சாவித்திரி – இளம் சூழ்ச்சிக்காரி: தொடரின் முதல் பகுதி

முன்னுரை: நீண்ட நாட்களாகவே காகிதத்தில் இருந்த இந்த தொடர் கதையை கணினிப்படுதும் முயற்சி இது. உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
—————————————————————————————————
அப்பாவிகள்: ஆப்பிலும் அவனும்
பகுதி 1 : முதலிரவு
*******************
கதிரவன் நிலத்தை தன் கரத்தால் அணைக்க ஆரம்பித்த நேரம். சாவித்திரி பக்கத்து வீட்டு நிலாவுடன் தண்ணீர் எடுக்க குளத்திற்கு வந்த நேரம். தண்ணீரில் தங்க சூரியன் மிதந்து கொண்டிருந்தான். தண்ணீரின் மௌனத்தை குடத்தால் நிலாவும் சாவித்திரியும் கலைத்தனர்.

குடத்தின் வாய் தாகத்துடன் தண்ணீர் குடித்தது. பெற்ற பிள்ளையை இடுப்பில் வைத்து சுமப்பது போல் குடத்தை சுமந்து வீடு திரும்பினர் நிலாவும் சாவித்திரியும்.

வாசல் திண்ணையில் சாவித்திரியின் அப்பாவும் கணக்கு பிள்ளை சிவானந்தமும் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.
அவர்களை கடந்து வாசல் படி ஏறினாள் சாவித்திரி.

“நில்லும்மா … கணக்கு உன் கல்யாண விசயமாதான் பேசுறார்”
அப்பா ஆரம்பித்தார்.

சாவித்திரி எதுவும் பேசவில்லை.

“என்னம்மா சொல்ற நம்ம மாப்ளை தம்பி ரூபன கட்டிக்கா ?”

சாவித்திரி வெட்கப்பட்டு கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.
“என்ன புரிஞ்சுடுச்சா ?”

சிவானந்ததை பார்த்து சாவித்திரியின் அப்பா செண்பகராமன் கேட்டார்.புரிந்துவிட்டதாய் தலையை ஆட்டினார் சிவானந்தம். அவர்களை பொறுத்தவரை அந்த மௌனம் சம்மதம் அனால் சாவித்திரிக்கு அது சதி திட்டத்தின் ஆரம்பம்.

நாளும் பார்த்தார்கள் நேரமும் பார்த்தார்கள். தையிலே திருமணம். முதளிரவுக்கும் நேரம் குறித்தார்கள்.

நாள் வந்தது! திருமதி என்கிற பெயர் பூட்டும் விழாவும் நடத்து. முதலிரவின் வருகை நெருங்கி கொண்டு இருந்தது.

சாவித்திரி ஒரு ஐந்தடி சிற்பம். மஞ்சள் மேனி. நாணம் ஏறிய தங்கம். தேவதை என்று ஒற்றை வார்த்தயில் சொல்லலாம்.

அந்தி மயங்கியது! கதிரவன் தன் பனி முடிந்து கிளம்பினான்!

நிலவு ஆட்சிக்கு வந்தது. காதல் அம்புகள் தீருகிறவரை அள்ளிக்கொடுக்க தயாராய் இருந்தது.

நிமடங்களின் கரைசலில் முதலிரவின் நெருக்கம் நெருங்கியது. பட்டு உடுத்தி எதுவும் அறியாதவனாய் முதலிரவு அறையில் காத்திருந்தான் ரூபன்.

பச்சை பட்டு உடுத்தி; வெட்கம் மெய்யில் ஏற்றி; உதட்டில் காதல் ஏற்றி கையில் பாலும் ஏந்தி அந்த மாந்தளிர் மேனி வந்தது; நின்றது; ரூபனை பார்த்தது; புன்னகைத்தது; பாலை மேசையில் வைத்தது.ரூபன் அணைத்தான். விளக்கை அணைக்கலாமா என கேட்க நினைத்தான்.

சாவித்திரியின் கண்கள் கனிகளை பார்த்தன. திராட்சையும், ஆப்பிலும் வாழையும் சிநேகமாய் இருந்தன. ரூபன் புரிந்து கொண்டான். பாலும் பழமும் இரவின் தொடகதிற்கு தேவை. திராட்சையை தொட்டான். தலையை ஆட்டி வேண்டாம் என்றாள். வாழையை தொட்டான். அதற்கும் மறுத்தது அவள் உடல் மொழி.ஆப்பிளை தொட்டன – கத்தியை காட்டினாள். கத்தியையும் ஆப்பிளையும் கொடுத்தான்.

ஆப்பில் மௌனம் காத்தது. கத்தியால் அதை வருடினால் சாவித்திரி. ரூபனோ அவளை வருடினான். ஒளியில் கத்தி மின்னியது.இயல்பிலேயே அவள் மின்னினாள்.
அப்பிளை கத்தியால் வருடிய படியே ரூபனை பார்த்தாள். அவன் புன்னகைதான். புரியாதவன்.மாட்டிகொன்டத்தை அறியாதவன்.

பட்டென கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைத்தாள்.

“என்ன பண்ற ?” – ரூபன் அலறினான்.
“கொலை பண்றேன்” – ஏதோ சமையல் செய்கிறேன் என்கிற மாதிரி சொன்னாள்.
“ஏன்?”
“உனக்கு தெரியும்”

கத்தியால் சற்று அழுத்தம் கொடுத்தாள். திருமணங்கள் என்பது ஆயுள் தண்டனை ஆனால் ரூபனுக்கு அது மரண தண்டனை.

மௌனத்திலும் திகிலிலும் ரூபன் உறைந்து போனான். பிறகு என்ன ஆனான்?

Advertisements