IIFA : இது ஒரு வர்த்தக அமைப்பு !

முரண்பாடான இருவர் உடன்பாடாக வாழ்வதே திருமணம் என்று என் நண்பன் சொல்வான். தமிழன் எப்போதுமே முரண்பட்டே வாழ நிர்பந்திக்கபடுகிறான்.

IIFA என்கிற அனைத்துலக இந்திய திரைப்பட அமைப்பு என்பது இந்தி திரைப்பட அமைப்பே என்று மலையாள நடிகர் மமுட்டி அவர்கள் – அவர்கள் தந்த மேடையிலேயே முழங்கினார் என்று எங்கோ படித்த ஞாபகம். பாலிவுட் இந்திய திரைப்படத்தின் பிரதிநித்துவம் இல்லை என்று CNN ( CNN IBN அல்ல )
தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணலில் இசை புயல் மென்மையாய் தன் நிலையை பதிவு செய்தமையை நான் பார்த்து உள்ளேன்.எனவே இந்த அமைப்பு சொல்கிற சர்வதேச இந்திய திரைப்பட அமைப்பு என்பதில் தென் இந்தியர்கள் பலர் உடன்படவில்லை. ஆனாலும் இந்த அமைப்பு இப்படி ஒரு தவறான பெயரை வைத்து வர்த்தகம் செய்கிறது. இந்தியாவில் போற்றப்படும் வங்க மொழி படங்களோ மலையாள படங்களோ இவர்களின் வர்த்தகத்திற்கு பயன் தராது. இந்தியாவின் பெயரை கெடுப்பதே இந்த மாதிரியான அமைப்புகளின் நோக்கம்.

யாரேனும் வழக்குரைஞர் இந்திய நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த அமைப்பின் பெயரை மாற்ற வேண்டும்.

எதற்கெல்லாமோ போராட்டம் செய்தனர் தமிழ் திரை உலகினர். அவர்கள் இதற்கு ஒரு மேடை போட்டு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.அரசியல் பிரச்னையில் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலும் தங்களின் வெள்ளை மனதை வெளிக்காட்டினர். இது அவர்களால் முடியும் என்கிற விஷயம். அதுவும் அவர்களின் உறுப்பினர்கள் செய்யும் விஷயம் – மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் விக்ரம் என்கிற தமிழ் நடிகர் நடித்துள்ள படத்தின் இந்தி(ய) பதிப்பை இந்த அனைத்துலக அமைப்பு வெளியிட உள்ள இந்த நேரத்தில் மமுட்டியின் குரலை நினைவுபடுத்தி வங்காள, மலையாள மற்றும் இந்தியாவின் நல்ல மாநில படங்களை அடையாளம் காட்டாமல் வர்த்தகம் செய்யும் ஒரு அமைப்பின் பெயர் மாற்ற எவரேனும் சட்ட ரீதியில் முடிந்தால் முயற்சியுங்கள்.

அப்புறம் இன்னொரு நண்பன் சொன்னது – அது என்னடா உலக சினிமா என்றால் ஈரானிய சினிமா என்கிறார்கள் – உலக தரம் என்றால் ஹாலிவுட் படங்கள் என்கிறார்கள் – ஹாலிவுட் பெருசா ? இரான் பெருசா ? – எனக்கு தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள்.

பகுதி 19 குங் ப்ஹு தமிழன்

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நிகழ்வு நடந்தது. படகோட்டியின் மகள் தண்ணிரில் விழுந்தாள். தர்மர் நீரில் குதித்து காப்பாற்றினார். நீரில் அவளை தூக்கி கொண்டு நடந்தார். பறந்து வந்து தந்து விட்டு போனார். யாரின் மொழிக்கும் காத்திருக்க வில்லை.

கை எடுத்து கும்பிட்டது கூட்டம். கடைசிவரை அவர் தன் பெயரை சொல்லவில்லை. போதி தர்மத்தை சேர்ந்தவர் ஆதாவது போதி தர்மர் என்றே கடைசி வரை அழைத்தனர். இவர் பல்லவ மன்னர் – காஞ்சி மனிதர் என்று சீனர்கள் அறிந்து கொண்டனர். குங் ப்ஹுவை இவர்தான் கற்று தந்தார். இவர் தான் குங் ப்ஹுவின் தந்தை.

தமிழானால்தான் ஒரு மிக பெரிய தேசம் தன் தற்காப்பு கலையை கற்றது. புத்த தரமத்தை வளர்த்தது. அது அந்த மண்ணின் பெருந்தன்மை. சீனம் அந்த மனிதரை மிகபெரிய ஆசிரியராய் ஏற்று கொண்டது.

போதி தர்மர் இந்தியாவை விட்டு பயணிக்கும் போது தன்னை சித்தர் போல் வேடமிட்டுகொண்டதாகவும் தன்னை போகர் என்று அழைத்துகொண்டதாகவும் சிலர் சொல்கின்றனர். அவருடன் இருந்த அவரது சீடன் புலி பாணி என்றும் சொல்கின்றனர்.

போதி தர்மர் கொல்லம் வழியாக சென்று மலேசியா வழியாக சீனம் அடைந்ததாகவும் கதைகள் உண்டு. இவர் மரணத்திற்கு முன் தன் தாய் நிலத்திற்கு வந்ததாகவும் கதைகள் உண்டு.

இந்த கதைகள் பலவும் படித்தன் விளைவே இந்த தொடர். இதில் உண்மை எது கற்பனை எது என்று அறிந்து கொள்வது உங்கள் பொறுப்பு.

தர்மரை போற்றிய சீனத்திற்கு நன்றி !

போதி தர்மம் தமிழன் வளர்த்த தர்மம்! புத்தம் சரணம்!

பகுதி 18 குங் ப்ஹு தமிழன்

சிங்கர்கள் என்கிற பல்லவ வணிகர்களும் அந்த கப்பலில் இருந்தனர். சிங்கர்கள் தலைவனுக்கு சந்தேகம் வலுத்தது. எல்லோரும் மூடையை ஏற்றும் போது அவன் தர்மர் கவனித்தான். தர்மர் லாவகமாக ஒரு தொழிலாளி போலவே மூட்டைகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

அவர் மூட்டைகளை ஏற்றும் போது ஒரு வணிகன் ஓடி வந்தான்.
“சானனே! உன்னை தலைவர் கூப்பிடுகிறார்”

தன் துண்டினால் தன வியர்வையை துடைத்து கொண்டு வந்தார். துண்டை கக்கத்தில் வைத்து.
“வணக்கம் முதலாளி” – என்றார்.
“நான் சேரநாட்டில் வணிகம் செய்ததாலும். நான் சிங்கர். அதாவது பல்லவ வணிக வகுப்பை சேர்ந்தவன். தங்களை பார்க்கும் போது – எனக்கு தங்களை வேலை வாங்க மனம் வரவில்லை. நீங்கள் புத்தி தார பல்லவரா ?”
“அது”
“புரிகிறது. தங்கள் உயிர் தங்கள் கையில் இல்லை. பெலம்பகத்தில் பல்லவ வட்டேளுதுக்களை ஒட்டியே எழுத்துக்கள் இருக்கும். எனவே உங்களுக்கு யார் உதவியும் தேவை படாது”
“நான் புத்தன்”
“நன்று. என் கேள்விக்கு விடை கிடைத்ததாகவே நான் நினைக்கிறேன்”
“நல்லது” – தர்மர் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில், சிங்கர் குரல் எழுப்பினார்.
“நீங்கள் எங்கே செல்ல வேண்டும் ?”
“பெலம்பகம்”
“நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால். முதலில் நாம் ஸ்ரீ விஜயாவை அடைவோம். பின்பு பெலம்பகம்.
பெலம்பதில் இருந்து நீங்கள் , மஞ்சள் மண்ணுக்கு பயணியுங்கள்”
“மஞ்சன் மண் ?”
“ஆம் புத்தம் அங்கே வாழ்கிறது. வட கிழக்கு சேர மண்ணின் கணவாயை கடந்தால் அது உள்ளது. பெலம்பகத்தில் இருந்து அங்கு பயணிப்பது எளிது”
“நன்றி. எல்லாம் புத்தன் செயல்”

மீண்டும் மூட்டை தூக்க ஓடினார் தர்மர். அருகன் மூட்டையை இறக்க வந்தான்.
“எதுவும் பிரச்சனையா ?” – அருகன் கேட்டான்.
இந்த நேரத்தில் அருகனை புளியோன் என்றே அழைக்க ஆரம்பித்து இருந்தார் பரசு. அதாவது புலி மாதிரி சண்டை இடுபவன் என்று பொருள்.
“இல்லை புலி”
“மகிழ்ச்சி”
“புலி இருக்கையில் தமிழனுக்கு பிரச்சனை இல்லை” – சொல்லி விட்டு தர்மர் சிரித்தார்.

மூட்டை தூக்கும் பணியில் அவர் இடுப்பட்டே இருந்தார்.

கப்பல் கடல் கடந்தது. ஸ்ரீ விஜயாவை நோக்கி பயணம். மலையூர் ஸ்ரீ விஜய அரசின் கீழ் உள்ளது இப்போது. பல சமயங்களில் இந்த ஸ்ரீ விஜய மண் சோழர்களால் வெல்ல பட்டதுண்டு.

பெலம்பகம் என்பது தற்போதைய தாய் லாந்து. தை மொழி பல்லவ வட்டேளுத்துக்களின் செயல் கொண்ட வட்டெழுத்து சார்ந்த மொழி.
ஸ்ரீ விஜய என்பது தற்போதைய மலேசியா. மலையூர் என்பது நில பெயர். ஸ்ரீ விஜய என்பது அரசவம்சத்தின் பெயர்.

கப்பல் கரையை விட்டு கடந்தது. அம்மாவாசை நிலவு (?) வலி அனுப்பி வைத்தது. ஸ்ரீ விஜயாவை அடைந்தனர். பின்னர் பெலம்பகம். ஆனால் அங்கே இருந்து மஞ்சள் மண்ணுக்கு செல்ல வேண்டியது தர்மரின் தனிப்பட்ட பொறுப்பு.

மஞ்சள் மண்ணில் கால் வைக்க அவர் கடினப்பட்டார். ஏற்கனவே மர கட்டையின் உதவியுடோனும் இல்லாமலும் நீரில் நடக்கிற வித்தையை பரசு கத்து கொடுத்திருந்தார். அது தர்மருக்கு கை கொடுத்தது.

ஒரு படகு மஞ்சள் மண்ணின் நதியில் இருந்தது.
“டேய் அந்த ஆளை படகில் எத்தாதே!”
படகில் எரிய ஒருவன் படகோட்டி இடம் சொன்னான்.
“ஏன்”
“அவன் பழுப்பன்”
“அப்படின்னா …?”
“அட! கையிலே குண்டி கழுவுவாணுக கையிலேயே சப்படுவாணுக ”
“ஒரே கையிலா ?”
“வேற கையில தான். ஆனா சுத்தம் இல்லாதவனுக. பாரு தாடியோட இருக்கான் பிச்சை காரன் மாதிரி”

தர்மர் மனம் ஒடிந்து போனார். வானை பார்த்தார். தமிழ் நாட்டில் இருந்தாலும் பிரச்சனை. பெலம்பகம், ஸ்ரீ விஜயாவும் பிரச்சனை இல்லாத மண் இல்லை. இங்கேயும்.

புத்தம் சரணம்

அடுத்த பகுதியில் நிறைவு பெறும்: நண்பர்களே இந்த கதை ஒரு வரலற்று உண்மை சார்ந்த ஒன்று. ஆனால் கற்பனை அதிகம் உள்ள ஒன்று.
தர்மர் யார்.எந்த மண்ணில் இவர் தன் பாதுகாப்பான வாழ்வை நடத்தினார் என்பதை முடிவில் சொல்கிறேன்.

தொடரும்

பகுதி 17 : குங் ப்ஹு தமிழன்

இளவேனில் காலம் அது. சேர நாட்டின் பச்சை நிறமும் மலை நிலமும் மனதில் இதமான காற்றை வீசின.

கலரி வளரி சிலம்பம் என்று தர்மர் எல்லாம் கற்க , பெல்பகம் செல்லும் அவர்களின் திட்டமும் தீவிர முனைப்பில் முன்னெடுக்க பட்டன.
பெலம்பகம் – கடல் தாண்டி அடைவதே சரி என்று அவர்கள் திட்டம் தீட்டினர். பெலம்பகத்தின் மலையுருக்கு இங்கே இருந்து கப்பலில் வணிகர்கள் செல்வர். அவர்களுடன் மரம் ஏறும் தொழில் செய்யும் சிலரும் செல்வர். அவர்களே பல தருணங்களில் பாதுகாவலர்கள். தமிழகத்தின் அந்நாட்களில் வர்த்தகர்கள் தங்களுக்கு என படை வைத்துகொள்வது நடை முறையில் இருந்தது.

பாறையில் கடல் அலை வந்து மோதியது.

“தர்மரே ! கடலை பார்த்து அமருங்கள். உங்களுக்கு பின்னால் இருந்து என் பரசை எரிகிறேன். பிடியுங்கள் பார்க்கலாம். இதுவும் ஒரு விழிப்பு”
-பரசு சொன்னான். பரசு என்று அவன் சொன்னது கோடலியை.

எறிந்தான் தர்மர் தெளிவாய் பிடித்தார். பரசு சிரித்தான்.
“நீங்கள் பயணிக்கலாம் தோழரே. புத்தத்தை இனி எவரும் அழிக்க முடியாது” – பரசு சொன்னான்.
“பயணம் எப்போது ?” – அருகன் கேட்டான்.
“அட! நீயா? குரங்கு போல் புலி போல் போரட்ட கட்ற உங்களை நான் ஏன் பிடித்ஹ்டு வைக்க போகிறேன் ? வருகிற அமாவசை அன்று வணிக கப்பலில் கிளம்பி பெலம்பகம் போங்கள்” – பரசு சொன்னான்.

தர்மரும் அருகனும் புலியை குரங்கை பார்த்து அவை எப்படி தங்களை எதிரிகளிடம் இருந்து kaaththukolgnrana என்று கண்டு அறிந்து எல்லாம் கற்றனர்.
அது அவர்களுக்கு மிகவும் உதவும் அதுவும் காடும் கடலும் சார்ந்த இந்த மண்ணில் அவர்களுக்கு மிகவும் தேவை. மலையுறும் இந்த மண் போல தான் இருக்கும் என்று அவர்கள் அறிந்தேஇருந்தனர்.

இருள் படர்ந்தது. நாட்கள் நகர்ந்தன. அமாவாசையும் வந்தது. வர்த்தக கப்பலில் மர தொழிலாளிகளுடன் சேர்ந்து ஏற தயாராக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கேயும் ஒரு பிரச்சனை காத்துகொண்டு இருந்தது.அவர்கள் அதை எதிர் பார்கவில்லை.

தர்மம் சரணம் ஹச்சாமி!

தொடரும்

பகுதி 16 குங் ப்ஹு தமிழன்

விழித்து பார்த்தார் தர்மர். அருகனும்தான். புள்ளங்குளைளின் ஓசை இந்த கோடலியால் நிருத்தப்படிருந்தது. ஒரு திடகத்ரமான வீரன் வந்தான்.

“அட! கலரி வளரி எல்லாம் தெரியாது” – கோடலியை எடுத்தவரே கேட்டான்.
“இல்லை! வர்மம் மட்டும் தெரியும்” – தர்மர் சொன்னார்.
“ஒ! வர்மரா ?” – கோடலிக்காரன் கேட்டான்
“ஆம்”
“நீங்கள் சிலம்பம் கலரி வளரி எல்லாம் கற்றால் நல்லது”
“நிச்சயமாக” – தர்மர் சொன்னார்.
“அப்புறம் விழித்திருக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்” – சொல்லி விட்டு பதிலுக்கு காத்திருக்காமல் போய் விட்டான் அந்த நடுத்தர வயது கோடாலி மனிதன்.
முகத்தில் அடி விழுந்த மாதிரி இருந்தது தர்மருக்கு. பின்னர் புத்தம் என்றாலே விழிப்பு என்று பொருள். இவன் அதிலேயே கை வைத்து விட்டு போகிறான்.

பரசு – அப்படிதான் சேரமண்ணில் இந்த சமயத்தில் அழைக்கிறார்கள். அருகன் தர்மரின் அருகில் வந்தான்.
“பரசு உங்களை ஒன்றும் செய்யவில்லையே ?” – அருகன் கேட்டான்.
“இல்லை”
“அது என்ன கலரி வளரி ?”
“அது எல்லாம் தற்காப்பு கலைகள்”
“கற்கவேண்டும்”
“யாரிடம் ?”
“பரசு மனிதனிடம். அவர் என் குரு”

அருகன் தரமரை பார்க்க … மழை தூர ஆரம்பித்தது. அவர்கள் ஓடினர். தங்கள் வண்டிக்குள் பதுங்கி கொண்டனர். அவர்களை சேரநாடு வரை வந்து விட்ட மணிதான் – உத்தரவு வாங்கி கொண்டு சென்றான். அவனை இந்த பரசு மனிதன் தான் அனுப்பி உள்ளான்.

மழையையும் பொருட்படுத்தாது அந்த பரசு மனிதன் மரம் வெட்டிக்கொண்டிருந்தான். மழை விட்டது. அவன் விரகுகளுடன் வந்தான். இவர்கள் வண்டியில் இருந்தனர். தரமரை பார்த்தான். வாருங்கள் என்னோடு என்று சைகை செய்தான்.

அவன் குடிசைக்குள் போயினர். போகிற வழியில் அவர்கள் கருங்குரங்கு குகைக்குள் இருப்பதை பார்த்தனர். சிங்கத்தின் கால் தடங்களும் இருந்ந்தன.
விறகை வைத்தான். தன் மேல் துண்டால் தன் உடல் துடைத்து கொண்டான்.

“கலரி” – தர்மர் ஆரம்பித்தார்.
“அதெல்லாம் இருக்கட்டும். முதலில் விழிப்பை கற்றுக்கொள்ளுங்கள்” – பரசு சொன்னான்.
“நான் …” – தர்மர் இழுத்தார்.
“புத்தனோ ?”
” ஆம்”
“அட! கொடுமையே! பின்னல் இருந்து கோடாலி விழுவது கூட தெரியாமல் தினம் செய்கிறாய். நீ புத்தனோ ?” – பலமாய் சிரித்தான் பரசு.

அருகனுக்கு கோபம் வந்தது.என்னடா இது புத்தனிடமே புத்தம் பேசுகிறான். யார் இவன்? சரியான திமிர் பிடித்தவனோ? அருகன் மனதுக்குள் கோபபட்டான்.

‘யார் இவன் ?’ – தர்மர் விழித்தார். இயற்க்கை ஒரு குருவை சீடனாக்கும் முயற்ச்சியில் இடுபட்டு உள்ளது. நல்லதே நடக்கட்டும்.

“என்ன புத்தம் சொல்லித்தரவா ?” – பரசு கேட்டான்.

புத்தம் சரணம்!

தொடரும்

பகுதி 15 : குங் ப்ஹு தமிழன்


வீரன் கேட்ட கேள்வியில் ஒரு அதட்டல் இருந்தாலும் அதன் நோக்கம் புரியவில்லை தர்மருக்கும் அருகனுக்கும்.
வீரனை தர்மர் உற்று பார்த்தார். அவன் அரச படை வீரன் அல்ல. ஆனாலும் எதற்கு இந்த கேள்வி கேட்கிறான் என்பதும் புரியவில்லை. கடல் பயணம் மேற்கொள்ள வேண்டும். அது கூட எளிதில் முடிந்து விடலாம். ஆனால் இந்த நில பயனமந்தான் பெரிய பாடாக இருக்கும் போல என்று தோன்றியது தர்மருக்கு. எல்லாம் இறைவன் செயல். கடவுளை வேண்டி கொண்டார் தர்மர். தர்மர் வீரனை தன் மனக்கண்ணால் பார்த்தார். இவன் நல்லவன் என்றே மனம் சொல்லியது.

“நான் யார் என்பது இருக்கட்டும்? நீ யாரப்பா ?” – தர்மர் லாவகமாய் கேட்டார். சில சமயங்களில் கேள்விக்கு பதிலாய் கேள்விதான் வந்து விழும். அது உலக நியதி.
“நான் சேரத்தில் இருந்து வருகிறேன்” – வீரன் சொன்னான்.
“சேரத்தில் இருந்தா ?” – தர்மர் கேட்டார்.
“ஆம்”
“நீங்கள் பல்லவராய் இருந்தால் என்னோடு வாருங்கள்”
“எங்கே ?”
“தமிழகத்தின் கொள்ளை புறத்திற்கு தான்”
“சரி உன்னை எப்படி நம்புவது?”
“அமைபின் அவளோகதீஸ்வறரை நம்பினால் என்னை நம்புங்கள். அமைதியப்ப புத்தரை நம்பினால் என்னை நம்புங்கள்”

தர்மர் குழம்பி போனார். நிமிர்ந்து பார்த்தார். நிலா உச்சியில் இருந்து சிரித்தது. பக்கத்திலேயே துருவ நட்சத்திரம் மின்னியது. இப்படி அது மின்னும் போது சரியாக பிரசனதரரின் 67 ஆம் பிறந்தநாள் என்று பொருள். பிரசன்ன தாரரே ஆணை இடுவதாய் உணர்ந்தார் தர்மர். புத்தன் என்பவன் எப்போதும் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும். விழிப்பு என்பதின் பொருள்தான் புத்தம்.

“புத்தம் சரணம்” – துருவ நட்சிதரம் நோக்கி மெதுவாய் சொன்னார் தர்மர். குதிரை அடி எடுத்து வைக்க வீரன் முன்னேறினான். அருகன் அவன் பின்னால் வண்டியைஓட்டினான்.

மூவரும் பயணித்தனர். மிக நீண்ட பயனித்திற்கு பின் சேரநாட்டை அடைந்தனர். சேரநாடு சோழர்களின் தாக்குதலுக்கு ஒவ்வொரு முறையும் ஆளாகிறது. பாண்டியர்கள் பல தருணங்களில் குட்டனி வைத்து வென்று விடுகிறார்கள். ஆனால் இந்த சேர மண் பாவம். தலை நகரங்கள் பல முறை மாறிவிட்டன.

கொல்லம் – தமிழ் நாட்டின் கொள்ளை புறம். அந்த பாறைகளில் கடல் அழை வந்து மோதியது. அருகன் தன் புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். பார்பதற்கு ரம்யமாய் இருந்தது.

தர்மர் ஒரு பாறையில் அந்த கடற் கரையில் அமர்ந்தார். கண்களை மூடி த்யானித்தார். பல பாறைகளில் சேர வட்டெழுத்துக்கள் இருந்தன. அது மனதுக்கு நிம்மதியாய் இருந்தது. இது சோழன் மண்ணும் இல்லை – பல்லவ நிலமும் இல்லை. தர்மரின் மன விழியில் நேற்றைய நிகழ்வுகள் விரிந்தன. பல்லவன் இப்படி ஓத்துகொண்டிருக்க கூடாது.அதனால் தான் புத்தி தார பல்லவனை தன் நாட்டின் அரசனாக முடிவு செய்தார் சிம்ம வர்ம பல்லவன். சிம்ம வர்ம பல்லவனின் மூத்த மகனுக்கு இந்த செய்தி தெரிந்தது.

தந்தை உடல் நலம் இல்லாது இருக்கும் செய்தி கேட்டு மல்லையில் இருந்து ஓடி வந்தான் குதிரையில் புத்தி தாரன். புத்தி தாரன் சிம்ம வர்மனின் மூன்றாம் புதல்வன். வருகிற வழியில் புத்தி தாரணை கொன்று விட்டால் தான் அரசனாகலாம் என்று திட்டம் தீட்டினான் தற்போதைய பல்லவன்.
வருகிற வழியில் தாக்குதல் நடக்க, மல்லையின் ஆளுனன் புத்திதாரன் தன் வர்ம கலையாலும் சிலம்பதினாலும் தீவிர போர் பயிற்சியாலும் வென்றான்.

ஓடி வந்து பார்த்தால் சிம்ம வர்மன், “நலமா ?” – என்று கேட்டு விட்டு கண் மூடினான். அந்த நிகழ்வுக்கு பிரசன்னா தாராரும் வந்திருந்தார்.

அரச குருவும் மற்ற அமைச்சர்களும் புத்தி தார பல்லவனை அரச பதவி ஏற்க்க சொல்லி வற்புறுத்தினர். “அண்ணன் இருக்கும் போது அரியணை எனக்கா ? அது பாதகம்!” என்றான் புத்தி தாரன்.

எல்லோரும் வற்புறுத்த காவி பூண்டு வந்து நின்றான். நிகழ்வின் முடிவில் பிரசன்னா தாரரின் குடிலுக்கு போனான் புத்தி தாரன். பிரசன்ன தாரர் தீட்சை தர மறுத்து விட்டார். “இது ஒன்றும் சின்ன பிள்ளை வேலை இல்லை – துறவரம்.” இது தான் பிரசன்னா தாரர் சொல்லாமற் சொன்ன பதில். புத்தி தார பல்லவன் மழையில் நின்றான் – பணியில் குளிர்ந்தான் – வெயிலில் வாடினான் – அப்போதும் புத்தம் படித்தான். மகத்திதில் இருந்து வந்த பிரசன்ன தாரரின் காலில் விழுந்தான். கடைசியில் பிரசன்ன தாரர் ஏற்றுக்கொண்டார். தர்மர் என்று தீட்சை பெயர் தந்தார்.

தர்மர் கண் திறக்க. ஒரு கோடாலி வந்து விழுந்தது அவர் முன்னால். ஆனால் அது முதுகு பக்கத்தில் இருந்து வந்து விழுந்தது. அந்த கோடாலி சூரிய ஒளியில் பளபளத்தது; மின்னியது அதன் கூர்மையான பகுதி.

ஓம் நமசிவய!

தொடரும்

பகுதி 14 : குங் ப்ஹு தமிழன்

காஞ்சியில் இருந்து தன் பயணத்தின் முதல் அடியை தர்மர் வைத்தார். விண்ணை பார்த்தார். கதிரவன் கடவுளாய் தெரிந்தாலும் தூக்கம் கொள்ள ஆரம்பித்த நேரம்.

தன்னுடன் துணைக்கு அருகனை வைத்துகொண்டு நடந்தார் தர்மர். வைகறை வானம் வழி காட்ட கிளம்பினார்கள்.

ஓடி வந்தான் இளம் துறவி.
“தர்மரே! சைவர்கள் படை நிற்கிறது” – இளம் துறவி சொன்னான்.
“விழிப்புடனே உள்ளேன்”
“நான் கூட வரவா ?” – இளம் துறவி கேட்டான்.
“வேண்டாம் … இது நான் நடந்த மண். இந்த மண்ணில்தான் அமிதாப புத்தரின் ஒரு பிறவி இருந்தது. அவளோகதீச்வரன் அருள் உண்டு நமக்கு”
“நீங்கள் இந்த சால்வையில் உங்களை மூடிகொள்ளுங்கள்” – இளம் துறவி ஒரு சால்வையை கொடுத்தான்
“மாருவேடமோ ?” – தர்மர் கேட்டார்
“உங்கள் தாடி உங்களை காப்பாற்றும்” – இளம் துறவி புன்னகைத்தான்.
போதி தர்மத்தை சார்ந்தவர்கள் தாடி வைப்பதில்லை.
“திருநீறும் இட்டு உள்ளேன்” – தர்மர் சொல்லிவிட்டு புன்கைத்தார்.
“திருநீறு மிக சிறந்த நோய் நீக்கி. அதுவும் குளிருக்கு இது தேவை. குதிரை வண்டியில் செல்லுங்கள்”
“சரி”

துறவிகள் வழி அனுப்ப தர்மர் தன் பயணத்தை தொடங்கினார். காஞ்சி மண்ணில் இருந்து சேரமான் நோக்கி செல்வதை அவர்கள் திட்டம். காஞ்சி மண்ணில் தருமரிடம் வர்ம கலை கற்ற சிலர் அங்கு உள்ளனர்.

பல்லவ மண்ணில் குதிரை அடி அளந்தது. எதிரே குதிரை ஒன்று வேகமாய் வந்தது.

“நிறுத்தப்பா – உள்ளே யார் ?” – குதிரை ஒட்டிய அருகனிடம் கேட்டான் அந்த வீரன்.
“துறவி”
“புத்த துறவியா ?”
“போதி தர்மத்தை சார்ந்த யாரும் இல்லை”
“பின்னர்?”
“சிவனடியார்”

வீரன் பின் பக்கம் வந்தான். வழுக்கை தலை – அந்நாள் தாடியுடன் தர்மர் புன்னகைத்தார்.
“சைவரா?”
“திருநீறு இட்டு உள்ளேன். சித்தன்” – தர்மர் சொன்னார்
“நல்லவேளை புத்தன் இல்லை” – வீரன் சொன்னான்
“செல்லலாமா ?” – அருகன் குரல் எழுப்பினான்
“இறப்பா — தங்கள் திருநாமம் என்னவோ ?”
“போகன்”
“எல்லோரும் போகிறவர்கள் தான். சரி நீங்கள் செல்லலாம்”

படை வீரர்கள் அலைந்து கொண்டு இருந்தனர். குதிரைகள் திரிந்தன. காஞ்சி மண்ணை கடந்தனர். அவர்கள் பெலம்பகம் போவதற்குள் நிறையவே கடினம் இருக்கும்.

இன்னொரு இடத்தில் அவர்கள் நிறுத்தப்பட்டனர்.
“நீங்கள் பல்லவர் தானே ?” – நிறுத்திய வீரன் கேட்டான் தருமரிடம் கேட்டான்.

அருகனுக்கு பயம் தொற்றிகொண்டது. வியர்வை முத்துக்கள் முகத்தில் துளிர்த்தன. அருகன் அந்த வீரனை பார்த்தான். எங்கே நிற்கிறோம் என்றும் பார்த்தான். நெஞ்சடைத்தது.

தர்மரின் முகம் பார்த்தான். பயம் அவர் முகத்தில் இல்லை. பனி விழுந்து கொண்டு இருந்தது. கடவுளே காப்பாற்று. வானம் நோக்கி மனசுக்குள் இறைஞ்சினான்.

“அட! கேட்கிறேன் இல்லையா ? நீங்கள் பல்லவர் தானே ?” – அந்த வீரன் மீண்டும் தன் ஆண்மைத்தனமான குரலில் கேட்டான்.

பயம் பாய் விரித்தது. சம்மணம் இட்டு அமர்ந்தது. அருகா நலமா என்றது. தர்மர் புன்னகைத்தார் பயத்தை பார்த்து.

புத்தம் சரணம்!

தொடரும்

பகுதி 13 : குங் ப்ஹு தமிழன்

காஞ்சியின் கடைசி வீதியும் தாண்டி போதி குடில்கள் தாண்டி அந்த இளம் துறவியின் பின் பல்லவன் புதல்வன் நாய் தன் எஜமனாணன் பின் கேள்வி கேட்காமல் நடப்பது போல் நடந்தான். வீரர்கள் வியந்தனர் – பின் தொடர்ந்தனர்.

ஒரு போதி குடில். உள்ளே இளம் துறவி நுழைந்தான். பல்லவன் புதல்வன் உள்ளே நுழைய எத்தனிக்கவும் – சைகையால் – “அனுமதி இல்லை உனக்கு” என்றான் துறவி.

வாய் மூடி மௌன மொழி பேசி தலை குனிந்து நின்றான் பல்லவன் புதல்வன். உள்ளுக்குள் இருந்து நறுமணம் வீசியது. உள்ளே இருந்த துறவியிடம் இளம் துறவி ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் முதுகதான் தெரிந்தது பல்லவனுக்கு.

சாம்பிராணி புகை உள்ளே இருந்து வந்தது. முனிவர் எழுந்தார். திரும்பினார்.

“சித்தப்பா” – பல்லவன் புதல்வன் ஆச்சர்யபட்டான்.
“அட! புத்தி தார பல்லவன் உயிருடன் உள்ளாரா ?” – வீரர்கள் வியந்தனர்.

இன்னும் உடல் வனப்பு குறையவில்லை புத்தி தார பல்லவனுக்கு ஆனால் – தெய்விகம் கூடி இருந்தது. மொட்டை போட்டிருந்தார். காவி அம்சமாய்
பொருந்தி இருந்தது புத்தி தாரருக்கு.

“பல்லவர் இளவரசே. உள்ளே வாருங்கள்” – புத்தி தார பல்லவர் அழைத்தார்.
“சொல்லுங்கள் சித்தப்பா” – பல்லவன் புதல்வன் உள்ளே நுழைந்தான்.
“நான் பந்தம் அறுத்தவன் – என்னை சித்தப்பன் என்று அழைக்காதே” -புத்தி தரர் சொன்னார்
“அப்படி என்றால் ?”
“என் தீட்சை பெயர் – தர்மன். தர்மர் என்று நீ கூப்பிடலாம்”
“சரி”
“நீ துறவிகளை விரட்டிநாயா ?”
“அது வந்து சித்தப்பா … ” பல்லை கடித்தான் இளவரசன்.
“என்னை துரத்த வேண்டிய நிலை உனக்கு இல்லை. நான் இந்த மண்ணை விட்டு பயணிக்கிறேன். வருகிற பிரசன்னா தாரரின் 67 ஆம் பிறந்தநாளில்”
“இந்த வயதில்”
“முதுமை என் எண்ணத்தில் உள்ளது. உடல் இன்னும் இரும்பே”
“பாதுகாப்பு”
“வேண்டியது இல்லை”
“சோழர்கள் ?”
“அவர்களிடம் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை”
“வந்தாலும் நான் காப்பேன் தர்மரே”
“தேவை இல்லை. என் பயணம் புத்தம் வளர்க்கும். தமிழ் மண்ணில் புத்தம் அழியலாம். ஆனால் -உலகிற்கான புத்தம் தமிழ் மண்ணில் இருந்தே பயணிக்கும்” – தர்மர் தீர்மானத்துடன் சொன்னார்.

இளவரசன் வீரர்களை அழைத்துக்கொண்டு திரும்பினான். மாலை மயங்கியது. நிலவு உச்சிக்கு வந்தது. தர்மரின் பயணத்திற்கு தடை செய்ய ஒரு கூட்டம் தயாரானது.

தர்மர் அன்று தன் பயணத்தை தொடங்கினார். ஆனால் அவர் பயணம் ….?

தொடரும்

பகுதி 12 : குங் ப்ஹு தமிழன்

படை வீரர்கள் குவிந்தனர் பல்லவனின் புதல்வனை சுற்றி. சிலர் இந்த காரியத்துக்கு காரணமானவனை கையும் களவுமாய் பிடித்தனர்.
மொட்டை தலை. மௌன மொழி பேசும் இதழ்கள். சுற்றி கட்டிய காவி உடை. மண்டையில் முடிதான் இல்லையே ஒழிய – கையில் ஆயிரம் யானை பலம்.

பல்லவன் தன் பிடரியில் கையை வைத்து நாடி நிரம்பெல்லாம் அடங்கி கிடந்தான். சிம்ம வர்மனின் பேரனுக்கே எவனோ வர்மா வித்தை காட்டுகிறான். நேரம் – எல்லாம் நேரம்.

கொஞ்சம் கடினப்பட்டு எழுந்தான் பல்லவ இளவரசன். ஒரு புறம் காலும் ஒரு புறம் கையும் சொல்வது கேட்கவில்லை.

“நீ யார் ?” – பல்லவ இளவரசன் கேட்டான்.

இளம் துறவி எதுவும் சொல்லவில்லை.

“சொல்” – பல்லவ இளவரசன் கர்ஜித்தான்.
இளம் துறவி எதுவும் சொல்லவில்லை.

“இளவரசே! அனுமதித்தால் உங்கள் வலி தீர்க்கிறேன்” – இப்பொது இளம் துறவி வாய் திறந்தான்.

சொன்னபடி வந்தவன் – வலி தீர்த்தான். கழுத்தில் உள்ள வர்ம புள்ளிகளை நீவி விட்டான். அவனுக்கு நித்தி சொச்ச வர்ம புள்ளிகளும் அத்துபடி போல இருந்தது. ஒரு தாய் தன் மகவுக்கு செலுத்தும் கருணை அவன் கண்களில் இருந்தது.

“சொல்! எங்கே அவர் ?” – பல்லவ இளவரசன் கேட்டான்
“அவர் என்றால் ?” – இளம் துறவி பதில் கேள்வி கேட்டான்
“என் சிறிய தந்தை. பல்லவத்தின் அரச குடும்பத்தவர்”
“யாரை கேட்கிறீர்கள்? நீங்கள் ஓய்வெடுங்கள்”
“உன் ஆசிரியரைத்தான் கேட்கிறேன்””
“என் ஆசிரியரா ?” – இளம் துறவி கேட்டான்
“ஆம்! புத்தி தார பல்லவர் எங்கே ?”
“புத்தி தாரர் இல்லை”
“பொய்”
“பிரசன்னா தாராரும் இல்லை. புத்தி தாராரும் இல்லை”
“பொய்”
“எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்கிறீர்கள் ?” – சிகிச்சை அளித்தவாறே கேட்டான் அந்த இளம் துறவி.
“உள் மனம் சொல்கிறது”
“என்ன புத்தி தாரரை கொல் என்றா ?”
“புத்த துறவியே! உங்களின் கால்களில் விழுகிறேன். பல்லவரை காண்பியுங்கள்”
“ஒரு சத்தியம் வேண்டும்”

தன் வலது கையை நீட்டினான் இளம் துறவி. இளம் துறவியின் மடியில்தான் பல்லவ இளவரசன் கிடந்தான். படை வீரர்கள், புத்த துறவிகள் எல்லோரும் பார்த்தனர்.

அந்த இளம் துறவியின் கைகள் பஞ்சு மாதிரி இருந்தன.

“என்ன சத்தியம் ?” -இளவரசன் கேட்டான்.

எங்கேயோ இருந்து ஒரு போதி மர இல்லை பறந்து வந்தது. புத்த முனியின் கையில் அமர்ந்தது.

“நான் இந்த புத்த முனிவர்களை காக்க சத்தியம் கேட்க மாட்டேன் ”
“பின்”
“அவர்களுக்கு என் ஆசிரியர் தற்காப்பு கலை கற்று தந்து உள்ளார்”
“என்ன சத்தியம் வேண்டும் ?”
“தர்மர் கிளம்ப உள்ளார். அதற்கு முன் அவரை வந்து பாருங்கள்”
“தர்மரா ? அவர் யார்?”

கைகளில் சத்தியம் விழுவதாய் இல்லை. அரசியலில் வாக்கு தந்து வாழ்க்கை அறுக்க பல்லவனுக்கு தெரியாது.போதி இலை எழுந்து நின்றது. மீண்டும் பறக்க எத்தநிதது.

பல்லவன் இளம் முனியின் கையில் சத்தியம் வைத்தான். தூறியது.மின்னல் வெட்டியது. வீரர்கள் அமைதியாய் எல்லாம் பார்த்த்தனர்.

பல்லவ இளவரசன் எழுந்து நின்றான் -இளம் துறவியின் துணையோடு.

“தர்மர் யார் ? அவரை நான் ஏன் பார்க்க வேண்டும் ?” – பல்லவ இளவரசன் கேட்டான்.

விழியோடு விழி நோக்கினான் இளம் துறவி.

புத்தம் சரணம்.

தொடரும்

பகுதி 11 குங் ப்ஹு தமிழன்

பல்லவ மண் எங்கெல்லாம் ஆண்டதோ அங்கெல்லாம் போதி தர்மமும் இருந்தது.
சிம்ஹவர்ம பல்லவன் கடைசி காலத்தில் போதி தர்மம் தழுவினான். சிம்ஹவர்ம பல்லவனின் மகன் தன் தற்போதைய பல்லவன்.

காலை கருக்கலில் காஞ்சி மாநகரம் சோம்பல் முறித்து கொண்டிருந்தது. பல்லவனின் ஆணை தளபதிக்கு வந்திருந்தது. பல்லவ மன்னனின் மகன் இளவரசன் ஒரு படை அணியை வழி நடத்திவந்தான். அந்த படயநிக்குதான் அந்த கட்டளை போனது.

குதிரைகளுக்கு காலை ஆகாரம் போடப்பட்டது. நல்லசிவனும் தன் குதிரைக்கு புல்லும் கொள்ளும் வைத்தான். குதிரை கனைத்தது. ‘பிரசன்ன தாரர் எங்கே ?’ என்று கேட்பது போல் இருந்தது.

“பிரசன்னா தாரர் கடவுளிடம் ஐக்கியம் ஆகிவிட்டாராம்” – நல்ல சிவன் சொல்லிக்கொண்டே கொள்ளை வைத்தான்.

காலை கருக்கலில் காஞ்சியின் படை வீரர்கள் கூடினர். அவர்கள் உள்ள நாட்டு பாதுகாவலர்கள்.
குதிரைகளின் கால் நடை சத்தம் காஞ்சி முழுதும் கேட்டது. வீரர்கள் யாருக்கும் அவசர அழைப்பின் காரணம் தெரியாது.

“அடே! குப்பா என்ன வேலையாம் ? நம்மை எல்லாம் இங்கே கூட சொல்லி உள்ளார்கள்” – குதிரையில் இருந்த ஒருவன் மற்று ஒருவனிடம் கேட்க.
“யாருக்கு தெரியும்! அவசர அழைப்பு! அரச கட்டளை! என்று திருக்குறள் மாதிரிதானே செய்தி வந்தது”
“உனக்கும் அப்படிதான் வந்ததா ?”
“அட! அமமாங்குறேன்”
“என்னவாக இருக்கும்? -சோழ தூதன் ஒருவன் வந்துவிட்டு போனதாக செய்தி” –

ஒரு அரச குதிரை உள்ளே தன் கால்களை மெதுவாக வைத்து நடை பயின்று வந்தது.கூட்டம் அமைதியானது. அதில் இருந்த வீரன் கையில் வேலும், இடையில் வாழும் கொண்டிருந்தான். தன் வலதுகையில் சிங்கம் பொறித்த முத்திரை மோதிரம். முறிக்கிய மீசை. கூறிய விழிகள். சிம்ஹா வர்ம பல்லவன் பேரன் வீர மல்ல பல்லவன் மகன் என்பது சொள்ளவேண்டியதாய் இல்லை.

பல்லவ இளவரசன் – படை அணியின் தலைவன் பேச ஆரம்பித்தான்.
“வீரர்களே! நம்மை கடமை அழைக்கிறது. காஞ்சியின் அரசர் சோழருக்கு வாக்கு அளித்து உள்ளார். போதி தர்மத்தை சார்ந்த்தவர்களை தற்போதைக்கு காஞ்சியை விட்டு மட்டும் அல்ல பல்லவ நிலத்தை விட்டே வெளி ஏற்ற”
வீரர்கள் பேச ஆரம்பித்தனர் தங்களுக்குள்.
“இது என்ன கதைய இருக்கு. சிம்ஹவர்மரே போதி தரமத்தை சேர்ந்தார். அவர் கடைசி மகன் புத்தி தார பல்லவனும் சேர்ந்துவிட்டார்.இந்த தருணத்தில் ….”
கூட்டம் சலசலத்தது.

“வீரர்களே! அமைதி! இது காலத்தின் கட்டளை! புறப்படுங்கள்! ” – பல்லவ இளவரசன் ஆணை இட்டான்.

குதிரைகள் வீறு கொண்டு கிளம்பின. புத்த குடில்கள் உள்ள பகுத்திக்குள் நுழைந்தன. புத்த குடில்கள் காஞ்சியின் கடைசி வீதியும் தாண்டி எல்லையில் இருந்தன.

வீரர்கள் குடிலுக்குள் சென்று செய்தி சொல்லினர். துறவிகள் கண்ணில் நீர் வார்த்தனர். வருத்தம் கொண்டனர். துறவிகள் மறுத்தனர்.

ஒரு குடிலுக்குள் –
“வீரனே! என்ன செய்தி இது? சிம்ஹவர்ம பல்லவர் எங்களை சேவை செய்ய அனுமதி வழங்கிய பத்திரம் எம்மிடம் உள்ளது” – துறவி ஒருவர் சொன்னார்.
“துறவி அவர்களே வெளியில் வாருங்கள். இளவரசர் நிலவரம் சொல்லவார்” – வீரன் சொன்னான்.
“சரி வருகிறேன்”
வெளியில் வந்து பார்த்தால், இளவரசனை சுற்றிலும் துறவிகள்.
“புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் சோழ படையுடன் மோத தற்போது ஆயத்தமாய் இல்லை” – இளவரசன் கத்தினான்.
“நாங்கள் வெளியேறமுடியாது” – துறவிகள் சொல்லினர்.
“என்ன வெளிஎரமுடியாதா ?” – இளவரசன் கேட்டான்.
“ஆமாம்” – துறவிகள் தீர்மானமாய் சொல்லினர்.
“எங்கள் பலத்தை பயன் படுத்த வைக்காதீர்கள்”
“நாங்கள் செல்ல முடியாது இளவரசரே. முடிந்ததை செய்யுங்கள்” – மீண்டும் துறவிகள் தீர்மானமாய் சொல்லினர்.
“வீரர்களே! கடவுளிடம் மன்னிப்பை கூறிவிட்டு இந்த துறவிமார்களை அப்புற படுத்துங்கள். இறைவா எனையும் மன்னியும் ” -இளவரசன் வானம் நோக்கி இறைஞ்சினான்.

வீரர்கள் தங்கள் பலம் கொண்டு அப்புரபடுத்தினர். அப்போத்துதான் அந்த ஆச்சரியம் நடந்தது. இளவரசன் குதிரையில் இருந்து சரிந்தான். குதிரை திமிறியது. வீரர்கள் இளவரசரை நோக்கி ஓடினர்.

“இளவரசே ….” – வீரர்கள் கத்தினர்.

பல்லவர் புதல்வன் சரிந்தான்!

தொடரும்