பகுதி 7 : குங் ப்ஹு தமிழன்


இரவு நிமிடங்களில் கரைந்தாலும் – அரச குருவின் இதயம் விடியல் தூரத்தில் இருப்பதுவாகவே நினைத்தது.

நிலவின் மடியில் உறங்கும் உறக்கம் இல்லை. அதுவும் ஒரு தூதனின் வீட்டில் சாதாரண சாணி மெழுகிய தரையில் அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அது தரையின் குற்றம் இல்லை. அவர் முள் படுக்கையில் கூட படுப்பார் – ஆனால் நிமிடத்தில் அவர் நினைப்பது நடந்தால்.

சேவல் கூவியது. முதலில் கண் விழித்தார் அரசகுரு என்று சொல்ல முடியாது. காரணம் அவர் தூங்கவே இல்லை. காஞ்சியில் இருந்து பயணித்தும் அவர் களைப்பில் கூட கண் அயரவில்லை.

பாட்டி எழுந்தாள். முனிவர் தூங்குவது போல் படுத்து இருந்தார்.
“சாமி … விடிஞ்சிருச்சு” – பாட்டி சொன்னாள்

அரச குரு எழுந்து அமர்ந்தார்.
“நல்ல உறக்கமோ ?” – பாட்டி கேட்டாள்
“தூக்கமாவது ஆக்கமாவது ?” – குரு கேட்டார்
“பெரிய கேள்வி எல்லாம் கிழவிகிட்ட கேட்க கூடாது” – பாட்டி சொன்னாள்
“ம்”
“உங்களுக்கு இந்த சாணி மெழுகின தரையில் -இந்த பட்டு விரிப்புதான் கொடுக்க முடிந்தது”
“சைவர்களுக்கு சுடுகாடே கோயில். அதனால் இதில் ஒரு பிரச்சனயும் இல்லை”
“நல்லது”
“உங்கள் பேரன் எப்போது ….?”
“அவன் உச்சி பொழுதுக்குள் …. எழுந்துருவான்” – பாட்டி சொன்னாள்
“உச்சி ?” – ஆவேன வாய் திறந்தார் பல்லவ அரச குரு.

பாட்டி வாசலுக்கு போனாள். அவள் சாணி தெளித்தாள். பசு மாடு ஒன்று வாசல் முன் வந்தது. கூடவே கறவை காரர்.
“நல்லா நிறைய பால் கரப்பா … வீட்டுக்கு விருந்து வந்திருக்கு” – கறவை காரரிடம் சொன்னாள்.
“யாரு பாட்டி ?”
“நம்ம ஆளுங்கதான். தூரத்து உறவு. புனித பயணம் போயிட்டு வந்திருக்காங்க. வழில நம்ம வீட்ல ஒரு கை நினைக்க வந்திருக்காங்க ”
“எங்க போயிட்டு வந்திருக்காங்க”
“ஏதோ சொன்னங்க மருந்துருச்சு. வயசு ஆயடுச்சுல ? முதல நீ கறந்து முடி”

சாணி இட்டு முடித்தவள், கோலமும் இட்டாள்.

அரச குரு காலை கடன் நீராடல் எல்லாம் முடித்து உடல் முழுதும் திருநீறு இட்டு கொண்டார்.
“எல்லாம் ஈசன் செயல்” – குடிசைக்குள் இருந்த அரச குரு வானத்தை பார்த்து சொன்னார்.

பாட்டி குடிசைக்குள் வந்தார்.
“பக்கத்தில் இருந்த நீர் நிலைக்கு போய் வந்துட்டீங்களே! பல்லவர்கள் புத்திசாலிகள்”

காது மடல்களை தன் கைகளால் மோதினான்.
“அந்த வார்த்தையை சொல்லாதீர்கள்” – அரச குரு சொன்னார்
“எது?” – பாட்டி கேட்டார்
“புத்தி”
“சரி” – பாட்டி ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றாள்.

கறந்த பாலை வாசலில் போய் ஒரு பாத்திரத்தில் வாங்கி வந்தாள்.
வீரன் சோம்பல் முறித்தான்.

“உங்களுக்கு அதிர்ஷ்ட்ம். என் பேரன் எழுந்து விட்டான்” – பாட்டி பாத்திரத்துடன் உள்ளே வரும்போதே சொன்னாள் அரச குருவிடும்.

“குருவே நாம் அரசரை சந்திக்கலாம். கவலை வேண்டாம்”
அரச குரு புன்னகைத்தார்.

***
அரச மாளிகை. சோழ அரச மாளிகை. தமிழ் நாட்டின் பேரரசுகளில் ஒன்றின் அரண்மனை. விசாலமான மாளிகை மிக நேர்த்தியான சுவர்கள் – சோழ கட்டட பெருமை சொல்லும் வனப்பு.

பரப்பு மிகுந்தத சாலைகளில் நடந்து வந்து அரண்மனை படிக்கட்டுகளில் ஏறி அவைக்குள் வந்தார்கள்.

அரசர் அவையில் இருந்தார். அரச விருந்தினர்கள் இருக்கையில் அமர்ந்தனர் குருவும் வீரனும்.
ஏற்கனவே திட்டமிட்ட அரச அழுவல்கள் நடந்தன.

அவர்களின் தருணம் வந்தது.
“பல்லவ அரச குருவை காக வைத்தமைக்கு வருந்துகிறேன்” – சோழன் சொன்னார்.
“அரசே! நாங்கள் மிக பெரிய நெருக்கடியில் உள்ளதாய் உணர்கிறேன்”
“பாண்டியர்களா ? சேரர்களா ? சொல்லுங்கள் … ஆனால் அதற்க்கு நீங்கள் வரவேண்டியதில்லையே ?”
“ஆம்! எங்கள் எதிரிகள் சேரர்களும் இல்லை சேரர்களும் இல்லை … அவர்கள் …”

அரச குருவை பார்த்தார் சோழர்.
“அவர்கள் ?”

தொடரும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s