கேட்டார்.
“கொஞ்சம் என்றால் ?” – அரச குரு கேட்டார்.
“நாளை விடியல் வரை”
“சரி”
“வீரனே! இவரை அரச விருந்தினர் மாளிகையில் தங்க வை. நம் விருந்தினர்.” – அரசர் உத்தரவு இட்டார்.
நல்லசிவன் தலை ஆட்டினான்.
***
மாலை மயங்கியது. அல்லி மலரந்தது. வானம் கருப்பு திரை போட்டது. இன்றைய நாளின் ஆட்டம் முடிந்துவிட்டது என்றது.

அரச விருந்தினர் மாளிகையில் அரச குரு மெத்தையில் படுத்தார். புலி சின்னமிட்ட மெத்தை – சிங்க இலச்சினை கொண்ட மெத்தை அல்ல.அவருக்கு நெஞ்சம் உறுத்தியது.

“எல்லாம் ஈசன் செயல்” விண்ணை பார்த்து சொன்னார்.

இரவு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்ச்சிக்கு வந்தது. எல்லாம் ஈசன் செயல்.

*****
அடுத்த நாள் காலை. அரசனே குருவின் மாளிகைக்கு வந்தான்.
“வண்ணகம் குருவே” – சோழர் சொன்னார்.
“வணக்கம்”
“நல்ல உறக்கமோ ?”
“பெரிதாக இல்லை”
“நீங்கள் சொன்னதை யோசித்தேன்”
“நன்று”
“தோடுடைய செவியன் ஈசன். அவன் நம் தெய்வம். பல்லவர்கள் முழு தமிழர்கள் இல்லையே”
“அட! அவர்கள் முழு தமிழர்கள்”
“சரி … நான் ஒன்று செய்கிறேன்”
“சொல்லுங்கள்”

தன திரண்ட மார்பின் நடுவே கை வைத்து, கண்களை மூடி வானம் நோக்கி தலையை வைத்து – “தென்னாடுடைய சிவனே போற்றி” – என்று முழங்கினான் அரசன்.

அரச குரு அரசனின் முகத்தை பார்த்தார்.

எல்லாம் ஈசன் செயல்.

-தொடரும்

பகுதி 7 : குங் ப்ஹு தமிழன்


இரவு நிமிடங்களில் கரைந்தாலும் – அரச குருவின் இதயம் விடியல் தூரத்தில் இருப்பதுவாகவே நினைத்தது.

நிலவின் மடியில் உறங்கும் உறக்கம் இல்லை. அதுவும் ஒரு தூதனின் வீட்டில் சாதாரண சாணி மெழுகிய தரையில் அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அது தரையின் குற்றம் இல்லை. அவர் முள் படுக்கையில் கூட படுப்பார் – ஆனால் நிமிடத்தில் அவர் நினைப்பது நடந்தால்.

சேவல் கூவியது. முதலில் கண் விழித்தார் அரசகுரு என்று சொல்ல முடியாது. காரணம் அவர் தூங்கவே இல்லை. காஞ்சியில் இருந்து பயணித்தும் அவர் களைப்பில் கூட கண் அயரவில்லை.

பாட்டி எழுந்தாள். முனிவர் தூங்குவது போல் படுத்து இருந்தார்.
“சாமி … விடிஞ்சிருச்சு” – பாட்டி சொன்னாள்

அரச குரு எழுந்து அமர்ந்தார்.
“நல்ல உறக்கமோ ?” – பாட்டி கேட்டாள்
“தூக்கமாவது ஆக்கமாவது ?” – குரு கேட்டார்
“பெரிய கேள்வி எல்லாம் கிழவிகிட்ட கேட்க கூடாது” – பாட்டி சொன்னாள்
“ம்”
“உங்களுக்கு இந்த சாணி மெழுகின தரையில் -இந்த பட்டு விரிப்புதான் கொடுக்க முடிந்தது”
“சைவர்களுக்கு சுடுகாடே கோயில். அதனால் இதில் ஒரு பிரச்சனயும் இல்லை”
“நல்லது”
“உங்கள் பேரன் எப்போது ….?”
“அவன் உச்சி பொழுதுக்குள் …. எழுந்துருவான்” – பாட்டி சொன்னாள்
“உச்சி ?” – ஆவேன வாய் திறந்தார் பல்லவ அரச குரு.

பாட்டி வாசலுக்கு போனாள். அவள் சாணி தெளித்தாள். பசு மாடு ஒன்று வாசல் முன் வந்தது. கூடவே கறவை காரர்.
“நல்லா நிறைய பால் கரப்பா … வீட்டுக்கு விருந்து வந்திருக்கு” – கறவை காரரிடம் சொன்னாள்.
“யாரு பாட்டி ?”
“நம்ம ஆளுங்கதான். தூரத்து உறவு. புனித பயணம் போயிட்டு வந்திருக்காங்க. வழில நம்ம வீட்ல ஒரு கை நினைக்க வந்திருக்காங்க ”
“எங்க போயிட்டு வந்திருக்காங்க”
“ஏதோ சொன்னங்க மருந்துருச்சு. வயசு ஆயடுச்சுல ? முதல நீ கறந்து முடி”

சாணி இட்டு முடித்தவள், கோலமும் இட்டாள்.

அரச குரு காலை கடன் நீராடல் எல்லாம் முடித்து உடல் முழுதும் திருநீறு இட்டு கொண்டார்.
“எல்லாம் ஈசன் செயல்” – குடிசைக்குள் இருந்த அரச குரு வானத்தை பார்த்து சொன்னார்.

பாட்டி குடிசைக்குள் வந்தார்.
“பக்கத்தில் இருந்த நீர் நிலைக்கு போய் வந்துட்டீங்களே! பல்லவர்கள் புத்திசாலிகள்”

காது மடல்களை தன் கைகளால் மோதினான்.
“அந்த வார்த்தையை சொல்லாதீர்கள்” – அரச குரு சொன்னார்
“எது?” – பாட்டி கேட்டார்
“புத்தி”
“சரி” – பாட்டி ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றாள்.

கறந்த பாலை வாசலில் போய் ஒரு பாத்திரத்தில் வாங்கி வந்தாள்.
வீரன் சோம்பல் முறித்தான்.

“உங்களுக்கு அதிர்ஷ்ட்ம். என் பேரன் எழுந்து விட்டான்” – பாட்டி பாத்திரத்துடன் உள்ளே வரும்போதே சொன்னாள் அரச குருவிடும்.

“குருவே நாம் அரசரை சந்திக்கலாம். கவலை வேண்டாம்”
அரச குரு புன்னகைத்தார்.

***
அரச மாளிகை. சோழ அரச மாளிகை. தமிழ் நாட்டின் பேரரசுகளில் ஒன்றின் அரண்மனை. விசாலமான மாளிகை மிக நேர்த்தியான சுவர்கள் – சோழ கட்டட பெருமை சொல்லும் வனப்பு.

பரப்பு மிகுந்தத சாலைகளில் நடந்து வந்து அரண்மனை படிக்கட்டுகளில் ஏறி அவைக்குள் வந்தார்கள்.

அரசர் அவையில் இருந்தார். அரச விருந்தினர்கள் இருக்கையில் அமர்ந்தனர் குருவும் வீரனும்.
ஏற்கனவே திட்டமிட்ட அரச அழுவல்கள் நடந்தன.

அவர்களின் தருணம் வந்தது.
“பல்லவ அரச குருவை காக வைத்தமைக்கு வருந்துகிறேன்” – சோழன் சொன்னார்.
“அரசே! நாங்கள் மிக பெரிய நெருக்கடியில் உள்ளதாய் உணர்கிறேன்”
“பாண்டியர்களா ? சேரர்களா ? சொல்லுங்கள் … ஆனால் அதற்க்கு நீங்கள் வரவேண்டியதில்லையே ?”
“ஆம்! எங்கள் எதிரிகள் சேரர்களும் இல்லை சேரர்களும் இல்லை … அவர்கள் …”

அரச குருவை பார்த்தார் சோழர்.
“அவர்கள் ?”

தொடரும்

பகுதி 6 குங் ப்ஹு தமிழன்


பல்லவ அரச குருவின் முகத்தில் வியர்வை முத்துக்கள் துளிர்த்தன. வீரனின் விழிகளை பார்த்தார்.
விழியோடு விழி பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தார். மோர் குவளையை கீழே வைத்தார்.

வெயில் மிக மோசமாகவே அடித்துகொண்டிருந்தது. நிழல் கொண்ட இந்த இடத்தில் நிற்பதில் பிரச்சனையோ? பல்லவ அரச குரு குழப்பத்தில் ஆழ்ந்தார்.

கொஞ்சமாய் தலையை தூக்கி வீரனை பார்த்தார்.
“முதலில் அவர் மோர் குடிக்கட்டும் ” – பாட்டி சொன்னாள்.

வீரன் திண்ணையில் பல்லவ அரச குரு வைத்த மோரை எடுத்து கொடுத்தான்.
அரச குரு வாங்கிக்கொண்டார்.

“குடியுங்கள்” – வீரன் சொன்னான்.
அரச குரு தொண்டையை நனைத்தார். எல்லாம் ஈசன் செயல்.

வீரனை பார்த்தார்.
“வீரனே! நீ யார் ?” -அரச குரு கேட்டார்.
“அட! என் பேராண்டிதான் உங்க ஊருக்கு வந்திருக்கான் இல்லையா? இவன்தான் நல்லசிவன் – தூதுவன்” – பாட்டி சொன்னாள்.
“ஒ ….” – அரச குரு சொன்னார்.
“மோர் இன்னம் மீதி இருக்கிறது. குடியுங்கள்” – வீரன் சொன்னான்
“ம்ம்”

அரச குரு மோர் குடித்து முடித்தார். சூரியன் பளிச்சென்று அடித்து கொண்டிருந்தது. அது சோழ நாட்டில் ஒரு வெயில் காலம்.
“நான் அரசரை சந்திக்க வேண்டும்” – பல்லவ அரச குரு வீரனின் முகம் பார்த்து சொன்னார்.
“சோழ பேரரசரை ?” – வீரன் கேட்டான்
“ஆம்” – பல்லவ அரச குரு சொன்னார்.
“என்ன செய்தி ?” – வீரன் கேட்டான்

பல்லவ அரச குரு தயங்கினார்.
“பாட்டி உள்ளே போ” – வீரன் கட்டளை இட்டான்

“அட! அரசாங்க விவகாரமா ? நான் என்ன யார் கிட்டயும் சொல்லவா போறேன்?. நாளைக்கு வர்ற பொண்டாட்டிய அதடுரியானு பாக்குறேன்”
கழுத்தை வெட்டிக்கொண்டு பட்டி உள்ளே போனாள்.

வீரனும் அரச குருவும் திண்ணையில் அமர்ந்தனர். சூரியன் உச்சிக்கு வந்திருந்தான்.
“நீண்ட தூர பயணமோ ?” – வீரன் கேட்டான்
“ஆமாம்”
“நீங்கள் அமர இங்கே பட்டு பீதாம்பரங்கள் இல்லை”
“அதனால் என்ன ?”
“சரி அரசரை சந்திக்க வேண்டிய அவசியம்”
“ஈசன்”
“அட! புரிகிற மாதிரி சொல்லுங்கள். நான் சாமானியன். சமய சொற்பொழிவு கேட்க இங்கே இல்லை” – வீரன் சொன்னான்.
“பல்லவ மண்ணில் நாங்கள் ஒரு நெருக்கடியை எதிர் நோக்குகிரோமோ என்று நினைக்கிறேன்” – அரச குரு சொன்னார்.
“நாங்கள் என்றால் ?” – வீரன் கேட்டான்.
“அதாவது … அதை நான் மன்னரிடம் விளக்குகிறேன்.”
“எல்லோரையும் மன்னர் சந்திக்க மாட்டார். அவருக்கு நிறைய வேலை இருக்கு. என்னிடம் சொல்லுங்கள். நான் அலுவலர்களிடம் சொல்கிறேன். பின்னர் அமைச்சர். பின்னர் அரசர் தேவை பட்டால்”
“அவளவு நேரம் இல்லை”
“வாழ்க்கையே கொஞ்ச நேரம்தானே. அந்த நேரத்திற்குள் எல்லாம் முடிந்துவிடும்”
“என்ன சொல்கிறாய் ?”
“ஆதாவது உங்களை போன்றவர்கள்தானே வாழ்வது சில காலம் அதில் வீழ்வோம் சிவன் காலில் என்று சொல்வீர்கள்”
“இது …”
“சரி நாளை அரசு வெளி உருவு அலுவலரை சிந்திப்போம்” – வீரன் எழுந்து உள்ளே கிளம்பினான்.
“நாங்கள் மிக பெரிய பிரச்சனையில் … உள்ளோம் …” -அரச குரு அவனிடம் கத்தினார்.
“உள்ளே வாருங்கள். வந்து ஓய்வு எடுங்கள்” -என்றான் உள்ளே இருந்தபடியே வீரன்.
“நாங்கள் மிக பெரிய நெருக்கடியில் ….” – அரச குரு பேச ஆரம்பித்தார்.
“பல்லவர்களுக்கு நெருக்கடி ?”

தொடரும்