பகுதி 2 : குங் ப்ஹு தமிழன்

ஓலையை நோக்கி அவன் கண்கள் மீண்டும் நகர்ந்தன. நெடு நாளைய பழக்கம் எப்படி திடீர் என்று மாறும். அவனோ சோழ நாட்டான்.வார்த்தைகள் அந்த ஓலையில் சோழ தமிழ் வட்ட எழுத்தில் இருந்தன – வாழ்க சோழவளநாடு.

துறவியின் கண்களை அவன் பார்த்தான். தென்றல் வீசியது. அவனது கையை விட்டு அந்த ஓலை பறந்தது.

“சரி துறவி அவர்களே … அரசரை சந்தித்து விட்டு உங்களிடம் பேசுகிறேன்” – வீரன் சொன்னான்.

தூறல் தூர ஆரம்பித்தது.

“காஞ்சியில் மழை காலம்” – துறவி சொன்னார்.
“வெயிலும் மழையும் நாமை விடுவதில்லை” – வீரன் மறுமொழி சொன்னான்.
“வாருங்கள் என் குடிசை அருகில்தான்”

துறவியும் அவனும் ஓட்டமும் நடயுமாக சென்றனர். அமைதியான குடிசை. புதன் வசம் செய்யும் குடிசையில் அமைதிக்கு பஞ்சம் என்ன.
ஒரு புல்லாங்குழலின் இசை அவர்களின் காது மடல்களில் வந்து ஊஞ்சல் ஆடியது.

“யாரது இசைமீட்டுவது?” – வீரன் கேட்டான்
“எங்கள் பகுதி ஆட்டுக்காரன். பெயர் அருகன்”
“பராகை நாட்டரே — தமிழர்களில் நிறையவே நண்பர்கள் பெற்றுவிட்டீர்கள்”
“அனால் உன் மன்னர்தான் என் நண்பர்களை விரும்பவில்லையே” என்று சொல்லிவரே நாடு முற்றத்திற்கு சென்றார் முனிவர்.
வீரனும் பின் தொடர்ந்தான்.
“அமருங்கள்” -முனிவர் மேடையை காட்டினார்.
“நீர் அருந்துங்கள் வீரரே ” -அருகன் நீருடன் வந்தான்
“எதிரிக்கும் விருந்தொம்பதல் தமிழர் பண்பு ” -முனிவர் சொல்லிவிட்டு புன்னகைத்தார்.

புத்தனின் ஓவியம் சுவரில் இருந்தது. ஆசையின் அழிவை சொன்ன மகானின் சித்திரம்.

“உங்களின் ஊர் எது முனிவரே ?” -வீரன் கேட்டான்
“தமிழகம்தான்” – முனிவர் சொன்னார்
“அட … தமிழ்நாட்டில் வாழ்பவர் எல்லாம் அப்படிதான் சொல்கிறார். நீங்கள் இதற்க்கு முன் வாழ்ந்து வந்த ஊர்?”
“கயா”

தண்ணீரை வாங்கி குடித்தான் வீரன்.

மழையின் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய … மழை நின்றது.

“சரி முனிவரே கிளம்புகிறேன்” – வீரன் சொன்னான் .
“அரசவை நேரம் முடிகிற தருணம். செல்லவும்” -முனிவர் வாசல் வரை வந்தார்.

குதிரையில் ஏறி கிளம்பினான் வீரன். அவன் வீரன் மட்டும் அல்ல தூதனும் கூட. இப்போது தூதுதான் வந்திருக்கிறான்.
அவன் இடையில் கத்தி இல்லை ஆனால் அதைவிட கொடிய ஒன்று உள்ளது. பல்லவ மண்ணின் போதாத காலம்.

புத்தம் சரணம்!

தொடரும்

Advertisements

5 comments on “பகுதி 2 : குங் ப்ஹு தமிழன்

 1. Surendran சொல்கிறார்:

  தொடர் எழுத ஆரம்பித்துள்ளதற்க்கு வாழ்த்துக்கள். சென்டர் பேஜ் அலைன்மென்ட் இருந்தால் பக்கம் இன்னும் கூடுதல் அழகு பெறும். புத்தம் சரணத்தை எப்படி குங்பூ சரணமாக்கபோகிறீர்கள் என்பதை பார்க்க ஆசை…

 2. குலவுசனப்பிரியன் சொல்கிறார்:

  நல்ல முயற்சி. கதையின் போக்கு ஆவலைத் தூண்டுமாறு உள்ளது.

  விவரிப்பில் கொஞ்சம் சரளம் காட்டவேண்டும்.
  உ.ம்: //துறவியின் கண்களை அவன் பார்த்தான். தென்றல் வீசியது. அவனது கையை விட்டு அந்த ஓலை பறந்தது.// கதைபோல் இல்லாமல், பரிசோதனை அறிக்கையைப் படிப்பது போல உள்ளது.

  அப்படியே வரிக்கு வரி மிகுந்திருக்கும் பிழைகளையும் சரி பாருங்கள்.
  //நாமை விடுவதில்லை
  //புதன் வசம் செய்யும்
  //வெயிலும் மழையும் நாமை விடுவதில்லை
  //விருந்தொம்பதல்

  • biopen சொல்கிறார்:

   நீங்கள் சொன்ன பிறகுதான் பார்த்தேன். இந்த முறை – எழுத்து பிழை இல்லை என்று நினைக்குறேன்.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 3. Bala சொல்கிறார்:

  ஏழாம் அறிவின் கதை அன்றே உங்களுக்குத் தெரிந்துள்ளதோ?
  தமிழர் வரலாறுதான் தடைபட்டுக் கிடக்கிறது..
  உங்கள் தரவிலும் தயக்கம் ஏனோ? தொடரட்டும் உம் நற்பணி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s