அப்பாவும் நானும் 11 : உன் தந்தை என் விருப்படியே!


புன்னகை பூவாய் வெளியேறினாலும் – அது பூகம்பத்தின் அரிதாரம் என்று எனக்கு தெரியும். ராயப்பேட்டை மருத்துவமனை பக்கத்தில் தான் அவள் வீடு. இது ராவ் பகதூர் வீடு இல்லை. அவள் ராவ் பகதூரின் வீட்டில் இல்லை. அவளும் இந்தியள் தான் ( இந்தியன் ஆண் பால் இல்லையா ? ).

அப்பாவின் ஆங்கில அடிவருடி தனம் பிடிக்கவில்லை ஆனால் அப்பவே இல்லை. என்ன இருந்தாலும் அவர்தானே அப்பா.

கோபத்தில் இருந்த அவளிடம் என்ன சொல்ல்வது. அது ஒரு மாடி வீடு. என் செருப்பை அவசரகதியில் ஏறுகிற போதே உதறி விட்டே ஏறினேன்.

உள்ளே அவளது அத்தை.

“தம்பி, வயசு பொண்ணு இருக்கிற வீட்க்குல வாலிப பசங்க வர கூடாது” – அத்தை உஸ்ணத்தில் சொன்னார்.
“அட! ரஷ்யாவ பாருங்க …” – என் செங்கொடி இதயம் பேச ஆரம்பித்தது.
“தம்பி நம்ம ஊற நான் பாக்கணும். கட்டி கொடுக்கணும்ல”
“சரி! கிளம்பிறேன்”

அவளை மருத்துவமனியில் சந்திக்க வேண்டும். அங்கேதான் நம்ம நீலகண்ட மாமா இருக்காரே.

அடுத்த நாள். நான் மருத்துவமனிக்கு போனேன். அவள் இருந்தால். என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி.

“லலிதா” – நான் ஆரம்பித்தேன்.
“என்னிடம் இனி மேல் பேசாதீங்க” – அவள் கொபபட்டாள்.
“உங்க அப்பாவ பத்தி …”
“என் பிரப்பையே கேவல படுத்தீடீங்க”
“அட உங்க அம்மா சிவத்துக்கு ஒரு வகையில தங்கைதான்”
“நெசமா ?”
“ஆமா! அது வந்து …”
“எப்படி ?”
“அவர் உங்க தூரத்து உறவு”
“அமாம் நாங்களும் முதலி தன”
“அம்மம் முதல நீங்களும் முதளிதானே”
“நாங்க எப்பவுமே”
“அமா …”
“அவர் ஆனா எங்க வீட்டுக்கு வந்ததே இல்ல …”
“எப்படி வருவார் ?”
“ஏன் அவரால நடக்க முடியாதா ?”
“அதெல்லாம் முடியும். தண்டிக்கே நடந்து போனவர்”
“வேதாரன்யம்னு சொன்னீங்க”
“ஆமா வேதாரண்யம்”
“அப்புறம் ஏன் ?”
“உங்க அப்பா ஒரு காங்கிரஸ்காரரை எப்படி உள்ளே விடுவார்”
“அமா இல்ல ?”
“அமா இல்ல இல்ல … அமா தான்”
“உண்மையா?”
“பின்ன கதையா”
“மன்னிக்கணும் நீங்க என்ன. இது புரியாம உங்ககிட்ட கொபிச்சுகிட்டேன்”
நான் ரொம்பவே உளறினாலும் அவளே ஒரு வழியாய் குழம்பி என்னை காப்பற்றினாள். முதல்ல அவள் முதலி — மன்னிக்கணும் நான் உலர்கிறேன். அப்பாவுக்காக எதுவும் செய்ய தாயாராக உள்ளேன்.உளறவும்.

பெரிய தெரு வந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது. யாரோ நாளை வானொலி ஒளிபரப்பை குழாய் வைத்து ஒலி பரப்ப உள்ளனராம்.

நாளைதான் காந்தியின் பிறந்தநாள் அவர் இறந்த பின். அட ஒலி பெருக்கி ஒலி வாங்கி … குழாய் … வானொலி ….

எப்படி இந்த சதனாடிகளிடம் இருந்து அப்பாவை காப்பது. அட இறைவா!
-தொடரும்

Advertisements

அப்பாவும் நானும் 10 : லூசாப்பா நீ ?

கடைசி அணிவகுப்பு : சென்னையில் விடுதலைக்கு முன் கடைசியாய் வெள்ளை அரசிற்கு!

கடைசி அணிவகுப்பு : சென்னையில் விடுதலைக்கு முன் கடைசியாய் வெள்ளை அரசிற்கு!

ராவுத்தர் அய்யா வாயை மூடினார். நான் மூச்சு வாங்கினேன். அவர் கிளம்பினார்.

நான் வாசல் வரை வந்தேன்.

“அவருக்கு என்னப்பா ஆச்சு ? காந்தி செத்ததுல புத்தி கித்தி … ?”
ராவுத்தர் அய்யா கேட்டதற்கு பதில் சொன்னேன். அது ஒரு பெரிய கதை.

எல்லோருக்கும் இந்த கதையை சொல்ல வேண்டும். அதுதானே என் வேலை. அப்பா ஒரு பொக்கிஷம் அவரை காப்பாற்ற வேண்டும். சுதந்திரம் மாதிரி அப்பா ! காத்தே ஆக வேண்டும்.

அவரிடம் கதை சொல்லி விட்டு பார்க்கிறேன் – என் தேவதை, வாசல் படியில். வரவேற்றேன். அவள் என்னை பார்க்க வரவில்லை அப்பாவை பார்க்க வந்திருந்தாள். அவரின் செவிலி இல்லையா அவள்.

நான் அவளை அப்பாவின் அறைக்கு அழைத்து சென்றேன். நிலவு நடக்க நான் அவளை பூவை நறுமணம் தொடர்வது போல் அவளோடு போனேன்.

அப்பா மீண்டும் மெத்தையில் படுத்திருந்தார். காந்தி ஞாபகம் அவருக்கு. அவர் தான் காந்தி மாதவன் ஆயிற்றே. வெள்ளை புடவையில் நீல கரை செவிலிக்கு சரியான பொருத்தம்.

“எப்படி இருக்கீங்கள் அய்யா ?” – அவள் ஆரம்பித்தாள்
“எங்கம்மா இருக்கிறது – காந்தி செத்டுடாருனு சொல்ற கூட்டம் வந்திருச்சு. காந்தி மகாத்மா இல்லையா ?” – என்றார் அப்பா.
“எல்லாருக்கும் இல்லாமல் இருக்கலாம் அய்யா. ஆனா அவர் மகாத்மா”
“என்னம்மா தத்துபித்துனுட்டு ? ”
“கடவுளே எல்லோருக்கும் ஒண்ணில்லை தலைவர்கள் எப்படி அய்யா ?”
“அதுவும் சரி”

அப்பா சொல்லிவிட்டு என்னை பார்த்தார். நான் அவரை பார்க்கவில்லை. நான் அவளை அல்லவா பார்த்துக்கொண்டிருந்தேன்.

“டேய் …”
“என்னப்பா ” – உலகுக்கு வந்தேன் நான்.
“யாருடா பொண்ணு ?”
“லலிதாவா ?”
“ஆமா”
“அவுங்க ! வேதரன்யதுல உப்பு சத்யகிரகத்துல கலந்துக்கு போய் இறந்து போனாரே சாம்பசிவம். அவரோட சித்தி பொண்ணு”
“அட! சிவம் உறவா நீ ?” – அவளை பார்த்தது அப்பா கேட்டார்.

அவள் கோபம் கொப்பளிக்க என்னை பார்த்தாள். நான் சிரித்தேன்.

அவள் அப்பாவை பார்த்து சிரித்து விட்டு கிளம்பினால்.

“வெட்கமடா” – அப்பா என்னை பார்த்து சொன்னார்.

கொடுமைட சாமி. அவள் எந்த கோபத்தில் போனாலோ. அனால் நல்ல நடிகை – அப்பாவுக்கு தன் கோபத்தை காட்டாமல் போனாள்.
கோபம் இல்லாமல் இருக்குமா ? பின்னே … அவளுக்கு சாம்பசிவ முதலியார் யார் என்றே தெரியாது. அவருக்கு இவள் உறவா ?

இவள் ராவ்பஹதூர் பொண்ணு என்றால் அப்பா …. ஆஹா… நெஞ்சு வலி! நல்ல நேரம் எனக்கு. வாழ்க கோமா!

-தொடரும்

அப்பாவும் நானும் பகுதி 9


அப்பாவும் நானும் பகுதி 8

அப்பாவும் நானும் பகுதி 7

அப்பாவும் நானும் பகுதி 6

அப்பாவும் நானும் பகுதி 5

அப்பாவும் நானும் பகுதி 4

அப்பாவும் நானும் பகுதி 3

அப்பாவும் நானும் பகுதி 2

அப்பாவும் நானும் பகுதி 1

புலிகள் வீழ்ந்த நிலையில் மகிந்தவின் தெரிவு !

இந்தியாவில் இருக்கிற போது சீனத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. இப்போதும்தான் சீனம் ஒரு புதிர். வாழ்க சீனம்.
அது போலவே ஈழத்தில் நடப்பதும் முழுமையாக தெரியாது ( இப்பவும் முழுமை என்று சொல்ல முடியாது ஆனால் அதிகமாகவே தெரியும் )

பிரபாகரன் இல்லை என்ற நிலையில் ( இன்னும் ராஜபக்சே அப்படி உறுதியாக நம்புகிறாரா என்று தெரியவில்லை ) நடந்த தேர்தல்.

பொன்சேக தோற்றார் என்பது என்னை பொறுத்த வரை ஒரு பெரிய விடயம் அல்ல. இந்த தேர்தலில் தமிழர்கள் பெரும்பாலும் யாருக்கு எதிராக வாகளிதனரோ அவர் பொறுப்பு ஏற்று உள்ளார்.
இது தமிழர்களின் வாழ்வை எந்த அளவு பாதிக்கும். ஆனால் ராஜபக்சே அவ்வளவு எளிதாக தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என்று நம்புவோம்.

பொறுப்பு ஏற்ற உடன் அவர் அளித்த நேர்காணல் ஒன்றை தான் எனக்கு சொல்கிறது. தான் இந்தியா சார்ந்தவனாகவே இருப்பேன் என்று அவர் சொன்னதே.

எனக்கு இப்போதெலாம் ஒரு சந்தேகம் – இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறிவிட்டதோ என்று. அவர் தான் இந்தியாவின் போர் நடத்துவதாக சொன்னார். இன்று இந்த அறிக்கை.

இலங்கை இந்தியாவின் அங்கமாக இருந்தால் – ஒரு மாநிலம் கிட்டும். அதற்கு தமிழ் ஈழம் என்று பெயர் சூடிக்கொள்லாம். அவர்களுக்கு அது ஒரு தெலுங்கனா.

இந்தியாவில் கொஞ்சம் மக்களாட்சியின் நன்மைகள் உள்ளன. ஆனால் இது போராளிகளின் சிந்தனையோ நோக்கமோ அல்ல. சொல்லப்போனால் அவர்களின் நோக்கத்திற்கு எதிர் ஆனது.

கூகிள் விரும்பாத தமிழ் பதிவர்கள் !?

கூகிள் விரும்பாத தமிழ் பதிவர்கள் !?

கூகிள் விரும்பாத தமிழ் பதிவர்கள் !?


சில நாட்களில் பல பதிவுகள் படித்த பின், சில உண்மைகள் தெரியவந்தது. ஒரு பதிவை தவிர எந்த பதிவுக்கும் நான் பின்னோட்டம் இட வில்லை எனபது வேறு கதை. நான் பெரிய சோம்பேறி.கூகிள் தமிழை விரும்புகிறதா ? என்ற கேள்வி என்னுள் எழுந்ததது. முதலில் ஒன்றை புரிந்துகொள்ளவும் கூகிள் மீது குற்ற பத்திரிகை வாசிக்கும் பதிவு அல்ல இது. ஆனால் சில ஆய்வுகளையும் சிந்தனைகளையும் தூண்டும் என்கிற நோக்கில் எழுத்தப்படும் பதிவும்.

நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் பதிவு எழுதிவருகிறார். அவரது பதிவை பிற மொழி நண்பர்களும் படித்து வருகின்றனர். குறிப்பாக வட இந்திய நண்பர்கள் படிப்பதற்கு ஏதுவாக அவர் அதில் கூகிள் மொழி பெயர்ப்பு வசதியை இணைத்து உள்ளார். எனது பதிவை நான் வட இந்திய நண்பர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதாத காரணத்தினால் இந்த மொழி பெயர்ப்பு வசதியை பற்றி அதிகம் ஆராயவில்லை. ஆனால் நான் அறிந்து கொண்ட உண்மை ஆங்கில பதிவுகளை கூட தமிழ் மொழியில் கூகிள் மொழி பெயர்க்க முடியாது என்பதே.

சில உண்மைகளை வட இந்திய ஊடகங்களே வைகின்றன. தமிழ் நாடுதான் இந்தியாவில் அதிக பதிவர்களை கொண்டு உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை ஒரு ஆங்கில காட்சி ஊடகம் ( CNN IBN / IBNLIVE.கம ) இந்திய பதிவுலகின் தலை நகரம் என்று சொன்னது எனது நினைவில் உள்ளது. பல பதிவுலக சந்திப்புகள் தமிழ் கூறும் நல்லுலகில் நடை பெறுகின்றன. சிங்கப்பூரின் வசந்தம் தொலை காட்சியில் ஒரு முறை பதிவிடுவது எப்படி என்று சொல்லப்பட்டது. மீண்டும் ஒரு முறை தமிழ் பதிவர்கள் பற்றி நான் முன்னர் கூறிய வட இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கூகிள், சொல்லப்போனால் தமிழில் இருந்து ஆங்கிலம் செய்யும் மொழி பெயர்ப்பு கருவியை செய்தால் மிக பயன் உண்டு.

அடுத்த உண்மை என்னை வேறு தளத்தில் யோசிக்க தூண்டியது. ஐக்கிய அமெரிக்க மாகாண தமிழர் ஒருவரின் கருத்து இது. அதாவுது கூகிள் தமிழ் பதிவில் ad sense வசதி தருவதில்லை என்பது. அதிக பதிவர்கள் உள்ள தமிழ் கூறும் நல்லுலகில் கூகிள் ஏன் ஒரு வர்த்தக லாபத்தை இழக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இதனால் பதிவருக்கே லாபம் இல்லை என்றாலும் – இது என்னை யோசிக்க வைத்த ஒன்றே.

WordPress வசதியை பயன்படுத்தும் காரணத்தால் நான் இவை பற்றி பெரிதும் யோசிக்காதவனாய் இருந்தேன் என்பதே உண்மை. பதிவுலகம் இது தொடர்பாக என்ன செய்து உள்ளது என்று எனக்கு தெரியாது.

அப்பாவும் நானும் தொடரின் அடுத்து பகுதி அடுத்த பதிவில்: எல்லோரும் அப்பாவும் நானும் தொடர் படித்து கருத்து கூறவும். நன்றி

குறிப்பு: இந்த பதிவு கூகிள் transliteration கொண்டு எழுதப்பட்டதே! வாழ்க கூகிள்!

இனிமேல் நோ டார்ச்சர் ! – தேசியவிருது பாலா சத்யம்

விருது வாங்கிய கடவுள் : பாலா

விருது வாங்கிய கடவுள் : பாலா

தமிழன் ஒருவர் மீண்டும் நாங்கள் வெற்றியாளர்கள் – கலைஞானிகள் என்று சொல்லி இருக்கிறார். நான் கடவுள் வெற்றி பெற்று உள்ளது.

கடவுள் தான் வெற்றிபெற்றுள்ளார். பாலுமஹெந்திராவும் இளையராஜாவும் இனிமேல் இப்படி எல்லாம் அப்பாவி சனங்கள டோர்ச்சேர் பண்ணக்கூடாது என்று பாலாவிடம் சத்யம் வாங்கி உள்ளனராம். நன்றி நன்றி நன்றி.

பாலா ரொம்பவே விருது பெரும் கடவுள் தான். ஆனால் தமிழ்நாட்டின் தருதலைங்க சிலத்துக்குதான் தெரியவில்லை. என்ன செய்யறது ?

கஞ்ச விற்பதும் – பிச்சை எடுப்பதும் எல்லோர் கண்களுக்கும் தெரியும் விஷயம் இல்லை. பாலா கண்களுக்கு தெரிகிற விஷயம்.

பாலா சைக்கோ படம் எடுக்கிறவர் என்கிறான் என் நண்பன் ஒருவன். பாலா கலையுலக திலகம் என்கிறான் இன்னொருவன்.

எது எப்படியோ இனிமேல் இருட்டு உலகத்தில் என் பயணம் இல்லை என்று பாலா சொல்லி உள்ளார். பாலா இந்த களத்தில் எப்படி வெற்றி பெறுவார் என்றுபார்ப்போம்.

இதுவே அவரது படத்தை எதிர்பார்க்கவைக்கிறது, வாழ்த்துக்கள் பாலா!

அப்பாவும் நானும் (அ நா) 9 : அடிமையான இந்தியா!

முதலில் தினமணி நல்லது செய்தாலும் – எனக்கு என்னமோ கொஞ்சம் பயமாகவே இருந்தது. அப்பாவை சந்தோசமாக வைப்பது என்பது இன்னொரு இந்தியாவை பராமரிப்பது போல். அவ்வளவு எளிதல்ல.

தினமும் தினமணி எங்கள் வீட்டில் பொய் சொன்னது. நாங்கள் அப்பாவை வெளியில் விடாமல் பார்த்துக்கொண்டோம். ஆனால் அப்பா கொஞ்சம் கொஞ்சமாய் தனிமை கொல்வதை சொல்லாமல் சொன்னார்.

விட்டத்தை பார்த்துக்கொண்டு இருப்பது. தாடையில் கை வைத்தபடி இருப்பது. எதையோ இழந்தது போல் இருப்பது.இவைதான் அப்பாவின் அதிகபட்ச செயல்பாடுகளாய் இருந்தன.

நான் பொதுவுடைமை கூட்டங்களுக்கு போவதை குறைத்துக்கொண்டிருந்தேன்.

பிரிட்டிஷ் இந்தியாவின் அந்திம நாட்கள்: நேரு, பேட்டன் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவை ஒத்துகொண்டவர்கள்

பிரிட்டிஷ் இந்தியாவின் அந்திம நாட்கள்: நேரு, பேட்டன் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவை ஒத்துகொண்டவர்கள்


அப்பாவோடு நான் என் நேரத்தை செலவளித்தாலும் – அப்பாவுக்கு தனிமை வலித்தது. எதிரபாரதவிதமாக அன்று ராவுத்தர் மீரான் வந்திருந்தார். அவரும் அப்பாவும் நல்ல நண்பர்கள். அவருக்கும் இந்தியா வெட்டப்பட்டதில் உடன்பாடு இல்லை. சில சாத்துகுடிகளோடு வந்தார்.

தலையில் இசுலாமியர்கள் குல்லா. நல்ல தாடி. ஒரு தேங்காய் பூ துண்டு; தடினமான கண்ணாடி; கட்டம் போட்ட லுங்கி.

அப்பாவின் அறைக்குள் நுழைந்தார். நானும் இருந்தேன். ஆப்பாவின் முகம் தாமரையாய் மலர்ந்தது.

“வாங்க ராவுத்தர் அய்யா ” – அப்பா மகிழ்ச்சி ஏந்தி வரவேற்றார்.

ராவுத்தர் என்றல் தமிழை தாய் மொழியாக கொண்ட இசுலாமிய சகோதரர்கள் – அவர்களும் நாமும் ஒன்று – மதம்தான் வேறு . பாய் என்றால் உருது பேசுபவர்கள். இது அப்பா ஒரு முறை என்னிடம் சொன்னது.

“நல்லா இருக்கீங்களா ? ” – ராவுத்தர் நலம் விசாரித்தார்.
“எனக்கு என்ன குறை ? இப்ப கொஞ்ச நாளா இவனும் அந்த கொடி புடிக்கிற கூட்டம் பக்கம் அவளவா போறதில. மகளை பத்தி சொல்லவே வேண்டாம். தங்கம் அவள். என்ன உடம்பு சரியில்லைன்னு வெளில போறதில்லை. அவளவுதான். நீங்க வந்தந்து ரொம்ப சந்தோசம் ராவுத்தர் அய்யா”
“சந்தோசம்”
“நீங்க எப்படி இருக்கீங்க ?”
“நான் நல்ல இருக்கேன். ஆனா சுததந்திரதுலதான் சூனியம் வச்சிடாங்கலே ?”
“சூனியமா ?”
“பேப்பர் படிக்கலையா ? இந்தியா இப்ப ….”
“அடப்போங்க ராவுத்தர் அய்யா. நேத்துதான் காந்தி ஜின்னாஹ் கிட்ட பேசி மனச மாத்திடாரே …”
அப்பாவின் உலகத்தில்தான் இன்னும் இந்தியா அடிமை இந்தியா தானே. காந்தி இன்னும் உயிரோடுதானே இருக்கிறார்.
“காந்தியா … ?”
“ஆமா”
“அவருதான் ….”

எனக்கு பயம் பற்றிக்கொண்டது. அப்பா என் கையாய் விட்டு போவது போல் உணர்ந்தேன். அடடா இவர் நல்ல தருணத்தில் வந்திருக்காரே. முதலில் அப்பாவின் நண்பர்கள் எல்லோரிடமும் அப்பாவின் நிலையையும் என் நாடகத்தையும் ( நகைச்சுவை நாடகம் ? ) விளக்கவேண்டும். இல்லாவிட்டால் சனி சப்பணம் போட்டு அமர்ந்து கொல்லும் ( இது சொற் பிழையில்லை – கொல்லும் ).

நான் ராவுத்தர் அய்யாவின் வாயை பார்த்தேன். அது வாழ வைக்கும் வாயா ? வீழ்த்தவந்த வாளா ?

மார்க்ஸ் மகாதேவா …. உனக்கு இரண்டாம் பரீட்சை. வென்றுவிடுவாயா ? மனம் கேட்டது.

-தொடரும்

சன், விஜய் மற்றும் எல்லா டிவி தர்மம் ?

உலகத்தின் ஒவுவொரு அமைப்பும் தனக்கு என்று ஒரு ஒழுக்கத்தை வைத்திருக்க வேண்டும். அதை காப்பாற்ற வேண்டும் என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்து – ஒரு ஒழுக்கம் இல்லாத, கட்டுப்பாடு இல்லாத வர்த்தக பண்பு உருவாக ஆரம்பித்துவிட்டது.

தொலைகாட்சிகள் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் விதிகளே விதிகளே விமர்சனத்திற்கு ஆளாகும் போது, விதி விளக்குகள் அல்லது விதி இல்லாதவைகள் விமர்சனத்திற்கு அப்பால் இல்லை.

இந்தியாவில் சில கேள்விகள் கண்டிக்கபடுகின்றன அல்லது புரம்தள்ளப்படுகினறன. இறந்த மனிதர் ஒருவரை குறை சொல்வது தவறு என்று என் சின்ன வயதில் சொல்லப்பட்டது. இன்றும் அதன் முழு அர்த்தம் எனக்கு புரியவில்லை. கோட்சே குறை சொல்லப்படவேண்டியவர் சிலருக்கு. காந்தியே சிலரால் குறை சொல்லப்படுகிறார்.

மும்பை ஒரு நாள் சில ஆயுததாரிகளால் கையில் எடுக்கப்பட்டபோது ௦- ஊடக கண்கள் அதிலும் டிவி கண்கள் விழகவே இல்லை. அவை ஒரு வர்த்தக எண்ணம் கொண்டு விளங்கினவே தவிர நாட்டு நலன் கொண்டு அல்ல. உலகத்தின் ஒவுவொரு அமைப்பும் தனக்கு என்று ஒரு ஒழுக்கத்தை வைத்திருக்க வேண்டும். அதை காப்பாற்ற வேண்டும் என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்து – ஒரு ஒழுக்கம் இல்லாத, கட்டுப்பாடு இல்லாத வர்த்தக பண்பு உருவாக ஆரம்பித்துவிட்டது.

யாரையாவது அழ செய்து பெயர் வாங்க பல நிகழ்ச்சிகள் முன்னியில் நிற்கின்றன. நமது மனம் விரும்பும் நிகழ்ச்சியும் இருக்கலாம் அதில். நடன நிகழ்ச்சிகள் பல நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோம் என்கிற நிலை உள்ளது. ஒருவரின் மனையவி இநோருவரின் கணவனுடன் ஆடுவது நாம் ஏற்றுக்கொள்ளும் பண்பாடு ஆகிவிட்டது.

பேச்சரங்க நிகழ்ச்சிகள் மங்களம் பாடி முடிக்க யாரவது அழவேண்டும். நன்றாக அழுங்கள் என்று கோரிக்கை வேறு வைக்கும் தொகுப்பாளர்கள்.

தமிழ் ஏற்கனவே தொல்லியல் ஆய்வர்களுக்கு என்று நம் நிகழ்ச்சி தொக்குப்பளர்கள் நினைத்து வருவது நாம் அறிந்த ஒன்றே.

நன்னனின் வாழ்க்கை கல்வி இதே தமிழ் நாட்டில் தமிழர்கள் பார்க்க ஒலி பரப்பான ஒன்று. தமிழ் சான்றோர்கள் திரை நடிகர்கள் அதுவும் பாரி மகளிரின் தந்தையாக – பாரி பற்றி நாம் என் கவலை படவேண்டும் – என்று தமிழ் அறிஞர்கள் நினைப்பது வருத்தப்படவேண்டிய ஒன்றே! ஆனால் அதை நகைச்சுவை என்று புறம் தள்ளலாம். தில்லையாடி வள்ளியம்மை ஒரு குத்து பாட்டு வரி – அவ்வளவுதான் நம் கவிங்கருக்கு.

அதிலும் உணமையியல் ( ரியாலிட்டி ) நிகழ்ச்சிகள் நமக்கானவையா ? ராகி சவந்துக்கு மாப்பிள்ளை தேட NDTV செலவு செய்கிறது. குழந்தைகள் வளர்ப்பு வெளிநாட்டு தொலைகாட்சிகளில் மலினப்படுத்தி உணமையியல் நிகழ்ச்சி வந்தால் – இங்கயும் அதே!. இரவல் எதை எல்லாம் பெறுகிறோம். நம் பண்பாட்டிற்கு ஒத்து வரும் விடயமா இது ?.

குடும்ப உறவுகள் மதிக்கப்படாது உள்ளது நம் TV நிகழ்ச்சிகளில். சுரபி இங்கே வெற்றி பெற்று இருந்தாலும் – அது எடுக்க தெரிந்தவர்கள் சிலரே.

கண்டுபிடித்தோம் சுழியை என்பதெல்லாம் வரலாறு – கோப்பி அடித்தோம் என்பதே இன்றைய நிலை. நம்மில் பலரும் நம் எதிர்ப்பு பதிவு செயப்படவேண்டும் என்று நினைப்பதுவே இல்லை. நாம் நல்ல காற்றை நம் அடுத்த தலைமுறைக்கு வைக்கவில்லை – இப்போது நல்ல பண்பையும். தமிழ் கலப்படம் பெற்றது. தமிழனும்!

நம்மில் எத்தனை பேருக்கு கீழவெண்மணி தெரியும் என்பது வருத்தம் என்றால். அடுத்த தலைமுறைக்கும் அவர்களின் தாத்தானும் பாட்டியுமே தெரியமாட்டார்கள் – என்பது வருத்திற்கு உரிய உண்மை.

நம் மதிப்பீடுகளை மீளப்பெற செயல்படுவோம். அதற்க்கு தொலைக்காட்சிகளை கட்டயாபடுதுவேண்டியது கட்டயாம். நாளை இணையத்தை.

அவை ஒரு தடையோ – தண்டனையோ – அபராதமோ சந்திக்கவில்லை.