தினமணிக்கு ஒரு ராயல் சல்யுட்!

தினமணி பல தருணங்களில் தான் தன்மானம் கொண்ட இனத்தின் வெளிப்பாடு என்று துன்ச்சலாக சொல்லும் தலையங்கங்களின் சொந்தக்கார பத்திரிகை.

என் தந்தை எனக்கு முதலில் அறிமுக படுத்திய நாளேடு தினமணி. நெஞ்சம் நிமிர்த்து நிஜம் சொல்லும் ஏடு. பலர் தினமணி படிப்பதில்லை. அதனால் தினமணிக்கு நட்டம் இல்லை. அவர்களுக்குதான்.

தமிழனே அப்படிதான் – காமராஜரை தோற்கடித்துவிட்டு திருவிழா எடுக்க நினைத்தவர்களின் வாரிசுகள் நாம். நாய் குளிரில் வாடும் போது போர்வை கொடுக்காமல் மயிலுக்கு போர்வை கொடுத்தவன் நமக்கு வள்ளல்.

வார்த்தை அலங்காரங்களில் மயங்கி வாழ்க்கையை காவு கொடுத்தவன் தமிழன்.

சரி அப்படி என்ன வந்தத இன்று தினமணிக்கு ஒரு பெரிய மரியாதை வணக்கம் செலுத்த ? நண்பர்கள் பலரின் இடுகைகளை படிக்கும் போது நான் படித்த அந்த தலையங்கத்திற்கு அவர்கள் செலுத்தி இருந்த மரியாதை என்னை கவர்ந்தது.

தினமணி நாட்டில் நடக்கும் பல விடயங்கள் மக்களுக்கு தெரியவில்லையே என்கிற ஆதங்கத்தில் எழுதி உள்ளது. தகவல் அறியும் உரிமை வந்த பின் நாடு ஒரு வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கி செல்வதாக நினைத்த போது – இல்லை எல்லா தகவலும் கொடுக்க முடியாது என அரசாங்கம் கல்லாட்டம் ஆடிய போதும் – தினமணிதான் பேசியது.

தினமணி தேசப்பணியில் உள்ளது. தினமணி உனக்கு ஒரு ராயல் சல்யுட்!

நண்பர்களின் இடுக்கைகள் கீழே:
http://thiruchol.blogspot.com/2010/02/blog-post_27.html
http://yogibala.blogspot.com/2010/02/blog-post_27.html

நன்றி நண்பர்களே! – உங்கள் அனுமதி இல்லாமல் வெளியிட்டமைக்கு மன்னிக்கவும்.

Advertisements

அரசியல் நடிகர்கள் V / S நடிப்பு அரசியல்வாதிகள்


“தமிழ் நாட்டை காப்பாற்ற கடவுளால் கூட முடியாது” – ரஜினி சொன்னதிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது.

ஆனாலும் தமிழன் சொல்கிறான் தலைவா உன்னால் காப்பாற்ற முடியும். நல்லவேளை – ரஜினி தமிழ் நாட்டு அரசியலுக்குள் வராமல் தன்னை காப்பாற்றி கொண்டார்.

திரு விஜயகாந்த் ஒரு கட்சியின் தலைவர். திரு சரத்குமார் இன்னொரு கட்சியின் தலைவர். நெப்போலியன், ராதா ரவி, s s சந்திரன் மற்றும் நெறைய மனிதர்களை பற்றி நமக்கு தெரியும் – இவர்கள் நடிப்பு அரசியல்வாதிகள்.

அரசியல்வாதிகளுக்கு நடிப்பும் – நடிகர்களுக்கு அரசியலும் மிக எளிதில் வருகிறது. காரணம் – பல நடிகர்கள் அரசியல் செய்கிறார்கள் – அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள். ஆக லேபில் தன வேறே ஒழிய – ரெண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

மனசில் பட்டதை அப்படியே பேசினால் – வருத்தம் தெரிவிக்க வேண்டும். மனசில் பட்டதை பேசுவதை பார்த்து மகிழ்ந்து கை தட்டினால் – கண்டனம் செய்யப்படுவீர்கள்.

ரஜினி மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்த போதுதான் பேசினார். மற்ற நேரங்களில் இல்லை. ஆனால் அப்போதாவது பேசினார். மற்றவர்கள் பேச வில்லை. ஜெயலலிதா வருத்தப்பட்டார். ரஜினிக்கு எதிராக செயல்பட பலருக்கு ஆணை இட்டார்.

நான் பெசமாட்டேன்கிறேன் – அனால் மிரட்றாங்க – என்று அஜித் பேசவும். அவரை மன்னிப்பு கேள் என்கிறார்கள்.

மக்களாட்சி கட்சிகள் சங்கங்கள் எல்லாமே மக்களாட்சி இல்லாமல்தான் உள்ளது என்பது மிக தெளிவான உண்மை.

அரசு மக்களுக்கு செய்கிறதோ இல்லையோ ? நடிகர்களுக்கோ செய்யாமல் இருக்க முடியாது. காரணம் ரெண்டு பேரும் நடிகர்கள்.

அரசியல்வாதிகள் நடிகர் சங்கத்தில் சேராத நடிகர்கள். நடிகர்கள் அரசியலில் உள்ள / இல்லாத அரசியவாதிகள்.

இப்போது பிரச்சனையில் சிக்கி உள்ள அஜித் ஒரு தொழிலாளி – அதாவது சினிமாவை ஒரு தொழிலாக மட்டுமே நினைக்கும் ஒரு தொழிலாளி. சினிமாவ சினிமாவாக விட்டுவிடுங்கள் என்று சொன்னவர்.

ரஜினியும் அஜித்தும் விழாக்களில் கலந்துகொள்ள விரும்பவில்லை. அவர்கள் வற்புருத்தபடுகிராகள். மிரட்டபடவில்லை என திரைப்பட தொழில் உறுப்பினர்கள் தலைவர் ஒருவர் சொல்லி உள்ளனர்.

ரஜினி ஜோக்கர் என்று ஒருவர் சொல்லி உள்ளார். வைக்கோவை அப்படிதான் இலங்கையின் ஜெனரல் சொன்னார். அப்போதாவது ஒரு சலசலப்பு எழுந்தது. அவருக்கு எதிர்ப்பு வலுத்தது.

ஆனால் ஒரு நடிகரும் ரஜினியை தங்கள் சினிமாத்துறை மனிதர் சொல்லி உள்ளதை எதிர்த்து கேட்கவில்லை. ரஜினியை இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

நான் ரஜினியையும் அஜித்தையும் ஆதரிக்க வில்லை. ஆனால் நடிகர்கள் நம்மை காக்க வந்த கடவுள்கள் இல்லை. அவர்களும் மனிதர்களே!

“தமிழ் நாட்டை காப்பாற்ற கடவுளால் கூட முடியாது”

இந்திய இறையாண்மை: உச்சநீதமன்றம் கேள்வி

இந்திய சட்ட ஆணையம் தந்துள்ள அறிக்கை சில கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தை ஐந்தாக பிரிக்கவும். ஒன்றை எப்பவும் தொல்லை கொடுக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு நேந்து விட்டு விடலாம்.

திசைக்கு ஒன்றாய் – நாலு உச்சநீதிமன்றங்கள் மக்கள் சேவைகள் செய்யலாம்.

இதை பார்த்த இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் – படாது படாது – இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று சொல்லி உள்ளார்.

இதை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ள நிலையில் – இந்திய அட்டர்னி ஜெனரல் அவர்களின் கருத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் கருத்தை இந்திய இறையாண்மைக்கு எதிராக பார்க்கிறது. ஒருவேளை கைது செய்யலாம் நீதிபதியை ?

சரி இறையாண்மை என்றால் என்ன ?

சிறு கதை : அஞ்சலில் படித்த சித்தப்பாவும் கெஞ்சலில் பெரிய ரூபனும்!

இரவு நேரம் அது. அப்பா அப்போதுதான் வீடு வந்திருந்தார். அம்மா அப்பாவிற்கு தோசை வார்த்து தந்து கொண்டிருந்தாள்.
ரூபன் மௌனமாய் டிவி பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன தங்கம் சமத்தா இருக்க” – வாயில் ஒரு தோசையை பிட்டு போட்டுவாறே அப்பா கேட்டார்.
“ஒன்னுமில்லப்பா” – ரூபன் சமாளித்தான்
“அட! கேள்வி எதுவும் இல்லையா என் ரூபனுக்கு ?” – அப்பா சீண்டினார்.
“அப்பா! சித்தப்பா ஏனப்பா வீட்ல இருந்தே படிச்சாரு ?”
“அதுவா ரூபன், சித்தப்பா வேலை பாத்துக்கிட்டே படிச்சாரு இல்லையா ? அதான் அவர் வீட்ல இருந்த படியே படிச்சாரு ?”
“அப்ப நான் மட்டும் ஏனப்பா ஸ்கூல் போய் படிக்கணும் ?”

தண்ணீரை அப்பா குடித்துகொண்டார். நல்ல கதையாக உள்ளதே – ரூபன் பள்ளி கூடாத விட்டு நிக்க கேக்குற கேள்வி மாதிரி இல்லையா இருக்கு ?

“ரூபன் – ஒரு நெலமைக்கு வந்தப்புறம் வேற வழியே இல்லைனா சித்தப்பா மத்திரி படிக்கலாம்”
“அது என்னப்பா ஒரு நெலமை ?”
“அதுவா ? பள்ளிக்கூடத்துக்கு போனா பாடம் மட்டும் இல்ல ஒழுக்கத்தையும் கத்துக்கலாம்”
“ஒழுக்கம்னா ?”
“சப்பிடருதுக்கு முன்னாடியும் பின்னாடியும் காய் கழுவுறது. நல்ல வார்த்த பேசுறது. நல்லது செய்றது. பெரியவுங்கள மதிக்கிறது. சரியாய் uniform போட்டு பொருது … ”
“டிச்சிப்ளினாப்பா ?”
“ஆமா”
“அப்ப – ஒழுக்கும் பெருசா? படிப்பு பெருசாப்பா ?”
“ஒழுக்கும்தான்”

அப்பாவை ஒரு முறை உற்று பார்த்துவிட்டு ரூமுக்குள் ஓடிப்போய் தன் ப்ரோக்ரேச்ஸ் ரிப்போர்ட் கார்டை எடுத்து வந்தான்.
அதில் கணக்கில் ரூபன் முட்டையும் ஒழுக்கத்தில் 100 மதிப்பெண்ணும் வாங்கி இருந்தான்.

“அடுத்த தடவ கணக்குலயும் 100 எடுப்பென்ப்பா ” என்று ரூபன் சிணுங்கினான்.

அபபா பெருமையோடு பார்த்தார். ரூபன் அடுத்த முறை கட்டாயம் கணக்கில் 100 எடுப்பன்.

இந்தியா தமிழ் தேசிய கூட்டமைப்பை வழி நடத்துகிறதா ?

இலங்கையின் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே ஆடித்தான் போய் உள்ளது. சீனம், பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் – என பல நாடுகளின் விளையாட்டு களமாக இந்திய பெருங்கடலின் கண்நீர் துளி தீவு மாறி உள்ளது.

உண்மையில் வட்டார வல்லரசிர்க்கான போட்டியில் இருந்த இந்தியா இப்போது வல்லரசிர்க்கான போட்டியிலும் உள்ளது. வளரும் ஆற்றல் – நூற் கோடி மானுட ஆற்றல் – பொருளாதார பேராட்சி என்று பல நிலைகளில் இந்தியா இன்று போற்றபட்டலும் – அதன் பூகோளம் சரியாக இல்லை. வரலாறு வரம் கொடுத்தாலும் பூலோகம் சாபம் தருகிறது. பக்கத்திலேயே பெரும் வல்லரசு – சிவப்பு சக்கரவர்த்தி. அடுத்து – அண்டை நாடாக ஒரு பகை நாடு.

இந்த நிலையில் இலங்கையில் தன் இருப்பை தன் ஆதரவு தளத்தை கை விடமுடியாத நிலையில் இந்தியா. இந்தியா இலங்கையின் பல நிகழ்வுகளின் பின்னணியில் இருந்தாலும் – வெளிப்படையாக சொல்லாமல் உள்ளது.

புலிகள் ஆயுத ரீதியில் அழிந்த பிறகு – தமிழர் தரப்பை தன் பக்கம் திருப்ப நினைத்த மாதிரியே இந்தியா காய் நகர்த்த வேண்டும். அவர்களின் காய் நகர்த்தலில் முதலில் உள்ளவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

இந்தியா வழக்கம் போல் மௌன பத்திரம் வாசித்தாலும் – இப்போது இலங்கையில் ஒரு புகை ஆரம்பித்து உள்ளது. அது இந்த காய் நகர்த்தலின் விழைவாகவே இருக்கும். இந்தியாவின் பூகோள நலனை பராமரிக்க நடக்கிற விடயங்கள் எல்லாம் இப்போது மிக விரைவில் வெளியில் வந்து விடுகிறது – ஒரு வல்லரசு அல்லது வல்லரசாக நினைக்கிற தேசம் இப்படி கோட்டை விடுகிறது.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பிரச்சனை – இந்தியாவை வெளியில் காட்டிகொடுத்துள்ளோம் என்றே பாகிஸ்தானியர்கள் முழங்கினர். ஏற்கனவே நேபாளத்திற்கு பாதுகாப்பு தரலாம் என பேசி நேபால் நாட்டில் நாடு பிடிக்கும் இந்தியா என்கிற பெயரை நரசிம ராவ் அரசு பெற்று தந்தது. வங்கதேசத்திலும் இந்திய எதிர்ப்பு உள்ளது. முத்துமாலை திட்டத்தின்படி இந்தியாவை சீனம் கண்காணிக்கிறது. அமெரிக்க எங்கே வாய்ஸ் ஒப் அமெரிக்க ஆரம்பிக்கலாம் என நினைத்து செய்தவை எல்லாம் வரலாறு பதிந்த உண்மைகள்.

ஒரு வல்லரசாவதற்க்கு முன்னரே இந்தியா இந்த குற்றசட்டுகளையும் பிரச்சனைகளையும் எதிர் நோக்குவது – அதன் வல்லரசு கனவிற்கு சரி இல்லை.

இலங்கையர்களை இந்தியா எந்த ரீதியில் தன் ஆதரவாளர்களாய் மாற்ற முனைகிறது என்கிற திட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளி வரலாம். குஜ்ரால் தத்துவம் சொல்வது – அண்டை நாட்டுக்கு தேவையானவற்றை செய் அப்புறம் நீ பெரிய அண்ணன் ஆகலாம்.

இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன சொல்கிறது. குற்ற சாட்டில் உண்மை எவளவு என்பவை இனிதான் தெரியும். இலங்கைக்கு அடுத்து இந்தியாவின் இலக்கு யார். சீனத்தை வழக்கம் போல் எல்லாவற்றிக்கும் பயந்து ஏற்றுகொள்ள போகிறோமா ? அப்படி என்றல் வல்லரசு கனவு ?

தமிழர்களுக்கு இந்தியா இது வரை ( அதாவது கடந்த சில வருட்னகளில் ) நன்மை செய்ததாக யாழ்ப்பான மனிதர்கள் நினைக்கவில்லை என்றே இந்தியன் எச்ப்றேச்சின் தமிழ் நாட்டு பதிப்பு சொல்கிறது.

இந்தியா பேசாமல் நல்லரசாகலாம் !

சிறு கதை: அப்பாவும் கோபமும்

அன்றைக்குத்தான் பார்த்தான் ரூபன் கதிர் ஒரு வெள்ளை பீடியை அதான் சிகரட்டை வாயில் வைத்து ஊதிகொண்டிருந்தான் .

ரூபன் பக்கத்தில் போனான்.
“என்னடா இது …?” – ரூபன் கேட்டான்
“இதுவாடா … எங்க அப்பா ஊதுவார்டா …” – என்றான் கதிர்
“இது ஊதலாமாடா … தப்புடா … ” – என்றான் ரூபன்
“தப்புனா எங்க அப்பா பன்னுவாராடா ?” – கதிர் கேட்கவும்
ரூபன் – ” தெரியலடா ….” என்று சொல்லிவிட்டு வீடு நோக்கி நடந்தான்

அப்பா வாசலில் அமர்ந்திருந்தார்.
“என்னடா பள்ளிக்கூடம் முடிஞ்சிருச்சா ?”
“ஆமாப்பா ”
“போய் கால் முகம் கழுவிட்டு வா … தேர்முட்டி வரை போயிட்டு வரலாம் … ஏதோ ராடனம் போற்றுக்கான்கலாம் திருவிழாவுக்கு” – அப்பா சொன்னார்.
“சரிப்பா ”

ரூபன் கால் முகம் கழுவி விட்டு டிரஸ் மாத்திகிட்டு வந்தான்.
“அம்மா வரல்யாப்பா” – ரூபன் கேட்டான்
“அவளுக்கு நெறைய வேல இருக்குடா”
“சரிப்பா …. அம்மா டாடா ” – என்று சொல்லிவிட்டு அப்பாவுடன் வந்தான்

தேர்முட்டியில் ராடனம் போட்டிருந்தார்கள். சும்மா சூப்பெராக இருந்துச்சு. ஒரு ரெண்டு சுத்து சுத்த அப்பா காசு கொடுத்து வைத்தார்.

ராட்டினம் சுத்திவிட்டு வந்தான் ரூபன்
“எப்படி இருந்துச்சு … ?” – அப்பா கேட்டார்
“நல்லா இருந்துச்சு …”
“கதிரவன் வரல …. ”
“அவுங்க அப்பா கூட்டி வந்திருக்க மாட்டார்ப்பா… ”
“ஹ்ம்ம்…”
“அப்பா பீடி குடிக்கலாமா … ?”
“என்னடா கேள்வி இது ? அது தப்பு … கெட்ட பழக்கம் ”
“கதிரவன் பன்றான்ப்பா ….. கேட்டா அப்பா செயரார்று அப்படின்னு சொல்றான்ப்பா …”
“அவுங்க அப்பாகிட்ட சொல்றேன் … அவர் கெட்டது பத்தாதுன்னு அவனும் கெட வழி செய்றாரு ”
“கெட்ட பழக்கம்னா என்னப்பா ?”
“அதுவா …. உனக்கோ … மத்த நல்லவங்களுக்கோ … கஷ்டத்த கொடுத்தா அது கெட்ட பழக்கம் ….”
“கச்ட்மன்னா? ”
“அதுவா …. யாருக்காவது வலிக்கிச்சா அது கஷ்டம் ….”
“வலினா … தல வலி மாதிரியாப்பா … ?”
“அதுவும் … அப்புறம் சோகம் தர்றதும் … அதாவது மனசுக்கு கஷ்டம் ….”
“சரிப்பா…”
“கோபம் எப்படிப்பா ….?”
“நல்லதுக்கு கோபபட்டா … நல்லது … கெட்டதுக்குனா …. கெட்டது ,,,,, ?”
“நீ அம்மாவை திட்ரீயே … அதுப்பா …. ?”
“அது உரிமைடா …”
“அப்படினா ?”
“நான் திடலாம்டா …”
“அப்ப அம்மா ….?”
“அதுவந்து …. ?”
“அது கெட்டபழக்கம் தானேப்பா ….?”
ரூபன் கேட்டபோது … காலையில் காரணமே இல்லாமல் அம்மாவை திட்டியது அப்பாவுக்கு ஞாபகம் வந்தது.
ரூபனின் கேள்விகள் முடிந்த போது வீடு வந்திருந்தது.

“காலைல …. அவசரத்துல திடிட்டேன் ” – அப்பா அம்மாவிடம் சொன்னார்.
“அதவிடுங்க … ” அம்மா சொன்னார்.
“தப்பு பண்ணிட்டா …. ?” – ரூபன் கேட்டான்
“மனிப்பு கேட்கணும்” அப்பா சொன்னார்.

அம்மா பார்த்தார் இருவரையும்.
“நீங்க வேற இதுக்கெல்லாம் மன்னிப்பு கின்னிப்புன்னுட்டு… ” – அம்மா தன் வேலையை செய்ய கிளம்பவும்
அப்பா சொன்னார். “அவனுக்கு சொன்னதுதான் சரி.என்ன மன்னிச்சுடு”

அப்பாவையும் அம்மாவையும் ரூபனுக்கு ரொம்ப பிடிச்சு போக இருவருக்கும் ஒரு ஒரு முத்தம் தந்தான்.

அமெரிக்காவில் பிச்சைகாரர்கள்

பணம் கொழிக்கும் சொர்க்கம் – வாய்ப்புகளின் சுரங்கம் – உலகின் பணக்கார வல்லரசு – இப்படி நிறையவே பெருமை படுத்தும் அமெரிக்காவின் வேறு முகம் இன்று என் கன்னத்தில் அரைக்கிற மாதிரி சில உண்மைகளை என் முன்னாள் வைத்தது.

நான் இன்று இரண்டு பிச்சை காரர்களை மிக அருகில் பார்த்தேன் – கோட் அணிதிருந்தாலும் அவர்கள் மிக வெளிப்படையாகவே பிச்சை கேட்டனர்.

அவர்கள் பேசிய வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழ் நாட்டின் பிச்சை காரர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. வார்த்தைகள் கூட ஏதோ மொழி பெயர்ப்பு மாதிரித்தான் இருந்தது. யார் அடிச்ச காபி (நாம் இதில் முந்தியா அவர்கள் முந்தியா ?)

முதல் பிச்சை காரர் – ஒரு பெண்மணி நான் அமர்ந்திருந்த வணிக வளாக மேஜை மீது ஒரு காகிதமும் சில ஸ்டிக்கர்கள் ( மிக்கி மௌஸ் போன்றவை ) அடங்கிய ஒரு பிளாஸ்டிக் பையையும் வைத்து விட்டுபோய் இருந்தார்.

அந்த காகிதத்தில் இருந்த வரிகளை பார்த்தவுடன் நான் மதுரை பேருந்து நிலையத்தில் இருக்கிறேனா இல்லை அமெரிக்காவில் இருக்கிறேனா என்று குழம்பிவிட்டேன்.

“நண்பரே – இதை உங்களிடம் சேர்பித்துள்ள பெண்ணுக்கு வாய் பேச இயலாது! காதும் கேட்காது! அவுருக்கு உதவுங்கள் அவர் தந்துள்ள இந்த ஸ்டிக்கர் அடங்கியபையின் விலை 2 டொலர்கள். இதை நீங்கள் வாங்குவதன் மூலம் வீடு அற்ற அந்த பெண்ணிற்கு நீங்கள் உதுவுகிறீர்கள். உங்கள் உதவி அவளுக்கு தேவை. நன்றி”

அந்த பெண்ணுக்கு பிச்சை போடுவதா வேண்டாமா என்று முடிவு செய்வதற்குள் மீண்டும் அவள் வந்தாள். நடுத்தர வயது பெண்மணி – கோட் அணிந்திருந்தாள். எதுவும் பேசவில்லை. என்னை ஒரு முறை உற்று பார்த்து விட்டு என் மேஜையில் அவள் வைத்து விட்டு சென்ற காகிதத்தையும் பையையும் எடுத்து சென்றாள்.

அடுத்ததாய் நான் பார்த்த மனிதர் – அவர் கார்விடும் இடத்தில் நின்றார்.

“ஹலோ ! உங்களிடம் ஒரு டாலர் இல்லை ஐம்பது சென்ஸ் இருக்குமா. நான் சாப்பிட முயற்ச்சிக்கிறேன் பசிக்கிறது. உங்கள் உதவி போற்றப்படும்”

நான் என் புர்சை எடுத்து பார்த்த போது அதில் எதுவும் இல்லை.

“ஐம்பது சென்ஸ் கூட உங்களிடம் இல்லையா ?” – என்றார். நான் வருத்தத்துடன் ஆம் என்று தலை அசைத்துவிட்டு கிளம்பி வந்தேன்.

என்னிடம் எல்லாம் கார்டுகலாய்தான் இருந்தது – அந்த பெண்ணுக்கும் என்னால் உதவி இருக்க முடியாது. இங்கே இப்படி ஒரு பிரச்சனை உள்ளது. உதவ நினைத்தாலும் சில தருணங்களில் வழி இல்லை.

இந்த இரண்டும் ஒரு பதினைந்து மணி துளிகளுக்குள் நடந்தவைகள்.

அமெரிக்கர்கள் மிக நல்லவர்கள் – நான் பார்த்த அளவில் மிக நேர்மையான சமூகம் அமெரிக்க சமூகம். நான் முதன் முதலில் வந்து இறங்கிய தருணத்தில் நான் யார் என்றே தெரியாத போது ஒரு அமெரிக்க இந்தியர் எனக்கு டாக்ஸி பிடித்து கொடத்தவுடன் தங்களிடம் பணம் உள்ளதா என்று கேட்க ஐம்பது டொலர்கள் பணமாகவும் மீதி travellers cheque வடிவத்தில் உள்ளது என்றேன். உங்களுக்கு இன்னும் ஒரு பத்து டாலர் தேவை படும் என்று சொல்லி அவர் அதை தந்தார். இவர்கள் ( டாக்ஸி ஓட்டுனர்கள் – இங்கே கேப் ஓட்டுனர்கள் என்று அழைக்கிறார்கள் ) பணமாக மட்டுமேபெறுவர் என்றார்.

சரி அவர் இந்தியர் எனவே உதவினார் என்றால் – நியூ யார்க் மாகணத்தில் எனக்கு கிடைத்த இன்னொரு நிகழ்வு நினைவில் உள்ளது. நான் ஒரு பொம்மையை குறைந்த விலை என்று நினைத்து எடுத்து வந்துவிட்டேன் – பணம் செலுத்தும் இடத்தில் அதன் உண்மை விலை தெரிந்த பின் வேண்டாம் என்றேன்.

“நீங்கள் யாருக்கோ இதை பரிசளிக்க வாங்குவதாக நினைக்கிறேன் – நீங்கள் நினைத்த விலைக்கே தருகிறேன். இதன் விலை தவறுதலாக இது இருந்த இடத்தில் இருந்ததிற்கு வருந்துகிறேன். ” – என்று சொன்ன அந்த ஆப்பரிக்க அமெரிக்க பெண்மணி அதை விலைக்கு தந்தார்.

நான் வந்த நாள் முதல் பார்க்கிறேன் – இங்கே உள்ளவர்கள் உதவும் குணம் கொண்டவர்களாவும் மிக நல்ல மனிதர்களாகுவுமே உள்ளனர்.

இவர்கள் பிச்சை எடுப்பது வருத்தம் தருகிறது. அவர்கள் சொல்ல்வதையே சொல்கிறேன் – God bless அமெரிக்க!