3 முட்டாள்களும் நானும் எனது நண்பர்களும்

நேற்றுதான் இந்த இந்திய புகழ் பெற்ற சித்திரத்தை கண்டேன். பல விஷயங்கள் பிடித்தும் சில விஷயங்கள் பிடிக்காமலும் இருந்தன.

முதலில் எனக்கு பிடித்த விஷயங்கள்:

ஆல் இஸ் வெல் – இது பிடித்திருந்த ஒன்று என்றாலும் இது இன்னொரு கட்டிபிடி வைத்தியம்
பிறந்த சில மணித்துளிகளுக்குள் என் மகன் பொறியாளன் என கோசமிடும் குடும்பம்.
அதிர்ஷ்ட மோதிரங்களை கலட்டி வீசும் காட்சி. கடவுளை பகுத்தறிவுடன் பார்க்கும் பார்வை.
அமீர் க்ஹானின் நடிப்பு. சூப்பர் ஸ்டார் செய்வாரா ? தெரியாது. கமல் செய்வார் என்று நம்புகிறேன். பச்சை கிளி முத்துச்சரம் என்கிற கதாநாயக அந்தஸ்தில் நடித்தமைக்காக சுப்ரீம் ஸ்டாரை பாராட்டியது ஞாபகம். ஆனால் அது ஒன்று பெரிய விடயம் அல்ல.
பொம்மன் இமானி – வைரஸ் என்கிற கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கிய நபர். எனக்கு ஏனோ ஐன்ஸ்டீன் நினைவுக்கு வந்தார்.
காகித கல்வியை விமர்சித்த விதம். நான் எல்லாம் ஒரு பொருள் முதல்வாத சமூகத்தில் பிறக்காமல் போயிருந்தால் – நல்ல கேலி சிதிரகரன் ஆகி இருப்பேன்.

பிடிக்காதவை:

ஹிந்தி தெரியதாவனை ஜோகறாக காண்பித்தது. அது என்ன ஹிந்தி, மலையாளிகள் போன்றவர்கள் – மற்ற மொழிக்காரர்களை வில்லனாக ஜோக்கராக காண்பிக்கிறார்கள். இதில் ஏதோ மனம் சார்ந்த பிரச்சனை உள்ளது.
அடுத்து குடும்ப நிலை தெரிந்தும் உண்மை பேசும் ராஜு என்கிற கதாபாத்திரம் – அந்த காட்சி பிடித்திருந்தாலும் – நடைமுறைக்கு ஒத்து வராது.
வறுமை கிண்டலடிக்கும் ஒன்றாக காடபட்டது – வருத்தம் வரவழைக்க வேண்டிய ஒன்று – வேடிக்கை ஆக்க பட்டுள்ளது.

இன்னும் புரியவில்லை கதை எழுதிவரை விட தான் பெரியவன் என்று காட்டி கொள்ள நினைத்த மனோ நிலை. பணத்திற்காக அதை ஒப்புக்கொண்ட எழுத்தாளர். கல்வியை பணம் ஈட்டும் கருவி அல்ல என்று சொல்லிவிட்டு – சுயமரியாதையை அடுகு வைக்க தெரிந்த நண்பர் அவர்.

பார்த்து முடித்தவுடன் – நண்பர்கள் சொன்னது – நான் இது ஆகி இருப்பேன் – அது ஆகி இருப்பேன் – என்ன செய்வது எல்லாம் தலை விதி. யாரும் கல்வி நிலையை மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை.

யாரும் ஹிந்தி தெரியாத நண்பர் நகைச்சுவை கதாபாத்திரமாக காட்டப்பட்டதை கண்டிக்கவில்லை. நம்மில் பலரும் நல்ல கதாபத்திரங்களில் நம்மை பொருத்தி பார்க்க விரும்புகிறோம். ஆனால் உலகம் நம்மை அப்படி பார்க்கிறதா ? ஒரு வேலை தமிழனாக ஏன் அந்த கதாபாத்திரம் உள்ளது என்று கேள்வி கேட்க்கவில்லை. அவன் நான் உகண்டாவில் பிறந்தவன் – பாண்டிச்சேரியில் படித்தவன் என்கிறான். ஆதாவது நாங்கள் கருப்புநிற மனிதர்கள் பஞ்சம் பிழைக்க இங்கு வந்துள்ளோம் – என்கிற கருத்து.

நல்ல படம் – சில விசமான விஷயங்கள்.

Advertisements

One comment on “3 முட்டாள்களும் நானும் எனது நண்பர்களும்

  1. […] மேலும் 0 கருத்து | மார்ச் 6th, 2010 at 7:25 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s