குட்டி கதை : காந்தி பிறந்தநாள்


அது ஒரு சின்ன கிராமம். ஊருக்கு கடைசியில் ரூபனின் வீடு. ரூபனுக்கு எல்லாமே கடைசிதான். வீட்டில் எழுந்திரிப்பதில் அவன் கடைசி. தூங்குவதிலும் கடைசி. சாபிடுவதிலும்.

பள்ளிகூடத்தில் பெஞ்சும் கடைசிதான். இந்த கடைசிக்கு முதலில் இருந்தே தோழன் என்றால் அது கடைசி பெஞ்சு கதிர்தான். அவனும் முதலில் இருந்தே கடைசி தான்.

பள்ளிக்கூடம் ஆரம்பித்தது – கடைசியில் இந்த ரெண்டும் அதான் ரூபனும் கதிரும் வந்ததால். முதலிலியே வெளியே நில்லுங்கள் என்று இங்கிலீஷ் வாத்தியார் சொல்லி விட்டார். முதல் வகுப்பிலிருந்து முதல் பாட வேலையில் வேலையில் நிற்பது வடிக்கயாகவே பொய் விட்டது.

தமிழ் அம்மா தமயந்திதான் “உள்ள வந்து தொலைங்கடா ” – என்று வகுப்புக்குள் இருந்து கொண்டு வெளியில் இருந்து இந்த ரெண்டையும் உள்ளே கூப்பிட்டார்.

வழக்கம் போல கடைசி பெஞ்சில் பொய் உட்கார்ந்து கொண்டன ரெண்டும்.

“… சரி கொடுத்த கொடுத்த வீட்டு வேலைய நாளைக்கு முடிச்சுட்டு வந்திருங்க” – தமிழ் அம்மா சொன்னார்கள்.
“நாளைக்கு லீவு இல்லையா அம்மா” – முதல் பெஞ்சு முந்திரி கொட்டை சண்முகம் எந்திரித்து கேட்டது
“அமா நாளை மறுநாள் வரும்போது முடிச்சு எடுத்துக்கிட்டு வாங்க”

“லீவா ?” – கொஞ்சம் உறக்கமாகவே ரூபன் கேட்டுவிட்டான்.

தமிழ் அம்மா உட்பட வகுப்பே திரும்பி பார்த்தது.
“அமா. காந்தி பொறந்த நாள்” – தமிழ் அம்மா சொன்னார்கள்
“ஒ” – ரூபன் ஒ போட்டான்
“காந்தி யாருன்னு தெரியுமா ?” – தமிழ் அம்மா கேட்டார்கள்
“தெரியுமே. உண்மை பேசியே செத்து போன்றே அவர்தானே ?” – ரூபன் சொன்னான்
“ம்” – கொஞ்சமாய் சிரித்தபடியே இம் கொட்டினார் தமிழ் அம்மா.

பள்ளி முடிஞ்சது. வீடு நோக்கி ரூபனும் கதிரவனும் நடந்தார்கள். அரை கால் காகி டிரவுசர் ஜோல்ன பை வெள்ளை சட்டை. – இதுதான் ரூபனுக்கும் கதிருக்குமான அடையாளங்கள்.
“ஏண்டா உண்மை பேசுறது அவளவு கச்ட்டமாடா ?” ரூபன் கேட்டான்.
“பொய் பெசுரதுவும் தாண்டா” – கதிர் சொன்னான்
“என்னடா சொல்லற உண்மை மட்டுமே பெசுருதுவும் கஷ்டம் பொய் மட்டுமே பெசுரதுவும் கஷ்டம்”
“டேய் ஒரு நாள் பொய் மட்டுமே பேசுவோமா ?” – ரூபன் கேட்டான்.
“கஷ்டம்டா ”
“ஒரு நால்தாநேடா கதிர் ?”
“சரிடா” – கதிரவன் ஒப்புக்கொண்டான்.

அடுத்தநாள். காந்தி பொறந்தநாள்.

எழுந்திரித்தான் ரூபன். சோம்பல் முறித்துக்கொண்டு கிணத்தடிக்கு போனான். அம்மா துவைத்து கொண்டிருந்தாள்.
“துறைக்கு இப்பதான் விடிஞ்சுதா ?”
“ஹ்ம்ம்”
“சரி பல்ல தேச்சுட்டு … சித்தி வீட்டுக்கு போ”
“எதுக்கு”
“எதோ சாமானெல்லாம் எடுத்து ஒதுங்கவைக்கனுமாம். வீட விடவா வச்சிருக்கா”
“சரிம்மா”
“அங்க எதுவும் சாப்பிடாத”
தலையை ஆடிவிட்டு. பள்ள தெயச்சுவிட்டு கிளம்பினான் ரூபன்.

அவன் வாசலை தாண்டியவுடன் வெளில் வந்தால் அம்மா.
“அட! காப்பி கூட குடிக்காம போய்டுச்சு”

சித்தி சுத்த பத்தாம் எல்லாம் கிடையாது. ஆடி அம்மாவசை கிருத்திகை இதுவும் கிடையாது. பிள்ளை குட்டியும் கிடயாது. அம்மா அப்படியே நேரெதிர்.
சித்தப்பா பட்டாளத்தில் வேலை பார்கிறார்.

வாசலில் நின்று பல் விளக்கிகொண்டிருந்தால் சித்தி.
“அட! வா ராசா – உனக்குத்தான் காத்துகிட்டு இருக்கேன்”

வாய் கொப்பளித்து விட்டு உள்ளே அழைத்து சென்றாள்.
“பரண்ல அடுக்கனும் இந்த தகரத்த எல்லாம்”
“சரி சித்தி”
“ஒரு வா காபி குடிச்சுட்டு”
“இல்ல சித்தி”
“நானும் அம்மா மாதிரி தாண்டா” – பாசத்தோடு சொன்னாள் சித்தி.
“வேண்டாம் சித்தி”
“அம்மா திட்டுமாடா ?”
“ஹ்ம்ம்”
“குடிச்சேன்னு சொல்லாத. பொய் சொல்லு” – சித்தி சொன்னாள்.
“வீட்லயே குடிச்சிட்டேன். அதான் வேண்டாம்” – முதல் பொய்யை வெற்றிகரமாக சொன்னான் ரூபன்.

இப்போதான் நேத்து செய்த சத்தியம் ஞாபகம் வந்தது. இன்னைக்கு பொய் மட்டும்தானே பேசணும். ஆனாலும் அம்மாவின் கட்டளையை மீற மனசில்லை.

“சரிடா உன் இஷ்டம்” – சித்தி பொய் விட்டாள். அவள் காபி குடித்தாள்.

வீடு சுத்தமாச்சு.
“கரி சோறு இருக்கு. ஆனா உங்க வீட்லதான் இன்னைக்கு கிருத்திக விரதம் பிடிபீகளே” – என்றாள் சித்தி.

வீடு நோக்கி நடந்தான்.
அம்மா வீடு எல்லாம் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

“என்னடா காப்பி கூட குடிக்காம ஓடிட்ட?” – அம்மா கேட்டாள்
எதுவும் பேசவில்லை ரூபன்.
“சாப்பிட்டியாடா ?” – அம்மா கேட்டாள்.
பொய் சொல்ல மீண்டும் ஒரு சந்தர்ப்பம். அவன் அவன் வாய திறந்தா பொய் தான் சொல்றான்.
“ஆச்சு”

ரூபன் சொன்னவுடன் – அம்மா ஒரு முறை முறைத்தால்.
“கரி சோறா ? தொரைக்கு அவளவு கொல்லுப்பு ஏறி போச்சா ? இன்னைக்கு மத்தியானம் சோறு இல்ல உனக்கு ”

மதியானமுமா ?

சாயந்தரம்.
வயுறு கொன்று எடுத்தது. வாசலில் வந்து அமர்ந்தான் ரூபன்.

கதிரவன் வந்தான்.
“என்னடா பொய் பேசுனியா ?”
“பொய் பேசுறது ரொம்ப கஷ்டம்டா” – ரூபன் சொன்னான்.

அவனுக்குதானே வலி தெரியும்.
வாய்மையே வெல்லும்.!

குறிப்பு: தலைப்பை தவறாக அர்த்தம் பண்ணி இருந்தால் நான் பொறுப்பல்ல!

அப்பாவும் நானும் 6 : கண் விழித்து பார்த்த நேரம்!

அந்த அதிசயம் நடந்தே விட்டது.

“எடுடா கைய்ய … ” அதட்டலாய் ஒரு குரல். மிகவும் பழகிய குரல். பார்த்தால், அப்பா என்னை பார்த்துகொண்டிருக்கிறார்.
“அப்பா….” – நான் மகிழ்ச்சியில் என் விழியையும் வாயையும் அகல திறந்தேன்.
“யாருடா பொண்ணு ?”
“அது வந்து …. ”

நான் ஆரம்பிக்கவும் அன்னம் போன்ற தேவதை – என் லலிதா வேகமாக வார்டை விட்டு வெளியே ஓடினாள். வெட்கமாய் இருக்கும்.

எனக்கே ஒரு மாதிரி உள்ளது. அவளுக்கு இல்லாமல் இருக்குமா ?

“என்னடா வந்து போயின்னுட்டு ? ஒரு பொண்ணு கைய்ய …பட்ட பகல்ல… நல்ல குடும்பத்தில பொறந்தவனாடா நீ ?” – அப்பா உறுமினார்.
“என்ன மாதாவா எல்லாத்துக்கும் கோபமா ?” – டாக்டர் நீலகண்ட மாமா உள்ளே நுழைந்தார்.கூடவே லலிதா. அவள் டாக்டரை அழைக்க போயிருக்க வேண்டும்.

“ஆமா! நான் இங்க எப்ப வந்தேன் ?” – அப்பா அப்போதுதான் மருத்துவமனையில் உள்ளதை உணர்ந்தார்.
“நீ போன ஆணி மாசமே வந்துட்ட”
“ஒ”
“பொன்னும் அவனும் விரும்புராங்கட”
“நீதான் இதுக்கு காரணமா ?”
“அட! இது என்ன சோதனைட சர்வேஸ்வரா ? நீ வாடா” – என்னை நீலகண்ட மாமா அழைத்தார்.
“அவன எதுக்கு கூப்பிடுற?”
“மாதவா, தனியா கூட்டிட்டு போய் கண்டிகத்தான். வளந்தட்டாநில்லையா ? ”
என்னை வார்டை விட்டு அழைத்து வந்தார் நீலகண்டம்.

“பாத்துக்கம்மா ” என்று லலிதாவிடம் சொல்லிவிட்டுவந்தார்.

அவரது அறைக்கு அழைத்து சென்றார். உட்கார்ந்தார். எனக்கு இருக்கையை காண்பித்தார். எங்கள் இருவருக்கும் இடையில் அவரது மேசை.
கொஞ்சம் யோசித்தார். மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை சுற்றிவிட்டார்.

“மகாதேவா …” – டாக்டர் ஆரம்பித்தார்.
“மார்க்ஸ் மகாதேவன் …”
“ம் சரி மார்க்ஸ் மகாதேவா, உங்க அப்பன பத்திரமா பாத்துக்கணும். எந்த சோகம் தரும் விசயமும் சொல்லப்படாது. சரியா”
“சரி”
“உங்க அப்பன் காந்தி நேசன். அவன் கிட்ட இந்தியா பிரிஞ்சுடுச்சு! காந்தி செத்து போய்ட்டார் – அப்படி இப்படின்னு தத்து பித்துன்னு உளற கூடாது”
“அப்புறம்”
“இந்தியாவுக்கு விடுதலை கிடைக்க போகுதுன்னு சொல்லு.அவர் இங்கயே இருக்கட்டும். அதான் வசதி திடீர்னு எதாவது ஆச்சுன்னு. அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு” – டாக்டர் முடித்துக்கொண்டார்.
“சரி” – நான் அமோத்திதேன்.

அப்பாவை எப்படியும் பாதுகாக்கணும். என்னால்தான் அவருக்கு இந்த நிலை. அன்று என்னை போலீசார் அடிப்பதை பார்த்திருக்க வேண்டும். அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. பாவம் மயங்கிவர் – இப்போதுதான் தெளிகிறார். என் உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும்.

திரும்பவும் அப்பாவின் அறைக்கு போனோம். அக்காவும் அத்தானும் இருந்தனர். டாக்டர் மாமா ஆள் அனுப்பி செய்தி சொல்லி இருக்க வேண்டும்.

“என்னம்மா அழுதுக்கிட்டு. உசிரோடதனே இருக்கேன்.” – அப்பா அக்காவை தேற்றி கொண்டிருந்தார்.
“டேய்! நீலகண்டம் வீட்டுக்கு போகலாமா ?”- அப்பா கேட்டார்.
“என்ன அவசரம் மாதவா ? கொஞ்ச நாள் இருந்துவிட்டு போறது ?” – டாக்டர் சொன்னார்.
“அட! நீ வேற. எனக்கு என் வீடுதான் சொர்க்கம்” – அப்பா மறுத்தார்.
“அதில்லை. இப்பதான் சரியாய் ஆகிருக்கு. இங்க இருந்தா என்ன ?” – டாக்டர் கொஞ்சமாய் கெஞ்சினார்.
“இல்லடா வேணா ஒரு நர்ஸ அனுப்பிவை” – அப்பா மீண்டும் மறுத்தார்.
“அது இல்லடா …” என்று டாக்டர் இழுத்தார்.

அக்காவும் அத்தானும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
“டாக்டர் – அப்பா வீட்டுக்கு வரட்டும்” – நான் சொன்னேன். டாக்டர் என்னை முறைத்து பார்த்தார்.
“அதெல்லாம் சரி இந்தியாவுக்கு விடுதலை கெடசுடுச்சா ?” – அப்பா கேட்டார்.
“இன்னும் இல்லை. ஆனா எப்படியும் ரெண்டு மூணு மாசத்துல ” – என்றேன் நான்.

அக்கா, அத்தான், லலிதா எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். நான் அவர்களுக்கு ஒரு மாதிரி தெரிந்தேன். அப்பா எனக்கு வேண்டும்!

எப்படித்தான் இந்த பொய்யை காப்பாற்ற போறேனோ ?

பிரிவினை துயர் : மறைக்க வேண்டிய ஒன்று. மறக்க வேண்டிய ஒன்று

பிரிவினை துயர் : மறைக்க வேண்டிய ஒன்று. மறக்க வேண்டிய ஒன்று