சாமியார்கள் : தமிழ் சமூகத்தின் கெட்டபெயரா ?

எனக்கு ஆரம்ப காலம் தொட்டே சாமியார்கள் மீது மதிப்பும் இருந்ததில்லை மரியாதையும் இருந்ததில்லை.அப்படி இருந்தால் அவர்கள் மரணம் அடைந்தவர்களாக உள்ளனர். என் மரணத்திற்கு பின் என்னை பற்றி தீர்ப்பு எழுதுங்கள் என்று சொன்ன கண்ணதாசன் – சாமயார்களுக்காகவே சொல்லி உள்ளாரோ தெரியாது.

காஞ்சி மடம் மீது பெரிய அளவு பற்று இல்லாத போதும், ஒரு முறை குடும்ப உறுப்பினர்கள் சென்றமையால் செல்லவேண்டிய நிலை.

அப்போதே பலருக்கும் அவர்களை பிடிக்கவில்லை. அப்போது மகாபெரியவா உயிரோடு இருந்தார்.

பெரும் படிப்பு படித்தவர்கள் – தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சட்டையை கழற்றி விட்டு இவர்கள் காலில் விழும்போது – நான் விமர்சித்து உள்ளேன்.

தமிழ் நாட்டின் மிகப்பெரிய மனிதர்களாக நான் நினைப்பவர்கள் காமராசரும் பெரியாரும். இவர்கள் பக்திமான்கள் இல்லை. பகுத்தறிவு உள்ளவர்கள்.

பெரியாரின் மண்ணில் சாமியார்கள் உள்ளது. அதுவும் போலி சாமியார்கள் உள்ளது – உண்மையில் பகுத்தறிவு நண்பர்களின் ஜனநாயகத்தையே காட்டுகிறது.

குன்றக்குடி அடிகளாரை ஒரு பொறுப்பில் அமர்த்தி பார்த்தவர்கள் நாத்திகவாதிகள். கடவுளை அழிக்கும் எண்ணம் பெரியாருக்கு இல்லை.அவர் சாதியய் எதிர்த்தார் – சாதியின் ஆதாரமாக கடவுளை சிலர் சதி செய்து சேர்த்ததால் – கடவுளுக்கு அவர் எதிரியானார்.

சாதியை ஒலித்து விட்டு இந்து மதம் இருந்தால். பெரியாரும் அம்பேத்கரும் நிச்சயம் எதிர்த்திருக்க மாட்டார்கள்.

புவனேஸ்வரி முதல் ரஞ்சிதா வரை – திரைமணம் கமழ்கிறது. சன் டிவி மற்றும் குமுதத்தை எதிர்த்து நடிகர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

அதைவிட நம்ம மடாலயங்கள் என்ன சொல்கின்றன. பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisements

5 comments on “சாமியார்கள் : தமிழ் சமூகத்தின் கெட்டபெயரா ?

 1. Subasni Letchumana Dass சொல்கிறார்:

  unmai ippothum azliyathu . wait n see.

 2. johan சொல்கிறார்:

  சாமியார் லீலைகள் எல்லாச் சமூகத்திலும் உள்ளது. நம் தமிழ்ச் சமூகத்தில் அதிகம் போலுள்ளது.
  அதனால் தமிழனுக்கு “தன்னை நம்பும் தைரியம் வர” வைக்க வேண்டும். பெரியார் தேவை.
  அதைச் செய்யவேண்டியவர்களும் பெரியார் பாசறையெனக்கூறி; மஞ்சள் துண்டு மாத்மியத்துள்
  நின்று “கடவுளை நான் நம்புகிறேனா? என்பதல்ல; கடவுள் என்னை நம்புகிறாரா” என இன்னுமொரு காவிக்கு கடவுள் ஸ்தானம் கொடுத்து; மனைவியைக் காலில் விழ வைத்து; பஞ்சப் பொட்டு; பரம்பரைப் பொட்டு என வியாக்கியானம் கொடுத்தால் , நாம் எங்கே போவது;நிமிர்வது
  குழப்புவதையே! தொழிலாக்கியுள்ளார்களே!
  தெளிவு தரவேண்டிய பத்திரிகைகள்; என்ன செய்கின்றன. மூடநம்பிக்கைகளைப் பரப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளன.
  நாட்டில் கற்றோர் கெதியென்ன? காவிகளின் காலில் சரணாகதி யடைகிறார்கள்.
  என்னைப்போல் தெளிவில்லாதவன்; தத்தளிப்பவன் கதி என்ன?
  காவிகள் விரித்த வலையில் சிக்கித் தவிப்பதே!

  • biopen சொல்கிறார்:

   நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. எனக்கு தெரிந்து ஒரு முழுமையான பகுத்தறிவு வழிகாட்டி யாரும் தற்போது இல்லை.
   தமிழன் மனதளவில் தன்னம்பிக்கை குறைந்தவனாக உள்ளதே இதற்க்கு காரணம்.

 3. Karthik சொல்கிறார்:

  tamilan nallathan irukan. avana kulparathuthan pagutharivu pagalvangal seeyum velai. tamilna viturnga

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s