பகுதி 3 : குங் ப்ஹு தமிழன்

பல்லவ நாட்டின் அரச மாளிகை. மல்லர்கள் பார்த்து பார்த்து செய்த மாளிகை. அழகிய நகரம் அமைதியான வாழ்வு – பல்லவ நகரங்களுக்கே அழகு சேர்க்கும் கற்சிலைகள்.

அரசவை தன் அலுவல்களை முடித்து கொள்ளும் நேரம் நெருங்கி கொண்டிருந்தது. குதிரை நின்றது.

காவலனுக்கு தான் யார் என்று சொல்லிவிட்டு அனுமதிக்கு காத்திருந்தான் வீரன்.

அனுமதி அழிக்கப்பட உள்ளே நுழைந்தான் அவன்.

“வணங்குகிறேன் பல்லவ அரசரை” – வீரன் சொன்னான்.

வீரம் பேசும் முரட்டு மீசை.மல்லர்களுக்கே உரிய உடற்கட்டு. கருணை கூறும் விழிகள். ஆறடி தேகம். ஆண்மை பேசும் தேகம். எழுந்து நின்றாலே எதிரிகள் ஓடுவர். அதிர்ந்து பேசினால் எதிரிகள் அழிந்தே போவர். காற்றில் பறக்கும் கேசம். நெஞ்சில் நிற்கும் நல்லவர்களுக்கான நேசம்.

சொன்னால் புரியாது. சொல்லில் அடங்காது. அவன் வீரத்தின் விலை நிலம் – பல்லவ மன்னன் என்பது அவனுக்கு உரிய பட்டம்.

“கொண்டு வந்த செய்தி ?” – பல்லவன் கேட்டான்.
“மடல் ஒன்று கொண்டு வந்தேன். வாசிக்க அனுமதி கேட்டு நிற்கிறேன்”
“அனுமதித்தோம்” – பல்லவன் கட்டளை இட்டான்
“பல்லவ பேரரசிற்கு சோழ பேரரசர் அவர்களின் செய்தி ஒன்று வரைந்துள்ளோம். உங்களின் நட்பு எங்களின் மகிழ்ச்சி. உங்களுடன் நல்லுறவு பேணவே நாங்கள் விரும்பிக்கிறோம். போரிலே எதிர் அணியில் நீங்கள் நிற்க அதை நாங்கள் பார்க்க காலம் கட்டளை இடாது இருக்கட்டும்.
நீங்கள் வீரத்தின் வேந்தந்தான் . ஆனால் நீங்கள் தற்போது வாள் எடுக்க மாட்டீர்கள். போர்நிலைக்கு விரும்பமாட்டீர்கள். அப்படி மாறி போய் உள்ளீர்கள் …”

வீரன் இடையில் ஒரு மௌனம் படைத்தான். மன்னரை பார்த்தான். வீரத்தின் வேந்தன் ஈரத்தின் வேந்தன் ஆனதற்கு கிடைத்த பரிசு.

“நல்ல மாற்றம் அரசியல் பிழைத்தோர்க்கு நல்லதில்லையோ ?” – வீரன் யோசித்தான்.

மன்னனும் யோசித்தான். அந்த நாள் நினைவுக்கு வந்தது – மாற்றம் தந்த அந்த நாள்.

தொடரும்

Advertisements

4 comments on “பகுதி 3 : குங் ப்ஹு தமிழன்

  1. Mehar சொல்கிறார்:

    Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is “Bloggers, Internet users and their intelligence”.  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire’s to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore – 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
    .
     
     
    (Pls ignore if you get this mail already)

  2. sangar சொல்கிறார்:

    varavettkirom ippidiyaana padaippukalai

    valthukkal

  3. […] மேலும் 0 கருத்து | மார்ச் 19th, 2010 at 4:53 am under  Blog திரட்டி […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s