பகுதி 15 : குங் ப்ஹு தமிழன்


வீரன் கேட்ட கேள்வியில் ஒரு அதட்டல் இருந்தாலும் அதன் நோக்கம் புரியவில்லை தர்மருக்கும் அருகனுக்கும்.
வீரனை தர்மர் உற்று பார்த்தார். அவன் அரச படை வீரன் அல்ல. ஆனாலும் எதற்கு இந்த கேள்வி கேட்கிறான் என்பதும் புரியவில்லை. கடல் பயணம் மேற்கொள்ள வேண்டும். அது கூட எளிதில் முடிந்து விடலாம். ஆனால் இந்த நில பயனமந்தான் பெரிய பாடாக இருக்கும் போல என்று தோன்றியது தர்மருக்கு. எல்லாம் இறைவன் செயல். கடவுளை வேண்டி கொண்டார் தர்மர். தர்மர் வீரனை தன் மனக்கண்ணால் பார்த்தார். இவன் நல்லவன் என்றே மனம் சொல்லியது.

“நான் யார் என்பது இருக்கட்டும்? நீ யாரப்பா ?” – தர்மர் லாவகமாய் கேட்டார். சில சமயங்களில் கேள்விக்கு பதிலாய் கேள்விதான் வந்து விழும். அது உலக நியதி.
“நான் சேரத்தில் இருந்து வருகிறேன்” – வீரன் சொன்னான்.
“சேரத்தில் இருந்தா ?” – தர்மர் கேட்டார்.
“ஆம்”
“நீங்கள் பல்லவராய் இருந்தால் என்னோடு வாருங்கள்”
“எங்கே ?”
“தமிழகத்தின் கொள்ளை புறத்திற்கு தான்”
“சரி உன்னை எப்படி நம்புவது?”
“அமைபின் அவளோகதீஸ்வறரை நம்பினால் என்னை நம்புங்கள். அமைதியப்ப புத்தரை நம்பினால் என்னை நம்புங்கள்”

தர்மர் குழம்பி போனார். நிமிர்ந்து பார்த்தார். நிலா உச்சியில் இருந்து சிரித்தது. பக்கத்திலேயே துருவ நட்சத்திரம் மின்னியது. இப்படி அது மின்னும் போது சரியாக பிரசனதரரின் 67 ஆம் பிறந்தநாள் என்று பொருள். பிரசன்ன தாரரே ஆணை இடுவதாய் உணர்ந்தார் தர்மர். புத்தன் என்பவன் எப்போதும் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும். விழிப்பு என்பதின் பொருள்தான் புத்தம்.

“புத்தம் சரணம்” – துருவ நட்சிதரம் நோக்கி மெதுவாய் சொன்னார் தர்மர். குதிரை அடி எடுத்து வைக்க வீரன் முன்னேறினான். அருகன் அவன் பின்னால் வண்டியைஓட்டினான்.

மூவரும் பயணித்தனர். மிக நீண்ட பயனித்திற்கு பின் சேரநாட்டை அடைந்தனர். சேரநாடு சோழர்களின் தாக்குதலுக்கு ஒவ்வொரு முறையும் ஆளாகிறது. பாண்டியர்கள் பல தருணங்களில் குட்டனி வைத்து வென்று விடுகிறார்கள். ஆனால் இந்த சேர மண் பாவம். தலை நகரங்கள் பல முறை மாறிவிட்டன.

கொல்லம் – தமிழ் நாட்டின் கொள்ளை புறம். அந்த பாறைகளில் கடல் அழை வந்து மோதியது. அருகன் தன் புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். பார்பதற்கு ரம்யமாய் இருந்தது.

தர்மர் ஒரு பாறையில் அந்த கடற் கரையில் அமர்ந்தார். கண்களை மூடி த்யானித்தார். பல பாறைகளில் சேர வட்டெழுத்துக்கள் இருந்தன. அது மனதுக்கு நிம்மதியாய் இருந்தது. இது சோழன் மண்ணும் இல்லை – பல்லவ நிலமும் இல்லை. தர்மரின் மன விழியில் நேற்றைய நிகழ்வுகள் விரிந்தன. பல்லவன் இப்படி ஓத்துகொண்டிருக்க கூடாது.அதனால் தான் புத்தி தார பல்லவனை தன் நாட்டின் அரசனாக முடிவு செய்தார் சிம்ம வர்ம பல்லவன். சிம்ம வர்ம பல்லவனின் மூத்த மகனுக்கு இந்த செய்தி தெரிந்தது.

தந்தை உடல் நலம் இல்லாது இருக்கும் செய்தி கேட்டு மல்லையில் இருந்து ஓடி வந்தான் குதிரையில் புத்தி தாரன். புத்தி தாரன் சிம்ம வர்மனின் மூன்றாம் புதல்வன். வருகிற வழியில் புத்தி தாரணை கொன்று விட்டால் தான் அரசனாகலாம் என்று திட்டம் தீட்டினான் தற்போதைய பல்லவன்.
வருகிற வழியில் தாக்குதல் நடக்க, மல்லையின் ஆளுனன் புத்திதாரன் தன் வர்ம கலையாலும் சிலம்பதினாலும் தீவிர போர் பயிற்சியாலும் வென்றான்.

ஓடி வந்து பார்த்தால் சிம்ம வர்மன், “நலமா ?” – என்று கேட்டு விட்டு கண் மூடினான். அந்த நிகழ்வுக்கு பிரசன்னா தாராரும் வந்திருந்தார்.

அரச குருவும் மற்ற அமைச்சர்களும் புத்தி தார பல்லவனை அரச பதவி ஏற்க்க சொல்லி வற்புறுத்தினர். “அண்ணன் இருக்கும் போது அரியணை எனக்கா ? அது பாதகம்!” என்றான் புத்தி தாரன்.

எல்லோரும் வற்புறுத்த காவி பூண்டு வந்து நின்றான். நிகழ்வின் முடிவில் பிரசன்னா தாரரின் குடிலுக்கு போனான் புத்தி தாரன். பிரசன்ன தாரர் தீட்சை தர மறுத்து விட்டார். “இது ஒன்றும் சின்ன பிள்ளை வேலை இல்லை – துறவரம்.” இது தான் பிரசன்னா தாரர் சொல்லாமற் சொன்ன பதில். புத்தி தார பல்லவன் மழையில் நின்றான் – பணியில் குளிர்ந்தான் – வெயிலில் வாடினான் – அப்போதும் புத்தம் படித்தான். மகத்திதில் இருந்து வந்த பிரசன்ன தாரரின் காலில் விழுந்தான். கடைசியில் பிரசன்ன தாரர் ஏற்றுக்கொண்டார். தர்மர் என்று தீட்சை பெயர் தந்தார்.

தர்மர் கண் திறக்க. ஒரு கோடாலி வந்து விழுந்தது அவர் முன்னால். ஆனால் அது முதுகு பக்கத்தில் இருந்து வந்து விழுந்தது. அந்த கோடாலி சூரிய ஒளியில் பளபளத்தது; மின்னியது அதன் கூர்மையான பகுதி.

ஓம் நமசிவய!

தொடரும்

Advertisements

3 comments on “பகுதி 15 : குங் ப்ஹு தமிழன்

  1. […] மேலும் 0 கருத்து | ஏப்ரல் 4th, 2010 at 3:16 pm under  Blog திரட்டி […]

  2. Cheena (சீனா) சொல்கிறார்:

    அன்பின் கார்த்திக்

    15 பகுதிகள் ஆகி விட்டன – ஒவ்வொன்றாகப் படிக்கிறேன் – மறுமொழி இடுகிறேன் – விரைவினில்

    நல்வாழ்த்துகள் கார்த்திக்
    நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s