தமிழர்கள் அமெரிக்க கண்டத்தின் பூர்விக மனிதர்களா ?

இப்படி நீங்கள் நினைத்து இருப்பீர்களா ? தெரியவில்லை.

எத்தனை முறை அனகோண்டா படம் பார்திர்ப்பீங்க ? அப்போது இப்படி ஒரு கேள்வி வந்தது உண்டா ?

என்னடா தமிழனக்கும் அனகொண்டவுக்கும் தொடர்பு ?

தமிழ் வார்த்தைதான் அனகோண்டா! அப்புறம் ரைஸ் தமிழ் வார்த்தை அதாவது அரிசி. ரி சி தான் ரி (ri) சி (ce) than ரைஸ்.

அரிசியில் ‘அ’ மௌன எழுத்து. சரி! இப்போது கேள்விக்கு வருவோம். தமிழில் பெயர் எப்படி ஒரு தென் அமெரிக்க பாம்புக்கு வந்தது.

தமிழர்கள் தென் அமெரிக்காவில் எப்போது இருந்தனர் – அதுவும் தென் அமெரிக்கர்களை பயமுறுத்திய பாம்புக்கு தமிழில் பெயர் வைக்கும் அளவுக்கு.

நியூ சிலாந்து நாட்டிலும் தமிழர்கள் முதல் குடியேறிய இனம் என்று சிலர் சொல்கிறார்கள். அதன் உண்மை நிலவரம் எனக்கு தெரியாது.

ராஜஸ்தான் என்கிற மாநிலத்தின் பெயர் கூட தமிழ் என்று நினைக்குறேன். ராஜ என்கிற வார்த்தை அரச – ரச – ரஜ – ராஜ என்பதாகும்.

தளம் – ஸ்தலம் – ஸ்தல் – ஸ்தான் என்று வந்திருக்கலாம்.

தமிழ் போல பல மொழிகள் இருந்திருக்கும். அதுவே இதற்கு காரனாமாகிருக்கலாம்.

இந்திய இறையாண்மை: உச்சநீதமன்றம் கேள்வி

இந்திய சட்ட ஆணையம் தந்துள்ள அறிக்கை சில கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தை ஐந்தாக பிரிக்கவும். ஒன்றை எப்பவும் தொல்லை கொடுக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு நேந்து விட்டு விடலாம்.

திசைக்கு ஒன்றாய் – நாலு உச்சநீதிமன்றங்கள் மக்கள் சேவைகள் செய்யலாம்.

இதை பார்த்த இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் – படாது படாது – இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று சொல்லி உள்ளார்.

இதை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ள நிலையில் – இந்திய அட்டர்னி ஜெனரல் அவர்களின் கருத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் கருத்தை இந்திய இறையாண்மைக்கு எதிராக பார்க்கிறது. ஒருவேளை கைது செய்யலாம் நீதிபதியை ?

சரி இறையாண்மை என்றால் என்ன ?

இந்தியா தமிழ் தேசிய கூட்டமைப்பை வழி நடத்துகிறதா ?

இலங்கையின் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே ஆடித்தான் போய் உள்ளது. சீனம், பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் – என பல நாடுகளின் விளையாட்டு களமாக இந்திய பெருங்கடலின் கண்நீர் துளி தீவு மாறி உள்ளது.

உண்மையில் வட்டார வல்லரசிர்க்கான போட்டியில் இருந்த இந்தியா இப்போது வல்லரசிர்க்கான போட்டியிலும் உள்ளது. வளரும் ஆற்றல் – நூற் கோடி மானுட ஆற்றல் – பொருளாதார பேராட்சி என்று பல நிலைகளில் இந்தியா இன்று போற்றபட்டலும் – அதன் பூகோளம் சரியாக இல்லை. வரலாறு வரம் கொடுத்தாலும் பூலோகம் சாபம் தருகிறது. பக்கத்திலேயே பெரும் வல்லரசு – சிவப்பு சக்கரவர்த்தி. அடுத்து – அண்டை நாடாக ஒரு பகை நாடு.

இந்த நிலையில் இலங்கையில் தன் இருப்பை தன் ஆதரவு தளத்தை கை விடமுடியாத நிலையில் இந்தியா. இந்தியா இலங்கையின் பல நிகழ்வுகளின் பின்னணியில் இருந்தாலும் – வெளிப்படையாக சொல்லாமல் உள்ளது.

புலிகள் ஆயுத ரீதியில் அழிந்த பிறகு – தமிழர் தரப்பை தன் பக்கம் திருப்ப நினைத்த மாதிரியே இந்தியா காய் நகர்த்த வேண்டும். அவர்களின் காய் நகர்த்தலில் முதலில் உள்ளவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

இந்தியா வழக்கம் போல் மௌன பத்திரம் வாசித்தாலும் – இப்போது இலங்கையில் ஒரு புகை ஆரம்பித்து உள்ளது. அது இந்த காய் நகர்த்தலின் விழைவாகவே இருக்கும். இந்தியாவின் பூகோள நலனை பராமரிக்க நடக்கிற விடயங்கள் எல்லாம் இப்போது மிக விரைவில் வெளியில் வந்து விடுகிறது – ஒரு வல்லரசு அல்லது வல்லரசாக நினைக்கிற தேசம் இப்படி கோட்டை விடுகிறது.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பிரச்சனை – இந்தியாவை வெளியில் காட்டிகொடுத்துள்ளோம் என்றே பாகிஸ்தானியர்கள் முழங்கினர். ஏற்கனவே நேபாளத்திற்கு பாதுகாப்பு தரலாம் என பேசி நேபால் நாட்டில் நாடு பிடிக்கும் இந்தியா என்கிற பெயரை நரசிம ராவ் அரசு பெற்று தந்தது. வங்கதேசத்திலும் இந்திய எதிர்ப்பு உள்ளது. முத்துமாலை திட்டத்தின்படி இந்தியாவை சீனம் கண்காணிக்கிறது. அமெரிக்க எங்கே வாய்ஸ் ஒப் அமெரிக்க ஆரம்பிக்கலாம் என நினைத்து செய்தவை எல்லாம் வரலாறு பதிந்த உண்மைகள்.

ஒரு வல்லரசாவதற்க்கு முன்னரே இந்தியா இந்த குற்றசட்டுகளையும் பிரச்சனைகளையும் எதிர் நோக்குவது – அதன் வல்லரசு கனவிற்கு சரி இல்லை.

இலங்கையர்களை இந்தியா எந்த ரீதியில் தன் ஆதரவாளர்களாய் மாற்ற முனைகிறது என்கிற திட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளி வரலாம். குஜ்ரால் தத்துவம் சொல்வது – அண்டை நாட்டுக்கு தேவையானவற்றை செய் அப்புறம் நீ பெரிய அண்ணன் ஆகலாம்.

இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன சொல்கிறது. குற்ற சாட்டில் உண்மை எவளவு என்பவை இனிதான் தெரியும். இலங்கைக்கு அடுத்து இந்தியாவின் இலக்கு யார். சீனத்தை வழக்கம் போல் எல்லாவற்றிக்கும் பயந்து ஏற்றுகொள்ள போகிறோமா ? அப்படி என்றல் வல்லரசு கனவு ?

தமிழர்களுக்கு இந்தியா இது வரை ( அதாவது கடந்த சில வருட்னகளில் ) நன்மை செய்ததாக யாழ்ப்பான மனிதர்கள் நினைக்கவில்லை என்றே இந்தியன் எச்ப்றேச்சின் தமிழ் நாட்டு பதிப்பு சொல்கிறது.

இந்தியா பேசாமல் நல்லரசாகலாம் !