பகுதி 10 : குங் ப்ஹு தமிழன்


பல்லவ நாட்டின் தலைமகன் தூது வந்த வீரனை அழைத்தான். கடுவுளின் நகரம் காஞ்சி. புத்தம் மட்டும் அல்ல – புனிதம் எல்லாம் ஆளும் நிலம் காஞ்சி.

தமிழ் நாடு தன்னை புனித்ததிர்க்கு அர்பணித்த அந்த மண்ணில்தான் அந்த முடிவை காஞ்சித்தலைவன் – பல்லவ மன்னன் எடுக்க வேண்டி இருந்தது.

சந்தனம் பூண்ட மார்பு. வீரம் செறிந்த மீசை. கைகளில் காப்பு. கால் மேல் கால் போட்டு பாலவன் மீசையை தடவிய படி அரச மாளிகையின் தோட்டத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான். நெற்றியில் திருநீறு இல்லை. பக்கத்தில் அழகான ஒரு மேசை. வானம் பார்த்தான். இன்றைக்கு மழை வரலாம். மேகத்தின் கருமை இருளாக வந்தது வந்து போய் கொண்டு உள்ளது.

நல்லசிவன் – தூது வந்த சோழ வீரன் வந்திருந்தான்.
“கதிரும் நிலமும் உள்ளவரை பல்லவர் சோழர் நட்பு வாழ்க” – சோழ வீரன் சொன்னான்
“வாழட்டும்”
“செய்தி ?”
“புத்த மாந்த்தர்கள் இந்த மண்ணை விட்டு செல்ல நாங்கள் ஆயத்தம் செய்வோம்”
“புத்தி தார பல்லவர் ?” – தலையை சொரிந்தான் சோழ வீரன் நல்ல சிவன்
“அவரும் இந்த மண்ணை விட்டு கிளம்புவார் – உயிருடன் இருந்தால். நான் அவரை பார்த்து பல வருடங்கள் உருண்டு விட்டன” – பல்லவன் தீர்மானமாய் சொன்னான்.
“இதை ஓலையாய்”
“இந்த அரச முத்திரை இட்ட ஓலை” – பல்லவன் தந்தான்.

குதிரையில் ஏறினான் வீரன். குதிரை தன் கால்களை தூக்கி பல்லவ மண்ணின் அரண் மனை நோக்கி கனைத்தது. அது ஏதோ நரி ஊளை இடுவது மாதிரி இருந்தது, தூரத்தில் பொத்த கொடி பறப்பது தெரித்தது.

குதிரை தன் பயணத்தை ஆரம்பித்தது. அதன் கால்கள் பிரசன்ன தாரரின் குடில் நோக்கி நகர்ந்தது. பிரசன்ன தரரின் குடில் முன் நின்றது.

“புத்தம் சரணம்” – உள்ளே ஏதோ பேராதனை.

அருகனின் இசை ரசிக்கும் வகையில் இருந்தது. அதே புல்லாங்குழல் இசை.

குதிரையை விட்டு இறங்கினான் நல்ல சிவன். அருகன் ஓடி வந்தான்.
“உள்ளே என்ன வழிபாடா ?” – வீரன் கேட்கவும், அவன் புள்ளங்குளில் இசைத்து ஆம் என்றான்.
“பிரசன்ன தாரர் உள்ளாரா ?” – வீரன் கேட்டான்.
“பிரசன்ன தாரர் ?” -அருகன் தன் புல்லாங்குழலை வாயில் இருந்து எடுத்து விட்டு கேட்டான்.
“ஆம்! அவர் இல்லையா ?”- வீரன் கேட்டான்.
“அவர் இங்கு சில காலமாகவே இல்லை”
“என்ன சொல்கிறாய் ?”
“ஆம்! அவர் மஹா பரி நிர்வாணம் அடைந்து விட்டார்?”
“என்னது காலம் எய்தி விட்டாரா ?”
“சில காலம் முன்பு ”
“அட! நான் போகிற போது பார்த்தேனே?”
“அது எப்படி சாத்தியம்?”
“அருக! நீ கூட இருந்தாயே ?”
“நான் உங்களை இப்போத்துதான் பார்க்கிறேன்”
“என்ன சொல்கிறாய்?”
“உண்மை”
நல்ல சிவன் குழம்பிப்போனான். என்னதான் பல்லவ மண்ணில் நடக்கிறது ?. நம்மக்குதான் மூளை பிசகி விட்டதா ?

வானத்தை பார்த்தான்.
“முருகா” – என்றான் நல்ல சிவன்

குதிரை தலை கவிழ்ந்தது. நல்லசிவன் ஏறி அமர அது கிளம்பியது. சோழ நாடு நோக்கி நடை போட்டது. காஞ்சி மன்னே வருகிறேன்.
என்னதான் பல்லவ மண்ணில் நடக்கிறது ?

தொடரும்

Advertisements

3 comments on “பகுதி 10 : குங் ப்ஹு தமிழன்

  1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    தொடர் நன்றாக இருக்கிறது. அதுவு்ம் கோவில் சிற்பங்களை போட்டிருப்பது மிகவும் அருமை. ஏகம் அழகிய சிற்பங்களை இட்டே தொடரை தொடருங்கள். சிவன் அருள் செய்யட்டும்.!

  2. […] மேலும் 0 கருத்து | மார்ச் 28th, 2010 at 3:18 pm under  Blog திரட்டி […]

  3. biopen சொல்கிறார்:

    நன்றி நண்பரே தங்கள் கருத்துக்கு. ஈசன் மண்ணின் கதை அதனால் ஈசனின் கோயில் சித்திரங்களை பயன்படுத்துகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s